AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Agriculture Budget 2026: தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்… விவசாயிகள் எதிர்பார்ப்பு என்ன?

TN Agriculture Budget: நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu Agriculture Budget 2026: தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்… விவசாயிகள் எதிர்பார்ப்பு என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 06 Aug 2026 07:50 AM IST

ஆகஸ்ட் 6, 2026: தமிழகத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நேற்று (ஆகஸ்ட் 5) தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், அதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறாதது பொதுமக்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, விவசாயக் கடன் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என விவசாயிகள் எதிர்நோக்கி உள்ளனர்.

வேளான் பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீதமும் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

மேலும் படிக்க:  பட்ஜெட்டில் இடம்பெற்ற 8 ‘வெற்றி’ திட்டங்கள்… இதை கவனிச்சிங்களா?

மேலும், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் வணிகம் ஆகிய நான்கு துறைகளையும் ஒருங்கிணைக்கும் ‘உழவர் தொடர்பு அலுவலர் திட்டம் 2.0’ முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயிகள் பல்வேறு அலுவலகங்களுக்கு தனித்தனியாகச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர்கள் கருதுகின்றனர்.

விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பு என்ன்?

அதேபோல், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதார விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதார விலையும் நிர்ணயிக்க வேண்டும் என்றும், சந்தை விலை சரிவடையும் சூழலில் இழப்பை அரசே ஏற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பால் உற்பத்தியாளர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி, எருமைப் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.60 ஆகவும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆகவும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்.. அறிவிப்புகள் எப்படி இருக்கும்?

மேலும், அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசு நேரடியாக கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Follow Us