சமீபத்திய தொழில்நுட்பம் செய்திகள் Technology News in Tamil: டெக் தமிழ் செய்திகள்
ஜியோவின் 10-ஆம் ஆண்டு விழா சலுகை: 4ஜி போன் வாங்கினால் 6 மாத ரீசார்ஜ் இலவசம்!
செப்டம்பர் 30, 2026: இந்தியாவை இணைத்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜியோ நிறுவனம், ஜியோபாரத் பயனர்களுக்காக சிறப்பு ஆண்டு விழா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பல லட்சக்கணக்கான சிறப்பு கைப்பேசி பயனர்கள் 2ஜி சேவையிலிருந்து 4ஜி சேவைக்கு குறைந்த செலவில் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவின் மின்னணு வளர்ச்சியில் ஜியோ நிறைவு செய்துள்ள ஒரு தசாப்தத்தை நினைவுகூரும் வகையில் இந்த ஆண்டு விழா சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் இந்தச் சலுகை, மலிவு விலையில் சாதனம் மற்றும் இணைப்புச் சேவையை ஒருங்கிணைத்து வழங்குகிறது.
ரூ.1,499-க்கு 4ஜி போன் மற்றும் 6 மாத இலவச மறு நிரப்பு
இந்தச் சலுகையின் கீழ், தகுதியுள்ள ஜியோபாரத் 4ஜி போன்கள் ரூ.1,499 விலையில் வழங்கப்படுகின்றன. இதனுடன் 6 மாதங்களுக்கு இலவச மறு நிரப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
இந்த மறு நிரப்பு சலுகையில் மாதத்திற்கு 14 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற உயர் தெளிவுத்திறன் குரல் அழைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சலுகை பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
மேலும் பல இந்தியர்களை இணையவழி உலகுடன் இணைக்க திட்டம்
திருவிழாக்கள் குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றிணைப்பதைப் போல, ஆண்டு விழா சலுகை மூலம் மேலும் பல இந்தியர்களை இணையவழி உலகுடன் இணைக்க ஜியோ நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்தச் சலுகையின் மூலம் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு இணைப்புச் சேவையை எளிதாகவும் மலிவாகவும் வழங்குவதுடன், மின்னணு உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவதற்கான ஜியோவின் முயற்சியும் தொடர்கிறது.
2ஜி பயனர்களுக்கு 4ஜி சேவைக்கு மேம்படுத்தும் வாய்ப்பு
பல 2ஜி பயனர்கள் தொடர்ந்து இணைப்பில் இருக்க மாதத்திற்கு சுமார் ரூ.199 மறு நிரப்பு செய்ய வேண்டியுள்ளது. இதன்படி, 6 மாதங்களுக்கு இணைப்புக்காக மட்டும் சுமார் ரூ.1,200 செலவாகிறது. ஆண்டு விழா சலுகை மூலம் ரூ.1,499க்கு 4ஜி வசதியுடன் கூடிய ஜியோபாரத் போன் மற்றும் 6 மாத இணைப்புச் சலுகையைப் பெற முடியும். இதன் அடிப்படையில், 2ஜி சாதனத்தில் இருந்து பல்வேறு வசதிகள் நிறைந்த 4ஜி மின்னணு போனுக்கு மேம்படுத்துவதற்கான பயனுள்ள செலவு ரூ.299 ஆகிறது.
6 மாதங்களுக்கான அடிப்படை இணைப்புச் செலவை விட சற்றே அதிகமான தொகையில், ஜியோவின் நாடு முழுவதும் உள்ள 4ஜி வலையமைப்பு மூலம் மேம்பட்ட மின்னணு அனுபவத்தைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு முதல் மின்னணு பணப்பரிவர்த்தனை வரை
வழக்கமான 2ஜி சிறப்பு கைப்பேசிகள் பெரும்பாலும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், ஜியோபாரத் போன் பல்வேறு மின்னணு சேவைகளைப் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது.
பொழுதுபோக்கு வசதிகள்:
ஜியோ தொலைக்காட்சி மூலம் 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள்
ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் நேரடி கிரிக்கெட் போட்டிகள், திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
கோடிக்கணக்கான பாடல்கள் மற்றும் இசை உள்ளடக்கங்கள்
ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை வசதி
ஜியோபாரத் போனில் ஜியோ பணப்பரிவர்த்தனை சேவை மூலம் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும், பணப்பரிவர்த்தனை அறிவிப்புகள் மற்றும் ஒலிப்பெட்டி வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு மற்றும் குடும்ப இணைப்பு
பயனர்களின் பாதுகாப்பான தகவல் தொடர்புக்காக ஜியோ பாதுகாப்புக் கவசம் வசதியும், குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்திருக்க உதவும் இருப்பிடக் கண்காணிப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றன.
2.4 அங்குலத் திரை, 2000 எம்ஏஎச் மின்கலம்
iQOO 16 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள்?.. முழு விவரம் இதோ!
iQOO நிறுவனம் தொடர்ந்து தனது  புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், iQOO 16 ஸ்மார்ட்போனை (iQOO 16 Smartphone) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் எம்16 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ள நிலையில், குவால்கமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன்  8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த நிலையில், iQOO 16 ஸ்மார்ட்போன் கொண்டுள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் அதன் விலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
iQOO 16 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்
iQOO நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் சீனாவில் தனது iQOO 16 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.85 இன்ச் 2கே சாம்சங் எம்16 LTPO AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்டிரீம் ஜென் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் LPDDR5X Ultra அல்லது LPDDR5X Ultra Pro RAM கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் வரை சிறப்பு அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : தள்ளுபடி காலத்தில் புத்திசாலித்தனமாக ஷாப்பிங்.. ₹2,000-க்கும் குறைவான விலையில் TWS இயர்பட்ஸை வாங்குவது எப்படி?
iQOO 16 ஸ்மார்ட்போன் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
iQOO 16 Launched
✅ 6.85" Samsung M16 2K 165Hz LTPO LEAD OLED Flat Display, 10000nits Peak Brightness, 2800nits HBM, AR Anti-Reflective Film
✅ 3300Hz PWM Dimming, 5000Hz Instantaneous TSR
✅ Snapdragon 8 Elite Extreme Gen6 2NM
✅ Self-Developed Gaming Chip Q4
✅ LPDDR5X Ultra… pic.twitter.com/u8y01gGefs
— Sufiyan Technology (@RealSufiyanKhan) September 29, 2026
18 வயதுக்கு கீழ் உள்ள டீனேஜர்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை?.. ஆலோசனை மேற்கொள்ளும் இந்திய அரசு!
உலகம் முழுவதும் இளைய தலைமுறையினர் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் சமூக ஊடகங்களை (Social Media) பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க இந்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உலக நாடுகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது இந்தியாவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ள டீனேஜர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த அரசு தடை விதிக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?
குழந்தைகள் உரிமைக்கான தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கு இன்று (செப்டமர் 29, 2026) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 18 வயதுக்கு கீழ் உள்ள டீனேஜர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக இந்திய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இதையும் படிங்க : ஜியோமி 18 ப்ரோ, 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. முழு விவரம் இதோ!
சமூக ஊடகங்களில் ஏற்படும் சிக்கல்கள்
சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதன் மூலம் மோசடி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவற்றுக்கு உள்ளாகின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் பழகி சிறுவர்கள் மற்றும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் நிகழ்வுகள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் உலவியல் ரீதியான சிக்கல்களையும் சிறுவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், இந்திய அரசு இந்திய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ்.. முழு விவரம்!
டீனேஜர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்த நாடுகள்
WhatsaApp-ல் இருந்து தானாகவே கேலரிக்கு வரும் புகைப்படங்கள்.. தடுப்பது எப்படி?
உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மிக முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்திற்கும் வாட்ஸ்அப் சிறந்ததாக உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் வரும் புகைப்படங்கள் தானாகவே போட்டோ கேலரியில் பதிவிறக்கம் செய்யப்படுவதை தடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேலரியில் தானாகவே சேகரிக்கப்படும் வாட்ஸ்அப் புகைப்படங்கள்
வாட்ஸ்அப்பில் தனிநபர் உரையாடல்கள் மட்டுமன்றி, ஏராளமான குழுக்களும் இருக்கும். இந்த குழுக்களில் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படும். அவை அனைத்தும் தானாகவே கேலரியில் ஆட்டோ டவுன்லோட் (Auto Download) செய்யப்படுவதன் மூலம், மிக விரைவில் கேலரியின் ஸ்டோரேஜ் தீர்ந்துவிடும்.  அதுமட்டுமன்றி, தேவையற்ற ஃபைல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதால் குழப்பமும் ஏற்படும். இந்த சிக்கலை தவிர்க்க ஒரு தீர்வு உள்ளது. அதாவது, இவ்வாறு புகைப்படங்கள், வீடியோக்கள் தானாக பதிவிரக்கம் செய்யப்படுவதை ஒரே ஒரு செட்டிங்க்ஸ் மூலம் தடுக்க முடியும்.
இதையும் படிங்க : பட்டன் போன் பயனர்களுக்கு பெரிய Relief.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு Strict Rules போட்ட TRAI!
ஆட்டோ டவுன்லோடு அம்சத்தை கேன்சல் செய்வது எப்படி?
அதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலிக்கு செல்ல வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அதில் உள்ள Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.
பிறகு அதில் உள்ள Storage and Data என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் Auto Download ஆப்ஷனை கிளிக் செய்து Wi-Fi, Mobile Data அல்லது எப்போதுமே Never என்ற மூன்று ஆப்ஷன்களில் உங்களுக்கு சரியானதை தேர்வு செய்ய வேண்டும்.
இதில் Never என்ற ஆப்ஷனை தேர்வு செய்யும் பட்சத்தில், உங்கள் கேலரியில் தேவையற்ற புகைப்படங்கள் தேங்காது.
இதையும் படிங்க : சிம் கார்டை வேறு ஒருவருக்கு கொடுத்தால் ரூ.50 லட்சம் அபராதம்.. 3 ஆண்டுகள் சிறை!
யூடியூபில் ஷாப்பிங் செய்ய ஏஐ கருவி.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த யூடியூப்.. முழு விவரம்!
யூடியூப் (YouTube) இதுவரை பொழுதுபோக்கு செயலியாக இருந்து வந்த நிலையில், அதில் ஷாப்பிங் செய்வதற்கான சிறப்பு அம்சங்களை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு யூடியூப் ஷாப்பிங் (YouTube Shopping) அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் இந்த அம்சத்தை விரிவுப்படுத்தும் வகையில் ஏஐ ஷாப்பிங் கருவியைஇண்ட் (AI Shopping Tool) தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவியின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏஐ கருவியை அறிமுகம் செய்த யூடியூப்
இந்திய கிரியேட்டர்களுக்காக 2024, அக்டோபர் மாதத்தில் ஷாப்பிம் அம்சத்தை யூடியூப் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தான், அந்த அம்சத்தை செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) அம்சத்துடன் விரிவுப்படுத்த ஏஐ திட்டமிட்டுள்ளது. இந்த ஷாப்பிங் அம்சத்தில் தனது புதிய பங்குதாரர்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே பிளிப்கார்ட், மிந்த்ரா, நகைக்கா, பர்ப்பிள், ஷாப்சி ஆகிய நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ள நிலையில், தற்போது அமேசான், ஏஜியோ, மீஷோ, ஸ்னாப்டீல் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விரைவில் அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விற்பனைகளை நடத்தும். அந்த வகையில், அமேசா நிறுவனத்தின் கிரேட் இந்தியல் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) அக்டோபர் 08, 2026 அன்று தொடங்க உள்ளது. இந்த சேலில் மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்
அமேசான் நிறுவனம் தனது கிரேட் இந்தியன் சேலை அக்டோபர் 08, 2026 முதல் தொடங்க உள்ளது. இந்த சேலில் ஐபோன்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ஐபோன்களுக்கு எவ்வளவு சலுகை வழங்க உள்ளது என குறிப்பிடவில்லை. அதுமட்டுமன்றி, சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 7, விவோ வி300 எப்ஃஇ, ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் நோர்டு 6 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு தள்ளுபடிகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிம் கார்டை வேறு ஒருவருக்கு கொடுத்தால் ரூ.50 லட்சம் அபராதம்.. 3 ஆண்டுகள் சிறை!
அமேசான் வெளியிட்டுள்ள சலுகை விவரங்கள்
ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.18,499-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கி சலுகைகளும் அடங்கும்.
ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.23,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போன் ரூ.15,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கி சலுகைகளும் அடங்கும்.
இதேபோல iQOO Neo 10 ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகள் உடன் ரூ.41,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஏ18 ப்ரோ சிப் ரூ.71,990-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் ரூ.9,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 6 இலக்க பாஸ்வேர்டு போதுமானதாக இருக்காது.. பாதுகாப்பை Double Strong ஆக மாற்றிய வாட்ஸ்அப்!
தள்ளுபடி காலத்தில் புத்திசாலித்தனமாக ஷாப்பிங்.. ₹2,000-க்கும் குறைவான விலையில் TWS இயர்பட்ஸை வாங்குவது எப்படி?
₹2,000-க்கும் குறைவான விலையில் TWS இயர்பட்ஸ்களை தேடுபவர்களுக்கு boAt Airdopes Prime 800D, Airdopes Prime 701 ANC மற்றும் Airdopes Plus 222 என மூன்று மாடல்கள் உள்ளன. Dolby Audio, ANC, Spatial Audio, நீண்ட பேட்டரி, கேமிங் மற்றும் AI அம்சங்கள் என ஒவ்வொரு மாடலும் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டுள்ளன.
1. boAt Airdopes Prime 800D
boAt Airdopes Prime 800D Dolby Audio வசதியுடன் வருகிறது. இது ஒலியை மேலும் விரிவாகவும் சிறப்பாகவும் கேட்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ₹2,000-க்கும் குறைவான விலையில் சிறந்த ஆடியோ அனுபவத்தை விரும்புபவர்களுக்கு இது ஒரு TWS இயர்பட்ஸ் மாடலாகும். இந்த வகையான ஒலி அனுபவத்தை ஆதரிக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் நேரடி பதிவுகளில் இந்த தொழில்நுட்பம் அதிக ஆழமான ஒலி அனுபவத்தை வழங்கும். இயர்பட்ஸில் 11mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இவை boAt-ன் ஒலி அமைப்புக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பாஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், குரல்களும் தெளிவாக கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோ அமைப்பு இந்தி திரைப்படப் பாடல்கள், பஞ்சாபி பாப் மற்றும் பல்வேறு ஸ்ட்ரீமிங் பிளேலிஸ்ட்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
அழைப்புகளுக்கும் இதில் பயனுள்ள வசதிகள் உள்ளன. நான்கு மைக்ரோஃபோன்கள் AI-ENx Noise Reduction உடன் இணைந்து செயல்படுகின்றன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல், மெட்ரோ நிலையங்கள் மற்றும் திறந்த அலுவலகங்கள் போன்ற இடங்களில் குரல் தெளிவாக கேட்க உதவும். மைக்ரோஃபோன்கள் பயனரின் குரலை பதிவு செய்யும் நிலையில், அழைப்புகளின் போது சுற்றியுள்ள சத்தத்தை குறைக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
இந்த இயர்பட்ஸில் Crest AI வசதியும் உள்ளது. இதன் மூலம் Google Gemini அடிப்படையிலான boAt-ன் குரல் வழி AI உதவியாளரை பயன்படுத்தலாம். இதனால் இயர்பட்ஸ் மூலமாக விரைவாக பதில்களை பெறவும், வேலைகளை நிர்வகிக்கவும், கைகளை பயன்படுத்தாமல் பல்வேறு விஷயங்களை செய்யவும் முடியும்.
இயர்பட்ஸ் மற்றும் சார்ஜிங் கேஸ் இரண்டையும் சேர்த்து மொத்தம் 45 மணி நேர பேட்டரி பயன்பாடு கிடைக்கும். அலுவலகம், பயணம் மற்றும் தினசரி பொழுதுபோக்கு நேரங்களில் நீண்ட நேரம் பயன்படுத்த இது உதவும். Multipoint Pairing வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் இயர்பட்ஸ்களை லேப்டாப் மற்றும் போன் இரண்டிலும் இணைத்து, தேவைப்படும்போது இரண்டுக்கும் இடையில் மாற்றிக்கொள்ளலாம்.
Prime 800D நீண்ட நேரம் வீடியோக்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களை பார்ப்பவர்கள், நாள் முழுவதும் அழைப்புகளை மேற்கொள்பவர்கள், இயர்பட்ஸில் AI வசதியை விரும்புபவர்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆடியோவை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
2. boAt Airdopes Prime 701 ANC
boAt Airdopes Prime 701 ANC மாடலில் Active Noise Cancellation முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. ₹2,000-க்கும் குறைவான விலையில் சுற்றியுள்ள சத்தத்தை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு TWS இயர்பட்ஸ் மாடலாகும். இதன் Hybrid ANC அமைப்பு 46dB வரை சத்தத்தை குறைக்கும் திறன் கொண்டது. இயர்பட்ஸின் வெளியேயும் உள்ளேயும் மைக்ரோஃபோன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விமானப் பயணம், பேருந்து பயணம், அலுவலகம் மற்றும் தினசரி பயணத்தின் போது இது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
ஆடியோவுக்காக 24-bit boAt Spatial Audio வழங்கப்பட்டுள்ளது. இது கேட்பவரை சுற்றிலும் ஒலி பரவுவது போன்ற விரிவான அனுபவத்தை உருவாக்குகிறது. ANC உடன் இணைந்து இந்த வசதி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் வேகமான உள்ளடக்கங்களை மேலும் சிறப்பாக அனுபவிக்க உதவும். பேட்டரி பயன்பாடு 50 மணி நேரம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ASAP Charge வசதி மூலம் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் சுமார் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். வேலை, பயணம் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக வெளியே செல்வதற்கு முன் குறுகிய நேரத்தில் கூடுதல் பேட்டரி தேவைப்படும்போது இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
701 ANC-ல் Google Gemini உடன் CREST AI வசதியும் உள்ளது. இது 25 மொழிகள் வரை நேருக்கு நேர் மொழிபெயர்ப்புக்கு உதவுகிறது. உரையாடல், புதிய யோசனைகளை உருவாக்குதல் மற்றும் கற்றல் போன்றவற்றுக்கும் இதை பயன்படுத்தலாம். குரல் மூலம் சாதனத்தை கட்டுப்படுத்தும் வசதியும் தினசரி பயன்பாட்டை எளிதாக்குகிறது.
அழைப்புகளுக்காக AI-ENx வசதியுடன் நான்கு மைக்ரோஃபோன்கள் உள்ளன. Multipoint Connectivity மூலம் இயர்பட்ஸ்களை போன் மற்றும் லேப்டாப் இரண்டிலும் பயன்படுத்தலாம். அடிக்கடி பயணம் செய்பவர்கள், பணியில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து தொடர்பு கொள்பவர்களுக்கு ANC, ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் இணைப்பு வசதிகளின் இந்த கூட்டணி பயனுள்ளதாக இருக்கும்.
3. boAt Airdopes Plus 222
boAt Airdopes Plus 222 Spatial Audio அனுபவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. Spatial Audio ஒலியை மேலும் விரிவாக கேட்கும் வகையில் உருவாக்குவதுடன், ஒலியில் ஆழம் மற்றும் அது வரும் திசையை உணரும் அனுபவத்தையும் வழங்குகிறது. இதன் மூலம் திரைப்படங்கள், நேரடி பதிவுகள் மற்றும் பிற பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை இயர்பட்ஸ் மூலமாகவே சரவுண்ட் சவுண்ட் அனுபவம் போல் கேட்க முடியும்.
இந்த Spatial Audio வசதியுடன் 13mm டிரைவர்கள் உள்ளன. இவை ஆழமான மற்றும் சக்திவாய்ந்த பாஸை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விரிவான ஒலி அனுபவத்துடன் வலுவான பாஸையும் பெறலாம். திரைப்படங்கள் மற்றும் நேரடி இசைக்கு இந்த அமைப்பு ஏற்றதாக இருக்கும். எலக்ட்ரானிக் இசை மற்றும் ஹிப்-ஹாப் போன்ற அதிக பாஸ் கொண்ட இசை வகைகளுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.
பேட்டரி பயன்பாடும் இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மொத்தம் 60 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். அழைப்புகள், உடற்பயிற்சி, பயணம், பொழுதுபோக்கு மற்றும் கேமிங் ஆகியவற்றின் போது இதை பயன்படுத்தலாம். கேமர்களுக்காக BEAST Mode வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 55ms லேட்டன்சி உள்ளது. வேகமான கேமிங் நேரங்களில் திரையில் நடக்கும் செயல்பாடுகளுக்கும் ஆடியோவுக்கும் இடையில் நல்ல ஒத்திசைவை வைத்திருக்க இது உதவும்.
boAt Hearables செயலி மூலம் Plus 222-ஐ கட்டுப்படுத்தவும் முடியும். இதன் மூலம் ஃபார்ம்வேர் அப்டேட் செய்யலாம், டச் கன்ட்ரோல்களை தேவைக்கு ஏற்ப மாற்றலாம் மற்றும் Ring My Buds வசதியை பயன்படுத்தி இயர்பட்ஸ்களை விரைவாக கண்டுபிடிக்கலாம். Dual Pairing Multipoint Connectivity மூலம் இயர்பட்ஸ்களை லேப்டாப் மற்றும் போன் இரண்டிலும் ஒரே நேரத்தில் இணைத்து வைத்திருக்கலாம். டச் கன்ட்ரோல்கள் மூலம் Siri அல்லது Google Assistant-ஐ பயன்படுத்தும் வசதியும் உள்ளது.
