வாக்காளர்களுக்கு தங்க நாணயமா? ரூ.3.5 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல்.. இடைத்தேர்தல் தொகுதியில் பரபரப்பு!
Gold Coins Seized In Puducherry : புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் ரூ. 3.5 கோடி மதிப்பிலான தங்க நாணயம், ரூ. 1.77 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது போல, அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அக்டோபர் 6- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சோதனையில் தங்கம், பணம், மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரூ. 3.6 கோடி மதிப்பில் தங்க நாணயம்- ரூ.1.77 கோடி ரொக்கம் பறிமுதல்
புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வரும் நிலையில், கடந்த 2 நாள்களில் ரூ. 3.6 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்க நாணயங்கள் மற்றும் ரூ.1.77 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 181 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தட்டாஞ்சாவடி இடை தேர்தலை பொருத்தவரை 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பெண்கள் மட்டும் பணிபுரியும் ஒரு வாக்குச்சாவடி அடங்கும். மற்ற 2 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: எட்டயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பாய்ந்த ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. 6 பேருக்கு தீவிர சிகிச்சை!




வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தான். இருப்பினும், தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவின் அடிப்படையில் வாக்காளர் திருத்த பணி கடந்த அக்டோபர் 1- ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகிய பணியை ஒரு மாதத்தில் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி வாக்காளர்கள் கவனத்துக்கு . . .
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ( எஸ். ஐ. ஆர்) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொண்ட போது படிவம் 6- இல் கேட்கப்பட்ட விவரங்களை தற்போது அளிக்க அவசியம் இல்லை. பழைய படிவத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. இதற்காக சிறப்பு முகாம்களை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று புதுச்சேரி தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் படிக்க: அம்மா இல்லாத உலகில் வாழ முடியாது.. சோகத்தின் உச்சத்தில் அண்ணன்-தம்பி.. சென்னை லாட்ஜில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!