AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. குறுஞ்செய்தியில் ஆபாச மெசெஜ்.. தருமபுரியில் ஆசிரியர் அதிரடி கைது!

Dharmapuri Teacher Arrested : தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவிகளை பாலியல் தொல்லை அளித்ததாக கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக கல்வி துறை அதிகாரி விசாரிக்கிறார்.

பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. குறுஞ்செய்தியில் ஆபாச மெசெஜ்.. தருமபுரியில் ஆசிரியர் அதிரடி கைது!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 25 Sep 2026 20:33 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில் தங்கவேல் என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கணித ஆசிரியர் தங்கவேல் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த மாணவிகளிடம் இது தொடர்பாக வேறு யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும், அப்படி மீறி தெரிவித்தால் தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அத்துடன் அந்த மாணவிகளின் வீட்டு செல்போன் எண்களை கேட்டு பெற்ற அந்த ஆசிரியர் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் தெரிகிறது.

மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை

இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவிகள் கணித ஆசிரியரின் பாலியல் தொந்தரவு குறித்து தங்களது பெற்றோர்களிடம் மாணவிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் அந்த பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அத்துடன், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்த விவகாரம் மாவட்ட கல்வி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார் .

மேலும் படிக்க: கழுத்து நிறைய நகை.. கட்டுக்கட்டாக பணம்.. இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. அனைத்தும் க்ளோஸ்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்

இதில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்த ஆசிரியரிடமும் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டதில் அவரும் செய்த தவறை ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், இது தொடர்பாக பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர் தங்கவேலுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் அதிரடி கைது

இதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததும், அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதற்கான ஆதாரங்கள் இருந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில், அவரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, அவரை சிறையில் அடைத்தனர். அரசு பள்ளியில் மாணவிகளுக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவமும், அவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: காலை உணவில் தொடர் சர்ச்சை.. சேமியா கிச்சடி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி- பேதி.. நாமக்கல் அரசு பள்ளியில் விபரீதம்!

Follow Us