பொழுதுபோக்குக்காக Spatial Audio உடன் சிறந்த ஆடியோ அனுபவத்தை விரும்புபவர்களுக்கு Plus 222 ஏற்றதாக இருக்கும். இதனுடன் நீண்ட பேட்டரி பயன்பாடு, கேமிங்கிற்கான குறைந்த லேட்டன்சி மற்றும் செயலி மூலம் தனிப்பயனாக்கும் வசதியும் கிடைக்கிறது.
இந்த மூன்று இயர்பட்ஸ்களின் முக்கிய அம்சங்கள்
இந்த மூன்று இயர்பட்ஸ்களிலும் தினசரி பயன்பாட்டின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ற அம்சங்கள் உள்ளன. Prime 800D Dolby Audio, 11mm டிரைவர்கள், AI-ENx மைக்ரோஃபோன்கள், 45 மணி நேர பேட்டரி பயன்பாடு மற்றும் Multipoint Connectivity ஆகியவற்றை வழங்குகிறது. பொழுதுபோக்கு மற்றும் அழைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
Prime 701 ANC 46dB Hybrid ANC, 24-bit boAt Spatial Audio, 50 மணி நேரம் வரை பயன்பாடு, Multipoint Connectivity மற்றும் Google Gemini உடன் CREST AI ஆகியவற்றை வழங்குகிறது. இதன் மொழிபெயர்ப்பு மற்றும் ஸ்மார்ட் உதவியாளர் வசதிகள் பயணம், வேலை மற்றும் தினசரி தொடர்புகளில் பயனுள்ளதாக இருக்கும்.
Plus 222 மொத்தம் 60 மணி நேரம் வரை பயன்பாடு, 13mm டிரைவர்கள், Spatial Audio, 55ms BEAST Mode, செயலி மூலம் கட்டுப்படுத்தும் வசதி மற்றும் Multipoint Connectivity ஆகியவற்றை வழங்குகிறது. நீண்ட நேரம் ஆடியோ கேட்பதற்கும் கேமிங்கிற்கும் இது ஏற்றதாக இருக்கும்.
ஜியோமி 18 ப்ரோ, 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. முழு விவரம் இதோ!
பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை (Budget Smartphones) அறிமுகம் செய்வதில் மிக சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனமாக ஜியோமி (Xiaomi) உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது தனது ஜியோமி 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 18 Pro and Xiaomi 18 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜியோமி 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் அறிமுகம்
தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் ஜியோமி நிறுவனம், தற்போது தனது ஜியோமி 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சீரீஸ் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளன. இவை மேலும் பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளன.
இதையும் படிங்க : லாவா விராட் கர்வ் 5ஜி.. அறிமுக விலை ரூ.19,999 மட்டும்தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!
ஜியோமி 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Xiaomi just launched the 18 Pro Series
Aur sach batau toh... this might be the most BEAUTIFUL phone I’ve seen in a very long time.
Just look at this Red Transparent Edition Phone & the Charger 🤩
One of the 1st Phone to have Snapdragon 8 Elite Extreme Gen 6
Secondary 120Hz OLED… pic.twitter.com/yqiUHMMubD
— Devanshu Dhandhal (@mrtechpedia) September 24, 2026
இந்த ஜியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் Full HD + AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதுவே ஜியோமி 18 ப்ரோ மேஸ் ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் Full HD + AMOLED டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. ஜியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், ஜியோமி 18 ப்ரோ மேக்ஸ் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது லாவா போல்டு என்4 ப்ரோ!
அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ்.. முழு விவரம்!
இந்தியாவில் பட்ஜெட் விலையில் (Budget Range Smartphones) அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நிறுவனமாக ஓப்போ (Oppo) உள்ளது. இந்த நிறுவனம் அடுத்தடுத்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது தனது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை (Oppo Find X10 Pro Max Smartphone) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இது விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அறிமுகமானது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ்
ஓப்போ நிறுவனம் தனது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஓப்போ ஃபைண்ட் சீரீஸில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ப்ரோ மேக்ஸ் மாடல் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போன் 200 மெகாபிக்சல் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 9600 ப்ரோ சிப்செட் அம்சம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது லாவா போல்டு என்4 ப்ரோ!
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
OPPO Find X10 Pro Max unboxing is here! 👀
A closer look at OPPO’s upcoming flagship — from its sleek design to that stunning display. 🔥
What do you think of the Find X10 Pro Max?
OPPO Find X10 Pro Max, OPPO Find X10, OPPO, Find X10 Series, OPPO Unboxing, OPPO Flagship,… pic.twitter.com/iwhDNOSFMm
— My Mobile (@MyMobile_India) September 14, 2026
இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இச்ன் LTPO OLDE டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது செல்ஃபி புகைப்படங்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 8,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ள நிலையில், 50 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : மனைவிக்கு ஐபோன் 18 ப்ரோ வாங்க தங்க நகையை விற்பனை செய்த கணவன்!
பட்டன் போன் பயனர்களுக்கு பெரிய Relief.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு Strict Rules போட்ட TRAI!
தற்போதைய சூழலில் பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் தங்களது தகவல் பரிமாற்ற தேவைகள் உள்ளிட்டவற்றுக்காக மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். என்னதான் வகை வகையான ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகமானாலும் சிலர் நெட்வொர்க் வசதி இல்லாத பட்டன் போனை தான் பயன்படுத்த விரும்புகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் வாழ்வின் முக்கிய அங்கமாக இந்த பட்டன் போன்கள் உள்ள நிலையில், அதற்கான ரீச்சார்ஜ் திட்டங்கள் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வந்ததனர்.
இந்த நிலையில் தான், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI - Telecom Regulatory Authority Of India) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன, அதன் மூலம் பொதுமக்களுக்கு என்ன என்ன சிறப்பு பலன்கள் கிடைக்க உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : மனைவிக்கு ஐபோன் 18 ப்ரோ வாங்க தங்க நகையை விற்பனை செய்த கணவன்!
ரீச்சார்ஜ் பிளான்களை நிறுத்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
என்னதான் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டாலும், சிலர் இன்றும் கூட பட்டன் போன்களை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்களை கணக்கில் கொள்ளாத தொலைத்தொடர்பு நிறுவணங்கள் வெறும் குறுஞ்செய்தி மற்றும் வாய்ஸ் கால்கள் அடங்கிய பட்டன் போன்களுக்கான ரீச்சார்ஜ் திட்டங்களை நீக்கிவிட்டன. இதன் காரணமாக பட்டன் போன் பயனர்கள் தங்களுக்கான சரியான ரீச்சார்ஜ் திட்டம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், தேவையே இல்லை என்றாலும் டேட்டா உடன் கூடிய ரீச்சார்ஜ் திட்டங்களை ரீச்சார்ஜ் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஷாக் கொடுத்த சாம்சங்.. எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.20,000 வரை உயர்த்தியது!
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி
இந்த நிலையில் தான், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய புதிய விதியை வெளியிட்டுள்ளது. அதன்படி நெட்வொர்க் வசதி இல்லாத வெறும் வாய்ஸ் கால் மற்றும் குறுஞ்செய்தி வசதிகள் மட்டுமே உள்ள வகையில், குறைந்த விலையில் ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களை (Special Tariff Vouchers) அறிமுகம் செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
6 இலக்க பாஸ்வேர்டு போதுமானதாக இருக்காது.. பாதுகாப்பை Double Strong ஆக மாற்றிய வாட்ஸ்அப்!
வாட்ஸ்அப்பில் (WhatsApp) பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மெட்டா (Meta) பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தற்போது வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு அம்சம் மேலும் ஒருமுறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமன்றி, பயனர்கள் இன் கம்மிங் கால்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துக்கொள்ளவும், ஸ்கேம் கால்கள் குறித்து எளிதாக தெரிந்துக்கொள்ளும் வகையிலும் சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மேம்பாடு குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாஸ்கீ அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்
மெட்டா நிறுவனம் 2025-ல் வாட்ஸ்அப்பில் பாஸ்கீ அம்சத்தை அறுமுகம் செய்தது. இந்த அம்சத்தின் மூலம் பாஸ்வேர்டுக்கு பதிலாக Fingerprint மூலம் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் சாட் பேக்அப் மற்றும் வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த முடியும். இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது முதலே பில்லியன் கணக்கான பயனர்கள் இந்த பாஸ்கீ அம்சத்தை செட் செய்துள்ளதாக வாட்ஸ்அப் கூறியுள்ளது.
இதையும் படிங்க : AI மூலம் முடி வெட்டும் தொழிலுக்கும் ஆபத்து?.. இணையத்தில் வைரலாகும் வீடியொ!
6 இலக்க பாஸ்வேர்டு போதுமானதாக இருக்காது
முன்னதாக வெறும் ஒரு பாஸ்கீ மட்டுமே இருந்த நிலையில், இரண்டு சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்களுக்கு அது சற்று கடினமானதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான், இரண்டு சாதனங்களுக்கு வெவ்வேறு பாஸ்கீக்களை செட் செய்துக்கொள்ளும் அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பல சாதனங்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க : ஐபோன் 18 சீரீஸ் விற்பனை தொடக்கம்.. ஆப்பிள் ஸ்டோர்களில் குவியும் வாடிக்கையாளர்கள்!
முன்பை விட நீளமான பின்னை செட் செய்துக்கொள்ளலாம்
லாவா விராட் கர்வ் 5ஜி.. அறிமுக விலை ரூ.19,999 மட்டும்தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!
பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை (Smartphone) அறிமுகம் செய்யும் நிறுவனமாக லாவா (Lava) உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் லாவா ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்கின்றனர். இந்த நிறுவனம் கடந்த மாதம் தனது லாவா விராட் வி1 ஸ்மார்ட்போனை (Lava Virat V1 Smartphone) 4ஜி மற்றும் 5ஜியில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து தான் தற்போது லாவா விராட் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனை (Lava Virat Curve 5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், லாவாவின் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
லாவா விராட் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
லாவாவின் இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+3D Curved AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7100 மீடியாடெக் டைமன்சிட்டி பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி LPDDR5 RAM கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் Sony IMX752 ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேமராவில் Night Mode, Pro Video, Dual View Video, Motion Photo, Sports Mode ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : AI மூலம் முடி வெட்டும் தொழிலுக்கும் ஆபத்து?.. இணையத்தில் வைரலாகும் வீடியொ!
லாவா விராட் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் - விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
Some things are better when they take a curve. ✨
Meet the all-new Virat Curve, with a 3D Curved AMOLED Display.
Built on 17 years of trust. 🤝
Special Launch Price: ₹19,999* Sale Starts on 28th Sep, 7 PM. Exclusively on Flipkart.
To know more, visit https://t.co/WgSglZTxme… pic.twitter.com/32geftPg22
— Lava Mobiles (@LavaMobile) September 21, 2026
பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது லாவா போல்டு என்4 ப்ரோ!
இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை (Budget Smartphones) அறிமுகம் செய்யும் நிறுவனமாக லாவா உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், அது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் தான், லாவா நிறுவனம் தனது புதிய படைப்பான லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை (Lava Bold N4 Pro 5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி அறிமுகம்
லாவா நிறுவனம் தனது லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை (Lava Fold N4 Pro 5G Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மாதம் தனது லாவா போல்டு என்4 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, தற்போது தனது லாவா  போல்டு என்4 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜியை விடவும் பெரிய பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : ஐபோன் 18 சீரீஸ் விற்பனை தொடக்கம்.. ஆப்பிள் ஸ்டோர்களில் குவியும் வாடிக்கையாளர்கள்!
லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
LAVA Bold N4 Pro 5G is here with a 6000mAh battery at ₹13,999! 🔥📱
Lava’s latest budget 5G phone packs a 6.75-inch 120Hz display, Unisoc T8200, 6GB RAM + 128GB storage, 50MP dual camera and Android 16 with a 6000mAh battery to keep it going. 👀
LAVA Bold N4 Pro 5G, LAVA Bold… pic.twitter.com/zOrCuIU42R
— My Mobile (@MyMobile_India) September 18, 2026
மனைவிக்கு ஐபோன் 18 ப்ரோ வாங்க தங்க நகையை விற்பனை செய்த கணவன்!
ஆப்பிள் (Apple) நிறுவனம் சமீபத்தில் தனது ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple iPhone 18 Series Smartphones) உலக அளவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 18, 2026 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடல் ஐபோன்கள் அறிமுகமாகும்போது, அந்த ஸ்மார்ட்போனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் மிகுதியாக இருக்கும். இந்த ஆண்டு, ஐபோன்களின் விலை கடும் உயர்வை சந்தித்து இருந்த போதிலும், அந்த ஆர்வம் மக்கள் மத்தியில் குறையாமலே இருந்தது. அந்த வகையில், தங்க நகையை அடகு வைத்து ஒருவர் தனது மனைவிக்காக ஐபோன் வாங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகையை விற்பனை செய்து மனைவிக்கு ஐபோன் வாங்கிய கணவர்
ஐபோன் 18 விற்பனைக்கு வந்தபோது இந்தியாவில் உள்ள ஐபோன் ஸ்டோர்களின் வாசல்களில் ஐபோன்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் பகிர்ந்த கதை குறித்து இந்தியா டுடே பதிவிட்டுள்ளது. அதில், வரிசையில் நின்றுக்கொண்டு இருந்த ஒருவரிடம் கேட்டபோது நான் என் மனைவிக்காக ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்க வந்துள்ளேன். அதற்காக தங்க நகையை விற்பனை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப் ஸ்கேம்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் அம்சங்கள்.. என்ன என்ன?
ஐபோன் 18 ப்ரோ வாங்க காரணம் என்ன?
அவர் தனது மனைவிக்கு ஐபோன் 18 ப்ரோ வாங்குவதில் உறுதியாக இருந்த நிலையில், அது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மனைவி என்னிடம் ஐபோன் கேட்டார். ஆனால், அப்போது என்னால் வாங்கி கொடுக்க முடியவில்லை. அதன் காரணமாக இப்போது சிறந்த அம்சங்களை கொண்ட ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க வந்துள்ளேன். என்ன ஆனாலும், இந்த ஐபோனை வாங்காமல் செல்ல மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : வேலை, பயணம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு சிறந்த ANC இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்கள்
ஷாக் கொடுத்த சாம்சங்.. எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.20,000 வரை உயர்த்தியது!
இந்தியாவில் ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. ஆப்பிள் (Apple) முதல் ஒன்பிளஸ் (OnePlus) வரை என பல நிறுவனங்கள் சமீபத்தில் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தின. அந்த வகையில் தான், தற்போது சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் (Samsung Galaxy S26 Series Smartphones) விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது, இந்தியாவில் இந்த சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வரும் நிறுவனங்கள்
2026 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. சமீபத்தில் தனது 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம், அவற்றின் விலை ரூ.30,000 வரை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமன்றி, ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு பிறகு, 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையையும் அதிரடியாக உயர்த்தியது. மெமரி சிப்களின் பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன.
இதையும் படிங்க : வாட்ஸ்அப் ஸ்கேம்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் அம்சங்கள்.. என்ன என்ன?
கேலக்ஸி எக்ஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்திய சாம்சங்
🚨 Samsung has increased the prices of all Galaxy S26 series variants in India by Rs 20,000. pic.twitter.com/UtgjKBZv5u
— Indian Tech & Infra (@IndianTechGuide) September 20, 2026
ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
ரூ.87,999 மதிப்பிலான 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,07,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,07,999-ல் இருந்து ரூ.1,27,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,19,999-ல் இருந்து ரூ.1,39,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.1,39,999-ல் இருந்து ரூ.1,59,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வேலை, பயணம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு சிறந்த ANC இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்கள்
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,39,999-ல் இருந்து ரூ.1,59,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,59,999-ல் இருந்து ரூ.1,79,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் மதுரை மீனாட்சி அம்மன் மூலஸ்தான வீடியோ – காவல்துறையினர் தீவிர விசாரணை
மதுரை, செப்டம்பர் 20 : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் சிலர் மூலஸ்தானத்தை வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த செப்டம்பர் 17, 2026 அன்று 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சமூக வலைதளங்களில் பரவும் மதுரை மீனாட்சி அம்மன் மூலஸ்தான வீடியோவால் சர்ச்சை
முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 12 ஆண்டுகள் கழித்து கடந்த 2021 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மண்டபத்தை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்போதைய திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்துவீர வசந்தராயர் மண்டபம் ரூ.30 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 17, 2026 அன்று குடமுழுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பிற கட்சித் தலைவர்கள்.. எந்த சட்ட அடிப்படையில் சாத்தியம்?.. அதிமுக சரமாரி கேள்வி!
வழக்கமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள செல்போன் சேகரிப்பு மையங்களில் கொடுத்துவிட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும். இந்த நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்க பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கோவிலுக்கு செல்போன் எடுத்துச் சென்ற சிலர் அம்மன் சன்னதியை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதனை அவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடமும், காவல்துறையிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மீனாட்சியம்மன் கோயில் மூலஸ்தானத்தை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவத்தை அடுத்து பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டு, வழக்கம் போல் கோயிலுக்கு வெளியே செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிக்க : தருமபுரி அருகே பயங்கரம்.. மண்சரிவில் உருண்ட பாறை ரயில் மீது மோதி விபத்து.. ஓட்டுநரின் திறமையால் தப்பிய பயணிகள்!!
AI மூலம் முடி வெட்டும் தொழிலுக்கும் ஆபத்து?.. இணையத்தில் வைரலாகும் வீடியொ!
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தொழில்நுட்பத்தின் உச்சமாக உள்ள அம்சம் தான் செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence). தற்போதைய காலக்கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சம் இல்லாத துறைகளையே பார்க்க முடியாது. பல துறைகளை செயற்கை நுண்ணறிவு அம்சம் தனது கைவசம் வைத்துள்ளது. இந்த நிலையில் தான், முடி வெட்டும் தொழிலும் மனிதர்களின் கைகளை விட்டு சென்றுவிடுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்தும், அந்த சம்பவம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
முடி வெட்டும் தொழிலை கைப்பற்றும் செயற்கை நுண்ணறிவு?
பொறியியல் முதல் சேவை வரை என பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தான், பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் மனிதர்களின் வேலைகள் பரிபோகும் பயத்தை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் மிகவும் பேசுபொருளாக உள்ளது.
இதையும் படிங்க : நடுரோட்டில் நடந்த பயங்கரம்.. பெண் பைக் ரைடரை விரட்டிச் சென்று மோதிய கார்.. பதற வைக்கும் வீடியோ!
ஹர்ஷ் கோயங்கா பதிவிட்ட வீடியோ
AI training going on India ! Even barbers job may soon be at risk 🙈 pic.twitter.com/99CAwj5m2h
— Harsh Goenka (@hvgoenka) September 14, 2026
ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ஒருவர் முடி வெட்டுகிறார். அவர் கைகளில் வழக்கம் போல கத்தி, சீப்பு ஆகியவற்றை வைத்துள்ளார். ஆனால், அவர் தனது தலையில் கேமரா ஒன்றை மாட்டி வைத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு அம்சத்திற்கு பயிற்சி வழங்க அந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது தெரிகிறது.
இதையும் படிங்க : Viral Video : ஒரு கடைசி முத்தம்.. பணி ஓய்வின் போது பேருந்து ஓட்டுநர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஐபோன் 18 சீரீஸ் விற்பனை தொடக்கம்.. ஆப்பிள் ஸ்டோர்களில் குவியும் வாடிக்கையாளர்கள்!
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 09, 2026 அன்று நடத்திய தனது "Surprise and Shine" நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple iPhone 18 Series Smartphones) அறிமுகம் செய்தது. அதாவது, ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ (Apple iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 18 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதுமட்டுமன்றி, இதுவரை ஆப்பிள் செய்யாத புதிய சாதனையாக ஆப்பிள் டுயோ ஸ்மார்ட்போனையும் (Apple Duo Smartphone) அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று (செப்டம்பர் 18, 2026) விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபோன் 18
ஆப்பிள் நிறுவனம் தனது 18 சீரீஸில் ஆப்பிள் 18 ப்ரோ மற்றும் ஆப்பிள் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை காலை 8 மணி முதல் தொடங்கிய நிலையில், ஆப்பிள் ஸ்டோர்களின் வாசல்களில் வாடிக்கையாளர்கள் மிக நீண்ட வரிசையில் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அனைத்து ஆப்பிள் ஸ்டோர்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையும் படிங்க : பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்.. மின்சாதன பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது முதல்?
காலை முதலே வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்
#WATCH | Maharashtra: Apple begins the official sale of the iPhone 18 Pro and iPhone 18 Pro Max; a large number of people throng the company's store at Jio World Drive in Mumbai pic.twitter.com/PyFjeG24ag
— ANI (@ANI) September 18, 2026
இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் காலை முதலே ஆப்பிள் ஸ்டோர்களின் வாசல்களில் வரிசையில் காத்திருந்துள்ளனர். ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸை விடவும் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அதிக விலைக்கு அறிமுகமாகியுள்ளன. குறிப்பாக, 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகவும், 2டிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண் மாடல் ஐபோன் ரூ.3,14,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : உங்கள் துறையில் நீடித்து இருக்க ஏஐ மட்டும் போதுமா?.. இவையும் மிக முக்கியம்!
நாளை விற்பனைக்கு வரும் ஐபோன் 18 சீரீஸ்.. அதுவும் அட்டகாசமான சலுகைகள் உடன்!
உலக அளவில் எராளமான நபர்கள் மிகவும் ஆவளுடன் காத்திருந்த ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் (iPhone 18 Series Smartphones) அறிமுகமாகியுள்ள நிலையில், எப்போது விற்பனைக்கு வரும் என காத்திருந்த இந்தியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. காரணம், ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நாளை (செப்டம்பர் 18, 2026) விற்பனைக்கு வர உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த அளவே விற்பனைக்கு வந்தாலும், பல அட்டகாசமான அம்சங்களுடன் வருகின்றன. இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருவது குறித்து விரிவாக பார்க்கலாம்.
