Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கார்த்திகை தீபம்: பரணி தீப வழிபாடு எப்படி, எப்போது செய்ய வேண்டும்? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்!!

மனக்குழப்பம், கவலை, பயம், உள் வேதனை ஆகியவை இருக்கும் போது, இந்த நாளில் தீபம் ஏற்றுவோர் மனநிறைவு பெற்றதாக உணருவர். யார் மனதில் சங்கடம் இருந்தாலும் அருகிலுள்ள சிவாலயத்தில் அல்லது அம்பாள் கோவிலில் அர்ச்சனை செய்து வந்தால் மனம் அமைதி திரும்.

கார்த்திகை தீபம்: பரணி தீப வழிபாடு எப்படி, எப்போது செய்ய வேண்டும்? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்!!
கார்த்திகை தீபம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Dec 2025 15:55 PM IST

கார்த்திகை மாதத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக விளங்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, பரணி வழிபாடு எப்படி செய்ய வேண்டும், எந்த நேரத்தில் தீபம் ஏற்ற வேண்டும், இந்த நாளில் வழிபாடு செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி ஆத்ம ஞான மையம் எனும் அவரது யூட்யூப் சேனலில் விளக்கமளித்துள்ளார். அதன்படி, பரணி திருநாள் பல ஆண்டுகளாக சிவபக்தர்களால் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தீபம் ஏற்றி வழிபடுவதால் அறியாமல் செய்து விடப்படும் பாவங்கள் நீங்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. நாம் சில நேரங்களில் யாரையும் புண்படுத்தும் வார்த்தை பேசலாம். நடந்து செல்லும்போது தெரியாமல் பூச்சி, புழு போன்ற உயிர்களை மிதித்துவிடலாம். மனதுக்குள் பிறர் மீது பொறாமை, கோபம், தீய எண்ணங்கள் தோன்றலாம். இவை அனைத்தும் அறியாமை பாவங்கள். பரணி நாளில் சிவபெருமானை பிரார்த்தித்து தீபம் ஏற்றினால், இப்படிப் பட்ட பாவங்கள் அனைத்துமே கரைந்து விடும். அதோடு, முன்னோர்களுக்கும் நலன் கிடைக்கும், அவர்களின் ஆன்மா ஒளி நோக்கி உயரும்.

இதையும் படிக்க : கார்த்திகை மாதம்: முருகன் அருளைப்பெற இந்த 6 நாட்கள் மிக முக்கிய நாளாகும்!!

எமதர்மராஜன் விரும்பும் நாள் பரணி:

பரணி நக்ஷத்திரத்துக்கு எமதர்மராஜன் மிகவும் புனிதமான நாளாகக் கருதுகிறார். பரணி நாளில் சிவபெருமானை நினைத்து தீபம் ஏற்றினால், அந்த தூய தீபத்தின் மூலம் முன்னோர்களுக்கும் அருள் கிடைக்கும்; வந்துசேர வேண்டிய ஆன்மாக்கள் ஒளி நோக்கிச் செல்லும். இது எமனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு புனித வழிபாடு என்பதால், எமன் தானாகவே ஆசீர்வாதம் அளிப்பார் என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே, இந்த தீபம் எமவாதனையை நீக்கும் தீபம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் தீபம் ஏற்றி சிவபெருமானை வணங்குவது மிகப்பெரிய பலனைத் தரும். தீபம் ஏற்றும் காரணத்தை அறிந்திருந்தால், அந்த வழிபாட்டின் புனித பலன் பல மடங்கு அதிகரிக்கும். பரணி தீபம் என்பது பாவநிவாரணம் தரும் தீபம் மட்டும் அல்ல; முன்னோர் நலன், வீட்டில் ஆன்மிக ஒளி, மனநிறைவு, சாந்தி ஆகியவற்றைத் தரும் சக்தி கொண்டது.

2025 பரணி நக்ஷத்திர நேரம்:

2025ஆம் ஆண்டிற்கான பரணி நக்ஷத்திரம் டிசம்பர் 2ஆம் தேதி மாலை தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி மாலை வரை நீடிக்கும். இந்த நேரத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். ஆனால், வழக்கமாக சாயங்கால நேரத்தில் தீபம் ஏற்றுவது மிகச் சிறந்தது.

கோவில் முறையும், வீட்டு முறையும் வேறு:

திருவண்ணாமலையில் பரணி தீபம் அதிகாலை பரணி நேரத்தில் ஏற்றப்படும். ஆனால் வீட்டு வழிபாடு மாலை நேரத்தில் செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மாலை 6.30 மணிக்கு பரணி தீபம் ஏற்றுவது உகந்தது.

எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்:

வீடு முழுவதும் தீபம் ஏற்றுவது மிகச் சிறந்தது. முடியாவிட்டால், குறைந்தபட்சம் 5 தீபங்களாவது தவறாமல் ஏற்ற வேண்டும். திருவண்ணாமலையில் பரணி தீபம் 5 மடக்குகளால் இருக்கும். அதனால் வீட்டிலும் 5 தீபம் ஏற்றுவது பரம்பரையாகப் பின்பற்றப்படுகிறது.

மூன்று நாட்கள் தீப வழிபாடு:

கார்த்திகை விழாவின் போது வழக்கமாக பரணி தீபம், கார்த்திகை தீபம், பஞ்சராத்திர தீபம். இந்த மூன்று நாட்களிலும் வீடு முழுவதும் தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பாகும்.

இதையும் படிக்க : சபரிமலை மாளிகைபுரத்தம்மன் கோவில் முன் தேங்காய் உருட்டுவது ஏன்?

மனஅழுத்தம், கவலை இருக்கும் போது:

பரணி நாள் மிகவும் சக்திவாய்ந்த நாள். மனம் கலங்கியிருக்கும்போது, அருகிலுள்ள எந்த சிவாலயத்திற்கும் சென்று பூஜை செய்யலாம். அம்பாள் அல்லது சிவனுக்கு அர்ச்சனை செய்யலாம். தீபம் ஏற்றி மனஅமைதி வேண்டிக் கொள்ளலாம்.

பரணி திருநாள் என்பது ஆன்மிக ரீதியாக மிகவும் உயர்ந்த நாள். இந்த நாளில் தீப வழிபாடு செய்வது, நம் வாழ்க்கையில் ஒளி, அமைதி, நலம், நம்பிக்கை ஆகியவற்றை கொண்டு வரும். அனைவரும் இந்த பரணி நாளை ஆன்மிகமான எண்ணத்துடன் அனுஷ்டித்து, சிவபெருமானின் அருளைப் பெறுங்கள்.