சாதாரண ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.. அதிகரிக்கிறது பொது பெட்டிகளின் எண்ணிக்கை!
தற்போது பல ரயில்களில் பொது பெட்டிகளில் அதிக நெரிசல் காரணமாக பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கதவுகளில் நின்றபடியும் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இந்நிலையில், ரயில்களில் பொது மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஆகஸ்ட் 12, 2026: ரயில்களில் பயணம் செய்யும் சாதாரண பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், நீண்ட தூரம் செல்லும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொது பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது. தற்போது பல ரயில்களில் இரண்டு பொது பெட்டிகள் மட்டுமே இருப்பதால், அதிகளவிலான பயணிகள் நெரிசலில் சிக்கி சிரமத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பொது பெட்டிகளில் பயணம் செய்கின்றனர். ஆனால், பெட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பண்டிகைக் காலங்களில் கூட்ட நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. சில நேரங்களில் பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலையும், நெரிசல் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழலும் உருவாகிறது.
மேலும் படிக்க: மும்பையில் திடீர் நிலச்சரிவு.. 2 பேர் பரிதாப பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!!
3,200 நீண்ட தூர ரயில்களில் கூடுதல் பெட்டிகள்:
பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், சுமார் 3,200 நீண்ட தூர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரயில்வே துறை தயாராகி வருகிறது.
ஒவ்வொரு ரயிலிலும் மொத்தம் 24 பெட்டிகள் இருக்கும் வகையில் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 4 பொது பெட்டிகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 8 ஸ்லீப்பர் பெட்டிகள் வரை இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் பொது மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான சாதாரண பயணிகள் பயனடைவார்கள். குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு பொது பெட்டிகளில் இடம் கிடைப்பது எளிதாகும்.
ஆண்டுக்கு 36 கோடி கூடுதல் இருக்கைகள்:
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 36 கோடி கூடுதல் பயண இருக்கைகள் உருவாக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளின் நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகைக் காலங்களில் வெளிமாநிலங்கள் மற்றும் நகரங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொது பெட்டிகளையே பயன்படுத்துகின்றனர். எனவே, கூடுதல் பொது பெட்டிகள் அமைக்கப்படுவது அவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நடுவானில் 300 அடி சரிந்த விமானம்.. போதைப்பொருளை பயன்படுத்திய விமானி – பரிசோதனையில் உறுதி
தற்போது பல ரயில்களில் பொது பெட்டிகளில் அதிக நெரிசல் காரணமாக பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கதவுகளில் நின்றபடியும் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
இந்நிலையில், ரயில்களில் பொது மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சாதாரண பயணிகள் பாதுகாப்பான மற்றும் சற்று வசதியான முறையில் நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.