Indian Independence Year : இந்தியா கொண்டாடுவது 79-ஆவது சுதந்திர தினமா? 80- ஆவது சுதந்திர தினமா? குழப்பமும்- உண்மையும்!
Indian Independence Year : இந்திய திருநாட்டின் வருகிற ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த சுதந்திர தினம் 79- ஆவதா அல்லது 80- ஆவது சுதந்திர தினமா என்ற கேள்விக்கு பதிலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்படும். இந்த நிலையில், வருகிற சுதந்திர தினம் 79- ஆவது சுதந்திர தினமா அல்லது 80- ஆவது சுதந்திர தினமா என்ற கேள்வி பொதுவாக எழுந்துள்ளது. தற்போது, 2026- இல் இருந்து 1947- ஐ கழித்தால் 79 வரும். ஆனால், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி ஆகஸ்ட் 15, 2026 அன்றை 80- ஆவது சுதந்திர தினம் என்றே குறிப்பிடுகிறது. அப்படி என்றால் இவற்றில் எது சரியானது என்ற கேள்வி எழுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதற்கும், அது கொண்டாடிய சுதந்திர தின கொண்டாட்டங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வதிலேயே இதற்கான பதில் உள்ளது.
பத்திரிக்கை தகவல் பணியகத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு
2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் 80-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்கான தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பத்திரிக்கை தகவல் பணியகம் இந்தியா 80 ஆவது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு கொண்டாடும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதில், கடந்த 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் சுதந்திர தினம் ஆகும். 1948 ஆகஸ்ட் 15 வரை சுதந்திர தினம் கொண்டாடுவதற்காக காத்திருக்கவில்லை.
மேலும் படிக்க: சுதந்திர தினம் : மூவர்ண விளக்குகளால் ஜொலித்த திருச்சியின் முக்கிய கட்டிடங்கள்




1947 முதல் 2026 வரை சுதந்திர தினம்
எனவே ஆண்டுதோறும் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாக்களை கணக்கீடு செய்தால்
- 1947- முதல் சுதந்திர தினம்.
- 2024– 78- ஆவது சுதந்திர தினம்.
- 2025- 79- ஆவது சுதந்திர தினம்.
- 2026- 80- ஆவது சுதந்திர தினம்.
இந்தியாவின் 80 – ஆவது சுதந்திர தினம்
தற்போது, 79- ஆவது சுதந்திர தினம் நிறைவடைந்து, 80- ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதாவது, இந்தியா 1947- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. 2026 ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்குள் 79 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும். எனவே, சுதந்திர ஆண்டு விழா கணக்கீட்டின் அடிப்படையில் 2026- ஆம் ஆண்டு சுதந்திரத்தின் 79- ஆவது ஆண்டு நிறைவை குறிக்கிறது.
சுதந்திர தின ஆண்டை நினைவில் வைக்க எளிய வழி
சுதந்திர தின ஆண்டை நினைவில் வைப்பதற்கு, 1947- இல் பிறந்த ஒரு குழந்தை 1948- இல் ஒரு வயதை அடைகிறது. இதே போல, இந்தியாவின் முதல் சுதந்திர தினம் 1947- ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட நிலையில் அதன் முதல் ஆண்டு நிறைவு விழா 1948- இல் வந்தது. அதன் அடிப்படையில், தற்போது, 80- ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் படிக்க: தேசிய கொடி வண்ணத்தில் மாஸ்க்.. வித்யாசமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்!