AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூரிய கிரகணத்தின் போது மனிதர்கள் இந்த 7 சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது!

First Solar Eclipse Of 2026 | 2026 ஆம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இன்று (பிப்ரவரி 17, 2026) நிகழ உள்ளது. இந்த நிலையில், இந்த சூரிய கிரகணத்தின் போது மனிதர்கள் சில சிக்கல்களை எதிர்க்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தின் போது மனிதர்கள் இந்த 7 சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Feb 2026 13:49 PM IST

2026 ஆம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இன்று (பிப்ரபரி 17, 2026) நிகழ உள்ளது. சரியாக மதியம் 3.26 மணி முதல் மாலை 7.58 மணி வரை சுமார் 4 மணி நேரம் 32 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் நிகழ உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்ற சூரிய கிரகணத்தை போல நிலவு, சூரியன் மற்றும் பூமி இடன்பெயரும் வானியல் நிகழவாக மட்டுமன்றி இந்த வானியல் நிகழ்வில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த சூரிய கிரகணத்தின் போது மனிதர்கள் 7 விதமான சிக்கல்களை எதிர்க்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக ஜோதிடர்கள் சிலர் கூறியுள்ளனர். அவர்கள் கூறியுள்ள 7 சிக்கல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சூரிய கிரகணத்தின் போது மனிதர்கள் இந்த சிக்கல்களை எதிர்கொள்ளலாம்

சூரிய கிரகணத்தின் போது மனிதர்கள் இந்த 7 சிக்கல்களை எதிர்கொள்ள கூடும் என கூறப்பட்டுள்ளது.

உணர்ச்சிப்பூர்வமாக உணர்தல்

நீங்கள் வழக்கத்தை விட அதிகம் உணர்ச்சிவசப்படலாம். சிறிய நிகழ்வுகள் கூட உங்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தலாம். கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான நினைவுகள் தோன்றி மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இடையூறான தூக்கம்

சூரிய கிரகணத்தின் போது தூக்கத்தில் சிக்கல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுவது ஆகியவை காரணமாக தூக்கத்தில் பாதிப்பு ஏற்படலாம்.

சிறிய தடைகள்

செய்யும் காரியங்களில் சிறிய தடைகள்,  உரையாடல்களில் தவறான புரிதல்கள் மற்றும் அனைத்திற்கும் விரைவாக எதிர்வினை ஆற்றுவது உள்ளிட்ட சிக்கல்கள் வரலாம்.

இதையும் படிங்க : கிம் ஜாங் உன்னை தொடர்ந்து வடகொரியாவை ஆளப்போகும் அவரது மகள்?.. உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!

மனக்குரல்

மனதுக்குல் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும். எந்த வித செயலும் செய்யாமல் சில மாற்றத்தை உணரக்கூடும்.

உறவுகளில் சிக்கல்

சிரிய மன கசப்பும் பெரியதாக தெரியும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அலுவலகத்தில் சிலருடன் இருந்த சிக்கல் வெளியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

வாழ்க்கை மாற்றம்

திடீரென வாழ்க்கை மாற்றம் குறித்த எண்ணம் ஏற்படும். வாழ்க்கை, வேலை, வீடு ஆகியவற்றில் என்ன முடிவு எடுப்பது என்ற சிக்கல் ஆகியவை உருவாகலாம்.

இதையும் படிங்க : ஏஐ சாட்பாட்களை டின்னர் டேட்டுக்கு அழைத்து வாருங்கள்.. நியூயார்க் உணவகம் அறிவிப்பு!

சோர்வாக உணர்வது

சூரிய கிரகணத்தின் போது உடல் மற்றும் மனது சோர்வாக உணர்வது போல தோன்றும். வழக்கத்தை விட சோர்வாக உணரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.