AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்… சத்யபாமா குறித்து திமுக தலவைரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

MK Stalin Comment Controversy : இடைத்தேர்தலை முன்னிட்டு அக்டோபர் 2, 2026 அன்று தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து பேசியது சர்ச்சையாகியிருக்கிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்… சத்யபாமா குறித்து திமுக தலவைரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Oct 2026 07:56 AM IST

சென்னை, அக்டோபர் 3 : தவெக வேட்பாளர் சத்யபாமாவை பல்டி பாமா என தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து பேசியிருந்த நிலையில் அது சர்ச்சையானது. இடைத்தேர்தலை முன்னிட்டு அக்டோபர் 2, 2026 அன்று தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து பேசியது சர்ச்சையாகியிருக்கிறது.

தாராபுரம் தொகுதியில் சித்தராவுத்தன்பாளையம் என்ற பகுதியில் நடைபெற்று வரும் பிரசாரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பொதுத் தேர்தல் நடந்து முடிந்து 5 மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள்ளாக இந்த இடைத்தேர்தல். இது எதனால் வந்தது? இதற்குக் காரணமானவர்கள் யார் என நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : வாக்காளர்களுக்கு தங்க நாணயமா? ரூ.3.5 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல்.. இடைத்தேர்தல் தொகுதியில் பரபரப்பு!

சத்யபாமா குறித்து மு.க.ஸ்டாலினின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

மேலும் பேசிய அவர் மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்ட தவெக வேட்பாளரை பெட்டி பாமா மற்றும் பல்டி பாமா என்கின்றனர். அவர் எப்படித்தான் பல்டி அடித்தார் எனத் தெரியவில்லை. என்று பேசினார். இது தவெகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. தவெகவினர் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் பதிவில், தாராபுரம் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர் சத்தியபாமாவை அக்டோபர் 2, 2026 நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உருவ கேலி செய்யும் வகையில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையும், குறிப்பாக பட்டியல் இன சமுதாயத்தையும் அவமதித்துள்ளார். அரசியல் மாண்புகளுக்கு முற்றிலும் எதிரான இந்த தனிப்பட்ட தாக்குதலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில், முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தாராபுரம் தொகுதியின் தவெக பெண் வேட்பாளர் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் வேதனையளிக்கின்றன. ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த பொறுப்பை வகித்தவர், பெண்கள் குறித்து இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பது வருத்தத்திற்குரியது.

இதையும் படிக்க : இளையராஜாவின் இசை ஆராய்ச்சி மையம் – திறந்து வைக்கும் பிரதமர் மோடி

ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே இத்தகைய கருத்துகளை முன்வைக்கும்போது, அக்கட்சியின் மற்ற தலைவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதும், அவர்களின் கண்ணியத்தைக் குறைத்து மதிப்பிடுவதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. அக்டோபர் 6 அன்று, தாராபுரத்தின் பெண்கள் அனைவரும் தங்களின் சொந்த சத்தியபாமா அக்காவுக்குத் தோளோடு தோள் நின்று, ஒருமித்த குரலில் தங்களின் கருத்தை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us