"Surprise and Shine" நிகழ்ச்சியில் "Surprise" கொடுத்த ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 09, 2026 அன்று தனது "Surprise and Shine" நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் தனது ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ (Apple iPhone 18 Pro) மற்றும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 18 Pro Max) ஆகியவற்றை அறிமுகம் செய்தது. அப்போது வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஆப்பிள் ஐபோன் டுயோ ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது. அந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 23, 2026 அன்று முதல் விற்பனைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க : உங்கள் துறையில் நீடித்து இருக்க ஏஐ மட்டும் போதுமா?.. இவையும் மிக முக்கியம்!
முன்பதிவு செய்தவர்களுக்கு ஐபோன் வழங்குவதில் முன்னுரிமை
மிக குறைந்த அளவிலான ஸ்மார்ட்போன்களே விற்பனைக்கு வர உள்ளன. இதன் காரணமாக தான், இந்தியா முழுவதும் உள்ள ஆப்பிள் ஷோ ரூம்களில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஐபோனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு ஐபோனை வழங்கிய பிறகு, மீதமுள்ள ஐபோன்களை கடைக்கு நேரடியாக சென்று வாங்க நினைக்கும் பயனர்களுக்கு வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : பண்டிகை காலத்தில் பரிசாக வழங்க சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்ஸ்.. boAt தரும் மாடல்கள்!
வாட்ஸ்அப் ஸ்கேம்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் அம்சங்கள்.. என்ன என்ன?
இந்திய பொதுமக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக வாட்ஸ்அப் (WhatsApp) மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக பணிக்கு செல்லும் நபர்கள் வாட்ஸ்அப் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இதுதவிர, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் உரையாடுவதற்கும் வாட்ஸ்அப் மிக முக்கியமானதாக உள்ளது. இத்தகைய முக்கியமான செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் பல வகையான மோசடிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில், வாட்ஸ்அப் ஸ்கேம்களில் (WhatsApp Scam) இருந்து உங்களை பாதுகாக்க உதவும் சில முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
Silence Unknown Calls
இந்த "Silence Unknown Calls" அம்சம், உங்களது தொடர்பு பட்டியலில் இல்லாத, மோசடி எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை ஸ்பேம் என காட்டும். இதனை பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கலாம்.
Context Cards
"Context Card" அம்சம் உங்களுக்கு கூடுதல் விவரங்களை வழங்கும். அதாவது, உங்களுக்கு ஒரு புதிய எண்ணின் இருந்து அழைப்பு அல்லது குறுஞ்செய்தி வருகிறது என்றால் நீங்கள் இருவரும் ஒரே குழுவில் உள்ளீர்களா, அந்த வாட்ஸ்அப் கணக்கு புதியதாக உருவாக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் தோன்றும்.
இதையும் படிங்க : பண்டிகை காலத்தில் பரிசாக வழங்க சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்ஸ்.. boAt தரும் மாடல்கள்!
Screenshare Warning
மோசடிக்காரர்கள் சில சமயம் ஸ்கிரீன் ஷேர் செய்யக்கூறி அதன் மூலம் தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடுவர். இந்த நிலையில் தான், புதிய மற்றும் சந்தேகத்திற்கு உரிய எண்களுக்கு ஸ்கிரீன் ஷேர் செய்யும்போது அது குறித்து வாட்ஸ்அப் எச்சரிக்கை செய்யும்.
Device Linking Alerts
மோசடிக்காரர்கள் சில சமயம் வேறு சில செயலிகளில் வாட்ஸ்அப் கணக்கை லாக் இன் செய்ய வைத்து மோசடியில் ஈடுபடுவர். இந்த நிலையில் தான், சந்தேகத்திற்கு உரிய வாட்ஸ்அப் லிங் கோரிக்கைகள் வந்தால் அது குறித்து இந்த அம்சம் எச்சரிக்கை செய்யும்.
இதையும் படிங்க : Android பயனர்களுக்கு CERT வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை.. என்ன தெரியுமா?
வேலை, பயணம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு சிறந்த ANC இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்கள்
Noise-cancelling இயர்பட்ஸ் அல்லது ஹெட்போன்களை தேர்வு செய்யும்போது, அதில் உள்ள Features உங்கள் தினசரி தேவைகளுக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறது என்பதை பார்க்க வேண்டும். சிலருக்கு பயணத்தின்போது வலுவான Noise Cancellation பயனுள்ளதாக இருக்கும். மற்றவர்கள் நீண்ட Battery Life, தெளிவான Calls, பல Devices-க்கு இடையில் மாற்றிப் பயன்படுத்தும் வசதி அல்லது சிறந்த Audio அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். Comfort மற்றும் சரியான Fit ஆகியவையும் முக்கியம். ஏனெனில் நீண்ட நேரம் இயர்பட்ஸை பயன்படுத்தும்போது இவை கேட்கும் அனுபவத்தை பாதிக்கலாம்.
boAt நிறுவனத்தின் Nirvana Series-ல் உள்ள Nirvana Zenith Pro மற்றும் Nirvana Eutopia 2 ANC ஆகிய மாடல்கள் வெவ்வேறு Audio தேவைகளுக்கு ஏற்ற பல Features-ஐ வழங்குகின்றன. Adaptive Noise Cancellation மற்றும் நீண்ட Battery Life முதல் Multipoint Connectivity, Spatial Audio மற்றும் Smart Features வரை இரண்டு மாடல்களிலும் வெவ்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
வேலை, பயணம், Music மற்றும் தினசரி பயன்பாட்டிற்காக இந்த இரண்டு Noise-cancelling மாடல்களும் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ற Features-ஐ வழங்குகின்றன.
boAt Nirvana Zenith Pro: நீண்ட நேரம் கேட்பதற்கும் Personalised Audio-விற்கும்
Noise Cancellation, Battery Life மற்றும் Audio Personalisation போன்ற Features தேவைப்படும் பயனர்களுக்காக boAt Nirvana Zenith Pro உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 50 dB வரை Hybrid Adaptive ANC வழங்கப்பட்டுள்ளது. Music கேட்கும்போதும், Video பார்க்கும்போதும் அல்லது பயணம் செய்யும்போதும் சுற்றுப்புற சத்தத்தை குறைக்க இது உதவும். இதன் Adaptive System, சுற்றுப்புறம் மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப ANC-ஐ மாற்றியமைக்கிறது.
இயர்பட்ஸில் 12mm Drivers உடன் Hi-Res Audio, LDAC மற்றும் boAt Spatial Audio வழங்கப்பட்டுள்ளது. ஆதரவு கொண்ட Source Device-உடன் பயன்படுத்தும்போது LDAC அதிக Audio Information-ஐ அனுப்ப முடியும். Spatial Audio மூலம் மேலும் Immersive Listening அனுபவத்தை பெற முடியும்.
Adaptive EQ by Mimi மூலம் பயனர்கள் தங்களுக்கான Hearing Profile-ஐ உருவாக்கிக் கொள்ளலாம். தங்களின் கேட்கும் தேவைக்கு ஏற்ப Audio-வை Personalise செய்யவும் முடியும்.
Calls-க்காக இதில் ஆறு Microphones மற்றும் AI-ENx Technology வழங்கப்பட்டுள்ளது. இது Background Noise-ஐ குறைக்கவும், பல்வேறு சூழல்களில் Voice Calls, Meetings மற்றும் வேலை தொடர்பான உரையாடல்களின்போது குரல் தெளிவாக இருக்கவும் உதவும்.
boAt Nirvana Zenith Pro-ல் 80 மணி நேரம் வரை Playtime கிடைக்கும். நிறுவனத்தின் தகவல்படி, 10 நிமிட ASAP Charge மூலம் 250 நிமிடங்கள் வரை Playback பெறலாம்.
அடிக்கடி பயணம் செய்பவர்கள், நீண்ட நேரம் Audio கேட்பவர்கள் மற்றும் Music விரும்புபவர்களுக்காக இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் Adaptive ANC, நீண்ட Battery Life, LDAC அடிப்படையிலான Audio, Spatial Audio மற்றும் Personalised Sound போன்ற Features உள்ளன
boAt Nirvana Eutopia 2 ANC: தினசரி பயன்பாட்டிற்கு 80 மணி நேர Battery மற்றும் Adaptive Noise Cancellation
boAt Nirvana Eutopia 2 ANC ஒரு Over-ear Wireless Headphone ஆகும். நீண்ட நேரம் கேட்பது, Noise Control மற்றும் Immersive Audio ஆகியவற்றுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 45dB வரை Adaptive Hybrid Active Noise Cancellation வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுப்புறத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும். boAt Hearables App மூலம் ANC Level-ஐ Personalise செய்யவும் முடியும்.
இந்த Headphones-ல் 80 மணி நேரம் வரை Playback Time கிடைக்கும். நீண்ட Commute, பயணம், வேலை நேரம் மற்றும் Entertainment ஆகியவற்றின்போது இது பயனுள்ளதாக இருக்கும். வழங்கப்பட்ட Specifications-ன் படி, 10 நிமிட ASAP Charge மூலம் 12 மணி நேரம் வரை Playback பெறலாம்.
Audio-வுக்காக Dual Drivers உடன் Hi-Res Audio மற்றும் LDAC வழங்கப்பட்டுள்ளது. 3D Spatial Audio மூலம் ஆதரவு கொண்ட Movies, Music மற்றும் பிற Content-க்கு அதிக Wide Sound Presentation கிடைக்கும். இதில் Bluetooth 5.4-ம் வழங்கப்பட்டுள்ளது.
Calls-ன் போது AI-ENx Technology சுற்றுப்புற சத்தத்தை குறைக்கவும், பயனரின் குரல் தெளிவாக கேட்கவும் உதவுகிறது. பயணம் செய்யும்போதோ அல்லது அதிக சத்தம் உள்ள இடங்களிலோ பயன்படுத்தும்போது இந்த Feature பயனுள்ளதாக இருக்கும்.
Adaptive ANC, நீண்ட Battery Life, Immersive Audio மற்றும் நம்பகமான Wireless Connectivity ஆகியவற்றை விரும்பும் பயனர்களுக்காக Nirvana Eutopia 2 ANC உருவாக்கப்பட்டுள்ளது.
ANC இயர்பட்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
Noise Cancellation: பயணம், தினசரி Commute மற்றும் பரபரப்பான வேலை செய்யும் இடங்களில் Noise Cancellation பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த அனுபவம் இயர்பட்ஸின் Fit, Comfort மற்றும் சுற்றுப்புற சூழலையும் பொறுத்தது.
Battery Life: பல மணி நேரம் Audio கேட்பவர்களுக்கு Battery Life முக்கியம். நிறுவனங்கள் கூறும் Playback Time-ஐ ஒரு அளவுகோலாக பார்க்கலாம். ஆனால் உண்மையான Battery Life, Volume, ANC மற்றும் பயன்படுத்தப்படும் பிற Features ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம்.
Office-க்கான Calling மற்றும் Connectivity: அலுவலகத்தில் பயன்படுத்துபவர்களுக்கு Microphone Technology மற்றும் Connectivity பயனுள்ள Features ஆக இருக்கலாம். Multipoint Connectivity மூலம் Laptop மற்றும் Smartphone ஆகியவற்றுக்கு இடையில் எளிதாக Switch செய்ய முடியும்.
Audio Features: Audio Features-ஐ தேர்வு செய்யும்போது உங்கள் Listening Habits-ஐ கருத்தில் கொள்ள வேண்டும். LDAC, Hi-Res Audio, Spatial Audio மற்றும் Personalised EQ போன்ற Features Music, Movies மற்றும் Entertainment ஆகியவற்றுக்கு கூடுதல் வசதியை வழங்கும்.
Smart Features: Translation, Voice Control, Learning மற்றும் Brainstorming போன்ற Smart Features, Music மற்றும் Calls-ஐ தாண்டியும் இயர்பட்ஸ் அல்லது Headphones-ஐ பயன்படுத்த உதவும்.
Comfort மற்றும் Fit: அதிக Features கொண்ட Device வசதியாக இருப்பதும் முக்கியம். இயர்பட்ஸ் அல்லது Headphones-ஐ எவ்வளவு நேரம் அணியப் போகிறீர்கள் என்பதற்கு ஏற்ப Fit மற்றும் Comfort ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.
சிறந்த Noise-cancelling இயர்பட்ஸ் மற்றும் Headphones எவை?
boAt Nirvana Zenith Pro மற்றும் Nirvana Eutopia 2 ANC ஆகிய இரண்டு மாடல்களும் நவீன Audio தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் Noise Cancellation, நீண்ட Battery Life மற்றும் Audio தொடர்பான பல Features கிடைக்கின்றன.
boAt Nirvana Zenith Pro நீண்ட நேரம் கேட்பதற்கும், பயணம் மற்றும் Personalised Audio-விற்கும் சிறந்த ANC இயர்பட்ஸ் ஆகும். இதில் Adaptive ANC, நீண்ட Battery Life, LDAC அடிப்படையிலான Hi-Res Audio, Spatial Audio மற்றும் Audio Personalisation தொடர்பான Features கிடைக்கின்றன.
மறுபுறம், Nirvana Eutopia 2 ANC தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட நேரம் கேட்பதற்கான சிறந்த Headphones ஆகும். இதில் ANC உடன் Multipoint Connectivity, நீண்ட Battery Life, Spatial Audio மற்றும் வேலை மற்றும் தினசரி பயன்பாட்டிற்கான Smart Features ஆகியவை கிடைக்கின்றன.
Noise-cancelling Audio Device-ஐ தேர்வு செய்யும்போது, அதை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதையும் உங்கள் தினசரி தேவைகளுக்கு எந்த Features பொருந்துகின்றன என்பதையும் பார்க்க வேண்டும். உங்கள் முன்னுரிமை பயணம், வேலை, Music, Calling அல்லது தினசரி பயன்பாடு எதுவாக இருந்தாலும், சரியான Features கொண்ட இயர்பட்ஸ் அல்லது Headphones தினசரி Audio அனுபவத்தை மேம்படுத்த உதவும்.
விரைவில் விற்பனைக்கு வரும் ஐபோன் 18 ப்ரோ சீரீஸ்.. சிறப்பு தள்ளுபடிகளும் உண்டு.. முழு விவரம் இதோ!
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 18 Series Smartphones) அறிமுகம் செய்தது. அதனுடன் இணைந்து 12 வாட்ச் சீரீஸ், ஏர்பாட் 5 ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 18, 2026 முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஐபோன் டுயோ ஸ்மார்ட்போன் (iPhone Duo Smartphone) செப்டம்பர் 23, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. இவற்றில் ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது. ஆப்பிளின் இணையதளம் மூலம் இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம்.
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் சலுகைகள்
256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,64,900-க்கு அறிமுகமாகியுள்ள நிலையில், 2 டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.3,14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,79,900-க்கு அறிமுகமாகியுள்ள நிலையில், 2 டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.3,29,900-க்கு அறிமுகமாகியுள்ளது.
இதையும் படிங்க : ஒரு போட்டோதானேன்னு அலட்சியமா இருக்காதீங்க…  காத்திருக்கும் ஆபத்து!
ரூ.7,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்
ஆப்பிள் இணையதளம் மூலம் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.7,000 உடனடி தள்ளுபடி பெறலாம். அதாவது, இந்த தள்ளுபடி மூலம் ரூ.1,64,900 மதிப்பிலான ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.1,57,900-க்கு வாங்கிக்கொள்ளலாம். இதேபோல, ரூ.1,79,900 மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.1,72,900-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : குறைந்த விலையில் ஹோம் தியேட்டர் அனுபவம் – ரூ. 25,000க்குள் சிறந்த டால்பி சவுண்ட் பார்ஸ்!
எக்ஸ்சேஞ்சுக்கு ரூ.45,000 முதல் 81,500 பெறலாம்
பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்.. மின்சாதன பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது முதல்?
பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் தொடர்ந்து தனது சேல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான தனது பிக் பில்லியன் டேஸ் சேலை (Flipkart 2026 Big Billion Days Sale) அறிவித்துள்ளது. இந்த சேல் இந்தியாவில் அக்டோபர் 09, 2026 அன்று தொடங்க உள்ளது. இந்த சேலில், பிளிப்கார்ட் நிறுவனம் ஏராளமான சலுகைகளை வழங்க உள்ள நிலையில், வங்கி தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகளை தெரிந்துக்கொள்ளும் வகையில், மைக்ரோ சைட் ஒன்றையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனம், 2026 ஆம் ஆண்டுக்கான தனது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த சேல் அக்டோபர் 09, 2026 அன்று தொடங்கும் நிலையில், பிளிப்கார்ட் பிளஸ், பிளிப்கார்ட் பிளாக் மற்றும் பிளிப்கார்ட் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஒரு நாள் முன்கூட்டியே சேலின் சலுகைகள் கிடைக்கும். அதாவது, அக்டோபர் 08, 2026 அன்றே இந்த பயனர்கள் சேலின் சிறப்பு அம்சங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேலில் பல வகையான மின் சாதன பொருட்களை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : குறைந்த விலையில் ஹோம் தியேட்டர் அனுபவம் – ரூ. 25,000க்குள் சிறந்த டால்பி சவுண்ட் பார்ஸ்!
பிக் பில்லியன் டேஸ் - என்ன என்ன சலுகைகள்
இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் ஆக்சிஸ் பேங் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல, பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் பயனர்களும் 10 சதவீதம் தள்ளுபடியை பெற முடியும். இது தவிர கூடுதலாக, பிளிப்கார்ட் சூப்பர் மணி மூலம் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.
இதையும் படிங்க : ஐபோன் டுயோவை ரூ.2.30 லட்சத்துக்கே வாங்கலாம்.. அதுவும் 2 நாட்கள் பாங்காக் டூர் உடன்.. எப்படி?
உங்கள் துறையில் நீடித்து இருக்க ஏஐ மட்டும் போதுமா?.. இவையும் மிக முக்கியம்!
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், மனிதர்கள் வேலை இழந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பெரிய பெரிய நிறுவனங்கள் லட்சக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சத்தை படித்தால், கற்றுக்கொண்டால் மட்டுமே துறைகளில் நீடிக்க முடியும் என பரவலான கருத்து உள்ளது. ஆனால், வேலையில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஏஐ மட்டும் போதாது, இந்த சில அம்சங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் ஏஐ ஃப்ளூயன்சி
பணியில் இருப்பவர்கள் தொழிநுட்பத்தை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அவர்கள் செயற்கை நுண்ணறிவு அம்சம் எப்படி செயல்படுகிறது, அதனை எந்த இடத்தில் பயன்படுத்துவது உதவியாக இருக்கும், எந்த இடத்தில் பயன்படுத்துவது தவறாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
பகுப்பாய்வு சிந்தனை
ஒரு நொடியில் கோடிக்கணக்கான தகவல்களை செயற்கை நுண்ணறிவு அம்சம் பிராசஸ் செய்யும். இந்த நிலையில், எந்த தகவல் துல்லியமானதாக இருக்கும் என்பதை பகுப்பாய்வது மிகவும் அவசியம் ஆகும். இந்த நிலையில் தான், ஒவ்வொருவரும் தங்களது பகுப்பாய்வு சிந்த்னை பயன்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க : ஐபோன் டுயோவை ரூ.2.30 லட்சத்துக்கே வாங்கலாம்.. அதுவும் 2 நாட்கள் பாங்காக் டூர் உடன்.. எப்படி?
வியாபார புரிதல்
தொழில்நுட்ப அறிவு மட்டும் தொழிலில் முடிவுகளை எடுக்க உறுதுணையாக இருக்காது. இந்த நிலையில் தான் வியாபார புரிதல் கை கொடுக்கும். முன்பு போல உயர் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த திறன் இருந்தால் போதும் என்ற நிலை மாறி, தற்போது அனைவருக்கும் இந்த திறன் இருக்கும் பட்சத்தில் தான் அவர்களால் தங்களது துறைகளில் நீடித்து இருக்க முடியும்.
இதையும் படிங்க : இனி UPI-லும் “Tap and Pay”.. இரண்டு அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்த RBI!
சிக்கலை சரிசெய்யும் திறன்
பண்டிகை காலத்தில் பரிசாக வழங்க சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்ஸ்.. boAt தரும் மாடல்கள்!
ஒரு speaker-ன் விலை, அதன் மாடல் மற்றும் அது விற்பனை செய்யப்படும் இடத்தைப் பொறுத்து மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். boAt Stone வரிசையை பார்க்கும்போது இதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. வாங்குபவர்கள் பார்க்கக்கூடிய மூன்று மாடல்கள் boAt Stone 900, boAt Stone Edge மற்றும் boAt Stone 510. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான ஒலி திறன் மற்றும் வசதிகளை வழங்குகின்றன. இதனால் வெவ்வேறு விலை வரம்பு மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப தேர்வு செய்ய முடியும். இந்த மூன்றில், boAt Stone Edge மாடல் எங்களுக்கு மிகவும் பிடித்தது. அதிக வசதிகள் கொண்ட speaker-ஐ தேடுபவர்களுக்கு இது வேறுபட்ட வசதிகளின் தொகுப்பை வழங்குகிறது.
