Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 27, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 26 : தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 27, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 1, 2026 வரை 5 நாட்கள் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடலில் கடந்த செப்டம்பர் 24, 2026 அன்று நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காலை 5:30 மணியளவில் வலுவிழந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவியது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை 8:30 மணியளவில் தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.
இதையும் படிக்க : மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்.. தமிழ்நாட்டில் 246 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!!
மேலும் இதன் காரணமாக செப்டம்பர் 27, 2026 நாளை மேற்கு தொட்ர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்ந்து செப்டம்பர் 28, 2026 திங்கள் கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 29, 2026 செவ்வாய்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : பிறப்பு சான்றிதழில் பெயர் இல்லையா? பெற்றோரே இதை உடனே கவனிங்க!
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30, 2026 மற்றும் அக்டோபர் 01, 2026 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை செப்டம்பர் 26, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.