Latest News Tamil - தமிழில் சமீபத்திய செய்திகள், தமிழ் செய்திகள் இன்று, Tamil News Online
குடும்பத்துக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போகிறீர்களா? இந்த 4 மாடல்களை பாருங்க !
பெட்ரோல் விலை உயர்வு, தினசரி பயணச் செலவு என பல காரணங்களால் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய குடும்பங்களை குறிவைத்து முன்னணி நிறுவனங்கள் புதிய மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்திய குடும்பங்களுக்கு ஏற்றதாக கருதப்படும் ஏதர் கொனார்க், ஹோண்டா QC3, சிம்பிள் வேவ், டிவிஎஸ் ஐகியூப் மில்லியன்ஆர் ஆகிய 4 புதிய மாடல்களின் விலை, ரேஞ்ச், சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.
ஏதர் கொனார்க்
ஏதர் நிறுவனத்தின் புத்தம் புதிய மாடல் கொனார்க். ஏதர் 450, ரிஸ்டா போன்ற பிரபலமான மாடல்களின் வரிசையில் இது மார்கெட்டுக்கு வந்துள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை செல்லும் என்பது இதன் முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. மேலும், கொனார்க் எஸ், கொனார்க் இசட் என இரண்டு வேரியன்ட்களில் இந்த ஸ்கூட்டர் வருகிறது. இதில் தற்போது கொனார்க் எஸ் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. இதில் 100 கி.மீ., 125 கி.மீ., 161 கி.மீ., 200 கி.மீ என நான்கு ரேஞ்ச் தேர்வுகள் உள்ளன. அடிப்படை மாடலின் விலை 99,999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று சிறப்பு ரேஷன் கார்டு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
டிவிஎஸ் ஐக்யூப் மில்லியன் ஆர்
ஐக்யூப் ஸ்கூட்டரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டதைக் கொண்டாடும் வகையில் டிவிஎஸ் இந்த சிறப்புப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 3.5 கிலோ வாட்ஸ் பேட்டரி வேரியன்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1,40,138 என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மார்கெட்டில் உள்ள மாடலுடன் ஒப்பிடும்போது புதிய வண்ண வடிவமைப்பும் சில கூடுதல் மேம்பாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஹோண்டா QC3
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ள புதிய மாடல் QC3. இந்தியாவில் ஹோண்டாவின் 3வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. ஏற்கெனவே ஆக்டிவா e, QC1 ஆகிய மாடல்கள் விற்பனையில் உள்ளன. QC3ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.35 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. முழு சார்ஜில் 145 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
சிம்பிள் வேவ்
குரங்கு கையில் கிடைத்த தங்கம் போல விஜய்யின் ஆட்சி.. இப்படி காஸ்ட்லி முதல்வர் நமக்கு தேவையா? மதுராந்தகத்தில் எடப்பாடி கடும் விமர்சனம்!
மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: முதல்வர் விஜய் லண்டன் சென்று முதலீடு ஈர்த்ததாக கூறியுள்ளார். அந்த நிறுவனங்களுடன் தமிழகத்திலேயே ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கலாம். தமிழக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றாமல் கார் பந்தயம் நடத்துவதற்கு 2 ஆயிரம் ஏக்கரில் நிலம் வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. தவெக அரசு 4 மாதங்களில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. ஒரு லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது. இந்த கடனை அடைப்பதற்கு தமிழக மக்கள் மீது வரியை அதிகரித்து அடைப்பார்கள். போக்குவரத்து துறையில் 22 ஆயிரம் கடன் வைத்துக்கொண்டு திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும்.
காஸ்ட்லியான முதல்வர் நமக்கு தேவையா
இதில், ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இருக்கும் தலைமைச் செயலகத்தில், சட்டமன்றத்தில் கூட்டம் நடத்தினால் என்ன குறைந்து விடப் போகிறது. பல்வேறு முதல்வர்கள் பணிபுரிந்த அறை விஜய்க்கு பற்றவில்லை என்று கூறுகிறார். ஏனென்றால், இவர் காஸ்ட்லியான முதலமைச்சர் ஆவார். கடல் அழகை பார்த்துக்கொண்டே இருப்பதற்காக புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிட்டுள்ளார். குரங்கு கையில் தங்க மோதிரம் கிடைத்தது போல, விஜய் கையில் ஆட்சி கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து கூட்டத்தில் வந்த அந்த வார்த்தை.. உதயநிதி அளித்த பதில்.. தாராபுரம் பிரசாரத்தில் இதை கவனித்தீர்களா?
தவெக ஆட்சியில் 1 லட்சம் கோடி லஞ்ச பணம் பறிமுதல்
இந்த நிலையில், முதல்வர் சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தவெக ஆட்சியில் லஞ்சம் ஒழிக்கப்பட்டதாக கூறும் நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு லட்சம் கோடி லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் மேட்டூர் அணையை திறப்பதற்காக தனி விமானத்தில் முதல்வர் விஜய் சென்றதற்கு ரூ. 40 லட்சம் செலவானது. அவர் சென்னையில் இருந்து சேலம் சென்று திரும்பிய அதற்கு மட்டும் ரூ. 4.5 கோடி செலவாகி உள்ளது.
ரூ.4 கோடியில் கட்டப்பட்ட அணை தண்ணீரை திறக்க ரூ. 4.5 கோடி செலவு
ஆங்கிலேயர்கள் காலத்தில் மேட்டூர் அணை ரூ. 4 கோடியில் கட்டப்பட்டது. அந்த அணையின் தண்ணீரை திறப்பதற்கு ரூ. 4.5 கோடி செலவு செய்த முதல்வர் நாட்டு மக்களுக்கு தேவையா. கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெகவினரை தவிர பிற கட்சியினர் மட்டுமே நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அவரது கட்சி கூட்டத்திற்கு வந்தவர்களுக்கே உதவி செய்யாத அவர், நாட்டு மக்களை கவனித்துக் கொள்வாரா என்று ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார்.
Rio: மேடி படத்தில் எனது கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் – ரியோ ராஜ் பேச்சு!
சின்னத்திரை நடிகர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றி தற்போது சினிமாவில் லீட் ஹீரோவாக படங்களில் நடித்துவருபவர் ரியோ ராஜ் (Rio Raj). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ராம் அண்ட் லீலா (Ram And Leela). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்தது. வித்தியாசமான காதல் கதைக்களத்தில் இப்படம் வெளியான நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் ரியோ ராஜ் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் மேடி (Maddy). இதை இயக்குநர் கார்த்திகேயன் பிகே (Karthikeyan BK) இயக்க, ரியோ ராஜ் மற்றும் கல்யாணி பாடல் புகழ்பெற்ற சானியா அய்யப்பன் (Saniya Iyappan ) இணைந்து நடித்துள்ளனர்.
இப்படமானது வித்தியாசமான மற்றும் சிறப்பான காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் தனது கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ரியோ ராஜ் தெரிவித்துள்ளார். அதுகுறித்து தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: ஷமாவின் ஸ்டாம்ப் டாஸ்க் விவகாரம்.. ஜேசனை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி – புரோமோ இதோ!
மேடி திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ரியோ பகிர்ந்த விஷயம்:
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த ரியோ ராஜ், அதில் "நான் இப்படத்தில், பெண்களிடம் பேசத் தயங்கும் ஒரு பையனாக நடிக்கிறேன். இது ஒரு வேடிக்கையான காதல் கதை. என் கதாபாத்திரமான சச்சின், விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக ஒரு ஆண்கள் பள்ளியில் படித்திருக்கிறான். அவனது அப்பா கிரிக்கெட் விளையாடியதால், அவனையும் ஒரு கிரிக்கெட் வீரனாக்க விரும்புகிறார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்த கயாடு லோஹர்.. SK27 படக்குழு பகிர்ந்த பூஜை கிளிக்ஸ்!!
இதன் விளைவாக, அவன் பெண்களிடம் பேசத் தயங்குகிறான். அவன் எப்படித் தன் காதலியைக் கண்டுபிடித்து அவளுடன் பழகுகிறான் என்பதுதான் இந்தக் கதையின் மையக்கரு. என் கதாபாத்திரத்தின் பெயர் சச்சின் என்றாலும், மேடி என்பது அவன் தனக்குத் தானே சூட்டிக்கொள்ளும் பெயர் "என அதில் அவரின் கதாபாத்திரம் பற்றி பேசியிருந்தார்.
மேடி திரைப்படம் குறித்து ரியோ ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
With some of the biggest names coming together, the journey began with great promise. What started with big hopes now ends with even bigger memories.
And just like that, it’s a wrap. 🎬@rio_raj & @SaniyaIyappan_
Written & Directed by @karthikeyannav
A @dhibuofficial Musical pic.twitter.com/FNBUlrlMhg
— Rio raj (@rio_raj) September 15, 2026
IND vs WI: சுப்மன் கில்லின் காயத்தால் இந்திய அணியில் மாற்றம்? யாருக்கு வாய்ப்பு?
திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 27, 2026 நாளை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள காயம் இந்திய அணிக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியின் போது அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் விளையாடாவிட்டால் அவருக்கு பதில் களமிறங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுப்மன் கில்லின் காயத்தால் இந்திய அணியில் மாற்றம்?
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட விருக்கிறது. முதல் போட்டி செப்டம்பர் 27, 2026 நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டியில் கேப்டன் சுப்மன் கில்லின் காயம் காரணமாக இந்தியாவின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் கேப்டன் கில் பங்கேற்பாரா என்பதில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.
இதையும் படிக்க : Asian Games 2026: மழையால் ஆப்கானிஸ்தானுக்கு அடித்த லக்! காலிறுதியில் இந்திய அணியுடன் மோதல்!
போட்டிக்கு சுமார் 40 மணி நேரத்திற்கு முன்பு பயிற்சியின் போது கில் காயமடைந்தது இந்திய அணிக்கு ஒரு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. கில் போட்டிக்குத் தயாராவாரா? இல்லையெனில், அவருக்குப் பதிலாக யார் களமிறங்குவார்கள்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிக்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் 25, 2026 வெள்ளிக்கிழமையன்று இந்திய அணியின் பயிற்சி அமர்வின் போது சுப்மன் கில்லின் முழங்கையில் ​​பந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வலியால் துடித்த அவரை மருத்துவக் குழு பரிசோதித்தது. பின்னர், காயம் ஏற்பட்ட இடத்தில் ஐஸ் பேக் வைத்துக்கொண்டு கில் அமர்ந்திருந்தார்.
கில்லுக்கு பதிலாக யாருக்கு வாய்ப்பு?
காயத்திற்குப் பிறகு கில் மீண்டும் பேட்டிங் செய்ய வரவில்லை, இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் போட்டிக்குத் தயாராவாரா? என்பது செப்டம்பர் 27, 2026 அன்றுதான் தெரியவரும். இருப்பினும், போட்டிக்குத் தேவையான நேரத்தில் கில் குணமடையாவிட்டால், அவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என கூறப்படுகிறது. ஜெய்ஸ்வால் மற்றொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் மீது அழுத்தத்தைத் தக்கவைக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இதையும் படிக்க : Asian Games 2026: இந்தியாவிற்கு 3வது தங்கம்.. கபடி மூலம் கோல்ட் பெற்று கொடுத்த சிங்க பெண்கள்!
இந்தியாவின் பிளேயிங் லெவன் அணி
#Love: காதல் என்று வரும்போது, ​​பொருத்தத்தை விட ஈர்ப்பு மேலோங்குமா? இணையத்தில் வைரலாகும் #லவ் பட ட்ரெய்லர்!
இயக்குநர் பாலாஜி மோகன் (Balaji Mohan) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் (Dhanush) முதல் துல்கர் சல்மான் (Dulquer Sanlaam) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களின் படங்களை இவர் இயக்கியுள்ளார். இறுதியாக இவர் தமிழில் இயக்கியிருந்த திரைப்படம் மாரி 2 (Maari 2). இந்த படமானது கடந்த 2018ம் ஆண்டில் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படங்களையும் இயக்கவில்லை. அதற்கு பதிலாக சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார். இறுதியாக திரிசங்கு என்ற மலையாளம் படத்தில் நடித்திருந்தார். அந்த விதத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவரின் இயக்கத்தில் தமிழில் வெளியாக காத்திருக்கும் படம்தான் #லவ் (#Love). இதில் அர்ஜுன்தாஸ் (Arjun Das) மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி இணைந்து நடித்துள்ளனர்.
