AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

1917- இல் பிரிட்டிஷ் அரசுக்கு ரூ.35 ஆயிரம் கடன் கொடுத்த இந்தியர்.. இங்கிலாந்து கடன் அலுவலகம் தெரிவித்த பதில்!

Indian Lent Money To British Government: 1917- இல் முதலாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் அரசுக்கு ரூ. 35 ஆயிரம் கடன் அளித்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நபரின் குடும்பத்தினருக்கு இங்கிலாந்து நாட்டின் கடன் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

1917- இல் பிரிட்டிஷ் அரசுக்கு ரூ.35 ஆயிரம் கடன் கொடுத்த இந்தியர்.. இங்கிலாந்து கடன் அலுவலகம் தெரிவித்த பதில்!
இங்கிலாந்து கடன் அலுவலகம் அனுப்பிய சான்றிதழ்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 11 Aug 2026 11:11 AM IST

மத்திய பிரதேச மாநிலம், செஹோரை சேர்ந்தவர் விவேக் ருத்தியா ( 63 வயது). இவரது, மூதாதையர் ஒருவர் முதலாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ரூ.35 ஆயிரம் கடன் வழங்கியிருந்தாராம். இது தொடர்பாக விவேக் ருத்தியா, தனது மூதாதையரிடமிருந்து பெற்ற கடன் எப்போதாவது திருப்பி செலுத்தப்பட்டதா என்பதை அறிந்து கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் பிரிட்டிஷ் அதிகாரிகளை அணுகினர். இதில், அவரது வழக்கறிஞருக்கு அண்மையில் டிஎம்ஓ- இடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அசல் போர்க்கடன் சான்றிதழ் மற்றும் அது தொடர்பான கடித பரிமாற்றங்களின் நகல் கோரப்பட்டு இருந்தது. இந்த குடும்பமானது தற்போது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு அனுப்புவதற்காக தேவையான ஆவணங்களையும், மற்ற காப்பாக பதிவுகளையும் தயார் செய்து வருகிறது.

1917 ஜூன் 4- ஆம் தேதியிட்ட சான்றிதழ்

அந்த பணத்திற்கு என்ன ஆனது என்பதை இறுதியாக கண்டறிய வரலாற்று பதிவுகள் உதவ கூடும் என்ற நம்பிக்கையை இந்த பதில் தங்களுக்கு அளித்துள்ளதாக விவேக் ருத்தியா தெரிவித்துள்ளார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த கட்டத்தில் ஒரு பதில் வரும் என்று நான் எப்போதும் கற்பனை செய்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 1917 ஜூன் 4- ஆம் தேதியிடப்பட்ட ஒரு சான்றிதழ் உள்ளது. இது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ருத்தியா குடும்பத்தின் வசம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: 2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை

முதலாம் உலகப் போரின் போது ரூ.35 ஆயிரம் கடன்

அந்த சான்றிதழில் போபால் மாநிலத்தில் உள்ள சேத் ராம கிஷன் ஜஸ்கரன் ருத்தியா என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய சேத் ஜும்மா லால் ருத்தியா, முதலாம் உலகப் போரின் போது, இந்திய போர் கடனுக்காக ரூ.35 ஆயிரம் செலுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேத் ராம கிஷன் ஜஸ்கரன் ருத்தியா என்பவரின் நிறுவனத்திடம் இருந்து சேத் ஜும்மா லால், இந்திய போர் கடனுக்காக ரூ.35 ஆயிரம் சந்தா செலுத்தி, அதன்மூலம் அரசுக்கும், பேரரசிற்கும் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்று அப்போதைய கோபாலின் அரசியல் முகவரான டபிள்யூ. எஸ். டேவிஸ் கையெழுத்திட்ட அந்த ஆவணம் குறிப்பிட்டது.

கடன் ஒருபோதும் திருப்பி செலுத்தப்படவில்லை

அந்த தொகை ஒருபோதும் திருப்பி செலுத்தப்படவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். சேத் ஜும்மா லால் ருத்தியா 1937 இல் உயிரிழந்து விட்டார். ஆனால், 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ அந்த பணம் திருப்பித் தரப்பட்டதற்கோ அல்லது செலுத்தப்பட்டதுக்கோ எந்த பதிவுகளையும் கண்டுபிடிக்க வில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க: UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..

Follow Us