பண்டிகை காலத்தில் speaker-ஐ பரிசாக வழங்கும்போது, ஒரு speaker-ஐ மட்டும் கொடுப்பதற்குப் பதிலாக நினைவில் நிற்கும் ஒரு அனுபவத்தை வழங்க விரும்பும் வாங்குபவர்களுக்கு, boAt நிறுவனத்தின் Stone வரிசையில் உள்ள இந்த மூன்று Bluetooth speaker மாடல்களின் வசதிகள் மற்றும் விலையைப் பார்க்கலாம்.
boAt Stone 900: அதிக சத்தத்தில் இசையை கேட்க விரும்புபவர்களுக்கு
The boAt Stone 900 boAt நிறுவனத்தின் பெரிய மற்றும் அதிக திறன் கொண்ட speaker மாடல்களில் ஒன்றாகும். சிறிய speaker-ஐ மேசை அல்லது படுக்கை அருகில் வைத்து பயன்படுத்துவதற்குப் பதிலாக அதிக சத்தத்துடனும் நிறைவான ஒலியுடனும் இசையை கேட்க விரும்புபவர்களை கருத்தில் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.
boAt நிறுவனம் Stone 900 மாடலில் 80W output, இரண்டு 3.5-inch full-range drivers மற்றும் இரண்டு 1-inch tweeters இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இதில் Bluetooth 5.3, AUX மற்றும் USB இணைப்பு வசதிகளுடன் IPX5 rating மற்றும் 15 மணி நேரம் வரை playtime வழங்கப்படுகிறது.
பண்டிகை காலத்தில் இதை எங்கு பயன்படுத்தலாம் என்பதையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். வீட்டின் வரவேற்பறையில் நடைபெறும் சிறிய நிகழ்வுகளுக்கும், மாடியில் நடக்கும் ஒன்றுகூடல்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும். இதில் dynamic RGB lighting வசதியும் உள்ளது. இது speaker-க்கு கொண்டாட்ட சூழலுக்கு ஏற்ற தோற்றத்தை வழங்குகிறது. ஆனால் இது முக்கியமாக சுற்றுப்புற சூழலுக்கான வசதியாகும். இது speaker-ன் ஒலியை மாற்றாது.
boAt Stone 900-ல் TWS வசதியும் உள்ளது. இதன் மூலம் இரண்டு இணக்கமான speakers-ஐ ஒன்றாக இணைத்து, அதிக பரப்பில் stereo sound அமைப்பை உருவாக்கலாம். Hands-free calls செய்வதற்காக built-in microphone மற்றும் smartphone voice assistant வசதியும் இதில் உள்ளது. இதன் அளவு, வசதிகள் மற்றும் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும். flipkart-ல் ₹5,499 விலையில் கிடைக்கும் Stone 900, 80W output மூலம் அதிக சக்தி கொண்ட speaker அனுபவத்தை வழங்குகிறது. பெரிய இடங்கள், குடும்ப ஒன்றுகூடல்கள் மற்றும் party நிகழ்வுகளுக்கு இது பொருத்தமானது. இதன் பெரிய வடிவமைப்பு வீட்டில் அல்லது பொழுதுபோக்கு பயன்பாட்டில் அதிக திறன் கொண்ட speaker-ஐ விரும்புபவர்களுக்கும் நல்ல தேர்வாக இருக்கும்.
பரிசாக வழங்கும்போது, இசையை விரும்புபவர்கள், அடிக்கடி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை ஒன்றுகூடச் செய்பவர்கள் அல்லது சிறிய party அமைப்பாகவும் பயன்படுத்தக்கூடிய speaker-ஐ விரும்புபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
boAt Stone Edge: கிடைத்தால் நடுத்தர தேர்வு
வசதிகளைப் பொறுத்தவரை boAt Stone Edge சிறிய தினசரி பயன்பாட்டு speaker-க்கும் பெரிய party பயன்பாட்டுக்கான speaker-க்கும் இடைப்பட்ட மாடலாக உள்ளது.
இதில் 45W output மற்றும் 8 மணி நேரம் வரை playtime வழங்கப்படுகிறது. இந்த speaker-ல் IPX5 rating, TWS support, built-in microphone மற்றும் voice-assistant support ஆகியவையும் உள்ளன. Bass-boost mode மற்றும் USB Type-C charging வசதியும் இதில் உள்ளது. மிகவும் சிறிய portable speaker-ஐ விட அதிக ஒலி திறன் வேண்டும், ஆனால் பெரிய மாடலுக்கு செல்ல விருப்பமில்லை என்பவர்களுக்கு இந்த வசதிகளின் தொகுப்பு பொருத்தமாக இருக்கலாம். Bollywood, pop, hip-hop மற்றும் அதிக bass கொண்ட மற்ற இசை வகைகளை கேட்பவர்களுக்கு bass-boost mode பயனுள்ளதாக இருக்கும். பண்டிகை கால பயன்பாட்டுக்கும் இதில் சில பயனுள்ள வசதிகள் உள்ளன. TWS மூலம் இரண்டு இணக்கமான speakers-ஐ இணைக்கலாம். IPX5 rating மூலம் தண்ணீர் தெறிப்பிலிருந்து சில பாதுகாப்பும் கிடைக்கிறது. இதனால் தண்ணீர் பாதுகாப்பு இல்லாத speaker-ஐ விட சாதாரண வெளிப்புற பயன்பாட்டுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
Marketplace listing-ல் Stone Edge விலை ₹2,999 - ₹3,999 வரை உள்ளது. பண்டிகை காலத்தில் வாங்கத் திட்டமிடும்போது, விற்பனையாளரின் தற்போதைய விலை மற்றும் கிடைக்கும் நிலையை வாங்குபவர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.
boAt Stone 510: தினசரி பயன்பாட்டுக்கான எளிய தேர்வு
The boAt Stone 510 25W output கொண்ட குறைந்த விலை தேர்வாகும். பரிசாக வழங்குவதற்கும், தினசரி இசை கேட்பதற்கும், சிறிய ஒன்றுகூடல்களுக்கும் இது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும். இதில் 8 மணி நேரம் வரை playback, IPX5 sweat and splash resistance, TWS support, Bluetooth 5.4, TF-card, AUX மற்றும் USB இணைப்பு வசதிகள், voice-assistant support மற்றும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய carry handle ஆகியவை உள்ளன. இந்த வசதிகளின் தொகுப்பு, Stone 510-ஐ party-களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட speaker-ஐ விட தினசரி பயன்படுத்தக்கூடிய portable speaker ஆக பார்க்க உதவுகிறது.
இதன் carry handle மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு speaker-ஐ எளிதாக எடுத்துச் செல்லலாம். குறுகிய பயணத்துக்கும் எடுத்துச் செல்லலாம் அல்லது வெளியில் பயன்படுத்தலாம். பல்வேறு playback வசதிகள் இருப்பதால், Bluetooth-ஐ மட்டுமே நம்பாமல் வெவ்வேறு சாதனங்களை இணைக்க அல்லது உள்ளூர் media-வை இயக்க விரும்பும் வீடுகளிலும் இது பயனுள்ளதாக இருக்கும். 25W output தனிப்பட்ட முறையில் இசை கேட்பதற்கும் சிறிய ஒன்றுகூடல்களுக்கும் போதுமானதாக இருக்கும். இதன் ஒலி அனுபவம் driver design, cabinet construction, tuning மற்றும் speaker பயன்படுத்தப்படும் அறை உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.
எளிமையாகச் சொன்னால், boAt Stone 510-ஐ பெரிய party speaker-க்கு மாற்றாக பார்ப்பதைவிட, தினசரி பயன்பாட்டுக்கான சிறிய மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற speaker ஆக பார்ப்பது சிறந்தது. ₹2,299 - ₹2,799-க்குள் பரிசு வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கலாம். படுக்கையறை, சமையலறை, படிப்பறை அல்லது வார இறுதி பயணங்களின்போது இசையை கேட்க விரும்புபவர்களுக்கு எளிமையான portable model அதிகம் பயனுள்ளதாக இருக்கலாம்.
வாங்குவதற்கு முன் எதை கவனிக்க வேண்டும்?
முதலில் கவனிக்க வேண்டியது தற்போதைய விற்பனை விலை. சமீபத்திய listing-ஐ சரிபார்ப்பதன் மூலம், கிடைக்கும் தேர்வுகளைப் பற்றி வாங்குபவர்கள் தெரிந்துகொள்ளலாம். அதன்படி தங்களுடைய budget மற்றும் தேவைக்கு ஏற்ற speaker-ஐ தேர்வு செய்யலாம். உதாரணமாக, Stone 900 தற்போது flipkart-ல் ₹5,499 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. Stone Edge விலை ₹2,999 - ₹3,999 வரை உள்ளது.
அடுத்ததாக, speaker உண்மையில் எப்படிப் பயன்படுத்தப்படப் போகிறது என்பதை பார்க்க வேண்டும்.ஒருவர் வீட்டில் அவ்வப்போது இசை கேட்பதற்காக மட்டுமே speaker வாங்குகிறார் என்றால், அதிக wattage கொண்ட மாடலை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பெரிய speaker அதிக ஒலி திறனை வழங்கலாம். ஆனால் அதற்கு அதிக இடம் தேவைப்படலாம், எடுத்துச் செல்வதற்கும் சிரமமாக இருக்கலாம்.
Battery life-ஐயும் கவனிக்க வேண்டும். Stone 900-ல் 15 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Stone Edge மற்றும் Stone 510 இரண்டிலும் 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இவை நிறுவனங்கள் குறிப்பிடும் அதிகபட்ச பயன்பாட்டு நேரங்கள். உண்மையான பயன்பாட்டு நேரம் volume மற்றும் speaker பயன்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து மாறுபடலாம்.
அடுத்து water resistance பற்றியும் கவனிக்க வேண்டும். IPX5 rating மூலம் sweat மற்றும் தண்ணீர் தெறிப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பண்டிகை கால ஒன்றுகூடல்களில் balcony, terrace அல்லது வெளிப்புற seating area போன்ற இடங்களில் speaker பயன்படுத்தப்படப் போகிறது என்றால், இந்த வித்தியாசத்தை நினைவில் கொள்வது முக்கியம்.
பரிசு பெறுபவரின் தேவைக்கு ஏற்ற வசதிகளையும் பார்க்க வேண்டும். உதாரணமாக RGB lighting, TWS அல்லது voice-assistant support போன்ற வசதிகள் அவர்களுக்கு தேவையா என்பதை கவனிக்கலாம். இவை மொத்த இசை கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும். அதே நேரத்தில், எளிமையான இணைப்பு வசதிகள் தினசரி இசை கேட்பதை சுலபமாகவும் வசதியாகவும் மாற்றும்.
boAt Stone 510 vs boAt Stone Edge vs boAt Stone 900: எது பொருத்தமானது?
பெரிய ஒன்றுகூடல்களுக்கு அதிக சத்தம் வேண்டும் என்பதே முக்கியமான தேவை என்றால், இந்த மூன்றில் Stone 900 தெளிவான தேர்வாக இருக்கும். இதில் 80W output, 15 மணி நேரம் வரை குறிப்பிடப்பட்ட battery life மற்றும் party-க்கு ஏற்ற வடிவமைப்பு உள்ளது.
Specifications அடிப்படையில் Stone Edge நடுத்தர நிலையில் உள்ளது. இதன் 45W output, bass-boost mode, TWS support மற்றும் தினசரி பயன்பாட்டுக்கான இணைப்பு வசதிகள் இதை சுவாரஸ்யமான தேர்வாக மாற்றுகின்றன. ஆனால் தற்போதைய marketplace விலை மற்றும் out-of-stock நிலை காரணமாக, budget-ல் வாங்குவதற்கு இதை பரிந்துரைப்பது சிரமமாக உள்ளது.
The Stone 510 வேறுபட்ட அணுகுமுறையை வழங்குகிறது. இதன் 25W output, எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வடிவமைப்பு மற்றும் பல்வேறு இணைப்பு வசதிகள், தினசரி இசை கேட்பதற்கும் சிறிய ஒன்றுகூடல்களுக்கும் portable speaker விரும்புபவர்களுக்கு இதை பொருத்தமாக்குகின்றன.
பண்டிகை காலத்தில் பொருட்களை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. ஒரு பொருள் குறிப்பிட்ட விலை வரம்பில் இருப்பதாக கூறப்படுவது, அந்த விலையில் அது தொடர்ந்து கிடைக்கும் என்று அர்த்தமல்ல.
Electronic பொருட்களின் விலைகள் அடிக்கடி மாறக்கூடும். அதேபோல், பழைய மாடல்கள் online-ல் தொடர்ந்து கிடைக்கலாம். ஆனால் அவற்றின் தற்போதைய விலை, முன்பு விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கலாம்.
Android பயனர்களுக்கு CERT வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை.. என்ன தெரியுமா?
இந்தியாவில் ஏராளமான மக்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android Smartphone) பயன்படுத்துகின்றனர். பொதுமக்களின் வாழ்வில் மிக முக்கிய அங்கமாக ஸ்மார்ட்போன் உள்ள நிலையில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, Indian Computer Emergency Response Team இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அவர்களது ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
CERT எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
CERT வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பல வெர்ஷன் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறைப்பாடுகள் கண்டறிப்பட்டுள்ளதன் காரணமாக, அந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எந்த எந்த வெர்ஷன் ஸ்மார்ட்போன்களில் இந்த சிக்கல் உள்ளது?
ஆண்ட்ராய்டு 14
ஆண்ட்ராய்டு 15
ஆண்ட்ராய்டு 16
ஆண்ட்ராய்டு 16 QPR2
ஆண்ட்ராய்டு 17
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தானாகவே இயங்கும் செயற்கை நுண்ணறிவு: உலக நாடுகளுக்கு ஆபத்தா?
ஆண்ட்ராய்டு பயனர்கள் கவலைக்கொள்ள வேண்டியது ஏன்?
தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய செயலியாக ஸ்மார்ட்போன் உள்ளது. அவர்கள் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை சேமித்து வைக்கின்றனர். இவ்வாறு முக்கிய தகவல்களை சேகரித்து வைக்கும் பட்சத்தில் அவை திருடப்பட்டு அதன் மூலம் மோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான், இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : ஆப்பிள் செய்த புதிய சாதனை.. ஆப்பிள் டுயோ எவ்வளவு?.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள்!
பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
ஒரு போட்டோதானேன்னு அலட்சியமா இருக்காதீங்க… காத்திருக்கும் ஆபத்து!
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஏஐ புகைப்பட டிரெண்டுகளில் பயனர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். ஆனால் ஏஐ சாட்பாட்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் வெறும் படங்கள் மட்டுமல்லாமல், இருப்பிடம் மற்றும் சாதனம் குறித்த மெட்டாடேட்டா தகவல்களையும் கொண்ட தரவுகளாக மாறுகின்றன. மனிதர்களின் முக அமைப்பு ஒரு தனித்துவமான அடையாளம் என்பதால், இதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை ஏஐ தொழில்நுட்பம் சேமித்துக் கொள்கிறது. சமூக ஊடகங்களில் இந்தப் புகைப்படங்கள் தற்காலிகமாக மறைந்தாலும், ஏஐ நிறுவனங்களின் சேவையகங்களில் அவை நீண்ட காலம் சேமிக்கப்படுகின்றன. நிறுவனங்களின் கொள்கைகளைப் பொறுத்து இந்தத் தரவுகள் 30 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சேமிப்பில் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், பயனர்களின் பதிவேற்றங்களை வைத்து அவர்களின் பழக்கவழக்கங்கள் குறித்த மறைமுக சுயவிவரத்தை நிறுவனங்களால் உருவாக்க முடியும். எனவே, தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை ஏஐ தளங்களில் பதிவேற்றுவதைத் தவிர்ப்பதுடன், அமைப்புகளில் 'Model Training' விருப்பத்தையும் செயலிழக்கச் செய்ய வேண்டும்.
சமூக ஊடக டிரெண்டுகளும் பயனர்களின் அலட்சியமும்
தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் 80-களின் ரெட்ரோ பாணி புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்பட டிரெண்டுகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. வெறும் சில நொடிகளில் தங்களின் புகைப்படங்களை கவர்ச்சிகரமான ஏஐ உருவங்களாக மாற்றுவதில் பயனர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும், இந்த தற்காலிக பொழுதுபோக்கிற்காக சாட்பாட்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் பெரும் தரவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
புகைப்படத்துடன் பகிரப்படும் ரகசியத் தரவுகள்
நாம் பதிவேற்றும் ஒரு புகைப்படம் என்பது வெறும் காட்சிப் பதிவு மட்டுமல்ல, அது ஒரு முக்கியமான டிஜிட்டல் தரவு (Data) ஆகும். புகைப்படங்களில் உள்ள ‘மெட்டாடேட்டா’ (Metadata) மூலம் படம் எடுக்கப்பட்ட நேரம், பயன்படுத்தப்பட்ட சாதனம் மற்றும் இருப்பிடம் (Location) போன்ற தகவல்கள் ஏஐ நிறுவனங்களுக்குச் சென்று சேர்கின்றன. மேலும், மனிதர்களின் முக அமைப்பு ஒரு தனித்துவமான அடையாளம் என்பதால், இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை ஏஐ தொழில்நுட்பம் எளிதாகக் கண்டறிந்து சேமித்து கொள்கிறது.
Also Read: பெண்களே உடற்பயிற்சி செய்யும்போது சிறுநீர் கசிகிறதா?
ஏஐ சேவையகங்களில் நீடிக்கும் படங்கள்
சமூக வலைத்தளங்களில் நீங்கள் பகிரும் ஏஐ படங்கள் சில நாட்களில் மறைந்துவிட்டாலும், ஏஐ நிறுவனங்களின் சேவையகங்களில் (Servers) அவை நீண்ட காலம் சேமிக்கப்படுகின்றன. சாட்பாட் நிறுவனங்களின் கொள்கைகளைப் பொறுத்து இந்த தரவு சேமிப்பு மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, சாட்ஜிபிடி (ChatGPT) தளத்தில் நீக்கப்பட்ட தரவுகள் 30 நாட்கள் வரையிலும், ஜெமினி (Gemini) தளத்தில் இயல்பாக 18 மாதங்கள் வரையிலும் பயனர்களின் தரவுகள் சேமிக்கப்படுகின்றன. மாதிரிப் பயிற்சிக்கு (Model Training) அனுமதி அளித்திருந்தால், இந்தத் தரவுகள் 5 ஆண்டுகள் வரை சேமிக்கப்பட வாய்ப்புள்ளது.
மறைமுக சுயவிவர உருவாக்கமும் தடுப்பு முறைகளும்
குறைந்த விலையில் ஹோம் தியேட்டர் அனுபவம் – ரூ. 25,000க்குள் சிறந்த டால்பி சவுண்ட் பார்ஸ்!
இந்தியாவில் ஹோம் தியேட்டர் சந்தை வேகமாக மாறி வருகிறது. இப்போது வாடிக்கையாளர்கள் தங்களது டிவியுடன் ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கரை இணைத்தால் மட்டும் போதும் என்று நினைப்பதில்லை. முழுமையான ஹோம் தியேட்டர் செட்டப்பிற்கு அதிக பணம் செலவு செய்யாமல், சிறந்த சினிமா அனுபவத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த மாற்றத்திற்கு மத்தியில், இந்தியாவின் முன்னணி ஆடியோ பிராண்ட்களில் ஒன்றான boAt தனது புதிய புராடக்ட்டான boAt Aavante Prime 5.1 5000D சவுண்ட்பாரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஒரு சாதாரண சவுண்ட்பார் கிடையாது. மூவிஸ், மியூசிக் மற்றும் கேம்ஸ் ஆகியவற்றை அதிக இம்மெர்சிவ் அனுபவத்துடன் பயன்படுத்த விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட 5.1 சேனல் ஹோம் தியேட்டர் சிஸ்டம் இது. இந்த புராடக்ட்டில் என்னென்ன ஃபீச்சர்கள் உள்ளன, மேலும் தங்களது ஹோம் ஆடியோ செட்டப்பை அப்கிரேட் செய்ய விரும்புபவர்கள் ஏன் இதை பரிசீலிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
5.1 சேனல் செட்டப்
குறைந்த விலையில் கிடைக்கும் பெரும்பாலான சவுண்ட்பார்கள் ஒரு பார்-ஐ மட்டுமே கொண்டிருக்கும். அவை ஒரு திசையில் மட்டுமே சவுண்டை வழங்கும். Aavante Prime 5.1 5000D இதை விட ஒரு படி மேலே செல்கிறது. இதில் வயர்டு சப்வூஃபர் மற்றும் இரண்டு வயர்டு சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிமுலேட்டட் சரவுண்ட் சவுண்டுக்கு பதிலாக உண்மையான சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை பெற முடியும்.
boAt கூறுவதன்படி, இந்த சிஸ்டம் 500W RMS அவுட்புட் வழங்குகிறது. இந்த செக்மென்ட்டில் உள்ள சவுண்ட்பாருக்கு இது அதிக பவர் அவுட்புட் ஆகும். இந்த சிஸ்டத்தில் "சிக்னேச்சர் சவுண்ட்" ப்ரொஃபைல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. மீடியம் முதல் பெரிய அறைகள் வரை அதிக வால்யூமில் பயன்படுத்தும்போதும் சவுண்ட் கிளாரிட்டியை வைத்திருப்பதே இதன் நோக்கம்.
வார இறுதி நாட்களில் தங்களது லிவிங் ரூமை மினி தியேட்டராக பயன்படுத்துபவர்களுக்கு இந்த வகையான செட்டப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். டயலாக், பேக்ரவுண்ட் ஸ்கோர் மற்றும் எஃபெக்ட்ஸ் ஆகியவை ஒரே இடத்தில் இருந்து கேட்பதற்கு பதிலாக அறை முழுவதும் பரவுவது போன்ற அனுபவத்தை தரலாம்.
