AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் இம்முறை இரட்டை இலக்க இடங்கள் தான் கேட்கப்போகிறோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திட்டவட்டம்..

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகியவை இதில் முக்கியமாக உள்ளன. திமுக, இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம், அதிமுக திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் மும்மரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திமுக கூட்டணியில் இம்முறை இரட்டை இலக்க இடங்கள் தான் கேட்கப்போகிறோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திட்டவட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Feb 2026 12:22 PM IST

சென்னை, பிப்ரவரி 7, 2026: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாடுகளை பிரதானமாக அறிவித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, வரக்கூடிய நாட்களில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், அதனை தற்போது இரட்டிப்பாக உயர்த்தி கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தல்:

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகியவை இதில் முக்கியமாக உள்ளன. திமுக, இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம், அதிமுக திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் மும்மரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்…திருமாவளவன் வீசிய குண்டு..பாமகவை குறிப்பிட்டு பேசியதென்ன!

திமுக கூட்டணியில் இதுவரை பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல், அதே கட்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை திமுக கூட்டணியில் உள்ளன. இதே நேரத்தில், அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த சிலர் திமுகவில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலக்க இடங்களை கேட்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கோரும் என அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக தரப்பில் விரைவில் அழைப்பு விடுக்கப்படும் என நம்புவதாகவும், கடந்த முறை குறைந்த தொகுதிகள் வழங்கப்பட்டதால் கட்சி வாக்காளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை கட்சியின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு அதிக தொகுதிகள் கோரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: உச்சம் தொட்ட டிடிவி தினகரன்- சசிகலா பனிப்போர்.. நிர்வாகி நீக்கம்.. மோதல் பின்னணி என்ன?

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow Us