வித்தியாசமான காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கும் நிலையில், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்!
அர்ஜுன்தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் #லவ் படத்தின் ட்ரெயிலர் குறித்த எக்ஸ் பதிவு:
Trailer of my Tamil Netflix series #Love :)
Out on @NetflixIndia from Oct 2nd. https://t.co/QkhlqHyNO0
— Balaji Mohan (@directormbalaji) September 25, 2026
#லவ் திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இப்படத்தில் அர்ஜுன்தாஸ் மிகப்பெரிய தொழிலதிபரின் ஒருவராக இருக்கிறாரா. மேலும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஒரு டேட்டிங் ஆப்-பின் CEO-வாக் இருக்கிறார். சிங்கிளாக இருக்கும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி எவ்வாறு அர்ஜுன்தாஸுடன் நெருக்குங்குகிறார். அவர்களின் நெருக்கத்தினால் இருவருக்கும் இடையே எவ்வாறு காதல் மலர்கிறது மற்றும் இவர்கள் காதலுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் போன்றவற்றை இந்த ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன்தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி இருவரின் காமினேஷன் நன்றாக இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ஒருமணி நேரமாக தூக்கம் வரவில்லை.. விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பற்றி பேசிய சிவராஜ்குமார்!
#லவ் படத்தின் ரிலீஸ் எப்போது:
ஓடும் ரயிலில் கல்வீச்சு.. இளைஞர்களின் முகத்தில் சிதறிய கண்ணாடி சில்லுகள்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருந்து நாக்பூர் மும்பை சி. எஸ். எம். டி. துறந்தோ விரிவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில், ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஏசி வகுப்பில் இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, போர்கேடி ரயில் நிலையத்தை ரயில் கடந்து சென்ற போது, ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு கல் ஏசி வகுப்பில் உள்ள கண்ணாடியே உடைத்து கொண்டு உள்ளே அமர்ந்திருந்த இளைஞர்கள் மீது கண்ணாடி துகள்கள் விழுந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை, எதேச்சையாக செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில், அதிர்ஷ்டவசமாக எந்த பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை.
போர்கேடி பகுதியில் ரயில்வே போலீசார் விசாரணை
இது தொடர்பாக மத்திய ரயில்வேயில் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா கூறுகையில், ரயில் மீது கல்வி சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததை தொடர்ந்து ரயில்வே போலீசார் போர்கேடி சிந்தி பிரிவு பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பிராமணி கிராமங்களின் அருகே உள்ள பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சந்தேகத்துக்கு இடமான நபரோ அல்லது உறுதியான ஆதாரமா எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த சமூகம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55 பவுன் தங்க கிரீடம் மாயம்.. என்ன தான் நடந்தது.. போலீசாரின் முதல் கட்ட விசாரணை கூறுவதென்ன!
153 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
செப்டம்பர் 26 ஆம் தேதி ரயில்வே சட்ட பிரிவு 153 கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது 325/2026 என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 1989- ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தின் 153 மற்றும் 154 பிரிவுகளின் கீழ் ரயில் மீது கல் எரிவது ஒரு குற்ற செயல் ஆகும். கடந்த ஜனவரி மாதம் தேசிய போக்குவரத்து நிறுவனம் 2025- ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதும் ரயில்கள் மீது கல் எறிந்ததாக 1698 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🚨Stone Pelting on 12290 Nagpur–CSMT Duronto Express in Maharashtra!
An Instagram post claims a stone shattered a train window and injured 4 passengers. Families with small children were reportedly sitting nearby.
The terrifying part? The person who shared the incident said… pic.twitter.com/Xj0HrfvB2J
— Jharkhand Rail Users (@JharkhandRail) September 25, 2026
கல் வீச்சு சம்பவத்தில் கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை
இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ரயில்வே சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்ற சம்பவங்களில் கைதாகவும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Suriya: அன்பை மட்டுமே விதைப்போம்.. சோசியல் மீடிவில் பரவும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து சூர்யா ஓபன் டாக்!
சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவர் தற்போது தமிழ் இயக்குநர்கள் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழி இயக்குநர்களுடனும் படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூர்யா, மமிதா பைஜூ (Mamitha Baiju) மற்றும் ராதிகா சரத்குமார் போன்றவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
அந்த விதத்தில் மேலும் தற்போது இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சீன் (Scene) படம் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் இன்று (26/09/2026) அகில இந்திய சூர்யா ரசிகர்கள் மன்ற நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா கலந்துகொண்டார். அதில் பேசிய சூர்யா, தன்மீது இணையதளத்தில் பரவிவரும் நெகடிவ் விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்த கயாடு லோஹர்.. SK27 படக்குழு பகிர்ந்த பூஜை கிளிக்ஸ்!!
சோஷியல் மீடியாவில் தன்னைப்பற்றி பரவும் விமர்சனங்கள் குறித்து பகிர்ந்த சூர்யா:
அந்த ரசிகர்கள் மன்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, "அன்பை மட்டுமே விதைப்போம், ஒரு சோசியல் மீடியா ல ஒரு முட்டாள் ஒரு பதிவை போட்டான் அப்டிங்கிறாங்க, நம்மளும் பேச ஆரமிக்கணும் போதுதான், நம்ம ஹேர்ட் ஆகிடுவோம். நம்ம நாமலமே இருப்போம். அவங்க அவங்களாவே இருக்கட்டும், நம்ம எதுவும் பேச தேவையில்லை.
இதையும் படிங்க: இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி..? என்ன காரணம் தெரியுமா?
அவங்களுக்கு புரிய வைக்கணும், மாத்தணும்-னு முயற்சி பண்ண கொஞ்சம் கஷ்டம்.. சில பேருக்கு புரியும், முக்காவாசி பேருக்கு அது புரியாது, உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக்க வேண்டாம்.. உங்களுக்கு புடிச்சத சின்சியரா தான் பண்ணுங்க. நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருந்தார்.
சோஷியல் மீடியாவின் விமர்சனங்கள் குறித்து சூர்யா பேசிய வீடியோ பதிவு:
#Suriya's Reply to Social Media Negativity:
"Anba Mattume Vedhaipom.. Oru Social Media la Oru MUTTAAL oru Padhiva potaan apdingrakaga.. Nammalum pesa aaramikum podhu dhan.. Namma hurt aaagiduvom.. Namma Namlaave irupom.. Avanga Avangalaave irukatum.. Namma Edhuvum pesa theva…
— Laxmi Kanth (@iammoviebuff007) September 26, 2026
தனியார் மயத்தை கைவிடுக.. மின்துறையில் உடனடியாக இதை செய்க.. தவெக அரசுக்கு சண்முகம் வலியுறுத்தல்!
தமிழக மின்துறையில் தனியார் மயத்தை கைவிட்டு நிரந்த பணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் பெ. சண்முகம். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வருகிற 6 மாதத்துக்குள் மின் கட்டண கணக்கிட்டு பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதற்காக தனியாருக்கு டெண்டர் வெளியிடப் போவதாகவும், இந்த பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மின் உற்பத்தி, மின் விநியோகம், மின் கடத்தல், மின் நுகர்வு கணக்கீடு என அனைத்திலும் தவெக அரசு தனியார் மையத்தை நோக்கி பயணிக்கிறது. இந்த தனியார் மய முறையை அரசு திரும்ப பெற வேண்டும். மின்வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. போதிய பயிற்சி இல்லாததால் தோராயமாக கணக்கெடுக்கும் முறையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஏற்படும் தவறுகளுக்கு கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
மின்துறையில் 13 ஆண்டுகளாக பணி நியமனம் இல்லை
மின்கணக்கீட்டு பணிகளில் கடந்த 13 ஆண்டுகளாக ஒருவர் கூட நியமனம் செய்யப்படவில்லை. மின்சார வாரியத்தில் அனுமதி அளிக்கப்பட்ட 6,591 மின்துறை ஊழியர் பணியிடங்களில் தற்போது 1,591 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மீதமுள்ள 5 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிகழ் ஆண்டில் மின்சாரத் துறையில் காலியாக உள்ள 20,449 பணியிடங்களில் தகுதி வாய்ந்த நபர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் மின்சார துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் அறிவித்திருந்தார்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி. விசாரணை.. 7 உதவி ஆணையர்கள் நியமனம்.. டிஜிபி அடித்த ஆர்டர்!
பொறுப்பை தட்டி கழிக்கும் தவெக அரசு
ஆனால், தற்போது வரை அந்த அறிவிப்புக்கு மாறாகவே ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்வது சரியான முறை அல்ல. தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இன்றி இருக்கும் நிலையில், அவர்களின் எதிர்காலத்துக்கும், இட ஒதுக்கீட்டு கொள்கைகளுக்கும் இது எதிராக இருக்கும். பல்வேறு துறைகளிலும் ஒப்பந்த முறை பின்பற்றப்படுவது சமூகநீதிக்கு விரோதமானது ஆகும். இந்த செயல்பாடுகள் தமிழக அரசு தனது பொறுப்புகளை தட்டிக் கழித்து தனியாருக்கு தாரை வார்க்கும் செயல் ஆகும்.
மின்துறையில் நிரந்த பணி நியமனம் வேண்டும்
இனி மின்சாரத் துறையில் புதிய நியமனங்கள் முழுவதும் ஒப்பந்தம் என்று கூறுவது கண்டனத்துக்குரியதாகும். எனவே, மின் கணக்கிட்டு பணிகளை தனியாருக்கு தாரை பார்க்கும் முடிவுகளை தமிழக வெற்றிக் கழக அரசு உடனடியாக கைவிட்டுவிட்டு, நிரந்தர பணி அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் எனவும், மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமாவுக்கு தனி ஓடிடி தளம்? அமைச்சர் ராஜ்மோகன் பகிர்ந்த தகவல்
சென்னை, செப்டம்பர் 26 : தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் 26, 2026 இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தமிழ் சினிமாவுக்கான ஓடிடி தளம் அமைப்பது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவுக்கு தனி ஓடிடி தளம்?
நிகழ்வில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் சினிமாவுக்கான ஓடிடி தளம் அமைப்பது குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி வரும். இது குறித்து நாம் அனைவரும் அமர்ந்து பேசி முடிக்க, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாகப் பேசுவோம். தயவுசெய்து உங்கள் முடிவுகளை முன்கூட்டியே முடிவு செய்து வர வேண்டாம். உட்கார்ந்து பேசி முடிவு எடுப்போம். இந்த அரசு அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து வருகிறது என்றார்.
இதையும் படிக்க : காட்டுப்பகுதியில் கேட்ட அலறல் சத்தம்.. பெண்ணை வன்கொடுமை செய்ய சுத்து போட்ட கயவர்கள்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
மேலும் பேசிய அவர், நானும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தன்.விஐபி இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கும்போது திட்டு வாங்கினேன். நான் அமைச்சர் ஆகிட்டேனா? நான் சினிமா துறைக்கு விருது வழங்குகிறேனா என சில சமயம் எனக்கே தோணும். அதற்கெல்லாம் காரணமான முதலமைச்சருக்கு நன்றி என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எனக்கு சிறுவயதில், எப்படி டிவியில் ரஜினி சார் வருகிறார், கமல் சார் வருகிறார், இவர்கள் எல்லாம் இரவில் எங்கே போகிறார்கள் என தோன்றும். இரவில் எல்லாம் தூங்கியபோது டிவியை ஆராய்ந்தபோது, டிவி ரிப்பேர் ஆனது. உடனே அதை சரி செய்தார்கள். எங்கள் வாழ்வோடு இந்தத் துறை உள்ளது. இது உங்களுக்கான துறை. எனவே, என்னைப் பாராட்ட வேண்டாம். என்றார்.