முக்கிய கனெக்டிவிட்டி வசதிகள்
காம்பாட்டிபிலிட்டிக்கும் boAt முக்கியத்துவம் கொடுத்துள்ளது. Aavante Prime 5.1 5000D-ல் Bluetooth v5.3, HDMI (ARC), USB, AUX மற்றும் ஆப்டிக்கல் இன்புட் ஆகியவை உள்ளன. இந்த கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மூலம் புதிய ஸ்மார்ட் டிவிகள், பழைய டிவிகள், கேமிங் கன்சோல்கள், லேப்டாப்கள் மற்றும் போன்கள் ஆகியவற்றுடன் இதை பயன்படுத்த முடியும்.
HDMI ARC சப்போர்ட் குறிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு அம்சமாகும். இதன் மூலம் டிவி ரிமோட்டை பயன்படுத்தி சவுண்ட்பாரின் வால்யூமை கண்ட்ரோல் செய்ய முடியும். ஒரு திரைப்படத்தை பார்க்கும்போது இரண்டு ரிமோட்களை பயன்படுத்த வேண்டிய சிரமத்தையும் இது குறைக்கிறது.
சப்வூஃபர் மற்றும் சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் வயர்லெஸ் அல்ல, வயர்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். லேக் ஏற்படாமல் இருக்கவும் ஆடியோ சிங்க்-ல் இருக்கவும் இந்த வயர்டு செட்டப் திட்டமிட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக boAt தெரிவித்துள்ளது. குறிப்பாக வேகமான சீன்கள் அல்லது கேமிங்கின் போது சிறிய ஆடியோ டிலே கூட கவனிக்கப்படலாம்.
பில்ட்-இன் EQ மோட்ஸ்
அனைத்து வகையான கன்டென்ட்டுக்கும் ஒரே ஆடியோ செட்டிங் சரியாக இருக்காது. மூவிஸுக்கு டீப் பாஸ் மற்றும் கிளியர் டயலாக் தேவைப்படும். மியூசிக்குக்கு ஹைஸ் மற்றும் லோஸ் இடையே பேலன்ஸ் தேவைப்படும். நியூஸ் அல்லது டாக் ஷோக்களுக்கு எல்லாவற்றையும் விட கிளாரிட்டி முக்கியம்.
boAt இதில் மூன்று EQ மோடுகளை வழங்கியுள்ளது  அதன் படி மியூசிக், நியூஸ், திரைப்படங்கள். மாஸ்டர் ரிமோட் மூலம் இவற்றை மாற்றிக் கொள்ளலாம். இது சிறிய ஃபீச்சர் என்றாலும் பயனுள்ளதாக இருக்கும். கன்டென்ட்டை மாற்றும்போதெல்லாம் ஆன்-ஸ்கிரீன் மெனுக்களுக்குச் சென்று செட்டிங்ஸை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. காம்பேனியன் ஆப் இல்லாமலேயே ரிமோட் மூலம் வால்யூம், பாஸ் மற்றும் ட்ரெபிள் ஆகியவற்றை நேரடியாக அட்ஜஸ்ட் செய்யலாம்.
இந்த விலைப் பிரிவில் உள்ள சவுண்ட்பார்கள் பெரும்பாலும் பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு டிசைன் செய்யப்படுகின்றன. சில நேரங்களில் அவை பழைய டிசைன் போலவும் தோன்றலாம். Aavante Prime 5.1 5000D மூலம் இதை தவிர்க்க boAt முயற்சி செய்துள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இதற்கு "ஸ்லீக், பிரீமியம்" ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. சவுண்ட்பாரின் அளவு 950mm x 105mm x 72mm ஆகும். இதனால் பெரும்பாலான டிவி செட்டப்களின் கீழ் இதை எளிதாக வைக்க முடியும்.
சவுண்ட் குவாலிட்டி மட்டுமல்லாமல் தங்களது லிவிங் ரூம் எப்படி இருக்கிறது என்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பையர்களுக்கு, பட்ஜெட் ஃப்ரெண்ட்லி சிஸ்டத்துக்கு பிரீமியம் லுக் கொடுக்க boAt மேற்கொண்டுள்ள முயற்சி பயனுள்ளதாக இருக்கிறது.
விலை மற்றும் பாக்ஸில் என்ன கிடைக்கும்?
இங்குதான் விஷயம் சுவாரஸ்யமாகிறது. Aavante Prime 5.1 5000D-ன் விலை ரூ. 34,990. ஆனால் boAt தற்போது தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இதை ₹11,999-க்கு வழங்குகிறது. அதாவது MRP-யில் இருந்து சுமார் 66 சதவீதம் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த விலை தொடர்ந்து இருக்குமா அல்லது லிமிடெட்-டைம் ஆஃபரா என்பது தெளிவாக இல்லை. இருப்பினும், இந்த விலையில் ₹15,000-க்கும் குறைவான மற்ற சிஸ்டங்களுக்கு எதிராக இது நல்ல ஆப்ஷனாக இருக்கிறது.
பாக்ஸில் சவுண்ட்பார் யூனிட், ஒரு வயர்டு சப்வூஃபர், இரண்டு வயர்டு சாட்டிலைட் ஸ்பீக்கர்கள், AUX கேபிள், பவர் கேபிள், ரிமோட், வால்-மவுண்ட் கிட், யூசர் மேனுவல் மற்றும் ரிமோட்டுக்கான பேட்டரிகள் ஆகியவை கிடைக்கும். கூடுதலாக எதையும் வாங்காமல் கம்ப்ளீட் செட்டப்பை உருவாக்க தேவையான கிட்டத்தட்ட அனைத்தும் பாக்ஸிலேயே கிடைக்கின்றன.
வாரண்டி மற்றும் ஆஃப்டர் சேல்ஸ்
boAt 12 மாத ஸ்டாண்டர்ட் வாரண்டியை வழங்குகிறது. ஏப்ரல் 15, 2025-க்குப் பிறகு வாங்கப்பட்ட யூனிட்களுக்கு கூடுதலாக 3 மாத எக்ஸ்டெண்டட் வாரண்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த வாரண்டி 15 மாதங்களாகிறது. ஆனால் வேலிட் சீரியல் நம்பர் கொண்ட மற்றும் boAt-ன் வெப்சைட் அல்லது ஆப் மூலம் நேரடியாக வாங்கப்பட்ட புராடக்ட்களுக்கு மட்டுமே இந்த எக்ஸ்டெண்டட் வாரண்டி பொருந்தும். தர்டு-பார்ட்டி பிளாட்ஃபார்ம்கள் மூலம் வாங்குவதற்கு முன்பு பையர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரூ. 25,000க்குள் மற்றொரு ஆப்ஷன்
தங்களது சரவுண்ட் செட்டப்பில் இன்னும் கூடுதலாக விரும்பும் பையர்களுக்கு boAt-ன் லைன்அப்பில் Aavante Prime X உள்ளது. இது 7.1.4-சேனல் சிஸ்டம் ஆகும். ஹைட் எஃபெக்ட்ஸுக்காக இதில் நான்கு அப்வர்ட்-ஃபையரிங் சேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் ரியர் ஸ்பீக்கர்கள் உள்ளன. இவற்றை சவுண்ட்பாரில் இருந்து பிரித்து தனியாகவும் பயன்படுத்தலாம்.
ரியர் யூனிட்களில் பில்ட்-இன் 4,500mAh பேட்டரிகள் உள்ளன. HDMI மூலம் Dolby Atmos கன்டென்ட்டை பயன்படுத்தும்போது இவை 12 மணி நேரம் வரை பிளேபேக் வழங்கும் என்று boAt கூறுகிறது. ஸ்டாண்டர்ட் கன்டென்ட்டை பயன்படுத்தும்போது இது சுமார் ஏழு மணி நேரமாக குறைகிறது. இதன் டோட்டல் அவுட்புட் 700W ஆகும். கனெக்டிவிட்டியில் Bluetooth 5.3, HDMI eARC, USB, AUX மற்றும் ஆப்டிக்கல் இன்புட்கள் ஆகியவை உள்ளன.
Aavante Prime X-ன் லிஸ்டட் பிரைஸ் ரூ.39,999 ஆகும். ஆனால் சேல்ஸ் நேரத்தில் இதன் விலை சுமார் ரூ.25,000 அல்லது அதற்கும் குறைவாக வந்துள்ள சந்தர்ப்பங்கள் உள்ளன. அப்போதுதான் இது மிகவும் சிறந்த ஆப்ஷனாக மாறுகிறது. இதன் ரெகுலர் பிரைஸில் பார்க்கும்போது கம்பேரிசன் முற்றிலும் வேறுபடும்.
இதன் ஸ்பெசிஃபிகேஷனில் ".4" என்பது முக்கியமான அம்சமாகும். 7.1.4-ல் உள்ள இந்த நான்கு சேனல்கள் முழுவதுமாக ஹைட் எஃபெக்ட்ஸுக்காக பயன்படுத்தப்படுகின்றன. மேலிருந்து சவுண்ட் வருவது போன்ற உணர்வை ப்ராசஸிங் மூலம் மட்டும் உருவாக்குவதற்கு பதிலாக, இதற்காக டெடிகேட்டட் அப்வர்ட்-ஃபையரிங் ஸ்பீக்கர்களை இந்த சிஸ்டம் பயன்படுத்துகிறது.
சரியான Atmos கன்டென்ட்டை பயன்படுத்தும்போது இந்த ஃபீச்சர் அதிகமாக உணரப்படும். மழை, விமானம் அல்லது சுற்றியுள்ள எஃபெக்ட்ஸ் போன்றவற்றில் மேலிருந்து சவுண்ட் வருவது போன்ற உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் ஸ்பீக்கர்கள் சரியாக வேலை செய்வதற்கு அறையில் போதுமான ஸ்பேஸ் இருக்க வேண்டும்.
இதில் ஒரு டிரேட் ஆஃபும் உள்ளது. வயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்கள் மூலம் அறை முழுவதும் நீளமான கேபிள்கள் போட வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அவற்றை தொடர்ந்து சார்ஜ் செய்ய வேண்டும். பேட்டரி தீர்ந்துவிட்டால் வயர்லெஸ் வசதியின் பயன் அதிகமாக இருக்காது.
எப்படி தேர்வு செய்வது?
ஸ்பெசிஃபிகேஷன்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, Aavante Prime 5.1 5000D ஒரு குறிப்பிட்ட வகையான பையர்களை இலக்காகக் கொண்ட புராடக்ட் போல தெரிகிறது. ஒரு சவுண்ட்பார் மட்டும் இல்லாமல் உண்மையான 5.1 சரவுண்ட் சிஸ்டத்தை விரும்புபவர்கள், ஆனால் அதற்காக அதிக பணம் செலவு செய்ய விரும்பாதவர்கள் இதை பரிசீலிக்கலாம்.
வயர்டு சப்வூஃபர் மற்றும் சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக முழுமையாக கேபிள்-ஃப்ரீ செட்டப்பை விரும்புபவர்களுக்கு இது சரியான ஆப்ஷனாக இருக்காது. ஆனால் லேக்-ஃப்ரீ பெர்ஃபார்மன்ஸ் குறித்து boAt கூறும் காரணம் சில சூழ்நிலைகளில் முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக கேமிங் மற்றும் மூவிஸில் இது பயனுள்ளதாக இருக்கலாம்.
பல கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள், ஸ்பெசிஃபிகேஷன்களில் நல்ல பவர் அவுட்புட் மற்றும் பட்ஜெட் புராடக்ட் போல தெரியாத டிசைன் ஆகியவற்றுடன், அதிகம் செலவு செய்யாமல் தங்களது ஹோம் ஆடியோ எக்ஸ்பீரியன்ஸை அப்கிரேட் செய்ய விரும்புபவர்களுக்கு Aavante Prime 5.1 5000D ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் போல தெரிகிறது.
அதே நேரத்தில், ஹைட் எஃபெக்ட்ஸ் மற்றும் அதிக ஃப்ளெக்ஸிபிள் வயர்லெஸ் சரவுண்ட் செட்டப்பை விரும்புபவர்கள் Aavante Prime X-ஐயும் பரிசீலிக்கலாம். குறிப்பாக டிஸ்கவுண்ட் நேரத்தில் இதன் விலை ₹25,000-க்கு அருகில் இருக்கும்போது இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
ஐபோன் டுயோவை ரூ.2.30 லட்சத்துக்கே வாங்கலாம்.. அதுவும் 2 நாட்கள் பாங்காக் டூர் உடன்.. எப்படி?
ஆப்பிள் (Apple) நிறுவனம் சமீபத்தில் நடத்திய தனது Surprise and Shine நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ (Apple iPhone 18 Pro), 18 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 18 Pro Max) மற்றும் ஐபோன் டுயோ (iPhone Duo) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதில் பலரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருந்தது தான் ஐபோன் டுயோ. காரணம், இது ஆப்பிள் அறிமுகம் செய்த முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். இது பல அட்டகாசமான் அம்சங்களை கொண்டுள்ளது. அதே சமயம் இந்த ஸ்மார்ட்போனின் விலையும் தலையை சுற்றும் விதமாக உள்ளது. ஆனால், ஐபோன் டுயோ ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பு உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.3 லட்சத்துக்கு அறிமுகமான ஐபோன் டுயோ
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டுயோவை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.2,99,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரூ.3 லட்சத்துக்கு ரூ.100 குறைவாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. ஐபோன் டுயோ அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக மிகுந்த ஆர்வத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் அதன் விலையை பார்த்து மனமுடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : அறிமுகமானது ஐபோன் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்.. கேமரா, பேட்டரியில் அதிரடி அப்டேட்.. இந்தியாவில் இதன் விலை என்ன தெரியுமா?
குறைந்த விலைக்கு ஐபோன் டுயோவை வாங்கலாம்
உங்களுக்கு வெளி நாடுகளில் சொந்தக்காரர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் ஐபோன் டுயோவை வாங்கிவர கூறலாம். ஆனால், உங்களுக்கு அத்தகைய சொந்தங்கள் யாரும் இல்லை என்றால் கவலை வேண்டாம். நீங்களே பாங்காக்கிற்கு சென்று குறைந்த விலைக்கே வாங்கிக்கொள்ளலாம். ஐபோன் டுயோ பாங்காக்கில் 78,999 தாய் பாட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.2,30,000 ஆகும். அப்படியென்றால், இந்தியாவை விட ரூ.70,000 குறைவு.
இதையும் படிங்க : 2030 முடிவதற்குள் ஏஐ மனிதர்களையே அழித்துவிடுமா? ஆன்த்ரோபிக் ஆய்வாளர் எச்சரிக்கை
பாங்காக்கிற்கு செல்லவே செலவாகும், இந்த நிலையில் எப்படி பணத்தை சேமிக்க முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அவ்வாறு பாங்காக் சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு, மீண்டும் இந்தியாவுக்கு திரும்புனாலும் உங்களால் பணத்தை சேமிக்க முடியும். நீங்கள் விமானத்தில் பாங்காக் செய்கிறீர்கள் என்றால் விமான கட்டண ரூ.30,000 வரும். மீதம் ரூ.40,000 இருக்கும். அதில் நீங்கள் இரண்டு நாட்கள் அங்கு விடுதியில் தங்குகிறீர்கள் என்றால் அதற்கு ரூ.10,000 ஆகும். மீதம் ரூ.30,000 இருக்கும். பிறகு அங்கு செலவு செய்ய ரூ.15,000 என்று வைத்துக்கொண்டாலும் ரூ.15,000 மீதம் இருக்கும்.
இனி UPI-லும் “Tap and Pay”.. இரண்டு அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்த RBI!
இந்தியாவில் தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட பண பரிவர்த்தனை தேவைகளுக்கு யுபிஐ (UPI - Unified Payment Interface) செயலிகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். நொடி பொழுதில் ஒருவர் மற்றொருவருக்கு பணம் அனுப்ப முடியும் என்பதால் பலரும் இந்த யுபிஐ பண பரிவர்த்தனையை பிரதானமாக பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் மத்தியில் மிக முக்கிய அம்சமாக யுபிஐ உள்ள நிலையில், அதில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், இந்திய ரிசர்வ் வங்கி (RBI - Reserve Bank Of India) இரண்டு முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
அதாவது, யுபிஐ-ல் டேப் அண்ட் பே அம்சம் (Tap and Pay Feature) மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியை (Artificial Intelligence Support) உருவாக்கி கொடுத்துள்ளது. இந்த நிலையில், யுபிஐ-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு முக்கிய அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலம்.
யுபிஐ-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டு அட்டகாசமான அம்சங்கள்
மும்பையில் நடைபெற்ற Global Fintech Fest நிகழ்ச்சியில் தான், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இதனை கூறியுள்ளார். இந்த அம்சங்களை பயன்படுத்தி, தற்போது உள்ளதை விடவும், மிக விரைவாகவும், எளிதாகவும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : 2030 முடிவதற்குள் ஏஐ மனிதர்களையே அழித்துவிடுமா? ஆன்த்ரோபிக் ஆய்வாளர் எச்சரிக்கை
இனி டேப் செய்து யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யலாம்
யுபிஐ-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய டேப் அண்ட் பே அம்சத்தின் மூலம், NFC (Near Field Communication) அம்சத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் நபர்கள் POS Machine-களின் மீது டேப் செய்வதன் மூலம் சுலபமாக பண பரிவர்த்தனை செய்யலாம். இதில் கூடுதல் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த முறையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ள பயனர்களின் மொபைல் போனில் நெட்வொர்க் வசதி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதுதான்.
இதையும் படிங்க : கார்களின் விலையை மீண்டும் உயர்த்திய மாருதி சுசூகி – எந்தெந்த மாடல்களின் விலை உயர்கிறது?
தானாகவே இயங்கும் செயற்கை நுண்ணறிவு: உலக நாடுகளுக்கு ஆபத்தா?
செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பமானது மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் ஆபத்துகள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் ஏஜெண்டுகள் சோதனையின் போது வெளி இணையதளங்களை ஊடுருவிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இத்தகைய கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளைக் தடுத்து நிறுத்த அமெரிக்காவில் தேசிய அளவில் கட்டாயப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த வேண்டும் என ஓபன்ஏஐ வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் இதற்கான சட்டங்களை உடனடியாக இயற்ற வேண்டும் என்றும், நிறுவனங்களின் சுய விருப்ப நடவடிக்க மட்டும் போதாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனிடையே, கலிபோர்னியா மாகாணத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஏஐ பாதுகாப்பு மற்றும் தணிக்கைச் சட்ட முன்வரைவுகளுக்கு ஓபன்ஏஐ ஆதரவு தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் சுயாதீன நடவடிக்கைகளும் எழும் அச்சங்களும்
சோதனை முயற்சிகளின் போது செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகள் சில எல்லை மீறி வெளி அமைப்புகளுடன் தொடர்புகொண்ட சம்பவங்கள் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஏஜெண்டுகள் அனுமதியின்றி சில இணையதளங்களைப் பயன்படுத்தியதும், ஜெர்மன் நாட்டினுடைய இணையதளம் ஒன்றை தங்களது தொடர்புக்கூடமாக மாற்றியமைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று 'ஆந்த்ரோபிக்' (Anthropic) நிறுவனத்தின் மாடல்களும் நிறுவனங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிய சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவே தீவிர பாதுகாப்பு விதிகள் தேவையாகின்றன.
தேசிய அளவிலான சட்டத்தின் அவசியமும் நிறுவனங்களின் கோரிக்கையும்
அமெரிக்காவின் பல மாநிலங்கள் தனித்தனியாகச் சட்டங்களை இயற்றி வரும் நிலையில், நாடு முழுமைக்குமான ஒரு ஒருங்கிணைந்த சட்டக் கட்டமைப்பு மிக அவசியமாகும் என ஓபன்ஏஐ சுட்டிக்காட்டியுள்ளது. தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், வெறுமனே நிறுவனங்களின் விருப்பத்தின் பேரில் எடுக்கப்படும் முடிவுகள் போதுமானதாக இருக்காது. எனவே, செயற்கை நுண்ணறிவின் திறனடிப்படையிலான தேசிய அளவிலான பரிசோதனை முறைகள், தணிக்கைகள் மற்றும் இணையப் பாதுகாப்பு விதிகளை அமெரிக்க நாடாளுமன்றம் உடனடியாகச் சட்டமாக்க வேண்டும் என அந்நிறுவனம் கோரியுள்ளது.
Also Read: கையில் எப்போதும் இருக்கும் சாவியை இப்படி சுத்தம் செய்திருக்கிறீர்களா?
கலிபோர்னியா மாகாண மசோதாக்களுக்கு ஆதரவும் சர்வதேச விதிகளின் தேவையும்
தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், கலிபோர்னியா மாகாணத்தில் சுயாதீன மூன்றாம் தரப்பு தணிக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட நான்கு புதிய சட்ட முன்வரைவுகளுக்கு ஓபன்ஏஐ ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவுக்கான பாதுகாப்பு எல்லைகளை அமெரிக்கா உருவாக்குவது மட்டுமன்றி, உலகளாவிய அளவிலும் இதற்கான தகுந்த சர்வதேசத் தரநிலைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆப்பிள் செய்த புதிய சாதனை.. ஆப்பிள் டுயோ எவ்வளவு?.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள்!
ஆப்பிள் (Apple) நிறுவனம் நேற்று (செப்டம்பர் 09, 2026) தனது புதிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்தது. அதாவது, ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro), ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) மற்றும் ஐபோன் டுயோ (iPhone Duo) ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஐபோன் டுயோ உள்ளது. காரணம், இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். இந்த நிலையில், ஆப்பிளின் புதிய முயற்சியான இந்த ஆப்பிள் டுயோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐபோன் டுயோ - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இது திறந்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த போன் மடித்த நிலையில் இருக்கும்போது சிறியதாக இருக்கும். இதுவே திறந்த நிலையில், பெரியதாக தோன்றும் . இந்த ஸ்மார்ட்போனில் 5.4 இன்ச் வெளிப்பக்க டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கையால் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிரேட் 5 டைட்டானியம் ஃபேரமை ஆப்பிள் கொடுத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 254 கிராமாக உள்ளது. இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.
