இன்று 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வெப்பநிலையில் மாற்றம் இருக்குமா?
Rain Alert: இன்று (செப்டம்பர் 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.
செப்டம்பர் 26, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி, மீனம்பாக்கத்தில் 37.2 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 36.7 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:
செப்டம்பர் 26: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 27: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: மேடையில் அந்நியன்.. களத்தில் அம்பி.. முதல்வர் விஜய்யின் ஆட்சியை பங்கம் செய்த மு.க.ஸ்டாலின்!
செப்டம்பர் 28: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: வடபழனி – பூந்தமல்லி ரயில் சேவை – ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் விஜய்
செப்டம்பர் 29: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை நிலவரம்:
செப்டம்பர் 26 முதல் 29ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. எனினும், வெப்பநிலை சற்று உயரக்கூடும். இந்த காலகட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை எப்படி இருக்கும்?
இன்று (செப்டம்பர் 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.