நிகழ்வில் பேசிய அவர், உங்கள் துறையில் இருந்து வந்தவர்தான் முதலமைச்சராக உள்ளார். இனி மாநில அரசின் சார்பாக சினிமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்படாமல் உள்ள அனைத்து விருதுகளும் வழங்கப்படும். சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வரிவிலக்கு போன்ற விஷயங்களை அறிவிக்க வேண்டும் என வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : சேலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம்.. நில அளவையருக்கு ஊழல் தடுப்பு போலீசார் கொடுத்த ஷாக்!
முதல்வர் விஜய் குறித்து கூட்டத்தில் வந்த அந்த வார்த்தை.. உதயநிதி அளித்த பதில்.. தாராபுரம் பிரசாரத்தில் இதை கவனித்தீர்களா?
தமிழகத்தில் அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சுகுணாவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சனிக்கிழமை ( செப்டம்பர் 26- ஆம் தேதி) பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் வெற்றி பெற்ற சிலர் எதுவுமே தெரிவிக்காமல் திருட்டுத்தனமாக சென்று விட்டனர். கூட்டணி கட்சியினர் சிலர் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு சென்றனர். சிலர் முதுகில் குத்தி விட்டு சென்றனர். தவெக ஆட்சி அமைத்ததும் அனைத்து கட்சி தலைவர்களின் வீட்டுக்கும் முதல்வர் விஜயே சென்று ஷோபா டெலிவரி செய்தார்.
தவெகவ வேட்பாளர் சத்யபாமா இல்லை பெட்டி பாமா
வாக்குக்கு பணம் கிடையாது.. எம்எல்ஏக்களை தூக்குவதே தமிழக வெற்றி கழகத்தின் பாணி ஆகும். சத்யபாமா என்ற பெயர் தற்போது பெட்டி பாமா என்று மக்கள் மாற்றி உள்ளனர் அதிமுகவில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 7 எம்எல்ஏக்களை பெட்டி கொடுத்து தவெக தலைமை தூக்கி உள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் திமுக எம்எல்ஏக்களை பார்த்தால் வழக்கு பதிவு செய்கிறார். அதிமுக எம்எல்ஏக்களை பார்த்தால் பெட்டி கொடுத்து கட்சியில் சேர்த்து விடுகிறார் என்று பேசிக் கொண்டிருந்தார்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி. விசாரணை.. 7 உதவி ஆணையர்கள் நியமனம்.. டிஜிபி அடித்த ஆர்டர்!
கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து வந்த வார்த்தை
அப்போது, கூட்டத்தில் இருந்து முதல்வர் விஜயின் லண்டன் பயணம் குறித்து ஒருவர் கருத்து தெரிவித்தார். இதற்கு, உதயநிதி ஸ்டாலின் நீங்கள் ஏதாவது சொல்லி விட்டு சென்று விடுவீர்கள்.. அந்த ஆள் என் மீது வழக்கு பதிவு செய்து தஞ்சாவூருக்கு இழுத்து சென்று விடுகிறார்... என்று நகைச்சுவையாக கூறினார். இதனால், கூட்டத்தில் திரண்டிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது. கடந்த முறை தண்ணீர் வரவில்லை என்று கூறினேன். அதற்கு முதல்வருக்கு கோபம் வந்துவிட்டது. சபாநாயகர் ஆக்சன் சொன்னால் விஜய் நடிக்க தொடங்கி விடுகிறார். இது சட்டமன்றமா அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டா என்று தெரியவில்லை.
சட்டமன்றம் பிக் பாஸ் நிகழ்ச்சியாக மாறிவிட்டது
எம்எல்ஏக்கள் முதல் சபாநாயகர் வரை பாடல் தான் பாடுகிறார்கள். இதனால், நாங்கள் சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறோமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்று தெரியவில்லை என்று தெரிவித்தேன். சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வாயே திறந்து பேசியதாக சரித்திரமே இல்லை. எப்போதும் மௌனமாகவே இருப்பார். சட்டமன்றம் பிக் பாஸ் நிகழ்ச்சி போல மாறிவிட்டது. ஒரு எம்எல்ஏ காதல் தோல்வி குறித்து பேசுகிறார். ஆளுங்கட்சிக்கு தகுந்த பாடம் புகடுங்கள் என்று தெரிவித்தார்.
ஷமாவின் ஸ்டாம்ப் டாஸ்க் விவகாரம்.. ஜேசனை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி – புரோமோ இதோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக இருந்து தொகுத்துவருகிறார். இவரின் இந்த நிகழ்ச்சியானது விஜய் டிவியில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 3 வது வாரத்தின் இறுதியில் உள்ளது. அந்த விதத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிக் பாஸ் சீசன் 10ல் முயல் காஸ்ட்யூம் அணிந்து, ஸ்டாம்ப்பை முதுகில் குத்தும் டாஸ்க் நடைபெற்றிருந்தது.
அதில் ஷமாவின் ஸ்டாம்ப்பை ஜேசன் சும்மிங்பூலில் தூக்கி வீசிய நிலையில், அந்த விவகாரம் குறித்து விஜய் சேதுபதி விசாரித்துள்ளார். தற்போது இது தொடர்பாக அவர் ஜேசனிடம் அடுக்கடுக்கான கேள்வியை கேட்டுள்ள நிலையில், அது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: எனக்குதான் ரோஷமே இல்ல.. போட்டியாளர்களிடம் கடுப்பான விஜய் சேதுபதி – புரோமோ இதோ!
ஜேஸனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த விஜய் சேதுபதி:
அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, ஷமாவிடம் கேள்வியை கேட்டிருந்தார். பின் ஜேஸனிடம் வந்த அவர், "ஷமாவுடைய ஸ்டாம்ப்பை எடுத்து சும்மிங்ப்பூலில் தூக்கி வீச அவசியம் என்ன?" என கேள்வி கேட்டிருந்தார். உடனே பேசிய ஜேசன், "அவங்க என்னை அடித்திவிடுவார் என்றுதான்" என சொன்னார். உடனே பேசிய விஜய் சேதுபதி, "அவர் உங்களை முதுகில் குத்திவிடுவார் என்றுதானே இதை செஞ்சீங்க..?" என கேட்டார்.
இதையும் படிங்க: ஒருமணி நேரமாக தூக்கம் வரவில்லை.. விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பற்றி பேசிய சிவராஜ்குமார்!
அதன் பிறகு பேசிய ஷமா, "அந்த இடத்தில் என்னை யாராவது தாக்க வந்தால், அவர்களை திருப்பி அடக்கமுடியாத இடத்தில் நான் இருந்தேன் சார்" என கூறினார். இதற்கு ஜேசன் வித்தியாசமாக ரியாக்ஷன் கொடுத்தார். அதற்கு விஜய் சேதுபதி, "சார் நீங்க நல்ல புத்திசாலி சார், என்ன டேக்கில் பண்ணிறிங்களா?" என கடுப்பாகி அடுத்தடுத்து ஜேசனிடம் வாக்குவாதத்தில் விஜய் சேதுபதி ஈடுபட்டிருந்தார்.
ஜேசனிடம் விஜய் சேதுபதி விசாரித்தது தொடர்பான புரோமோ:
#Day20 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/B2SVCr90yg
— Vijay Television (@vijaytelevision) September 26, 2026
கடனை அடைத்த பிறகும் வங்கி நகையைத் தர மறுக்க முடியுமா? உண்மை என்ன?
அவசர தேவைகளுக்கு நகைகளை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்குவது என்பது நம் ஊர்களில் வழக்கமாக நடைபெறும் ஒன்று. இந்த நிலையில் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திவிட்டால் நகை உடனே கைக்கு வந்துவிடும் என்றுதான் பெரும்பாலானோர் நினைக்கிறோம். ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது. கடன் ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் உங்கள் பெயரில் நிலுவையில் உள்ள வேறு கடன்களைப் பொறுத்து, நகையைத் திருப்பித் தராமல் வைத்திருக்கும் உரிமை வங்கிக்கு இருக்கலாம்.
கடனை அடைத்த பிறகும் வங்கி நகையைத் தர மறுக்க முடியுமா?
இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 பிரிவு 171ன் படி, வங்கிகளுக்கு இந்த உரிமையை வழங்குகிறது. தனியாக வேறு ஒப்பந்தம் எதுவும் இல்லாதபட்சத்தில், தங்களிடம் உள்ள பிணையப் பொருட்களை வங்கிகள் தக்கவைத்துக் கொள்ளலாம். இதைத்தான் பொது உரிமை என அழைக்கப்படுகிறது.
இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று சிறப்பு ரேஷன் கார்டு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
இது தொடர்பாக சமீபத்தில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு இந்த விவகாரத்தை மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்தது. ஒருவர் தனது நகைக் கடனை முழுமையாக அடைத்துவிட்டார். ஆனால் அவர் மீது வேறொரு கடன் இருந்ததால், வங்கி நகையைத் திருப்பித் தர மறுத்தது. அவர் மீது வீட்டுக் கடன் ஒன்று இருந்துள்ளது.
மேலும், நகைக் கடன் அடமானப் படிவத்தில், தனியாகவோ கூட்டாகவோ வாங்கிய முந்தைய மற்றும் எதிர்காலக் கடன்களுக்கும் இந்த நகையைப் பிணையாகக் கருதலாம் என்ற நிபந்தனை இடம் பெற்றிருந்தது. அதற்கு அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டிருந்தார். இதன் அடிப்படையில் வங்கியின் நடவடிக்கை சரியானது தான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீடு தொடர்பான விசாரணை கடந்த ஆகஸ்ட் 31, 2026 அன்று விசாரணைக்கு வந்ததது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, வீட்டுக் கடன் முழுமையாக அடைக்கப்பட்ட பிறகு 4 வேலை நாட்களுக்குள் நகையை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
இதனையடுத்து நகைக் கடன் பெறும் அதற்கான ஒப்பந்தத்தை தெளிவாக படிப்பது நல்லது. ஒரு நகைக் கடனை அடைத்துவிட்டால் மட்டும், நகை உடனடியாக திரும்பி வழங்கப்படாது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அமித்ராஜ் கௌஷல் மணி கண்ட்ரோல் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அம்மா என்னோடு பேசமாட்டுக்காங்க.. நாமக்கல் காவல் நிலையத்தில் 8 வயது மகன் அளித்த சுவாரஸ்ய புகார்.. உருக வைக்கும் பின்னணி!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியின் மகன் 8 வயது மகன். இவர், வீட்டில் அதிகமாக சேட்டை செய்வதுடன், வீட்டில் இருந்த சோபாவை கிழித்துள்ளான். இதனை அவரது தாய் கண்டித்துடன், மீண்டும் சேட்டை செய்தால் போலீசில் பிடித்து கொடுப்பதாக எச்சரித்துள்ளார். அப்போது, பயந்து போன அந்த சிறுவன் தான் செய்த தவறை வருந்தி தாயிடம் மன்னிப்பு கேட்டு அழுதுள்ளான். தொடர்ந்து, சிறுவன் மாலையில் வழக்கம் போல டியூசன் புறப்பட்டு சென்றுள்ளான். டியூஷன் முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அந்த சிறுவன் வழக்கம் போல தனது தாயிடம் சகஜமாக பேச முயற்சித்தான். ஆனால், அவரது தாய் பேச மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அந்த சிறுவன் அம்மாவை தன்னிடம் பேச வைக்க முடிவு செய்தான்.
ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த சிறுவன்
இதற்காக வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராசிபுரம் காவல் நிலையத்துக்கு நடந்தே சென்று, அங்கு இருந்த காவலர்களிடம் அழுது கொண்டே எனது பேச்சை கேட்கவில்லை என்றால் போலீஸிடம் தெரிவித்து விடுவேன் என்று அம்மா கூறினார்கள். ஆனால், தற்போது எனது அம்மா என்னிடம் பேச மறுக்கிறார்கள். எனவே, நீங்கள் எனது வீட்டுக்கு வந்து எனது தாயிடம் கூறி என்னுடன் பேச வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளான். மேலும், தனது தந்தை கத்தியை காட்டி மிரட்டுவதாகவும் போலீசாரிடம் சிறுவன் தெரிவித்துள்ளான்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் இறுகும் பிடி.. மேலும் 3 சிறுமிகள் வைத்த செக்.. அதிரடி விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழு!