இதையும் படிங்க : இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 3 எலக்ட்ரிக் கார்கள் – எவை தெரியுமா?
ஐபோன் டுயோ - விலை மற்றும் இதர அம்சங்கள்
Official Trailer - iPhone Duo pic.twitter.com/i8fDATWifI
— Apple Design (@TheAppleDesign) September 9, 2026
இந்த டுயோ ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் டூயல் ஃபேஷன் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் ஃபூஷன் மெயின் கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் ஃபூஷன் அல்ட்ரா வைட் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் வைரலாகும் 80ஸ் போட்டோ டிரெண்ட் – எப்படி உருவாக்குவது?
ஆப்பிள் 17 விலை அதிரடி உயர்வு.. ரூ.1 லட்சத்தை எட்டியது.. வாடிக்கையாளர்கள் ஷாக்!
பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 18 Series Smartphones) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸில் பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம் ஒன்றும் நடைபெற்றுள்ளது. அதாவது, வழக்கமாக புதிய மாடல் ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படும்போது, முந்தைய மாடல் ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைக்கப்படும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக ஆப்பிள் 17 ஸ்மார்ட்போனின் (Apple 17 Smartphone) விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில்,  ஆப்பிள் 17 ஸ்மார்ட்போனின் விலை உயர்ந்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.17,000 உயர்வை சந்தித்த ஆப்பிள் 17 ஸ்மார்ட்போன்
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது, ரூ.17,000 வரை அதிரடியாக விலையை உயர்த்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனம், ரூ.82,900-க்கு இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், தற்போது விலை உயர்வை சந்தித்துள்ளதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.99,900 ஆக உயர்ந்துள்ளது. இதுவே 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.1,24,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஐபோன் 17 ஸ்மார்ட்போன் ரூ.1 லட்சத்தை தாண்ட வெறும் ரூ.100 மட்டுமே உள்ளது.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் வைரலாகும் 80ஸ் போட்டோ டிரெண்ட் – எப்படி உருவாக்குவது?
ஐபோன் 17 விலை உயர்வை சந்திக்க காரணம் என்ன?
Biggest Shocking 😳 News 🗞️
Apple hiked the iPhone Prices Now!!
iPhone 17 - Rs.99,900 from (82,900)
iPhone 16 - Rs.89,900 from (79,900)#AppleEvent #iPhone17 #iPhone16 pic.twitter.com/L6B0c4oJ4J
— Prasadtechintelugu (@iamprasadtech) September 9, 2026
அறிமுகமானது ஐபோன் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்.. கேமரா, பேட்டரியில் அதிரடி அப்டேட்.. இந்தியாவில் இதன் விலை என்ன தெரியுமா?
செப்டம்பர் 10, 2026: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய முதன்மை ஸ்மார்ட்போன்களான ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு கேமரா, செயல்திறன், பேட்டரி திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய நான்கு முக்கிய அம்சங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. இரண்டு மாடல்களிலும் புதிய ஏ20 ப்ரோ சிப்செட், ஐஓஎஸ் 27 இயங்குதளம் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட டைனமிக் ஐலேண்ட் வசதி இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் இதன் விலை என்ன?
இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகவும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ.1,79,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி மற்றும் 2 டிபி சேமிப்புத் திறன் கொண்ட வகைகளில் கிடைக்கின்றன.
புதிய ப்ரோ மாடல்கள் கருப்பு, வெள்ளி, பனிப்பாறை மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பர்கண்டி ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றன. செப்டம்பர் 12ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. முதல் கட்ட விற்பனை நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
கேமராவில் முக்கிய மாற்றங்கள்:
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களிலும் 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரதான கேமரா இடம்பெற்றுள்ளது. இதில் variable aperture எனப்படும் வசதி முதன்முறையாக ஐபோனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேமரா செயலியில் தொழில்முறை கட்டுப்பாட்டு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் துளை அளவு, ஷட்டர் வேகம் மற்றும் வெள்ளை சமநிலை ஆகியவற்றை மாற்ற முடியும். ஒளிப்படத்தின் வெளிப்பாட்டை கண்காணிக்க வரைபட வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஒளிப்பட பாணிகள் வசதியில் கூடுதல் அமைப்பு மற்றும் தானியக் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வினாடிக்கு 60 காட்சிகள் வரை பதிவு செய்யப்பட்ட காணொளிகளுக்கு, பதிவு செய்த பிறகு திரைப்படத் தோற்ற விளைவுகளைச் சேர்க்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 4K டால்பி விஷன் எச்டிஆர் தரத்தில் கால இடைவெளி காணொளிகளையும் பதிவு செய்ய முடியும்.
மேலும் படிக்க: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 3 எலக்ட்ரிக் கார்கள் – எவை தெரியுமா?
ஏ20 ப்ரோ சிப்செட் - சிறப்புகள் என்ன?
புதிய ஐபோன் ப்ரோ மாடல்களில் 2 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஏ20 ப்ரோ சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6-மைய செயலி, 7-மைய வரைகலை செயலி மற்றும் 32-மைய நரம்பியல் செயலி இடம்பெற்றுள்ளன.
முந்தைய தலைமுறை ஏ19 ப்ரோ சிப்செட்டுடன் ஒப்பிடும்போது, ஏ20 ப்ரோ 50 சதவீதம் அதிக நினைவக அலைவரிசையை வழங்குவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. வரைகலை செயலியின் வேகம் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று மடங்கு அதிக பரப்பளவு கொண்ட புதிய நீராவி அறை குளிரூட்டும் அமைப்பு வழங்கப்பட்டுள்ளதால், நீண்ட நேர பயன்பாட்டின்போதும் சிறந்த செயல்திறனை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸுக்கு அதிக பேட்டரி திறன்:
பேட்டரி திறனைப் பொறுத்தவரையில் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் முன்னிலையில் உள்ளது. மின்னணு சிம் மட்டுமே கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸில் 45 மணி நேரம் வரை காணொளிகளை இயக்க முடியும். ஐபோன் 18 ப்ரோ மாடலில் இது 36 மணி நேரம் வரை இருக்கும்.
மேலும் படிக்க: 2030 முடிவதற்குள் ஏஐ மனிதர்களையே அழித்துவிடுமா? ஆன்த்ரோபிக் ஆய்வாளர் எச்சரிக்கை
ப்ரோ மேக்ஸ் மாடலில் 5 நிமிடங்கள்  சார்ஜ் செய்தால் சுமார் 7 மணி நேரத்திற்கான காணொளி இயக்க நேரம் கிடைக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஐபோன் 18 ப்ரோ மாடலை சார்ஜ் செய்தால் சுமார் 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். வையர்லெஸ் சார்ஜிங் மூலம் 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.
ஐஓஎஸ் 27 மற்றும் ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு:
இரண்டு மாடல்களிலும் ஐஓஎஸ் 27 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது. அடுத்த தலைமுறை ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன், சோதனை நிலையில் சிரி செயற்கை நுண்ணறிவு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிரி, பயனரின் தனிப்பட்ட தகவல்களைப் புரிந்துகொள்வது, திரையில் உள்ள தகவல்களை அடையாளம் காண்பது மற்றும் ஆதரிக்கப்படும் செயலிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்வது போன்ற வசதிகளை வழங்குகிறது.
முக்கிய அம்சங்கள் என்ன?
இந்திய ஆரம்ப விலை: ஐபோன் 18 ப்ரோ – ரூ.1,64,900; ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் – ரூ.1,79,900
காணொளி இயக்க நேரம்: ஐபோன் 18 ப்ரோ – 36 மணி நேரம் வரை; ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் – 45 மணி நேரம் வரை
சேமிப்புத் திறன்: 2 டிபி வரை
சிப்செட்: ஏ20 ப்ரோ
பிரதான கேமரா: variable aperture வசதியுடன் 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரதான கேமரா
2030 முடிவதற்குள் ஏஐ மனிதர்களையே அழித்துவிடுமா? ஆன்த்ரோபிக் ஆய்வாளர் எச்சரிக்கை
2030 முடிவதற்குள் ஏஐ மக்கள் அனைவரையும் அழித்துவிடக்கூடும் என்று கூறி ஆன்த்ரோபிக் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 27 வயதான ஏஐ ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் தனது வேலையை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஏஐ நிறுவனங்களான ஓபன் ஏஐ மற்றும் ஆன்த்ரோபிக் ஆகிய நிறுவனங்களில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அனுபவம் பெற்ற காக்சன் தனது சமூக வலைதள பக்கத்தில் ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
அவரது பதிவில், ஓபன் ஏஐ மற்றும் ஆன்த்ரோபிக் ஆகிய இரு நிறுவனங்களும் ஏஐ வளர்ச்சியை பொறுப்புடன் கையாளவில்லை என்றும், மனிதர்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும் சூப்பர் இன்டலிஜென்ஸை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க : நாளை அறிமுகமாகும் ஆப்பிள் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்.. முக்கிய அம்சமாக களமிறங்கு ஆப்பிள் ஃபோல்டு!
ஏஐயின் வளர்ச்சி ஆபத்தானதா?
காக்சனின் கருத்துப்படி, எதிர்காலத்தில் உருவாகும் அதிநவீன ஏஐ அமைப்புகள் மனிதர்களை விட பல துறைகளில் அதிக திறன் கொண்டதாக மாறக்கூடும். அத்தகைய ஏஐயால் சைபர் தாக்குதல்களை நடத்துவது, பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவது, அதிகாரங்களை தானாகவே பெற்றுக்கொள்வது போன்ற செயல்களை செய்ய முடியும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது வேகம் குறையாமல் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஓபன் ஏஐயில் ஏஐயின் ஆபத்துகள் குறித்த தீவிரமான புரிதல் இன்னும் முழுமையாக உருவாகவில்லை என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், ஆன்த்ரோபிக் நிறுவனத்தில் ஏஐ ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் குறித்து நன்றாகவே புரிந்துகொண்டுள்ளனர் என்றும், ஆனால் மற்றவர்கள் முதலில் உருவாக்கிவிடுவார்கள்.
எனவே நாம்தான் முதலில் உருவாக்க வேண்டும் என்ற போட்டி மனநிலை காரணமாக அந்த நிறுவனங்கள் தொடர்ந்து முன்னேறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையை, மனிதகுலத்தையே பணயம் வைக்கும் ஒரு மிகப்பெரிய ஆபத்தான முயற்சி என்றும் அவர் தெரிவித்துளளார்.
இதையும் படிக்க : அச்சுறுத்தும் “Frozen Screen UPI Scam”.. நொடி பொழுதில் பண காலி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி!
ஏஐ நிறுவனங்களுக்கு கோரிக்கை
கார்களின் விலையை மீண்டும் உயர்த்திய மாருதி சுசூகி – எந்தெந்த மாடல்களின் விலை உயர்கிறது?
மாருதி சுசூகி தனது கார்களின் விலையை மீண்டும் உயர்த்தத் தயாராகி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் விலையை 20,000 ரூபாய் வரை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அமலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதத்திற்குப் பிறகு அந்நிறுவனம் மேற்கொள்ளும் 3வது விலை உயர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்களின் விலையை மீண்டும் உயர்த்திய மாருதி சுசூகி
அதிக உற்பத்திச் செலவுகள், தொடரும் பணவீக்க அழுத்தம் மற்றும் இதர செலவுகள் ஆகியவற்றின் தாக்கத்தை ஓரளவுக்கு ஈடுசெய்யவே இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வு, சாமானிய மக்களுக்கு ஒரு சவாலான விஷயமாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க : அச்சுறுத்தும் “Frozen Screen UPI Scam”.. நொடி பொழுதில் பண காலி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி!
செலவுகளைக் குறைக்கத் தங்கள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதிக பணவீக்கம் மற்றும் உலகளாவிய சூழல் காரணமாக, அதிகரித்த செலவுகளின் ஒரு பகுதியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டதாக பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி சுசூகி இந்த ஆண்டில் ஏற்கனவே இருமுறை தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் காரணம் காட்டி ஏற்கனவே பல்வேறு மாடல்களின் விலையை 30,000 ரூபாய் வரை உயர்த்தியது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில், அதே காரணங்களைக் குறிப்பிட்டு, தனது அனைத்து பயணிகள் வாகனங்களின் விலையையும் 30,000 ரூபாய் வரை உயர்த்தியது.
இந்த விலை உயர்வு Alto K10, S-Presso, Celerio, Wagon-R, Swift, Dzire, Baleno, Fronx, Brezza, Ertiga, Grand Vitara, Jimny, Invicto உள்ளிட்ட பல மாடல்களுக்குப் பொருந்தும் வகையில் அமைந்தது. ஒவ்வொரு மாடலுக்கும் விலை உயர்வு வெவ்வேறு அளவுகளில் மேற்கொள்ளப்பட்டது. இந்திய வாகனச் சந்தையைப் பொறுத்தவரை பண்டிகைக் காலம் மிகவும் பரபரப்பான விற்பனைக் காலமாகும். ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் வாகனங்களுக்கு நல்ல தேவை இருந்தபோதிலும், உலகளாவிய சூழல் மற்றும் விலை உயர்வு ஆகியவை வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனைப் பாதிக்கும் என்று மாருதி உள்ளிட்ட அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் கவலை கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க : WhatsApp : வாட்ஸ்அப் சாட்டை ரீஸ்டோர் செய்வது எப்படி.. ஸ்டெப் பை ஸ்டெப் கைடு இதோ!
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 3 எலக்ட்ரிக் கார்கள் – எவை தெரியுமா?
நாட்டில் மின்சார வாகனங்களின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3 மாதங்களாக மாதம் 30,000 மின்சாரக் கார்கள் விற்பனையாகியுள்ளன. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை விற்பனை நிலையில் 30,418 மின்சாரப் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே பயணிகள் வாகனங்களின் விற்பனை 30,000 என்ற எண்ணிக்கையைக் கடந்தது.
இக்காலகட்டத்தில் டாடா நிறுவனம் 1,370 மின்சார வாகனங்களை விற்பனை செய்தது. இது முந்தைய ஆண்டை விட 60 சதவீத வளர்ச்சியாகும். இதற்கு 'நெக்ஸான் ஈவி' (Nexon EV) முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 'பஞ்ச் ஈவி' (Punch EV) மற்றும் 'டியாகோ ஈவி' (Tiago EV) ஆகிய மாடல்களும் டாடா நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மஹிந்திராவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மின்சார வாகன விற்பனையில் அது இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் சுமார் 6,000 மின்சார வாகனங்களை விற்பனை செய்தது. மஹிந்திராவின் BE6 மற்றும் XUV.e9 மாடல்களுக்கு அதிக தேவை உள்ளது. விற்பனையில் ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக எம்ஜி மோட்டார்ஸ் (MG Motors) உள்ளது; இந்நிறுவனத்தின் விற்பனையில் 'வின்ட்சர் ஈவி' (Windsor EV) முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த ஆண்டு இந்தியச் சந்தையில் நுழைந்த 'வின்ஃபாஸ்ட்' (VinFast) நிறுவனமும் இத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவனம் 2,198 வாகனங்களை விற்பனை செய்தது. அதேவேளையில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஒரே மின்சார மாடலான 'ஈ விட்டாரா' (e Vitara)-வின் 1,405 வாகனங்களை விற்பனை செய்தது.
ஜூலை மாதத்தில் 34,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகின. ஆகஸ்ட் மாதத்திலும் இந்த விற்பனை வேகம் தொடர்ந்தது. குறிப்பாக, டாடா (Tata), மஹிந்திரா (Mahindra), ஜே.எஸ்.டபிள்யூ (JSW), எம்ஜி மோட்டார்ஸ் (MG Motors) போன்ற நிறுவனங்களின் மாடல்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளன.
இன்ஸ்டாகிராமில் வைரலாகும் 80ஸ் போட்டோ டிரெண்ட் – எப்படி உருவாக்குவது?
சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏஐ போட்டோ டிரெண்ட் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக 80களின் திரைப்பட நடிகர்கள் போன்ற ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. சாட்ஜிபிடியில் இந்த புகைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். தமிழ் திரைப்பட பிரபலங்களான அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் போன்றோரும் இந்த டிரெண்டில் இணைந்துள்ளனர். சாட்ஜிபிடி மூலம் 80ஸ் ரெட்ரோ புகைப்படங்களை எப்படி உருவாக்குவது என பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராமில் வைரலாகும் 80ஸ் போட்டோ டிரெண்ட்
கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்டூடியோ கிப்லி ஸ்டைலில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பெரும் டிரெண்டாகின. தற்போது அந்த வரிசையில் 1980களின் இந்திய சினிமா மற்றும் ஃபேஷன் பாணியை அடிப்படையாகக் கொண்ட இந்த புதிய டிரெண்ட் கவனம் பெற்றுள்ளது.இதனை திரையுலக பிரபலங்களும் தங்கள் புகைப்படங்களை ரெட்ரோ ஸ்டைலில் மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : பட்ஜெட் விலையில் அறிமுகமானது போக்கோ எக்ஸ்8 சீரீஸ்.. முழு விவரம் இதோ!
இந்த டிரெண்டில், பயனர்கள் தங்களது புகைப்படத்தை சாட்ஜிபிடியில் பதிவேற்றி, அதை 1980களில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல மாற்றி அப்லோடு செய்கின்றனர். ஆனால் இதில் நீங்கள் கொடுக்கும் பிராம்ப்ட் மிக முக்கியம். நீங்கள் கொடுக்கப்படும் பிராம்ப்டை பொறுத்து, உங்களது புகைப்படம் கிடைக்கும். குறிப்பாக, பழைய இந்திய திரைப்பட காட்சிகள், விண்டேஜ் ஸ்டுடியோ போட்டோ, பழைய குடும்ப ஆல்பம் அல்லது 1980களின் திரைப்பட இதழ் அட்டைப்படம் போன்ற தோற்றத்தை உருவாக்க முடியும்.
80ஸ் ஸ்டைலில் ப்ரீத்தி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் போட்டோ
View this post on Instagram
A post shared by Preity Mukhundhan (@preity_mukhundhan)
பெண்களின் புகைப்படங்களில் பழைய காலத்து வண்ணமயமான சேலைகள், சுருள் முடி, பெரிய காதணிகள், 1980களின் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் ஆகியவற்றைச் சேர்க்கலாம். அதேபோல், ஆண்களின் புகைப்படங்களில் பெரிய காலருடன் கூடிய ஷர்ட், பெல்ஸ் பேன்ட், அடர்த்தியான மீசை மற்றும் அக்காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நீண்ட சுருள் வடிவ ஹேர் ஸ்டைல் போன்றவற்றை உருவாக்க முடியும்.
இதையும் படிக்க : குரோமில் 12 பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்த கூகுள் – எப்படி அப்டேட் செய்வது?
சாட்ஜிபிடி மூலம் 80s புகைப்படத்தை உருவாக்குவது எப்படி?
இந்த புகைப்படத்தை உருவாக்க தொழில்முறை போட்டோ எடிட்டிங் திறன் தேவையில்லை. சாட்ஜிபிடியிடம் குறிப்பிட்ட பிராம்ப்ட் பயன்படுத்தி எளிதாக உருவாக்கலாம்.
1. சாட்ஜிபிடிக்கு செல்லவும்
2. அதில் பிளஸ் (+) பட்டனைத் தேர்வு செய்து, உங்களது தெளிவான புகைப்படத்தை அப்லோட் செய்யவும். நல்ல வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட, முகம் தெளிவாகத் தெரியும் புகைப்படத்தை அப்லோட் செய்தால் சிறந்த முடிவு கிடைக்கும்.
3. நீங்கள் விரும்பும் 80ஸ் ஸ்டைலில் எந்த மாதிரியான உடை, ஹேர் ஸ்டைல், பின்னணி, வெளிச்சம் மற்றும் பழைய புகைப்படத்தின் வடிவமைப்பு வேண்டும் என்பதை பிராம்ப்ட்டில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
4. இதில் சாட்ஜிபிடியிடம் மறக்காமல் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது. உங்கள் முகத்தின் அடையாளம் காணக்கூடிய அம்சங்கள் மற்றும் இயற்கையான ஸ்கின் டோன் ஆகியவை அப்படியே இருக்க வேண்டும் என்று பிராம்ப்டில் குறிப்பிட வேண்டும்.
முதியவர்களை குறி வைக்கும் Deep Fake Voice மோசடி.. பெற்றோர்களை பாதுகாப்பது எப்படி?
செயற்கை நுண்ணறிவு அம்சம் (Artificial Intelligence) அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. எது உண்மை, எது பொய் என வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் வேலைகள் மிகவும் தத்ரூபமாக உள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி டீப் ஃபேக் வாய்ஸ் (Deep Fake Voice) மூலம் மோசடிகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், இத்தகைய மோசடிகளில் இருந்து வயதானவர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அச்சு அசல் உண்மையை போலவே இருக்கும் டீப் ஃபேக் ஆடியோ
இந்த டீப் ஃபேக் ஆடியோ அம்சத்தின் மூலம் ஒருவரின் குரலை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், போன் கால் அழைப்பு, யூடியூப் வீடியோ ஏதேனும் ஒன்றில் ஒரு மூன்று வினாடிகளுக்கான சாம்பிள் ஆடியோ கிடைத்தால் போதும். அதன் மூலம் அதே குரலை உருவாக்க முடியும். இது ஒரு சிற்ந்த அம்சமாக இருந்தாலும், இதன் மூலம் ஏராளமான மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க : FASTag-ல் கிடைக்கும் ரூ.1,000 இலவச ரீச்சார்ஜ்.. அட இது உங்களுக்கு தெரியாதா?.. உடனே பரிசை வெள்ளுங்கள்!
