AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்.. தமிழ்நாட்டில் 246 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!!

Primary Schools in Tamil Nadu Face Closure: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையே இல்லாததால் 246 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயத்தைச் சந்தித்துள்ளன. மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் 30-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வரும் நிலையில், உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் தீர்வுகள் குறித்து விரிவான செய்தித் தொகுப்பு.

மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்.. தமிழ்நாட்டில் 246 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Sep 2026 13:02 PM IST

சென்னை, செப்.26: கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியை இலவசமாகவும் தரமாகவும் வழங்குவதில் அரசுத் தொடக்கப் பள்ளிகள் மிக முக்கியமான பங்கை வகித்து வருகின்றன. இடைநிறுத்தலைக் குறைக்கவும், பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் காலை உணவுத் திட்டம், சத்தான மதிய உணவு, இலவசச் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் எனப் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எதிர்பார்த்த அளவில் சீராக இல்லாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக, நடப்பு கல்வியாண்டில் ஒற்றை மாணவர் சேர்க்கை கூட இல்லாததால் 246 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் தீவிர அபாயத்தை எதிர்கொண்டுள்ளது கல்வித்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தவெகவின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு.. விமான பயணத்துக்கே இத்தனை கோடியா?.. முழு விவரம்!

புள்ளிவிவர அதிர்ச்சியும் ஆசிரியர் பற்றாக்குறையும்:

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் மாநகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் சில இடங்களில் உயர்ந்திருந்தாலும், கிராமப்புறப் பள்ளிகளின் நிலைமை கவலையளிப்பதாகவே உள்ளது. மாநிலத்தில் உள்ள 24,349 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான, அதாவது 14,829 பள்ளிகளில் 30-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். இத்தகைய குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே கொண்ட பள்ளிகளில், ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்த வேண்டிய நிர்பந்தம் நிலவுவதாக ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பெற்றோர் சந்திக்கும் குறைபாடுகள்:

அரசுப் பள்ளிகளில் இலவசத் திட்டங்களும் சலுகைகளும் இருந்தாலும், தூய்மையான கழிவறை வசதிகள், குடிநீர் வசதி, கட்டடத் தரம் மற்றும் ஆங்கில வழிக் கல்வி போன்ற உள்கட்டமைப்புகளில் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியிருப்பதே பெற்றோர் பலரையும் தனியார் பள்ளிகளை நோக்கி நகர வைக்கிறது. மேலும், கிராமப்புறங்களில் தனியார் மழலையர் (LKG/UKG) பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அரசுத் தொடக்கப் பள்ளிகளிலேயே முறையான தகுதி படைத்த ஆசிரியர்களைக் கொண்டு எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை அரசுத் தொடங்குவதோடு, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே கிராமப்புறப் பெற்றோரை மீண்டும் ஈர்க்க முடியும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செலவழித்தது இத்தனை கோடியா?.. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த பகீர் கணக்குகள்!

கல்வியாளர்களின் யோசனைகளும் எதிர்காலத் தீர்வுகளும்:

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிலோமீட்டர் எல்லைக்குள் தொடக்கப் பள்ளியும், 3 கிலோமீட்டர் எல்லைக்குள் நடுநிலைப் பள்ளியும் அமைய வேண்டும் என்பதே அரசின் முதன்மைக் கொள்கையாகும். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்பதற்காகப் பள்ளிகளை மூடுவது மாணவர்களின் பயணத் தூரத்தை அதிகரித்து இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் என கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். பிராண்டிங் உத்திகள் மூலம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் பள்ளியின் சிறப்புகளையும் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் நேரடியாகக் கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி யோசனை தெரிவித்துள்ளார். அதோடு, அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கும் எதிர்கால உயர்கல்வியில் சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவிப்பது பெற்றோர் மத்தியில் பெரிய நம்பிக்கையை உருவாக்கும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

Follow Us