காவல் நிலையத்தில் மகனை கண்டுபிடித்த பெற்றோர்
இந்த விவகாரம் காவல் நிலையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சிறுவனை காணவில்லை என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடத் தொடங்கினர். ஆனால், சிறுவன் கிடைக்காததால் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அங்கு இருந்த தனது மகனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன், தனது மகன் காவல் நிலையத்துக்கு வந்தது குறித்து பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர். அப்போது, காவலர்கள் சிறுவனிடம் பேசி தாய், தந்தை அறிவுரைகளை கேட்க வேண்டுமென்று அறிவுறுத்தினர்.
பெற்றோர்- சிறுவனுக்கு போலீசார் அறிவுரை
இதேபோல, பெற்றோரும் குழந்தைகள் சேட்டை செய்து படம்பிடித்தால் கண்டித்து நிறுத்த வேண்டுமே தவிர கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தினர். பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளர்வார்கள். எனவே, அவர்கள் முன்பு இது போன்று நடந்து கொள்ள கூடாது. முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
வங்கி வேலைநிறுத்தம்: 3 நாட்களுக்கு ஏடிஎம் கட்டணம் ரத்து – எஸ்பிஐ அறிவிப்பு
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி தரும் அறிவிப்பை ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. அதன் படி செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரையிலான மூன்று நாட்களில் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
3 நாட்களுக்கு ஏடிஎம் கட்டணம் ரத்து
இந்தச் சலுகை ஸ்டேட் பேங்க் ஏடிஎம்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் இந்த 3 நாட்களில் கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதுகுறித்த தகவலை எஸ்பிஐ தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் வேலை நிறுத்தத்தின் போது வங்கிச் சேவைகள் பாதிக்கப்படாது என்றும், ஏடிஎம், YONO, ஆன்லைன் வங்கி, மொபைல் வங்கி,வாட்ஸ்அப் மற்றும் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் ஆகியவை தொடர்ந்து செயல்படும் என்றும் ஸ்டேட் பேங்க் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று சிறப்பு ரேஷன் கார்டு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய வங்கி ஊழியர் சங்க மன்றம் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. வங்கித் துறையில் பணிபுரிபவர்களில் 90 சதவிகிதம் பேர் தங்கள் அமைப்பில் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வங்கி வேலை நாள் என்பதுதான் இவர்களின் முக்கியக் கோரிக்கை. இதுதவிர வேறு சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு
Do you have any banking work this Sunday? We’re open for you!
All SBI branches will remain open on Sunday, 27 September 2026, offering essential banking services for your convenience.
Visit your nearest SBI branch and take care of your banking needs.
We’re always ready to… pic.twitter.com/jteY9RZzb3
— State Bank of India (@TheOfficialSBI) September 26, 2026
வேலைநிறுத்த நாட்களில் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்குச் செல்லாமலேயே பல பணிகளை முடித்துக்கொள்ளலாம். யுபிஐ போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பணப் பரிமாற்றம், கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை வீட்டிலிருந்தே செய்யலாம். மொபைல் வங்கி, இணைய வங்கி, வாட்ஸ்அப் வங்கி சேவைகளும் கிடைக்கும். எனினும், சில குறிப்பிட்ட சேவைகள் வங்கியின் செயல்பாட்டு ஏற்பாடுகளைப் பொறுத்து மாறுபடலாம்.
இதையும் படிக்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
Shivarajkumar: ஒருமணி நேரமாக தூக்கம் வரவில்லை.. விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பற்றி பேசிய சிவராஜ்குமார்!
தென்னிந்திய மொழி சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் அறியப்படுபவர் நடிகர் சிவராஜ்குமார் (Shivarajkumar). கன்னட சினிமாவில் புகழ்பெற்ற நடிகரான இவர் தற்போது தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) ஜெயிலர் (Jailer) படத்தின் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் பிறகு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவரின் நடிப்பில் தமிழில் "பிக்காசோ" (Picasso) என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. இந்நிலையில் இவரின் நடிப்பில் கன்னட மொழியில் வெளியாகி தயாராகியுள்ள புதிய படம்தான் பெயில் (Bail).
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகியுள்ள இப்படம் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவராஜ்குமார், சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை பார்த்த அனுபவம் குறித்து பகிர்ந்த சிவராஜ்குமார்:
அந்த பேட்டியில் பேசியிருந்த சிவக்குமார், "நான் சமீபத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு, ஒரு மணி நேரம் எனக்குத் தூக்கம் வரவில்லை. அது என் பெற்றோரை, என் குடும்பத்தை எனக்கு நியாபகப்படுத்தியது.
இதையும் படிங்க: 90ஸ்-ல் அவரின் அப்பாவை பார்த்ததுபோலவே… ஜேசன் சஞ்சய் குறித்து புகழ்ந்து பேசிய தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி!
நான் அங்கே அப்படியே படுத்துக்கொண்டு, அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன், அப்போது என் கண்களில் கண்ணீர் வந்தது. அது சில உணர்ச்சிகள் என்று நினைக்கிறேன். நானும் என்றாவது ஒரு நாள் அதுபோல ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்" என அதில் விளக்கமாக பேசியிருந்தார். தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து சிவராஜ்குமார் பேசியது தொடர்பாக பரவும் வீடியோ:
#Shivarajkumar: I watched #VishwanathAndSons recently. When I saw the film, I couldn’t sleep for an hour. It reminded me of my parents and my family. I was lying there, thinking about it, and I was in tears. I think some emotions.. I also wish to do a film like that someday.…
— Laxmi Kanth (@iammoviebuff007) September 26, 2026
ஜெம் வீரமணி வழக்கில் வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி. விசாரணை.. 7 உதவி ஆணையர்கள் நியமனம்.. டிஜிபி அடித்த ஆர்டர்!
தமிழகத்தில் பல்வேறு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதில், கூடுதலாக 7 காவல் உதவி ஆணையர்களை நியமித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை தீவிர படுத்துவதற்காக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி தலைமையில், சென்னை மேற்கு சட்டம்- ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டல், காவல் துறை தலைமை அலுவலக ஊடக தொடர்பு அலுவலர் முத்தரசி, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை காவல் ஆணையர் கீதாஞ்சலி ஆகிய 4 ஐபிஎஸ் அதிகாரிகள் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
எஸ்ஐடி குழுவில் கூடுதலாக 7 உதவி ஆணையர்கள்
இவர்களுடன் சேர்த்து கூடுதலாக 7 காவல் உதவி ஆணையர்கள் சிறப்பு புலனாய்வு குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் எஸ்ஐடி குழு விசாரணைக்கு உதவியாக பணிபுரிய உள்ளனர். இவர்கள் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த குழுவானது தனியாக விசாரணை மேற்கொண்டு இது தொடர்பான அறிக்கையை தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலிடம் சமர்ப்பிக்க உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கை திசை திருப்பும் முயற்சியில் சிலர்.. காங்கிரஸ் பட்டியலின தலைவர் பகீர் வாக்குமூலம்!
வீரமணியை விடுப்பிப்பதற்காக ரூ. 70 கோடி லஞ்சம்
இதனிடையே, ஜெம் வீரமணியை பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்கவும், இந்த வழக்கை மூடி மறைக்கவும் 2025- ஆம் ஆண்டு சென்னை காவல்துறையில் அதிகாரிகளாக இருந்தவர்களுக்கு ரூ. 70 கோடி வழங்கப்பட்டதாகவும், இதற்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்த ஜெம் வீரமணிக்கு சொந்தமான சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் போலீசாரின் விசாரணை தெரிய வந்தது.
ஜெம் வீரமணி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை
இதில், சட்ட விரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள காரணத்தால், இந்த விவகாரத்தில் சென்னை அமலாக்கத்துறை தாமாக முன்வந்து தனியாக வழக்கு பதிவு செய்து பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும், இதில் தொடர்புடைய அதிகாரிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது.
எஸ்ஐஆர் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது… – ஞானேஷ் குமார் தொடர்பான சர்ச்சைக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நடைபெற்றது. சமீபத்தில் தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்,  எஸ்ஐஆர் தொடர்பான முடிவுகள் அனைத்தும் ஆணையத்தின் ஒருமித்த ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஞானேஷ் குமார் தொடர்பான சர்ச்சைக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
கடந்த 2025 ஜூன் 24 ஆம் தேதி எஸ்ஐஆர் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, பீகார் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த உத்தரவை 2026 மே 27 ஆம் தேதி உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலைச் சிறப்பு மற்றும் தீவிர முறையில் திருத்தி அமைக்கும் செயல்முறை தொடர்பான பல உத்தரவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சந்து மற்றும் ஜோஷி ஆகியோர் கடும் ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. புதிய வாக்காளர் பதிவுக்கான 'படிவம் 6'-ல் (Form 6) செய்யப்பட்ட மாற்றங்கள், ECINET இணையவழி அமைப்பின் செயல்பாடு, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணி ஒதுக்கீடு, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் கோவா மாநில வாக்காளர்கள் தொடர்பான சிக்கல்கள் குறித்து அவர்கள் அமைச்சரவைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியதாக அச்செய்திகள் குறிப்பிட்டன. இத்தகவல்கள் பெரும் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான சலசலப்பை ஏற்படுத்தின.
நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி தொடர்பான முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் முழுமையான ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது. பீகார், மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்பாக ஜூன் 24, 2025 அன்று வெளியிடப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) குறித்த உத்தரவுகளை ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் அங்கீகரித்திருந்தனர் என்று அது தெரிவித்தது.
SK27: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்த கயாடு லோஹர்.. SK27 படக்குழு பகிர்ந்த பூஜை கிளிக்ஸ்!!
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புத்தம் புது திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான படம் பராசக்தி (Parasakthi). 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இது வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றுவந்தது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு பின் தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கத்தில் சேயோன் (Seyon) படத்தில் இணைந்திருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் (Santhosh narayanan) இசையமைத்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படமும் உள்ளது. இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ஹீரோவாக புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
அந்த படம்தான் SK27. இதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கும் நிலையில், சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் சமீபத்தில் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இதன் ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.
இதையும் படிங்க: இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி..? என்ன காரணம் தெரியுமா?
சிவகார்த்திகேயனின் SK27 திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை பகிர்ந்த படக்குழு:
With blessings from above, love all around ❤️
The journey of #SK27 began.
Starring @Siva_Kartikeyan.
A film by @ImRamkumar_B.
Produced by @SathyaJyothi.@11Lohar @omdop #TGThyagarajan #SendhilThyagarajan @arjun1on @saisiddharth_ @kalaivananoffl #ARajesh @PraveenRaja_Off… pic.twitter.com/WKzCTTjMnw
— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 26, 2026
சிவகார்த்திகேயனின் SK27 திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றிருந்தார். இதன் பிறகு இவர் சிலம்பரசனின் 49 வது படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் புதிய திரைப்படத்தில் கைகோர்த்துள்ளார். இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் சிவகார்த்திகேயன் இதில் ஒரு கேங்ஸ்டராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: லீடர் எக்ஸிட் மூலம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய லக்‌ஷ்மி பிரியா… அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் – நேற்று நடந்தது என்ன?
காட்டுப்பகுதியில் கேட்ட அலறல் சத்தம்.. பெண்ணை வன்கொடுமை செய்ய சுத்து போட்ட கயவர்கள்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், மங்கள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், பர்கூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் குடும்ப செலவுக்காக ரூ. 5 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். இதற்கு, நீண்ட நாட்களாக வட்டியும், அசலும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக கடன் அளித்த அந்த பெண், அந்த இளைஞரிடம் தொகையை கேட்டு வந்துள்ளார். அவரும், இப்போது தந்து விடுகிறேன்.. அப்போது தந்து விடுகிறேன்... என்று அலைக்களித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் வெங்கடேஷை, அந்த பெண் தனது வீட்டுக்கு வரவழைத்து, ரூ. 5 லட்சம் கடன் பெற்றதற்காக பத்திரத்தில் எழுதி வாங்கியதாக தெரிகிறது. இதில், மாதம் தோறும் ரூ. 5 ஆயிரம் வட்டியாக செலுத்த வேண்டும். 1 ஆண்டுக்குள் ரூ. 5 லட்சம் கடனையும் முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.