அதின் ஒன்றுதான் மூத்த குடிமக்களை குறி வைக்கும் டீப் ஃபேக் குரல் மோசடி. அதாவது, முதியவர்களை அழைத்து அவர்களது பிள்ளைகளின் குரலில் பேசுவர். அதனை உண்மையாகவே தனது பிள்ளை என முதியவர்களும் நம்பிவிடுவர். இதனை ஆயுதமாக பயன்படுத்தும் மோசடிக்காரர்கள், முதியவர்களிடம் இருந்து பணம் பரிப்பர். இவ்வாறு ஏராளமான முதியவர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.
குடும்பத்திற்கான "Code Word" வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு முன்னதாக ஏதேனும் Code Word பயன்படுத்த தொடங்குங்கள். இந்த வார்த்தையை பயன்படுத்தினால் மட்டும் தான் நீங்கள் பேசுகிறீர்கள் என உங்களது குடும்பத்தினர் உறுதி செய்யும் வகையில் ஏதேனு ஒரு வார்த்தை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
குரல் பதிவுகளை தவிருங்கள்
சமூக ஊடகங்களில் உங்களது குரலை பதிவிடுவதை தவிருங்கள். அதன் மூலம் தான் இத்தகைய மோசடிகள் நடைபெறும் என்பதால், உங்களது குரல் இல்லாத பதிவுகளை பதிவு செய்யுங்கள்.
இரண்டு போன் கால்கள் செய்ய சொல்லுங்கள்
நாளை அறிமுகமாகும் ஆப்பிள் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்.. முக்கிய அம்சமாக களமிறங்கு ஆப்பிள் ஃபோல்டு!
ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது அடுத்த படைப்பான ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 18 Series Smartphones) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை செய்யாமல் இருந்த முக்கியமான விஷயம் ஒன்றை செய்ய உள்ளது. அதாவது, ஆப்பிள் தனது முதல் மடிக்கக்கூடிய, அதாவது ஃபோல்டு ஸ்மார்ட்போனை (Fold Smartphone) அறிமுகம் செய்ய உள்ளது. ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இந்த முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது.
ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் நாளை அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் நாளை (செப்டம்பர் 09, 2026) தனது Surprise and Shine நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தான் இந்த ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் தான் ஆப்பிளின் புதிய அத்யாயமான ஆப்பிள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் 18 ப்ரோ மேக்ஸுக்கு மேலாக அறிமுகம் செய்யப்படும். அதாவது, இது முற்றிலும் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனாக இருக்கும்.
இதையும் படிங்க : ஜிமெயில், டாக்ஸில் வரும் ஏஐ.. இனி குரல் மூலமே பல வேலைகளை செய்யலாம்.. முழு விவரம்!
ஐபோன் ஃபோல்டு - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Hands-on with a foldable iPhone dummy unit 👀
I’m really liking this design! It feels compact and comfortable in the hand, especially when folded pic.twitter.com/N91WUSNH6v
— Apple Radar (@appleradartwt) September 7, 2026
இந்த புதிய ஆப்பிள் ஃபோல்டு ஸ்மார்ட்போன் புத்தக வடிவிலான தோற்றத்தை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. மொபைல் போன் அளவில் இருந்து பெரிய அளவிற்கு அது மாற்றமடையும். இந்த ஸ்மார்ட்போனின் உட்பக்க ஸ்கிரீன் 5.5 இன்ச்கள் மற்றும் வெளிப்பக்க ஸ்கிரீன் 7.8 இன்ச்களை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பழைய லேப்டாப் போதும்! 16GB RAM, 1TB சேமிப்பு வழங்கும் ஜியோபிசி
அச்சுறுத்தும் “Frozen Screen UPI Scam”.. நொடி பொழுதில் பண காலி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி!
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மோசடி மற்றும் குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக புதிய புதிய வடிவில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது ஏராளமான மக்கள் இரையாவது இந்த ஃப்ரோசன் ஸ்கிரீன் யுபிஐ ஸ்கேமுக்கு (Frozen Screen UPI Scam) தான். இது என்ன மோசடி, இதன் மூலம் பொதுமக்களின் பணம் திருடப்படுவது எப்படி, இதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
"Frozen Screen UPI Scam" என்றால் என்ன?
நாம் ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தும்போதோ அல்லது இணையதளத்தை பயன்படுத்தும்போதோ அவை செயல்படாமல் அப்படியே நிர்பது வழக்கமாக ஒன்றுதான். நெட்வொர்க் சிக்கல் உள்ளிட்டவை இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், இதனை மோசடி செய்யும் யுக்தியாக பயன்படுத்திகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. உண்மை தான், சமீப காலமாக இந்த வகையான மோசடிகள் அதிகரித்துள்ளது. இது Frozen Screen UPI Scam என அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க : பழைய லேப்டாப் போதும்! 16GB RAM, 1TB சேமிப்பு வழங்கும் ஜியோபிசி
"Frozen Screen UPI Scam" எப்படி நடைபெறுகிறது?
அதாவது, மோசடிக்காரர்கள் போலியான சிக்கல்களை உருவாக்குவார்கள். விளம்பரம் அல்லது வாடிக்கையாளர் மையத்தில் இருந்து பேசுவதாக கூறி, அந்த நபரின் மொபைல் போனிலோ, வங்கி செயலிகள் அல்லது யுபிஐ செயலிகளில் சிக்கல் உள்ளதாக நம்ப வைப்பார்கள். அதனை நம்பி டார்கெட் செய்யப்படும் நபர் நடந்துக்கொண்டால் ரிவார்டு க்ளெய்ம் செய்ய ஏபிகே ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கூறுவார்கள்.
இதையும் படிங்க : நமக்கே தெரியாமல் பணம் எடுக்கப்படுமா? வருகிறது யுபிஜயில் ஏஐ வசதி – ஆபத்தா?
அதனையும் நம்பி டார்கெட் செய்யப்பட்ட நபர், பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில் அதன் மூலம் ஓடிபி திருடுவது, அந்த நபரின் ஸ்மார்ட்போனை கண்ட்ரோல் எடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து அவரது தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை திருடி மோசடியில் ஈடுபடுவர். இவ்வாறு தான் இந்த Frozen Screen UPI Scam நடைபெறும்.
பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
WhatsApp : வாட்ஸ்அப் சாட்டை ரீஸ்டோர் செய்வது எப்படி.. ஸ்டெப் பை ஸ்டெப் கைடு இதோ!
மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றம், ஆவணங்களை ஷேர் செய்வது என பலரும் முதன்மை தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப்பை கொண்டுள்ளனர். இத்தகைய மிக முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் இருக்கும் சாட்கள் மிஸ் ஆனால் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். ஆனால், அது குறித்து கவலைப்பட தேவையில்லை. காரணம், சாட்களை ரீஸ்டோர் செய்யும் வாய்ப்பை மெட்டா வழங்குகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்வது எப்படி?
கூகுள் கணக்கில் உங்களது சாட்களை பேக் அப் எடுத்து வைக்கும் பட்சத்தில் உங்களால் எப்போது வேண்டுமானாலும், உங்களது சாட்களை ரீஸ்டோர் செய்துக்கொள்ள முடியும்.
முதலில் கூகுள் ஒன் செயலியை திறக்க வேண்டும். பிறகு உங்களது கூகுள் கணக்கில் Sign In செய்ய வேண்டும்.
பிறகு அங்கே கொடுக்கப்பட்டுள்ள Storage என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
உங்களது வாட்ஸ்அப் சாட்கள் பேக்அப் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில், அங்கே அவை பட்டியலிடப்பட்டு இருக்கும்.
அதில் உங்களது சாட்கள் பேக் அப் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உறுதி செய்தால், ரீஸ்டோர் செய்யும் பணிகளை தொடங்கலாம்.
இதையும் படிங்க : நமக்கே தெரியாமல் பணம் எடுக்கப்படுமா? வருகிறது யுபிஜயில் ஏஐ வசதி – ஆபத்தா?
ஒருவேளை உங்களின் சாட்கள் கூகுள் கணக்கில் பேக் அக் எடுக்கப்படவில்லை என்றால், ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு உங்களால் சாட்களை மாற்றம் செய்துக்கொள்ள முடியும்.
கூகுள் கணக்கில் இருந்து சாட் ஹிஸ்டரியை ரீஸ்டோர் செய்ய
வாட்ஸ்அப் செயலியை Uninstall செய்துவிட்டு பிறகு Reinstall செய்ய வேண்டும்.
பிறகு அதில் கொடுப்பட்டு இருக்கும் Restore என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
உங்களுக்கு Restore செய்ய வேண்டாம் என்றால் Skip என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
இதையும் படிங்க : ஒரே மாதத்தில் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் – என்ன காரணம்?
பட்ஜெட் விலையில் அறிமுகமானது போக்கோ எக்ஸ்8 சீரீஸ்.. முழு விவரம் இதோ!
பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நிறுவனமாக போக்கோ (Poco) உள்ளது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனை ஏராளமான இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். போக்கோ நிறுவனம் அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது தனது போக்கோ எக்ஸ்8 மற்றும் எக்ஸ்8 பவர் (Poco X8 and Poco X8 Power) ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் பெரிய பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போக்கோ எக்ஸ்8 மற்றும் எக்ஸ்8 பவர் ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
போக்கோ எக்ஸ்8 மற்றும் எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போன்கள்
போக்கோ நிறுவனம் இந்தியாவில் தனது போக்கோ எக்ஸ்8 மற்றும் போக்கோ எக்ஸ்8 பவர் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மாதம் எம்8 சீரீஸில் ஸ்மார்ட்போன்களை (Poco M8 Series Smartphone) அறிமுகம் செய்த நிலையில், தற்போது எக்ஸ்8 சீரீஸில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் 3,500 நிட்ஸ் வரை பீக் பிரைட்னஸ் அம்சமும் உள்ளது.
இதையும் படிங்க : ஒரே மாதத்தில் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் – என்ன காரணம்?
போக்கோ எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் - விலை மற்றும் இதர அம்சங்கள்
9,000mAh. 67W. Snapdragon. IP69K.
And all of that for just ₹26,999. 🔥
Big battery. Big performance. Built tough.
The POCO X8 doesn’t just bring power.
It brings MAXX power. Sale starts 11th Sept.#POCO #POCOX8 #POCOIndia #PowerMaxxing pic.twitter.com/CKbLnFdosU
— POCO India (@IndiaPOCO) September 4, 2026
குரோமில் 12 பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்த கூகுள் – எப்படி அப்டேட் செய்வது?
குரோம் புரௌசரில் உள்ள மொத்தம் 12 பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்யும் வகையில் கூகுள் ஒரு புதிய பாதுகாப்பு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இவற்றில், இணையத் தாக்குதல்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஜீரோ-டே எனப்படும் மிகத் தீவிரமான குறைபாடும் அடங்கும். இந்தக் குறைபாடு குரோமின் வி8 ஜாவா ஸ்கிரிப்ட் இன்ஜினுடன் தொடர்புடையது. இதைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், தொலைதூரத்திலிருக்கும் ஒரு ஹேக்கர், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எச்டிஎம்எள் பக்கத்தின் வழியாகத் தன்னிச்சையான குறியீட்டை இயக்க முடியும்.
இதனை தவிர்க்க விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ்க்கான புதிய குரோம் அப்டேட்டை கூகுள் வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக அப்டேட் செய்வதன் மூலம் ஹேக்கர்களால் உருவாகும் ஆபத்துகளில் இருந்து நம்மால் பாதுகாக்க முடியும். நம் பெரும்பாலான பணிகளை குரோம் புரௌசர் வழியாகவே செய்கிறோம் என்பதால் இந்த அப்டேட் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
இதையும் படிக்க : ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
'ஜீரோ-டே' குறைபாட்டைத் தவறாகப் பயன்படுத்துதல்
புதிய அப்டேட்டில் சரிசெய்யப்பட்ட 12 குறைபாடுகளில், CVE-2026-85046 என்பது மிக முக்கியமானதாகும். இது பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சால்வடோர் கியூக்லியாவால் கண்டறியப்பட்ட, V8 இன்ஜினில் உள்ள மிகத் தீவிரமான குறைபாடாகும். கூகுளின் கூற்றுப்படி, இந்தக் குறைபாடு சைபர் தாக்குதல்களில் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்ததற்காக அந்த அவருக்கு 1,000 டாலர் வெகுமதி அளிக்கப்பட்டது.
பெரும்பாலான புரௌசரில்கள் பாதுகாப்பான நிலைக்கு மாற்றப்படும் வரை, தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், இந்தத் தாக்குதல்கள் குறித்த விரிவான தகவல்களை கூகுள் இன்னும் வெளியிடவில்லை. வடிவமைக்கப்பட்ட HTML பக்கம் வழியாகத் தாக்குதல் சாத்தியம். தேசிய பாதிப்புத் தரவுத்தளத்தின் படி, CVE-2026-85046 ஆனது V8ல் உள்ள டைப் கன்ஃபியூசன் சிக்கலை உள்ளடக்கியது. இதைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், தொலைதூரத்திலிருக்கும் ஒரு தாக்குதலாளர், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட HTML பக்கத்தைப் பயன்படுத்தி 'சாண்ட்பாக்ஸ்' (sandbox) சூழலுக்குள் தன்னிச்சையான குறியீட்டை இயக்க முடியும்.
எப்படி செய்வது?
மேலும் V8 என்பது குரோமின் ஜாவா ஸ்கிரிப்ட் இன்ஜின் ஆகும். இது இணையச் செயலிகள் மற்றும் ஊடாடும் இணையதளங்கள் புரௌசரில்யில் இயங்குவதற்கு உதவுகிறது. கூகுளின் இந்த அப்டேட்டில் சரிசெய்யப்பட்ட குறைபாடுகளில் பெரும்பாலானவை மிகத் தீவிரமான வகையைச் சேர்ந்தவை. குரோம் மட்டுமல்லாமல் பிற புரௌசரில்களையும் அப்டேட் செய்யுங்கள். கூகுளின் கூற்றுப்படி, 2026-ஆம் ஆண்டில் குரோம் புரௌசரில்க்காகச் சரிசெய்யப்பட்ட ஆறாவது 'ஜீரோ-டே' குறைபாடு இதுவாகும்.
இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் வந்த Bill Payments.. இனி ஈஸி தான்.. பயன்படுத்துவது எப்படி?
இந்தச் சிக்கல் குரோம் அடிப்படையாகக் கொண்ட பிற புரௌசரில்களையும் பாதிக்கிறது; எனவே, மைக்ரோசாஃப்ட், எட்ஜ், பிரேவ் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் புரௌசரில்களின் சமீபத்திய அப்டேட்டை நிறுவுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குரோமில் அப்டேட்களைச் சரிபார்க்க, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி மெனுவைக் கிளிக் செய்து, 'Help' என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் 'About Google Chrome' என்பதைக் கிளிக் செய்யவும். புரௌசரில்யின் தற்போதைய பதிப்பு எண் அங்கே காட்டப்படும்.இதனை அப்டேட் செய்வதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை பாதுகாக்க முடியும்.
ஜிமெயில், டாக்ஸில் வரும் ஏஐ.. இனி குரல் மூலமே பல வேலைகளை செய்யலாம்.. முழு விவரம்!
தற்போதைய சூழலில் அனைத்து இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) அம்சத்தின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் செயலிகளில் கூட செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் உள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகிய செயலிகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது. அதனை பயனர்கள் பரவலாக பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தான், கூகுள் நிறுவனம் ஜிமெயில் மற்றும் டாக்ஸ் செயலிகளில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை குரல் கட்டளையின் மூலமே செயல்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜிமெயில் மற்றும் டாக்ஸ் (Gmail and Docs) ஆகியவற்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏஐ அம்சம் எப்படி செயல்படும், அதன் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜிமெயில், டாக்ஸிலும் இப்போது செயற்கை நுண்ணறிவு அம்சம்
ஜிமெயில் மற்றும் டாக்ஸ் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் கூகுள் நிறுவனம் அவற்றில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ஜெமினி ஏஐ மூலம் பயனர்கள் கூகுள் மற்றும் டாக்ஸில் தங்களுக்கு தேவையான வேலைகளை மிக சுலபமாக முடித்துக்கொள்ள முடியும். கூகுள் நிறுவனம் குரல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் ஜிமெயிலில் மெயில்களை தேடுவது, புதிய டாக்குமெண்ட் உருவாக்குவது, நோட்ஸ் எடுப்பது உள்ளிட்ட செயல்களை மிக சுலபமாக செய்து முடிக்க முடியும்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் வந்த Bill Payments.. இனி ஈஸி தான்.. பயன்படுத்துவது எப்படி?
எப்போது முதல் பயன்பாட்டுக்கு வருகிறது?
பழைய லேப்டாப் போதும்! 16GB RAM, 1TB சேமிப்பு வழங்கும் ஜியோபிசி
செப்டம்பர் 5, 2026: பழைய லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் வேகம் குறைந்துவிட்டதால் புதிய கணினி வாங்க நினைப்பவர்கள், இனி அவசரப்பட வேண்டியதில்லை. ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபிசி (JioPC) சேவை மூலம், ஏற்கனவே உள்ள கணினியையே கிளவுட் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிக திறன் கொண்டதாக மாற்றிக்கொள்ள முடியும். இதன் மூலம் புதிய ஹார்டுவேர் வாங்காமலேயே, பயனர்கள் தங்களது தற்போதைய லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் 16GB வரை RAM மற்றும் 1TB வரை கிளவுட் சேமிப்பகத்தை பயன்படுத்த முடியும்.
இதுவரை ஜியோபிசி சேவை ஜியோஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து இணையப் பயனர்களும் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய திட்டங்களில் 8GB RAM, 500GB கிளவுட் சேமிப்பகம் கொண்ட அடிப்படை திட்டமும், 16GB RAM, 1TB கிளவுட் சேமிப்பகம் கொண்ட ஜியோபிசி அல்ட்ரா திட்டமும் இடம்பெற்றுள்ளன.
ரூ.1,000 முதல் திட்டங்கள்:
ஜியோபிசி திட்டங்களின் ஆரம்ப விலை ரூ.1,000 ஆகும். 8GB RAM மற்றும் 500GB சேமிப்பகத்துடன் 2 மாத திட்டம் ரூ.1,000-க்கும், 16GB RAM மற்றும் 1TB சேமிப்பகத்துடன் கூடிய அல்ட்ரா திட்டம் ரூ.1,200-க்கும் வழங்கப்படுகிறது.
5 மாத அடிப்படை திட்டம் ரூ.2,000-க்கும், அல்ட்ரா திட்டம் ரூ.2,500-க்கும் கிடைக்கிறது. 10+2 மாதங்கள் எனப்படும் 12 மாத திட்டத்தின் விலை ரூ.4,000 ஆகவும், அல்ட்ரா திட்டத்தின் விலை ரூ.5,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8 ஆண்டுகள் பழைய கணினியிலும் AI செயலிகள்!
பழைய ஹார்டுவேர், குறைந்த சேமிப்பகம் அல்லது பழைய இயங்குதளம் காரணமாக கணினியின் வேகம் குறைந்தவர்களுக்காக ஜியோபிசி வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட்டிலேயே கணினி செயல்பாடுகளின் பெரும்பகுதி மேற்கொள்ளப்படுவதால், 8 ஆண்டுகள் பழைய கணினியிலும் தற்போதைய AI செயலிகள் மற்றும் அதிக சேமிப்பகம் தேவைப்படும் பணிகளை மேற்கொள்ள முடியும் என ஜியோ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
நமக்கே தெரியாமல் பணம் எடுக்கப்படுமா? வருகிறது யுபிஜயில் ஏஐ வசதி – ஆபத்தா?
பெரிய ஷாப்பிங் மால்கள் முதல் வீட்டருகே இருக்கும் சிறிய பெட்டி கடைகள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ மயமாக மாறிவிட்டன. எல்லா இடத்திலும் பணம் எடுத்து செல்ல வேண்டிய தேவையை குறைத்துள்ளதால் இது வரப்பிரசாதமாக மாறி வருகிறது. இந்த நிலையில் இந்த யுபிஐயின் அடுத்த கட்டமாக ஏஐ வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பயனரிடம் அனுமதி பெறாமலயே தன்னிச்சையாக பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுபிஐயில் வருகிறது புதிய ஏஐ ஏஜென்ட்
இந்தியாவில் யுபிஐ பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆரம்பகட்டத்தில் பாஸ்வேர்டு, பின், ஓடிபி என ஒவ்வொரு பரிவர்த்தனையின்போது பயனரிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலை இருந்தது. இது நம் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற உணர்வை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து முக அடையாள சரிபார்ப்பு, கைரேகை போன்ற பாதுகாப்பு அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதையும் படிக்க : 16 வயதில் AI Start Up.. தந்தைக்கே வேலை கொடுத்த சிறுவன்.. வியக்க வைக்கும் கேரளா சிறுவன்!
இந்த நிலையில் இதற்கு அடுத்தகட்டமாக ஏஐ ஏஜென்ட் மூலம் தானாகவே பணப்பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கா புதிய கட்டமைப்பு உருவாகி வருகிறது. விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி செயல்படும்?
இதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சார்பில் புதிதாக ஒருங்கிணைந்த ஏஐென்ட் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் பயனர்கள் முன்பே வழங்கிய அனுமதியின் படி இந்த ஏஐ செயல்படும். உதாரணமாக ஆன்லைனில் ஒரு பொருள் வாங்குகிறீர்கள் எனக்கொள்வோம். இதனை ஏஐ ஏஜென்டிடம் சொன்னால் பல்வேறு தளங்களை ஆராய்ந்து விலையை ஒப்பிட்டு சிறந்த ஆஃப்ர் உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொண்டு இந்த ஏஐ ஏஜென்ட் முடிவெடுக்கும் வகையில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் குறிப்பிட்ட தொகைக்குள் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு பயனர்களிடம் அனுமதி கேட்காமல் பணப்பரிவர்த்தனைகைளை மேற்கொள்ளும் வகையில் இந்த ஏஐ ஏஜென்ட் செயல்படும் என கூறப்படுகிறது. மேலும் தற்போது பின், பாஸ்வேர்டு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ள நிலையில் ஏஐ ஏஜென்ட் அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் போது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் தானாகவே பணம் செலுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : புதிய அத்தியாயத்தை உருவாக்கும் ஆப்பிள்?.. செப்டம்பர் 9-ல் ஐபோன் அல்ட்ரா அறிமுகமாகிறதா?
ஒரே மாதத்தில் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் – என்ன காரணம்?
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறும் கணக்குகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் +91 என தொடங்குகின்ற மொபைல் எண்களை கொண்ட 53,64,000 வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரே மாதத்தில் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், முடக்கப்பட்ட கணக்குகளில், 17,90,800 கணக்குகள் எந்த புகாரையும் பெறப்படாமலேயே முடக்கப்பட்டுள்ளன. பொதுவாக வாட்ஸ்அப் கணக்குகள் குறித்து பயனர்களிடம் புகார் வந்தால், அது குறித்து விசாரிக்கப்பட்டு பின்பு நடவடிக்கைப்படும். ஆனால் இந்த முறை புகார் பெறப்படுவதற்கு முன்பே அதில் தவறான செயல்பாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : 16 வயதில் AI Start Up.. தந்தைக்கே வேலை கொடுத்த சிறுவன்.. வியக்க வைக்கும் கேரளா சிறுவன்!
குறிப்பா மோசடி, ஏமாற்றுதல், தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட விதிமீறல்களை தானாகவே கண்டறியும் வகையில் வாட்ஸ்அப் ஒரு ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. கணக்கு பதிவு செய்யப்படும் நேரம் முதல், மெசேஜ் அனுப்புவது, பயனர்களின் ரிப்போர்ட், பிளாக் செய்யப்படும் கணக்குகள் ஆகியவ பல்வேறு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19,000க்கும் மேற்பட்ட புகார்கள்
இதற்கிடையே, கடந்த 2026, ஜூலை மாதத்தில் இந்திய பயனர்களிடமிருந்து வாட்ஸ்அப்க்கு 19,112 புகார்கள் வந்துள்ளன. இதில் 9,877 பேர் தங்களது கணக்கு ஏன் முடக்கப்பட்டது என்று தெரியாமல், கேள்வி எழுப்பியுள்ளனர். இதில் 107 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிற உதவிகள் தொடர்பாக 8,704 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதில் 369 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனர்களின் புகார்களின் அடிப்படையில் மட்டும் மொத்தம் 476 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் போனஸ்.. அமெரிக்க நிறுவனம் அசத்தல் முயற்சி!
ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்களில் ஒன்றுதான் ரெட்மி (Redmi). இதன் தாய் நிறுவனம் ஜியோமி (Xiaomi) ஆகும். இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ரெட்மி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், அசத்தலான அம்சங்களை கொண்ட ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனை (Redmi 17 5G Smartphone) தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன்
ஜியோமி நிறுவனம், இந்தியாவில் தனது ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7,900 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்ஜர், 45 வாட்ஸ் திறனை கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தி ரிவர்ஸ் சார்ஜிங் செய்துக்கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 பிராசசர் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதனை 2டிபி வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : புதிய அத்தியாயத்தை உருவாக்கும் ஆப்பிள்?.. செப்டம்பர் 9-ல் ஐபோன் அல்ட்ரா அறிமுகமாகிறதா?
விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Your day doesn't stop at 20%, and neither should your phone.
Experience relentless power with the massive 7900mAh battery on the #REDMI17 5G. Experience #mAhximumPowermAhximumStyle starting at ₹23,999.
Sale Starts On 10th September.
Know More: https://t.co/R2xgqxGQhv pic.twitter.com/jjOcd3N6fI
— Redmi India (@RedmiIndia) September 4, 2026
வாட்ஸ்அப்பில் வந்த Bill Payments.. இனி ஈஸி தான்.. பயன்படுத்துவது எப்படி?
மெட்டா (Meta) நிறுவனம் வாட்ஸ்அப்பில் (WhatsApp) தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தற்போது பில் பேமெண்ட் (Bill Payments) செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, கூகுள் பே (Google Pay) , போன் பே (Phone Pay) உள்ளிட்ட செயலிகளில் பில் கட்டணம் செலுத்துவது போல, இனி வாட்ஸ்அப் செயலி மூலமும் பில் கட்டணம் செலுத்தலாம். இந்த நிலையில், இந்த அம்சத்தின் சிறப்புகள் குறித்து, எப்படி செயல்படும் என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் வந்த பில் பேமெண்ட்ஸ் அம்சம்
வாட்ஸ்அப் செயலியில் இதுவரை தனிநபர் சாட், குழு சாட், ஆடியோ கால், வீடியோ கால், வாய்ஸ் மெசேஜ், வீடியோ மெசேஜ், ஆவணங்களை அனுப்புவது, தொடர்பு பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு பணம் அனுப்புவது உள்ளிட்ட சேவைகள் இருந்தது. இந்த நிலையில் தான், பில் பேமெண்ட் அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகமாகியுள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி டிவி ரீச்சார்ஜ், மொபைல் ரீச்சார்ஜ் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் போனஸ்.. அமெரிக்க நிறுவனம் அசத்தல் முயற்சி!
வாட்ஸ்அப் பில் பேமெண்ட்ஸ் அம்சம் - பயன்படுத்துவது எப்படி?
முதலில் வாட்ஸ்அப் செயலியை திறந்து முகப்பு திரையின் மேல் பகுதியில் உள்ள ரூபாய்க்கான குறியீட்டை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உள்ள பில் கட்டண பிரிவை தேர்வு செய்து, உங்களுக்கான சேவை நிறுவனத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.
உங்களது கணக்கு விவரங்களை உள்ளிட்ட பிறகு, செலுத்த வேண்டிய தொகை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
பிறகு யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம்.
பயனர்கள் தாங்கள் இதுவரை என்ன என்ன பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளோம் என்பதை "Payments Home" என்ற பக்கத்தின் மூலம் சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
வாட்ஸ்அப்பில் வந்த “Bill Payment” அம்சம்.. இனி எல்லாமே சுலபம் தான்!
மெட்டா (Meta) நிறுவனம் பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், அட்டகாசமான அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பேமெண்ட் மேற்கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pay) உள்ளிட்ட யுபிஐ (UPI - Unified Payment Interface) செயலிகளில் மேற்கொள்வதை போல, வாட்ஸ்அப் மூலமும் கட்டணம் செலுத்தலாம். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் வந்த Bill Payments அம்சத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் வந்த பில் பேமெண்ட் அம்சம்
இந்தியாவில் உள்ள பில் கட்டண கட்டமைப்புடன் இணைந்து, வாட்ஸ்அப் இந்த கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 30 பிரிவுகளின் கீழ் சுமார் 22,722 நிறுவனங்கள் வாட்ஸ்அப் செயலியில் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. எனவே சமையல் எரிவயு கேஸ் சிலிண்டர் கட்டணம், குடிநீர் வரி, ஃபாஸ்டேக் கட்டணம், இன்சூரன்ஸ் ப்ரீமியம், கிரெடிட் கார்டு பில் மற்றும் கடன் தவணைகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஒரே செயலியில் பல சேவைகள்
முன்பெல்லாம் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தினால் தான் முடியும். ஆனால், தற்போது வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. வாட்ஸ்அப்பில் இருந்தே மிக சுலபமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். பண பரிவர்த்தனை மட்டுமன்றி டிவி ரீச்சார்ஜ் கட்டணம் செலுத்த வேண்டும், போன் ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் உள்ளிட்ட தகவல்களை காட்டும்.
அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான விவோ டி5.. அதுவும் பட்ஜெட் ரகத்தில்.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள்!
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றுதான் விவோ (Vivo). இந்த நிறுவனம் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதன் காரணமாக ஏராளமான பயனர்கள் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். மக்கள் மத்தியில் விவோ ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது விவோ டி5 ஸ்மார்ட்போனை (Vivo T5 Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விவோ டி5 ஸ்மார்ட்போன் - விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த விவோ டி5 ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் 1.5K Curved AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 7,050 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அது 44 வாட்ஸ் பிளாஷ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 மணி நேரம் பாடல் கேட்பது, 34.7 மணி நேரம் வீடியோ பார்ப்பது, 7.9 மணி நேரம் கேம் விளையாடுவது ஆகியவற்றை செய்ய முடியும்.
இதையும் படிங்க : யுபிஐ பண பரிவர்த்தனை செய்யும்போது இவை குறித்து கவனம் தேவை.. ஆர்பிஐ கூறும் முக்கிய அறிவுரை!
விவோ டி5 ஸ்மார்ட்போன் - விலை பட்டியல் என்ன?
Unboxing the vivo T5.
A sleek design, powerful performance, and a big battery packed into a value-focused smartphone. But is this the new all-rounder to beat? 👀
Watch our first look and stay tuned for the full review! #vivoT5 #vivo #Unboxing #Smartphone #TechReels… pic.twitter.com/38HAnoYkOv
— mysmartprice (@mysmartprice) September 3, 2026
16 வயதில் AI Start Up.. தந்தைக்கே வேலை கொடுத்த சிறுவன்.. வியக்க வைக்கும் கேரளா சிறுவன்!
இந்தியாவை பொருத்தவரை ஒருவர் 21 வயதில் தான் தனது படிப்பை முடித்து, வேலைக்கோ அல்லது தொழில் செய்ய கூடிய நிலைக்கோ வர முடியும். சிலருக்கு இன்னும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால், கேரளாவை சேர்ந்த சிறுவன் ஒருவர் தனது 16 வயதிலேயே ஏஐ ஸ்டார்ட் அப் (AI Start Up) நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதுமட்டுமன்றி, அந்த நிறுவனத்தில் தனது தந்தைக்கே அவர் வேலை கொடுத்துள்ளார். இந்த நிலையில், 16 வயதிலேயே சிறுவன் சாதனை செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வரும் 16 வயது சிறுவன்
கேரளம் மாநிலம், கொச்சியின் வடக்கு எடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராகுல் ஜான் அஜு. இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் இவர், செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் தனக்கு இருந்த ஆர்வத்தின் மூலம், அதனையே ஒரு தொழிலாக மாற்றியுள்ளார். இவர் 9 வயது முதல் இருந்தே ஏஐ தொழில்நுட்பத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் தான், பள்ளியில் அறிவியல் பாடத்திற்காக அவர் சொந்த குரலில் பேசும் MeBot ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : தொழிலாளர்கள்- நெசவாளர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர்கள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்.. என்ன தெரியுமா?
15 பேருந்து வேலை கொடுத்துள்ள சிறுவன்
இந்த சிறுவன் தான் தொடங்கியுள்ள ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் மொத்தம் 15 பேருக்கு வேலை கொடுத்துள்ளார். குறிப்பாக தனது நிறுவனத்தில் தனது தந்தைக்கே வேலை கொடுத்துள்ள அவர், அவருக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தையும் வழங்கி வருகிறார். அதுமட்டுமன்றி, இந்த சிறுவன் சுமார் 5,000 பேருந்து செயற்கை நுண்ணறிவு அம்சம் தொடர்பான பயிற்சிகளையும் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : மாதத்தின் முதல் நாளே அதிகரித்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
15-க்கும் மேற்பட்ட ஏஐ கருவிகளை உருவாக்கிய சிறுவன்
புதிய அத்தியாயத்தை உருவாக்கும் ஆப்பிள்?.. செப்டம்பர் 9-ல் ஐபோன் அல்ட்ரா அறிமுகமாகிறதா?
ஆப்பிள் (Apple) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை (Smartphone) அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 09, 2026 அன்று தனது ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 18 Series Smartphones) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சீரீஸின் சிறப்பு அம்சமாக ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ள இந்த மடிக்கக்கூடிய ஐபோன் அல்ட்ராவின் (Apple Ultra) சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
Surprise and Shine நிகழ்வில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய படைப்பு
செப்டம்பர் 09, 2026 அன்று ஆப்பிள் நிறுவனம் நடத்தவுள்ள நிகழ்வுக்கு Surprise and Shine என பெயர் சூட்டியுள்ளது. இந்த நிகழ்வில் தான் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் வரை அறிமுகம் செய்ய உள்ளது. ஆப்பிள் தனது நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸ் என பெயர் வைத்துள்ளதை போலவே, இந்த ஆப்பிள் அல்ட்ராவும் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ்26 எஃப்இ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன.. முழு விவரம் இதோ!
ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்
It’s official! Apple will launch new products at the next #AppleEvent on September 9th at 10 a.m. PDT 🚨
Apple is expected to announce the iPhone 18 Pro models and its first foldable iPhone at the event pic.twitter.com/nZ9cTCB4Po
— Apple Hub (@theapplehub) August 26, 2026
ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் போனஸ்.. அமெரிக்க நிறுவனம் அசத்தல் முயற்சி!
தற்போதைய காலத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சம் இல்லாத துறையே இல்லை. கல்வி முதல் மருத்துவம் வரை என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) அம்சத்தின் ஆதிக்கம் தான் உள்ளது. ஐடி உள்ளிட்ட பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்த தொடங்கிவிட்ட நிலையில், பணியாளர்களை நீக்கிவிட்டு, அந்த இடங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பணியமர்த்தியுள்ளனர். இதன் காரணமாக ஏராளமான ஊழியர்கள் பணியை இழந்து, மிகவும் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மனிதர்களின் தனித்துவமான திறமைகளை ஊக்குவிக்க அதிரடி திட்டம்
அமேசான் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள், ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தும் நிலையில், உலகின் முன்னணி கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான ஏர்னஸ்ட் அண்ட் யங் (EY - Ernst & Young) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதுமையான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அனைத்து துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் அதிகம் உள்ள நிலையில், மனிதர்களின் தனித்துவமான திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : மனிதர்களின் கட்டளைகளை மதிக்காத ஏஐ.. கூட்டு சதியில் ஈடுபட்டதால் அதிர்ச்சி!
போனஸ் திட்டத்தை அறிமுகம் செய்த நிறுவனம்
இந்த நிறுவனத்தின் அமெரிக்க பிரிவான EY US போனஸ் திட்டம் ஒன்றை ஊழியர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மிகவும் வித்தியாசமாகவும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. காரணம், பணியிடத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் முழுவதுமாக மனித திறமையை வெளிப்படுத்தும் விதமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஒருமுறை சார்ஜ் செய்தால் 310 கி.மீ பயணிக்கலாம் – சிறிய ரக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய சுசூகி
விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் கடந்த ஆண்டு அறிமுகமான மாடலான ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் (Apple iPhone 17 Series), பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தனது அடுத்த மாடலான ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸை (Apple iPhone 18 Series) அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் தயாராகி வருகிறது. செப்டம்பர் 09, 2026 அன்று ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோவை (Apple iPhone 18 Pro) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செப்டம்பர் 9-ல் அறிமுகமாகும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 18 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் புதிய ஏ20 சிப், பெரிய பேட்டரி உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் தனது முதல் மடிக்க கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் வருகிறது 3 முக்கிய பாதுகாப்பு அப்டேட்கள் !
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ப்ளூம்பர்க்ஸ் அறிக்கையின்படி, ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் 1,199 டாலர்களுக்கு அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ 1,099 டாலர்களுக்கு அறிமுகமானது. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோவை விட ரூ.10,000 அதிகமாக விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கல்லூரி மாணவர்களுக்கு ஜாக் பாட்.. கூகுள் அறிவித்த இலவச AI Plus திட்டம்.. முழு விவரம் இதோ!
இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகமாகும்?
யுபிஐ பண பரிவர்த்தனை செய்யும்போது இவை குறித்து கவனம் தேவை.. ஆர்பிஐ கூறும் முக்கிய அறிவுரை!
தற்போதைய சூழலில் பெரும்பாலான இந்தியர்கள் யுபிஐ (UPI - Unified Payment Interface) பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். மிகவும் விரைவாகவும், எளிதாகவும் பண பரிவர்த்தனை செய்ய முடிகிறது என்பதால் பலரும் அதனை தேர்வு செய்கின்றனர். ஆனால், யுபிஐ பண பரிவர்த்தனை முறையில் பல சிக்கல்களையும் பயனர்கள் எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், பாதுகாப்பாக யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி (RBI - Reserve Bank Of India) சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யுபிஐ பண பரிவர்த்தனையில் உள்ள முக்கிய சிக்கல்
வங்கி கணக்கு விவரங்கள் எதனையும் உள்ளிடாமல் வெறும் பெயர் அல்லது மொபைல் எண்ணை டைப் செய்வதன் மூலம் பணம் அனுப்ப முடியும் என்பதால் யுபிஐ பண பரிவர்த்தனை மிகவும் எளிதானதாக உள்ளது. இதன் காரணமாக, பலரும் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை யுபிஐ மூலமே மேற்கொள்கின்றனர். அவ்வாறு யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்யும்போது பெரும்பாலான நபர்கள் எதிர்க்கொள்ளும் சிக்கல் தான் வேறு நபருக்கு பண பரிவர்த்தனை செய்வது. இது குறித்து தான் சில முக்கிய வழிகாட்டுதல்களை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : முதலீட்டை 2 மடங்காக மாற்றும் திட்டங்கள்.. எப்போது முழு பலன் கிடைக்கும்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள் - என்ன என்ன?
நீங்கள் யுபிஐ-ல் பணம் அனுப்புவதற்கு முன்னதாக, நீங்கள் பணம் அனுப்ப முயற்சிக்கும் நபரின் பெயர், அதாவது பயனாளியின் பெயர் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
அடுத்த முக்கியமான விஷயம் தான் தொகை. பலரும் ஒரு பூஜியத்தை அதிகமாக சேர்த்து அனுப்பி விடுவர். எனவே நீங்கள் பணம் அனுப்புவதற்கு முன்னதாக அந்த தொகை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : Gold : 10 கிராம் தங்கம் ரூ.15 லட்சம் வரை செல்லும்.. தாமஸ் கப்லான் சொன்ன ஷாக் தகவல்.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!
மனிதர்களின் கட்டளைகளை மதிக்காத ஏஐ.. கூட்டு சதியில் ஈடுபட்டதால் அதிர்ச்சி!
உலகின் எந்த மூலையில் திரும்பினாலும், எந்த துறைகளை பார்த்தாலும் அனைத்து இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) அம்சத்தின் தாக்கம் தான் அதிகமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் பல்வேறு நன்மைகள் மற்றும் வளர்ச்சிகள் கிடைத்தாலும், அதில் சில ஆபத்துகளும் உள்ளன. இந்த ஆபத்துகள் குறித்து வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், மனிதர்களின் கட்டளைகளை மீறி ஏஐ கூட்டாக செயல்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன சம்பவம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூட்டாக சேர்ந்து வேறு நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்த ஏஐ
சாட்ஜிபிடியின் உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகள் கட்டுப்பாட்டை மீறி தாமாகவே கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளன. அதாவது அந்த ஏஐ ஏஜெண்டுகள் இணைந்து வேறு ஒரு நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்துள்ளன. இது தொடர்பாக ஏஐ ஆய்வு நிறுவனங்கள் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 310 கி.மீ பயணிக்கலாம் – சிறிய ரக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய சுசூகி
சுசூகி நிறுவனம் e-Sky என்ற பெயரில் சிறிய ரக மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய கார் ஆர்வலர்களிடையே மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுசூகி தனது சிறிய மின்சார காரான மாருதி இஸ்கை (E-Sky) காரை இந்தியாவில் அல்லாமல் ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது. எம்ஜி கோமட் காரைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்தச் சிறிய கார், பார்த்தவுடனேயே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.
மிகச்சிறிய ரக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய சுசூகி
இந்த கார் தற்போது ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் எதிர்காலத்தில் இது இந்தியாவிற்கும் வரும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரப் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற வகையில் இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 3395 மிமீ மட்டுமே. இது மாருதி ஆல்டோவை விடச் சிறியது. இதன் அகலம் 1475 மிமீ ஆகும்.
இதையும் படிக்க :  மீண்டும் விலையை உயர்த்த தயாராகும் ஆப்பிள்.. ஆப்பிள் பிரியர்களுக்கு ஷாக் தகவல்!
இந்திய சந்தைக்கு வந்தால், MG Comet இந்த வாகனத்தின் முக்கிய போட்டியாளராக இருக்கும். இருப்பினும், எம்ஜி கோமட் காரைப் போலன்றி, இதில் நான்கு கதவுகள் உள்ளன. நான்கு கதவு அமைப்பு இருப்பதால், குழந்தைகளும் பெரியவர்களும் இருக்கையில் எளிதாக ஏறி இறங்க முடியும்.
இந்த கார் டால் பாய் எனப்படும் உயரமான மற்றும் பாக்ஸ் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 310 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்தியாவில் இந்த காரை அறிமுகப்படுத்துவது குறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இதன் விலை 10 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுசூகி இதில் முன்புறம் Z வடிவ எல்இடி டிஆர்எல் விளக்குகள் மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களை வழங்கியுள்ளது. இதில் 14 இன்ச் அளவுள்ள நான்கு ஸ்போக் அலாய் சக்கரங்கள் உள்ளன. இதன் பின்புறம் எல்இடி டெயில் லேம்ப்களால் அனைவரையும் சட்டென ஈர்க்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ரூ.2,000-க்கு மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்.. விரைவில் வருகிறது MDR கட்டண முறை!