AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தியாகராஜன் குமாரராஜாவைத் தொடர்ந்து மகிழ் திருமேனி உடன் கூட்டணி வைக்கும் விஜய் சேதுபதி –  வைரலாகும் தகவல்

Vijay Sethupathi New Movie Update: தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தியாகராஜன் குமாரராஜாவைத் தொடர்ந்து மகிழ் திருமேனி உடன் கூட்டணி வைக்கும் விஜய் சேதுபதி –  வைரலாகும் தகவல்
விஜய் சேதுபதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Mar 2026 14:25 PM IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் . தொடர்ந்து இவர் நாயகனாக நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து நாயகனாக மட்டும் இன்றி அனைத்து விதமான கதப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இவர் எந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடத் தவறியதில்லை. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் பாக்கெட் நாவல் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்க உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மகிழ் திருமேனி உடன் கூட்டணி வைக்கும் விஜய் சேதுபதி?

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி அளித்தப் பேட்டி ஒன்றில் பேசிய போது இயக்குநர் மணிரத்னம் உடன் கூட்டணி வைப்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவலின்படி நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் மகிழ் திருமேனி உடன் கூட்டணி வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பதாகவும் வில்லனாக நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… சேயோன் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு இத்தனை கோடிகள் சம்பளமா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சிவகார்த்திகேயன் ரசிகர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்.. மாவீரன் 2 படம் குறித்து வெளியான அப்டேட் இதோ!

Follow Us