வட்டித் தொகையை பெற காட்டு பகுதிக்கு அழைப்பு
இந்த நிலையில், இந்த மாதத்துக்கான வட்டி தொகையை பெறுவதற்காக இளைஞர் வெங்கடேசை, அந்தப் பெண் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது, பேசிய அந்த இளைஞர் தான் அழைக்கும் இடத்துக்கு வந்து வட்டித் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, வாட்ஸ் ஆப் மூலமாக தான் இருக்கும் இடத்தை அந்த இளைஞர் லொகேஷன் அனுப்பி உள்ளார். அதன்படி, அந்த பெண், வெங்கடேஷ் குறிப்பிட்ட இடத்துக்கு தனியாக மொபெட்டில் சென்றுள்ளார். அதாவது, ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு அந்த பெண்ணை வெங்கடேஷ் வரவழைத்துள்ளார்.
மேலும் படிக்க: திண்டுக்கல்லில் பரபரப்பு.. கொலையை மறைக்க பக்கா நாடகம்.. மனைவி மீது பழி போட்ட காதல் கணவன்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய திட்டம்
அங்கு, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய வெங்கடேஷ் மற்றும் அவரது உறவினர் இளங்கோ ஆகியோர் திட்டமிட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அந்த பெண்ணிடம் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்குமாறு கூறிய நிலையில், அதனை அந்தப் பெண் வாங்கி அருந்தியுள்ளார். அப்போது, மயக்கம் ஏற்படுவதற்கு முன்பு சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் தனது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இருவரை கைது செய்த பர்கூர் போலீசார்
அத்துடன், தான் இருக்கும் இருப்பிடத்தை லைவ் லொகேஷனை வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு வெங்கடேஷிடம் இருந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் வெங்கடேஷ் மற்றும் இளங்கோ ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனக்குதான் ரோஷமே இல்ல.. போட்டியாளர்களிடம் கடுப்பான விஜய் சேதுபதி – புரோமோ இதோ!
தமிழில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிழச்சியானது மக்கள் மத்தியில் பல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெறுகிறது. 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுக்கும் நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 19 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்ட் கார்ட் என்ட்ரி என இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில், இதுவரை மொத்தமாக 4 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 3 வாரத்தை கடக்கவுள்ள நிலையில், 3வது வாரத்தின் இறுதியான இன்று (26/09/2026) விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கமே. அந்த விதத்தில் போட்டியாளர்களை சந்தித்த விஜய் சேதுபத்தில், அவர்களிடையே கோபப்பட்டது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி..? என்ன காரணம் தெரியுமா?
போட்டியாளர்களிடையே கோபப்பட்ட விஜய் சேதுபதி குறித்த புரோமோ பதிவு:
#Day20 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/UR3BxdafSl
— Vijay Television (@vijaytelevision) September 26, 2026
இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி, போட்டியாளர்களுக்கு, ஒரு கிண்ணம் நிறையாக உப்பை கொடுத்து, இந்த வீட்டில் யாருக்குமே ரோஷமே இல்லையோ அவர்களுக்கு கொடுங்கள் என கூறியிருந்தார். உடனே முனியம்மாள், "நான் ராகவன் அண்ணாவை சொல்லுவேன்", என அவருக்கு உப்பை கொடுத்திருந்தார். அதன் பிறகு எழுந்த ஜேசன், "நானும் ராகவ் அண்ணாவுக்கு கொடுக்கிறேன்" என்கிறார். உடனே விஜய் சேதுபதி, "நிறுத்துங்க.. மற்ற யாருக்குமே ரோஷமே வராதா?" என கூறினார். அதன் பிறகு எழுந்த முத்தழகி, "நானும் முதலில் ராகவ் அண்ணாவுக்குத்தான் கொடுப்பேன்" என கூறினார்.
இதையும் படிங்க: லீடர் எக்ஸிட் மூலம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய லக்‌ஷ்மி பிரியா… அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் – நேற்று நடந்தது என்ன?
தொண்டை கரகரப்பா? கவலை வேண்டாம்… நொடியில் நிவாரணம்
தொண்டையில் ஏற்படும் அரிப்பு மற்றும் கரகரப்பு உணர்வு பலருக்கும் அன்றாட வாழ்வில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். வானிலை மாற்றம், காற்றில் ஏற்படும் மாசுபாடு அல்லது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் இது ஏற்படக்கூடும். இதற்கு உடனடியாக மருந்தகங்களை நாடாமல், வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே எவ்வாறு நிவாரணம் பெறலாம் என்பது குறித்த மருத்துவ விளக்கங்களை காணலாம்.
தொண்டை அரிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்
தொண்டையில் திடீரென அரிப்பு ஏற்படுவதற்குப் பல பின்னணி காரணங்கள் உள்ளன. குறிப்பாக, தூசி மற்றும் மகரந்தச் சேர்க்கையால் ஏற்படும் ஒவ்வாமை (Allergies), வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள் (Infections) மற்றும் காற்றில் உள்ள வறட்சித்தன்மை ஆகியவை முதன்மையான காரணங்களாகும். மேலும், உடலில் நீர்ச்சத்து குறைவது (Dehydration) மற்றும் புகைப்பிடித்தல், இரசாயன வாயுக்கள் போன்ற வெளிப்புறக் காரணிகளும் தொண்டைப் புறணியை எரிச்சலடையச் செய்து அரிப்பைத் தூண்டுகின்றன.
உப்பு நீர் கொப்பளிப்பு மற்றும் நீராவி பிடித்தல்
தொண்டை அரிப்பை உடனடியாகக் கட்டுப்படுத்த வெதுவெதுப்பான உப்பு நீரைக் கொண்டு வாய் கொப்பளிப்பது மிகவும் எளிமையான மற்றும் சிறந்த வழியாகும். அரை ஸ்பூன் கல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 2 முதல் 3 முறை கொப்பளித்து வர, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து வீக்கம் குறையும். அதேபோல், வெந்நீரில் நீராவி பிடிப்பதன் மூலம் வறட்சியடைந்த தொண்டை திசுக்கள் ஈரப்பதம் பெற்று, மூச்சுப்பாதை சீராகி உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி மற்றும் தேன் கலந்த மூலிகைக் குடிநீர்
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகள் தொண்டை எரிச்சலையும் வீக்கத்தையும் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றன. தட்டிய இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய பின் அதில் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். தேனில் உள்ள இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் தொண்டைக்கு இதமளித்து, அரிப்பு மற்றும் இருமலைக் கட்டுப்படுத்தப் பேருதவியாக இருக்கும்.
Also Read: புதுத் துணியை அப்படியே உடுத்தினா ‘தோல் நோய்’ வருமா? அதிர்ச்சித் தகவல்கள்!
அதிமதுரம் மற்றும் சுக்குப் பால் வைத்தியம்
பாரம்பரிய இயற்கை மருத்துவத்தில் அதிமதுரம் மற்றும் சுக்கு ஆகியவை தொண்டை சார்ந்த நோய்களுக்குச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகின்றன. அதிமதுரப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகலாம் அல்லது அதன் குச்சியை வாயில் போட்டு மெல்லலாம். மேலும், காய்ச்சிய பாலில் சிறிதளவு சுக்குத் தூள், ஏலக்காய் மற்றும் பனங்கற்கண்டு கலந்து இளஞ்சூடாகக் குடிப்பதன் மூலம் தொண்டையில் உள்ள கோழை கரைந்து, அரிப்பு முற்றிலும் நீங்கும்.
தடுப்பு முறைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை
சேலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம்.. நில அளவையருக்கு ஊழல் தடுப்பு போலீசார் கொடுத்த ஷாக்!
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் வசித்து வருபவர் கதிரவன். கூலித் தொழிலாளியான இவர், தனது தந்தை பெயரில் உள்ள வீட்டை தனது பெயரில் மாற்றுவதற்காக அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணைய வழியில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக, அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவுக்கு நேரில் சென்று தனது விண்ணப்பம் தொடர்பாக கதிரவன் கேட்டுள்ளார். அப்போது, பணியில் இருந்த நில அளவையர் முருகேசன் நிலத்தை அளவீடு செய்து, பட்டா வழங்க பரிந்துரை செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கூலித் தொழிலாளி கதிரவன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, நான் பார்க்கும் கூலி தொழிலில் குடும்பத்தை நடத்தவே வருமானம் சரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தொழிலாளியிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலை அளவையர்
இதை கேட்டும் மனம் மாறாத நில அளவையர் முருகேசன், தான் கேட்டபடி ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும். இல்லையெனில், பட்டா கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த கதிரவன் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர், மறுநாள் கதிரவனை செல்போனில் தொடர்பு கொண்ட நில அளவையர் முருகேசன், தான் கேட்ட பணம் தயாராக உள்ளதா என்று கேட்டுள்ளார்.
மேலும் படிக்க: இன்ஸ்பெக்டர் டார்ச்சர்.. கூடுதல் பணிச்சுமை.. ஆடியோ வெளியிட்ட தலைமை காவலர்.. நெல்லை காவல் ஆணையர் நடவடிக்கை!
ஊழல் தடுப்பு காவல் நிலையத்தில் புகார்
இதற்கு, தொழிலாளி கதிரவன் மீண்டும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. லஞ்சம் கொடுக்கவும் விரும்பவில்லை என்று பதில் அளித்துள்ளார். இதற்கு, நில அளவையர் முருகேசன் ரூ. 2,500 தருமாறு பேரம் பேசியுள்ளார். இதற்கும் உடன்படாத கூலித் தொழிலாளி கதிரவன் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்து செல்போனை துண்டித்து விட்டார். தொடர்ந்து, இது தொடர்பாக சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நில அளவையர்- இடைத்தரகர் ஆகியோர் அதிரடி கைது
அந்த புகாரின் பேரில், ரசாயன பொடி தடவப்பட்ட ரூ. 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நில அளவையரிடம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் பணியில் இருந்த நில அளவையரிடம் லஞ்ச பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேசன் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் பூவரசனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மின்துறை அமைச்சர் மேடையில் இருக்கும்போதே மின்வெட்டு – அமைச்சர் சொன்ன காரணம்
சென்னை, செப்டம்பர் 26 : மதுரை அரசு சட்டக் கல்லூரியில் செப்டம்பர் 26, 2026 இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மேடையில் அமர்ந்திருந்த நேரத்திலேயே இந்த மின்வெட்டு ஏற்பட்டது, தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
மின்துறை அமைச்சர் மேடையில் இருக்கும்போதே மின்வெட்டு
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அரங்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அவர் இருக்கும் போதே மின் தடை ஏற்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதனையடுத்து மின்வாரியம் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.
இதையும் படிக்க : “திமுக ஏன் இவ்வளவு ஓவர் ரியாக்ட் செய்கிறது?”.. ஜெம் வீரமணி விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!
இது தொடர்பாக மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு மின் விநியோகம், மின்வாரியத்தின் கட்டமைப்பிலிருந்து வழங்கப்படவில்லை. மாறாக, 3 ஜெனரேட்டர்களிலிருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது, விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் ஆகியவற்றிற்கு மின்சாரம் வழங்கிய ஜெனரேட்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக மின் வழங்கல் தானியங்கி முறையில் தயார் நிலையில் இருந்த கூடுதல் ஜெனரேட்டருக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு 5 வினாடிகள் மட்டுமே ஆனது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்
The function premises was operated in generator due to power switch over from one generator to other generator due to which there was a power cut for 5 seconds. https://t.co/mO46UxFz4c
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) September 26, 2026
இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமாரும் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஒரு ஜெனரேட்டரில் இருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மின்சார இணைப்பை மாற்றியபோது, 5 விநாடிகள் மட்டும் மின்தடை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : 98 மலைக் கிராம மக்களை வெளியேற்ற எதிர்ப்பு.. 500க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்புப் போராட்டம்!!
