திருவண்ணாமலையில் பரபரப்பு.. ஒரே நேரத்தில் 134 துப்பாக்கிகள் அழிப்பு.. என்ன காரணம்!
Tiruvannamalai Guns Destroyed : திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 134 நாட்டு துப்பாக்கிகளை வனத்துறை அதிகாரிகள் ரோடு ரோலரை ஏற்றி அழித்தனர். வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட 134 நாட்டு துப்பாக்கிகளை வனத்துறை அதிகாரிகள் ரோடு ரோலரை ஏற்றி அதிரடியாக அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமானோர் அனுமதி பெற்றும், அனுமதி இன்றியும் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தனர். இவர்களில் சிலர் வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக வன உயிரின வார விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி பொதுமக்கள் வைத்திருக்கும் நாட்டு துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.
134 நாட்டு துப்பாக்கிகள் ரோடு ரோலர் மூலமாக அழிப்பு
அதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 வன சரகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த 134 நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். இந்த துப்பாக்கிகளை பெற்றுக் கொண்ட வனத்துறை அதிகாரிகள் அதனை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் முன்னிலையில் நாட்டு துப்பாக்கிகள் அனைத்தும் வரிசையாக தரையில் அடுக்கி வைக்கப்பட்டன. அதன் மீது, ரோடு ரோலர் இயந்திரத்தை ஏற்றி முற்றிலும் நசுக்கப்பட்டு நாட்டுத் துப்பாக்கிகள் அளிக்கப்பட்டன.
மேலும் படிக்க: திருச்சியில் துணிகரம்.. வெளிமாநிலத்திலிருந்து ரூ.25 லட்சம் போதை இலை கடத்தல்.. மாணவர்களுக்கு குறி வைத்த 5 பேர்!




வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க
வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கும் வகையிலும், அனுமதி இன்றி நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்தி வருவதை கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த அதிரடி நிகழ்வின்போது, திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு, சட்டவிரோத வேட்டையாடுதலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உரிய அனுமதி இன்றி நாட்டு துப்பாக்கிகள்
திருவண்ணாமலை மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு விலங்குகளான முயல்கள் உள்ளிட்டவை வசித்து வருகின்றன. இவற்றை, சில மர்ம நபர்கள் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இருந்தாலும், வனவிலங்குகள் வேட்டையா டப்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ராணிப்பேட்டையில் பழிக்கு பழி சம்பவம்… விசிக பிரமுகர் கொலையில் “திடுக்”.. கைதானவர்கள் பரபர வாக்குமூலம்!