AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார்த்திகை தீபம்: எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? தேச மங்கையர்க்கரசி விளக்கம்!

ஆதியும் அந்தமும் இல்லாத அனாதியான சிவபெருமானை நாம் பல ஆலயங்களில் ரூப வடிவத்தில் தரிசிக்கிறோம். ஆனால் இறைவன் இயற்கை வடிவமாக வாழ்கிறார் என்று கூறப்படுவது உண்டு. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரன் நம் மனதில் உள்ள அனைத்து தீய எண்ணங்களையும், காமம், கிரோதம், மாயை போன்ற அனைத்தையும் சாம்பலாக்கி நமக்கு பிறவாமுக்தியை தருபவர்.

கார்த்திகை தீபம்: எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? தேச மங்கையர்க்கரசி விளக்கம்!
கார்த்திகை தீபம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 30 Nov 2025 16:26 PM IST

கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத் திருநாள் சிவ வழிபாட்டில் மிக முக்கியமானது. வருடம் முழுவதும் எத்தனையோ விரதங்களை செய்ய முடியாத சூழலில் இருந்தாலும், திருக்கார்த்திகை தினத்தன்று, அந்த ஒரு நாள் விரதத்தை சரியாகப் பின்பற்றினால் சிவபெருமானின் அருள் முழுமையாகக் கிடைக்கும். இது அருணாசலேஸ்வரரின் ஜோதி திருநாள் மட்டுமல்ல; ஆண்டிற்கு ஒரு முறை அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமான் வெளிப்படும் உன்னத தருணமுமாகும். கார்த்திகை மகாதீபம் என்பது ஒளி, ஆன்மிகம், தூய்மை ஆகியவற்றை ஒருசேர தரும் சிவபெருமானின் அருள்நாள். இந்த நாளில் தீபம் ஏற்றி வழிபட்டு, விரதம் இருந்து, அன்னதானம் செய்து, இறைவனை மனமார பிரார்த்தித்தால் மனநிலைத் தெளிவு, குடும்ப நலன், ஆரோக்கியம், வளம், சுபீட்சம் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த கார்த்திகை மகா தீபத் திருநாளை எவ்வாறு கொண்டாட வேண்டும், எந்த நேரத்தில் விரதம் தொடங்க வேண்டும், தீபம் ஏற்ற வேண்டும், தீப எண்ணிக்கை என்ன, அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி ஆத்ம ஞான மையம் எனும் அவரது யூட்யூப் சேனலில் விளக்கமளித்துள்ளார்.

Also Read : கார்த்திகை மாதம்: இந்த ராசிக்காரருக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்ட யோகம்!!

எந்த நேரத்தில் தீபம் ஏற்ற வேண்டும்?

அவ்வளவு சிறப்பு உள்ள இந்த நாளில் தீபத்தை ஏற்ற வேண்டிய நேரம் என்பது மிகவும் முக்கியமானது. கிருத்திகை நக்ஷத்திரம் டிசம்பர் 3 மாலை 4.48 மணிக்கு தொடங்கி டிசம்பர் 4ம் தேதி பிற்பகல் 3.08 வரை நீடிக்கிறது. டிசம்பர் 4ம் தேதி காலை 7.55க்கு பவுர்ணமி துவங்கிறது. எனவே நமக்கு பொருத்தமான தீப ஏற்ற நேரம் டிசம்பர் 3ம் தேதி மாலை 6 மணியாகும்.

எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்?

கார்த்திகை தினத்தில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் 27 நக்ஷத்திரங்களைக் குறிக்கும் வகையில். மண்விளக்குகளை வாங்கி ஏற்றுவது மிகச் சிறப்பாகும். வீடு முழுவதும் சமையலறை, படுக்கையறை, மாடிப்படி, மொட்டமாடி, வீட்டு வாசல் என எல்லா இடங்களிலும் ஒரு தீபம் வைக்கலாம். பண்டிகை நாட்களில் மக்கள் வாழ்வாதாரம் குறித்தும் நினைக்க வேண்டும். மண்விளக்குகளை விற்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் இந்த ஓர் நாளே வருமானமாக இருக்கும். எனவே அதிக அளவில் விளக்குகள் வாங்குவது ஒரு சமூகப் பொறுப்பாகும்.

எண்ணெய் / நெய் எதை பயன்படுத்தலாம்?

முதல் 2 முதல் 3 தீபங்களுக்கு மட்டும் நெய் பயன்படுத்தலாம். மற்ற அனைத்து தீபங்களுக்கும் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். அதோடு, விளக்கின் அடியில் வாழையிலை, பூவரச இலை அல்லது தட்டு போன்றவற்றை பயன்படுத்துவது சுத்தமும் ஆன்மீகமும் நிறைந்தது.

ஆறுகோண தீபம் ஏற்றுவது சிறப்பு:

ஆறுகோண தீபம் ஏற்றுவது முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பாகும். மாலை ஆறு மணிக்கு திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் காட்சியை பார்த்து, “அரோகரா” என்று சொல்லி வழிபாடு செய்யலாம். அதன் பிறகு வீட்டு வாசலில் முதல் தீபத்தை ஏற்றி, பின்னர் பூஜையறை மற்றும் வீடு முழுவதும் தீபம் ஏற்ற வேண்டும். நெய்வேத்யமாக கார்த்திகைப் பொறி, வாழைப்பழம், வெத்தலை-பாக்கு போதும். விரதம் முடிந்த பின் சிவபுராணம், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் அல்லது உங்களுக்கு தெரிந்த பிற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம்.

பெண்கள் தீபம் ஏற்ற முடியாத சூழலில் இதை செய்க:

பெண்கள் மாதவிடாய் காரணமாக தீபம் ஏற்ற முடியாத சூழலில் வீட்டில் உள்ள யாராவது ஒருவர் ஏற்றலாம். நீங்கள் விரதத்தில் இருக்க முடியுமானால் நன்றே; முடியாது என்றால் மனசாட்சி முறையில் இருக்கலாம். அன்னதானம் செய்ய முடியாதவர்கள் மாலை ஒரு நபருக்காவது உணவு அளித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

சொக்கப்பனை எரிப்பதன் முக்கிய காரணம்:

மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருக ஜீவராசிகளுக்கும் (நாய், பூனை, மாடு, ஆடு) மோக்ஷப் பாதை கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் இறைவன் காட்டும் ஒளிப் பாதை என்பதைக் குறிக்கும். இவ்வளவு புனிதமான நாளில், தீப திருவிழாவை பக்தியுடன் கொண்டாட வேண்டும். இறைவன் அண்ணாமலையரும், முருகப்பெருமானும் இந்த நாளில் அனைவருக்கும் எல்லா நலன்களையும் அருளுவார் என்று அவர் கூறியுள்ளார்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் வாஸ்து நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Follow Us