Asian Games 2026: கபடியில் மேலும் ஒரு தங்கம்.. இந்தியாவிற்கு பெற்று கொடுத்த ஆண்கள் அணி!
மகளிர் அணியை (India Womens Kabaddi Team) தொடர்ந்து, இந்திய ஆடவர் கபடி அணியும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2026 Asian Games) இறுதிப் போட்டியில் ஈரானை 40-37 தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. இது கபடியில் இந்தியா வென்ற இரண்டாவது தங்கப் பதக்கமாகும். இந்தப் போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைப்பெற்றது. முதல் பாதியில் ஈரான் முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாம் பாதியில் இந்திய அணி அபாரமாக மீண்டு வந்தது. ஒரு கட்டத்தில், இந்திய அணி ஈரானை ஆல் அவுட் செய்யும் நிலைக்குத் தள்ளியது. அதன் பிறகு, இந்திய அணி பின்னடைவை சந்திக்கவே இல்லை.
ALSO READ: 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மராத்தானில் இந்தியாவுக்கு பதக்கம் – சவான் பார்வால் வரலாறு..
முதல் பாதியின் முதல் 20 நிமிடங்களில் ஈரான் 18-17 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இருப்பினும், இரண்டாம் பாதியில் இந்தியா 23-16 என்ற கணக்கில் போட்டியை வென்றது. இறுதிப் பாதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், ஈரான் நெருக்கடிக்கு உள்ளானது. இந்தியா இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டது. இந்தப் பாதியில் இந்திய வீரர்களின் டிபெண்ஸ் மிகச் சிறப்பாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக இந்தியாக்கு இது 4வது தங்கம்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இது இந்தியாவின் நான்காவது தங்கப் பதக்கமாகும். முதல் பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதல் கலப்பு அணி மற்றும் ஆடவர், மகளிர் கபடி அணிகள் பதக்கங்களை வென்றன.
கபடியில் இந்தியாவின் 9வது தங்கம்:
1990 முதல் 2026 வரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10 நிகழ்வுகளில், இந்திய ஆண்கள் கபடி அணி 9 முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 2018-ல் மட்டுமே இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டது.
இந்திய மகளிர் அணியும் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. முன்னதாக இன்று அதாவது 2026 செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கபடி அணி ஈரானை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடக்கத்தில் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்துவது போல் தோன்றினாலும், இறுதியில் இந்தியாவே வெற்றி பெற்றது.
ALSO READ: ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?
2026 ஆசிய விளையாட்டில் இந்தியாவிற்கு 28 பதக்கங்கள்
ஜெம் வீரமணி வழக்கில் இறுகும் பிடி.. மேலும் 3 சிறுமிகள் வைத்த செக்.. அதிரடி விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழு!
தமிழகத்தில் பல்வேறு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பூதாகாரம் ஆகியுள்ள இந்த வழக்கில் மேலும் 3 சிறுமிகள் ஜெம் வீரமணி மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் அதிகாரிகளான சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, சென்னை காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலி ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி மீது 3 சிறுமிகள் பாலியல் புகார்
இதன் மூலம், ஜெம் வீரமணி மீது 15 சிறுமிகள் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் அச்சம் இன்றி துணிச்சலாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. கடந்த 2025- ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண முடியவில்லை, வீடியோ ஆதாரம் தெளிவாக இல்லை என்ற காரணத்தால் இந்த வழக்கு கைவிடப்பட்டதாக தெரிகிறது.
மேலும் படிக்க: திண்டுக்கல்லில் பரபரப்பு.. கொலையை மறைக்க பக்கா நாடகம்.. மனைவி மீது பழி போட்ட காதல் கணவன்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
சிறுமிகளை வன்கொடுமை செய்யும் வீரமணி வீடியோ
ஆனால், திடீரென இந்த வழக்கு தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வீரமணி, சாந்தி உள்ளிட்டோரின் செல்போன் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இதில், சிறுமிகளை, ஜெம் வீரமணி வன்கொடுமை செய்யும் வீடியோ காட்சிகள் இருந்தது தெரியவந்தது. டிஜிட்டல் ஆவணங்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் அதிகாரிகளுக்கு ரூ. 70 கோடி கைமாற்றம்
இதனிடையே, கடந்த ஆண்டு இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு ரூ. 70 கோடி வரை கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாகவும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், பெண் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Anbil Avan: அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்!
கோலிவுட் சினிமாவில் சிறந்த இளம் நடிகர்களில் லிஸ்டில் ஒருவராக இருந்துவருபவர் அசோக் செல்வன் (Ashok Selvan). வித்தியாசமான காதல் கதைக்களம் மற்றும் ஆக்ஷன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். இறுதியாக இவர் மணிரத்தினத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான தக் லைஃப் (Thug Life) படத்தில் நடித்திருந்தார். இதில் ஐஸ்வர்யா லெக்ஷ்மிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் தயாராகிவந்த திரைப்படம்தான் அன்பில் அவன். இதில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) நடித்துள்ளார். இந்த படமானது மிகவும் அதிரடியான காதல் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதை அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் (R. Kaarthikeyan) இயக்க, அசோக் செல்வன் தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கியுள்ளார்.
இந்த படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இதன் சென்சார் அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: 90ஸ்-ல் அவரின் அப்பாவை பார்த்ததுபோலவே… ஜேசன் சஞ்சய் குறித்து புகழ்ந்து பேசிய தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி!
அன்பில் அவன் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் தெரியுமா?:
இப்படமானது அதிரடியான காதல் டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் அசோக் செல்வன் அதிரடி காதலானாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட பல சவாழ்க்கையும் மேற்கொண்டுள்ளார். அந்த விதத்தில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்திருந்தது.
இதையும் படிங்க: நானியின் தி பாரடைஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா? படக்குழு வெளியிட்ட அப்டேட்
இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு சென்சார் கிடைத்துள்ளது. இப்படத்திற்கு யு/ஏ +16 என்ற சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. அதன்படி இப்பதற்கு 16 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே திரையரங்குகள் சென்று பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பில் அவன் படத்தின் சென்சார் அப்டேட் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
The certificate says UA. His love says, “No limits.” #AnbilAvan in theatres worldwide from October 2nd!
Starring @AshokSelvan @PreityMukundan.
Directed by @Karti6Kane.
A #GovindVasantha Musical.@Ayngaran_offl @HappyHighPic @abinaya_selvam @kav_pandian @vigneshraja89… pic.twitter.com/1FAvFw8WWP
— Think Music (@thinkmusicindia) September 26, 2026
IND vs WI: ரோஹித், கோலி, ஜடேஜா வச்ச குறி.. குவிய காத்திருக்கும் சாதனைகள்!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு (IND vs WI) இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 27ம் தேதி நடைபெற உள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்குகின்றனர். அதே சமயம், ரவீந்திர ஜடேஜாவும் பல மாதங்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணிக்குத் திரும்புகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்காததால், ருதுராஜ் கெய்க்வாடுக்கு 4-வது இடத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆகிப் நபியும் இந்தத் தொடரில் தனது சர்வதேச அறிமுகத்தை மேற்கொள்ளக்கூடும்.
இந்தத் தொடரில் பல முன்னணி வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நேரத்தில், இந்திய அணி களமிறங்கும்போது 3 முக்கிய சாதனைகளை முறியடிக்கக்கூடும். விராட் கோலியும் ரவீந்திர ஜடேஜாவும் சரித்திரம் படைக்கும் தருவாயில் உள்ளனர்.
ALSO READ: இதுதான் எனது கடைசி உலகக் கோப்பை.. ஓபனாக பேசிய விராட் கோலி..!
வெஸ்ட் இண்டீஸ் எதிராக 10 சதங்கள் - விராட் கோலி
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 41 இன்னிங்ஸ்களில் 9 சதங்கள் அடித்துள்ளார். ஐந்து சதங்களுடன் பாபர் அசாம் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 100 ரன்கள் எடுத்தால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 10 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் படைப்பார்.
அதிக விக்கெட்டுகள் - ரவீந்திர ஜடேஜா
இதுவரை, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே 142 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளின் புள்ளிவிவரங்களில், ரவீந்திர ஜடேஜா மற்றும் கோர்ட்னி வால்ஷ் ஆகியோர் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் தலா 44 விக்கெட்டுகளுடன் சமநிலையில் உள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா ஒரு விக்கெட்டை எடுத்தவுடன், ஜடேஜா இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பார். இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 50 ஒருநாள் விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற முடியும். இந்தச் சாதனையை அடைய ஜடேஜா இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
ALSO READ: ருதுராஜ்க்கு வாய்ப்பு.. வெயிட்டிங்கில் ஜெய்ஸ்வால்.. இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு!
சர்வதேச கிரிக்கெட்டில் 2000 பவுண்டரிகள்
பெற்றோரே உஷார்… குழந்தைகளை குறிவைக்கும் டெங்கு கொசு!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தேங்கியுள்ள தண்ணீரில் பெருகுவதால் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பூந்தொட்டிகள், வாளிகள் மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்களில் தேங்கும் தண்ணீரை அவ்வப்போது அகற்ற வேண்டும். குழந்தைகள் வெளியே செல்லும்போது முழுக்கை ஆடைகளை அணிவிப்பது கொசுக்கடியைத் தவிர்க்க உதவும். கதவு, ஜன்னல்களில் கொசுவலை பயன்படுத்துவதும் பாதுகாப்பை அதிகரிக்கலாம். குழந்தைக்கு திடீரென காய்ச்சல், வாந்தி, வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்காமல், டெங்கு சந்தேகம் இருந்தால் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், குறிப்பாக குழந்தைகளின் உடல்நலத்தில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொசு உற்பத்தியை தடுக்கவும்
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தேங்கியுள்ள தண்ணீரில் பெருகக்கூடும் என்பதால், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம். குழந்தைகள் விளையாடும் இடங்கள், பூந்தொட்டிகள், வாளிகள் மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்.
குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
குழந்தைகள் வெளியில் செல்லும்போது முழுக்கை ஆடைகள் அணிவிப்பதுடன், கொசுக்கள் அதிகமாக இருக்கும் நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். வீட்டில் கதவு, ஜன்னல்களுக்கு கொசுவலை பயன்படுத்துவதும் கொசுக்கடி ஏற்படும் வாய்ப்பை குறைக்க உதவும்.
காய்ச்சல் வந்தால் கவனம்
குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டால் அதை சாதாரண காய்ச்சல் என அலட்சியப்படுத்தாமல் குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது அவசியம். தொடர்ந்து காய்ச்சல், வாந்தி, வயிற்றுவலி, உடலில் ரத்தப்போக்கு, சிறுநீர் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
சுயமருத்துவத்தை தவிர்க்கவும்
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை தாமாக வழங்குவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக டெங்கு பாதிப்பு சந்தேகம் இருந்தால், மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவரின் கண்காணிப்பு மூலம் தேவையான சிகிச்சையை பெறுவது பாதுகாப்பான அணுகுமுறையாகும்.
இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி..? என்ன காரணம் தெரியுமா?
தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுவருகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மொத்தமாக கிட்டத்தட்ட 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியில் மொத்தமாக 15 போட்டியாளர்கள் மட்டுமே இருகிறார்கள். கடந்த சில நாட்களில் பிளாக் பாண்டி, மணிவண்ணா, ஜாவித் மற்றும் லக்ஷ்மி பிரியா என மொத்தம் 4 போட்டியாளர்கள் வெளியேறியிருந்தனர். அதிலும் நேற்று (25/09/2026) லீடர் எக்சிட் லிஸ்ட் மூலமாக லக்ஷ்மி பிரியா (Lakshmi Priya) வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், அவரின் நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீடு ஒரே கலவரமாகாவே இருந்தது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் நோ எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியிலிருந்து ஆனந்தி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அதற்கான விவரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: நீங்கள் கொண்டாடலாம் அல்லது விமர்சிக்கலாம்.. தி பாரடைஸ் படத்திற்கு ரசிகர்களின் ரியாக்ஷன் குறித்து நானி!
