அடுத்த 2 நாட்களுக்கு இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 29 : தமிழ்நாட்டில் ஜூலை 31 2026 மற்றும் ஆகஸ்ட் 1, 2026 ஆகிய 2 நாட்களுக்கு கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துளளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக ஜூலை 29, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடரந்து ஜூலை 30, 2026 நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மொட்டை அடித்துக்கொண்டால் ரூ.45 ஆயிரம் ஊக்கத்தொகை.. சேலத்தில் நடந்த நூதன சம்பவம்.. பெண்களுக்கு காத்திருந்த ஷாக்..




மேலும், ஜூலை 31, 2026 மற்றும் ஆகஸ்ட்1, 2026 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2, 3, 2026 ஆகிய 2 நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூலை 29, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ. 60 கோடி அறக்கட்டளை சொத்து முறைகேடு.. 19 பேர் மீது வழக்கு பதிவு!
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதி, ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஜூலை 30-ம் தேதி வரையும், தென் தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆக.1-ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.