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேரினாரா ஆனந்தி:
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான லீடர் எக்சிட் லிஸ்டில் லட்சுமி பிரியா ஆனந்தி மற்றும் முத்தழகி என மூன்று போட்டியாளர்கள் இருந்த நிலையில் , இதில் நூலிழையில் ஆனந்தி தப்பித்திருந்தார். அந்த விதத்தில் தற்போது அவரும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது.
இதையும் படிங்க: மலையாள சினிமாவை தெறிக்கவிடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம் – இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியிலிருந்து ஆனந்தி, தனது சொந்த பிரச்சனையின் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளாராம். ஆனந்தியின் தந்தை இறந்த காரணத்தினால் ஆனந்தி இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளாராம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் தீவிரமாக பரவிவருகிறது. மேலும் அவரின் ரசிகர்கள் இதை வருத்தத்துடன் பகிர்ந்துவருகிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 10ல் இருந்து ஆனந்தி வெளியேறியதாக இணையத்தில் பரவும் பதிவு:
unmai dhan pola..😕
adha Saturday ye evict panni anupi irukanga BB Team...
Stay strong, #Anandhi. ❤️🫂
Sending you strength and prayers during this difficult time. 🕊️#BiggBossTamil #BiggBossTamil10 #BiggBossTamilSeason10 pic.twitter.com/zInUIjZfWW
— 𝓜𝓪𝓻𝓲❤️‍🔥 (@Mari812002) September 26, 2026
இன்ஸ்பெக்டர் டார்ச்சர்.. கூடுதல் பணிச்சுமை.. ஆடியோ வெளியிட்ட தலைமை காவலர்.. நெல்லை காவல் ஆணையர் நடவடிக்கை!
நெல்லை மாவட்ட காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ஜோயல். இவர், தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2002- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் சுமார் 24 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு பணியில் கூடுதல் சுமை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அவர் திருநெல்வேலி மாவட்ட காவல் ஆணையருக்கு பணிச்சுமை குறித்தும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்தும் வாட்ஸ் ஆப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நெல்லையில் தலைமை காவலர் சஸ்பெண்ட்
இந்த நிலையில், ஜோயல் தனது கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் முறையாக தெரிவிக்காமல் தற்கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டதன் காரணமாக அவரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தன்னை துன்புறுத்தியதாக காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டை முன் வைத்த தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலி மாநகர காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் பேசிய வார்த்தையால் சட்ட சிக்கல்? இதனை தவிர்த்திருக்கலாம்.. அரசியல் விமர்சகர்கள் கூறுவதென்ன!
தலைமை காவலர் வெளியிட்ட ஆடியோ வைரல்
இதனிடையே, தலைமை காவலர் ஜோயல் வெளியிட்ட ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது: கடந்த 35 நாட்களாக எனக்கு கூடுதல் பணி சுமை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் அழகர் தனக்கு கடுமையான மன உளைச்சலும், பணியில் அதிக தொந்தரவும் அளித்து வருகிறார். இதனால், தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதன் காரணமாக தற்போதைய சூழலில் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட காவல்துறையில் பரபரப்பு
நெல்லை மாநகர காவல் துறையில் உயர் அதிகாரிகள் மீது தலைமை காவலர் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த ஆடியோ திருநெல்வேலியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் ஆணையர், தலைமை காவலர் ஜோயல் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். அதன் அடிப்படையிலேயே, தலைமை காவலர் ஜோயல் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ODI World Cup 2027: இதுதான் எனது கடைசி உலகக் கோப்பை.. ஓபனாக பேசிய விராட் கோலி..!
2027 ஒருநாள் உலகக் கோப்பைதான் (2027 ODI World Cup) தனது கடைசி உலகக் கோப்பைத் தொடராக இருக்கும் என்று விராட் கோலியே (Virat Kohli) கூறியுள்ளார். 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விராட் கோலி, 2027-ல் நடைபெறும் தனது கடைசி உலகக் கோப்பையில் தனது முழு முயற்சியையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும். பெரும்பாலான போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும், அங்கு விராட் கோலொ ஒருநாள் போட்டிகளில் 76.38 என்ற சராசரியைக் கொண்டுள்ளார்.
2027 ஒருநாள் உலகக் கோப்பை வருகின்ற 2027 அக்டோபர் 4 முதல் 2027 நவம்பர் 21 வரை நடைபெறும். உலகக் கோப்பையின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. இதில் 14 அணிகள் கோப்பையை வெல்லப் போட்டியிடுகின்றன. முதலில், கடைசி 3 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே சூப்பர் 3 தொடரும். அதைத் தொடர்ந்து 12 அணிகளுக்கு இடையே சூப்பர் 7 கட்டமும் நடைபெறும்.
ALSO READ: எந்தெந்த நாட்களில் ரோஹித், கோலி களம்..? இந்திய அணியின் ஒருநாள் அட்டவணை!
இது என் கடைசி உலகக் கோப்பை:
விராட் கோலி ஜியோஹாட்ஸ்டாரிடம், "உலகக் கோப்பை வெளிநாட்டுச் சூழலில் நடைபெற உள்ளது. அதற்கு மிகுந்த ஆற்றலும் கடின உழைப்பும் தேவை. இதுவே எனது கடைசி உலகக் கோப்பை, மேலும் இதுவே எனக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரம். இதில் நான் எனது முழு உழைப்பையும் கொடுப்பேன்," என்று கூறினார்.
கேப்டன் சுப்மன் கில் குறித்து பேசிய கோலி, “கேப்டன் சுப்மன் கில் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார். இந்த பொறுப்பில் அவர் இன்னும் இளமையானவர்தான். ஆனால், இந்திய அணியை வழிநடத்துவதற்கான சரியான கண்ணோட்டம் கில்லிடம் உள்ளது. பேட்ஸ்மேன்களை களத்தில் இறக்குவதற்கான வழிகளை சிந்திக்கிறார். இது எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்வதற்கான அல்லது ஒரு படி முன்னே செல்வதற்கான வழியாகும்.
எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்க பந்துவீச்சாளர்களிடம் பேசுகிறார். தேவைப்படும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான பந்துவீச்சு தாக்குதலை கொண்டுவரவும் தயங்குவதில்லை” என்று பேசினார்.
ALSO READ: ருதுராஜ்க்கு வாய்ப்பு.. வெயிட்டிங்கில் ஜெய்ஸ்வால்.. இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு!
விராட் கோலிக்கு 5வது ஒருநாள் உலகக் கோப்பை
Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை – வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை, செப்டம்பர் 26 : தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 27, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 1, 2026 வரை 5 நாட்கள் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடலில் கடந்த செப்டம்பர் 24, 2026 அன்று நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காலை 5:30 மணியளவில் வலுவிழந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவியது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை 8:30 மணியளவில் தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.
இதையும் படிக்க : மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்.. தமிழ்நாட்டில் 246 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!!
மேலும் இதன் காரணமாக செப்டம்பர் 27, 2026 நாளை மேற்கு தொட்ர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்ந்து செப்டம்பர் 28, 2026 திங்கள் கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 29, 2026 செவ்வாய்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : பிறப்பு சான்றிதழில் பெயர் இல்லையா? பெற்றோரே இதை உடனே கவனிங்க!
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30, 2026 மற்றும் அக்டோபர் 01, 2026 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே பிறந்து தமிழகத்திலேயே கடலில் கலக்கும் நதி.. தெரியுமா?
தென் தமிழகத்தின் முக்கிய நதியான தாமிரபரணி, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியமலைப் பகுதியில் உருவாகிறது. மலைப்பகுதிகளில் இருந்து வரும் நீரோடைகள் ஒன்றிணைந்து தாமிரபரணியாக தனது பயணத்தைத் தொடங்குகின்றன. இந்த ஆறு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. குடிநீர் தேவையுடன் விவசாயத்திற்கும் தாமிரபரணி நீர் பெரிதும் பயன்படுகிறது. பாபநாசம் உள்ளிட்ட பகுதிகள் தாமிரபரணியுடன் இயற்கை மற்றும் ஆன்மிக ரீதியாக தொடர்புடைய முக்கிய இடங்களாக உள்ளன. பல பகுதிகளைக் கடந்து செல்லும் தாமிரபரணி, இறுதியில் புன்னக்காயல் அருகே கடலில் சங்கமிக்கிறது. தமிழகத்தில் உருவாகி தமிழகத்திற்குள்ளேயே கடலில் கலக்கும் முக்கிய நதிகளில் தாமிரபரணியும் ஒன்றாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கும் பயணம்
தென் தமிழகத்தின் முக்கியமான நதிகளில் ஒன்றான தாமிரபரணி, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகஸ்தியமலைப் பகுதியில் உருவாகிறது. இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளில் கிடைக்கும் நீரோடைகள் ஒன்றிணைந்து தாமிரபரணியாக உருவெடுத்து, பின்னர் சமவெளியை நோக்கிப் பயணிக்கிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு நீராதாரம்
மலைப்பகுதியிலிருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், விவசாயத்திற்கும் இந்த ஆற்றின் நீர் பெரிதும் பயன்படுகிறது. இதனால் தாமிரபரணி தென் தமிழக மக்களின் வாழ்வியலுடன் நெருக்கமாக இணைந்த நதியாக திகழ்கிறது.
ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற பகுதிகள்
தாமிரபரணியின் தொடக்கப் பகுதிகள் இயற்கை வளம் மட்டுமின்றி ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டவையாக பார்க்கப்படுகின்றன. பாபநாசம் உள்ளிட்ட பகுதிகள் தாமிரபரணியின் பயணத்தில் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளன. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்கள் மற்றும் தீர்த்தங்கள் காரணமாகவும் இந்த நதிக்கு தனிச்சிறப்பு உள்ளது.
Also Read: பிறப்பு சான்றிதழில் பெயர் இல்லையா? பெற்றோரே இதை உடனே கவனிங்க!
கடலில் சங்கமிக்கும் தாமிரபரணி
மலைகளில் பிறந்து பல்வேறு பகுதிகளைக் கடந்து வரும் தாமிரபரணி, இறுதியில் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. தமிழகத்திற்குள் உருவாகி தமிழகத்திற்குள்ளேயே கடலில் சங்கமிக்கும் முக்கியமான நதிகளில் தாமிரபரணியும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இயற்கை, விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இந்த ஆற்றை பாதுகாப்பது எதிர்கால நீர்வளத்திற்கும் முக்கியமானதாகும்.
Chiranjeevi: 90ஸ்-ல் அவரின் அப்பாவை பார்த்ததுபோலவே… ஜேசன் சஞ்சய் குறித்து புகழ்ந்து பேசிய தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி!
டோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான நாயகனாக இருந்துவருபவர் மெகாஸ்டார் சிரஞ்சீவி (Megastar Chiranjeevi). இவர் தெலுங்கில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் "மன ஷங்கர வர ப்ரசாத் காரு" (Mana Shankara Vara Prasad Garu) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியிருந்த நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். இதன் பிறகு விஸ்வம்பரா என்ற படமும் உருவாக்கி இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதையடுத்து காக்க (Kaaka) என்ற புதிய திரைப்படத்தில் சிரஞ்சீவி நடித்துவருகிறார். இதை இயக்குநர் பாபி கொல்லி இயக்க, அனஸ்வரா ராஜன், நிவேதா பெத்துராஜ் மற்றும் சுனில் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது.
அந்த விதத்தில் படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் சிரஞ்சீவி நேற்று (25/09/2026) தெலுங்கானாவில் நடைபெற்றிருந்த சிக்மா (Sigma) படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) மற்றும் முதலமைச்சர் விஜய் (CM Vijay) குறித்தும் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மலையாள சினிமாவை தெறிக்கவிடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம் – இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?
ஜேசன் சஞ்சய் மற்றும் அவரின் தந்தையான முதல்வர் விஜய் குறித்து பேசிய சிரஞ்சீவி:
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய தெலுங்கு நட்சத்திரம் சிரஞ்சீவி, "நான் ஜேசனை முதன்முதலில் பார்த்தபோது, ​​அவர் தன் தந்தை விஜய், 90ஸ் காலகட்டத்தில் இருந்தது போலவே அச்சு அசலாக இருப்பதாக உணர்ந்தேன். அவரது தந்தை விஜய் அடைந்திருக்கும் அந்தஸ்து நம் அனைவருக்கும் தெரியும். ஜேசனும் அதுபோன்ற பெரும் உயரங்களை எட்டி, பெரிய பதவிகளை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என அதில் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் சிக்மா படத்தின் 4-வது சிங்கிள் சுலோச்சனா!
சிக்மா படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The #Sigma Pre-Release event is buzzing with stars, cheers and a whole lot of energy. ❤️‍🔥⚡️#SigmaInCinemasOct2@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 @saregamasouth pic.twitter.com/nzbdgXFqX4
— Lyca Productions (@LycaProductions) September 25, 2026
திண்டுக்கல்லில் பரபரப்பு.. கொலையை மறைக்க பக்கா நாடகம்.. மனைவி மீது பழி போட்ட காதல் கணவன்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியில் உள்ள பி. கோசவப்பட்டி அருகே உள்ள சிக்குபோலகவுண்டன்பட்டி தோட்டத்து பகுதியில் வசித்து வந்தவர் ஊமைச்சாமி என்ற பெருமாள் ( 60 வயது). விவசாயியான இவருக்கு முத்தையா ( 30 வயது) என்ற மகன் உள்ளார். இவர், ஏசி மெக்கானிக் தொழில் பார்த்து வருகிறார். இதனிடையே, இவருக்கும் நந்தினி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், முத்தையாவுக்கும் அவரது தந்தை ஊமைச்சாமிக்கும் இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நந்தினி மீது அவரது கணவர் முத்தையா கோபப்பட்டதாக தெரிகிறது. இதில், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.
மனைவியை சமாதானம் பேசி அழைத்து வந்து தாக்குதல்
இந்த நிலையில், நந்தினி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் குடும்பத்தினரிடம் கோபித்துக் கொண்டு தனது இரு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினியை பார்க்க சென்ற அவரது கணவர் முத்தையா சமாதானம் பேசி மீண்டும் குடும்பம் நடத்துவதற்காக தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று மீண்டும் மது போதையில் வீட்டுக்கு வந்த முத்தையா, தனது மனைவி நந்தினியுடன் மீண்டும் தகராறில் ஏற்பட்டு தாக்கி உள்ளார்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!
தந்தையை கொன்று மனைவி மீது பழி
இதனால், மன வேதனை அடைந்த நந்தினி வீட்டில் இருந்து தப்பி ஓடி உள்ளார். இதை பார்த்த ஊமைச்சாமி தனது மகனின் செயலை கண்டித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த முத்தையா அங்கு கடந்த கட்டையால் ஊமைச்சாமியை சரமாரியாக தாக்கினார். இதில், பலத்த ரத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
பாசக்கார மகனை கைது செய்த போலீசார்
இந்த நிலையில், தனது தந்தை ஊமைச்சாமியை, மனைவி நந்தினி கட்டையால் அடித்து கொலை செய்ததாக முத்தையா நாடகமாகியுள்ளார். இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், மது போதையில் தந்தையை, மகன் அடித்து கொன்றது உறுதி செய்யப்பட்டது இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்?.. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு!!
சென்னை, செப்.26: சென்னை பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில நிர்வாக வசதிக்காகப் புதிய கட்டடம் கட்டும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வரும் நிலையில், இத்திட்டத்திற்குத் தொடக்கம் முதலே பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, அப்பகுதியில் வசிக்கும் மீனவர் சமூகத்தினர் தங்களது வாழ்வாதாரம் மற்றும் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும் எனக் கூறி எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல, பல அரசியல் கட்சிகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் இந்த முடிவுக்குத் தங்களின் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
இதையும் படிக்க: “திமுக ஏன் இவ்வளவு ஓவர் ரியாக்ட் செய்கிறது?”.. ஜெம் வீரமணி விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட மனு:
அரசியல் மற்றும் வாழ்வாதார ரீதியிலான எதிர்ப்புகள் ஒருபுறம் இருக்க, தற்போது இந்த விவகாரம் சட்ட ரீதியான நடவடிக்கையை எட்டியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக தென்னக மண்டலத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புதிய வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவர் பொதுநலன் கருதி இந்த முக்கிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அரசின் இந்தத் திட்டம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக அந்த மனுவில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிகள் மீறல் பற்றிய முக்கியக் குற்றச்சாட்டுகள்:
மனுதாரரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த் தனது மனுவில், கடலோர ஒழுங்குமுறை மதிப்பீடு மற்றும் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகளை முறையாக மேற்கொள்ளாமல் அரசு இந்த இடத்தை அவசர அவசரமாகத் தேர்வு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு எதிராக அரசின் இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய அனுமதிகளும் ஆய்வுகளும் இன்றி கடலோரப் பகுதியில் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது அப்பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பெருமளவில் பாதிக்கும் என மனுவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தவெகவின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு.. விமான பயணத்துக்கே இத்தனை கோடியா?.. முழு விவரம்!
நீதிமன்ற விசாரணை மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள்:
Viral Video : விபத்துக்குள்ளான நெய் லாரி.. பாத்திரங்களில் அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உலகின் எந்த மூலையில், சிறிய சம்பவம் நடந்தாலும் அது உலகிற்கு தெரிய வர பெரிய காரணமாக உள்ளன. இதன் காரணமாக, உலகின் எந்த பகுதியில் ஏதேனும் அசாத்தியமான மற்றும் ஆச்சர்யமிக்க சம்பவங்கள் நடந்தாலும் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், விபத்தில் சிக்கிய நெய் லாரியில் இருந்து பொதுமக்கள், பாத்திரங்களை கொண்டுவந்து நெய் எடுத்துச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
விபத்தில் சிக்கிய நெய் லாரி
உணவு பொருட்கள் பெரிய பெரிய கண்டெய்னர் லாரிகள் மூலம் உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு, வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் பொருட்கள், வாகனங்கள் விபத்துக்குள்ளானால் வீணாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் நெய் ஏற்றிச் சென்ற் லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், பொதுமக்கள் சாலையில் கொட்டி கிடக்கும் நெய் அள்ளிச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : நாயை ஆற்றில் வீசிய பெண்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
இணையத்தில் வெளியாகி வரும் வீடியோ
🚨 MORADABAD : A truck reportedly carrying desi ghee overturned on the highway, spilling ghee across the road. A video circulating on social media shows people gathering at the spot and collecting the spilled ghee. pic.twitter.com/su7WjsU2ij
— indiainlast24hr (@indiain24hr) September 23, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சரக்கு வாகன் கவிழ்ந்த நிலையில் சாலை முழுவதும் நெய் சிதறி கிடக்கிறது. இந்த நிலையில், சாலையில் கொட்டிக் கிடக்கும் நெய்யை பொதுமக்கள் பாத்திரங்களில் அள்ளிச் செல்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : காரின் பேனட் மீது வைத்து இளம் பெண்ணை இழுத்துச் சென்ற நபர்.. ஷாக் வீடியோ!
“திமுக ஏன் இவ்வளவு ஓவர் ரியாக்ட் செய்கிறது?”.. ஜெம் வீரமணி விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!
சென்னை, செப்.26: தமிழக முதல்வர் வரும் 28-ஆம் தேதி மதுரைக்கு வருகை தரவுள்ளார். மதுரையில் ஏழை எளிய மக்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' தொடக்க விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் திறப்பு விழா ஆகிய இரு முக்கிய நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக மதுரைக்கு வருகை தந்த அமைச்சர் நிர்மல்குமார், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், முதல்வரின் வருகை குறித்தும், நிலுவையில் உள்ள அரசியல் மற்றும் சட்ட ரீதியான குற்றச்சாட்டுகள் குறித்தும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிக்க: தவெகவின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு.. விமான பயணத்துக்கே இத்தனை கோடியா?.. முழு விவரம்!
தாய்மாமன் தங்க மோதிர திட்டம்:
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஏழை எளிய மக்களுக்குப் பயனுள்ள வகையில் அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 'தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை' மதுரையில் இருந்து முதல்வர் தொடங்கி வைப்பது தென் மாவட்ட மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என்று குறிப்பிட்டார். முந்தைய ஆட்சிக் காலங்களில் நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு மாற்றாக இத்தகைய புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். முதல்வரின் பயணத் திட்டத்தைப் பொறுத்தவரை, இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள இந்த இரு நிகழ்ச்சிகள் தவிர்த்து மற்ற விவரங்கள் மற்றும் நேர அட்டவணை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
திமுக மீது கடுமையான குற்றச்சாட்டு:
இதனைத் தொடர்ந்து, ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சார்பில் முன்வைக்கப்படும் கருத்துகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், இந்த விவகாரத்தில் திமுக ஏன் இவ்வளவு 'ஓவர் ரியாக்ட்' செய்கிறது என்று கேள்வி எழுப்பினார். சாதாரணமான ஒரு விஷயம் போல கடந்து போக முடியாத அளவிற்கு இதில் மிகப்பெரிய தவறுகளும் முறைகேடுகளும் மறைக்கப்பட்டுள்ளதாகச் சாடினார். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 'வீடியோ நிழலாக உள்ளது' என சாக்குபோக்கு சொல்வதும், போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கைக் கைவிட்டதாகக் கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், திமுக தொடர்ந்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் வேலையையே செய்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செலவழித்தது இத்தனை கோடியா?.. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த பகீர் கணக்குகள்!
கட்டப் பஞ்சாயத்து குற்றச்சாட்டுகள்:
உங்களை மட்டும் கொசுவுக்கு ஏன் அவ்வளவு பிடிக்குது? தப்பிப்பது எப்படி?
மாலை வேளைகளில் மனிதர்களின் உடலிலிருந்து வெளிப்படும் தனித்துவமான மோப்ப வாசனையைக் கொண்டே கொசுக்கள் தங்களின் இரையைக் கண்டறிகின்றன. நாம் தினமும் பயன்படுத்தும் குளியல் சோப்புகள் உடலின் வாசனையை மாற்றி சில சமயங்களில் கொசுக்களை அதிகளவில் ஈர்க்கக்கூடும். அதேபோல, வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு கைகளில் ஏற்படும் வாசனை கொசுக்களை ஈர்க்கும் என்றும், திராட்சை சாப்பிடுவதால் இத்தகைய மாற்றம் ஏற்படுவதில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வேர்வை வாசனை கொசுக்களை அழைப்பதால், குறிப்பிட்ட வேதிப்பொருள் கொண்ட டியோடரண்டுகளைப் பயன்படுத்துவது கொசுக்கள் வந்து அமர்வதை பாதியாகக் குறைக்கும். மேலும், தோலில் நேரடியாகப் பூசப்படும் 'டீட்' (DEET) திரவமும், ஆடைகளின் மீது தெளிக்கப்படும் 'பெர்மித்ரின்' தெளிப்பான்களும் சிறந்த பாதுகாப்பைத் தருகின்றன.
கொசுக்களை ஈர்க்கும் உடல் வாசனை
மாலை நேரங்களில் ஒரே இடத்தில் பல மனிதர்கள் இருக்கும்போது, குறிப்பிட்ட சிலரை மட்டும் கொசுக்கள் மீண்டும் மீண்டும் மொய்த்து கடிப்பதை நாம் பார்த்திருப்போம். மனிதர்களின் உடலிலிருந்து வெளிப்படும் தனித்துவமான இயற்கை வாசனையை வைத்தே கொசுக்கள் தங்களின் இரையைக் கண்டறிகின்றன. நாம் பயன்படுத்தும் சோப், உணவுகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் உடலின் வாசனையை மாற்ற வல்லவை என்றாலும், அவை கொசுக்கடியிலிருந்து முழுமையாகக் காப்பாற்றுமா என்பதை அறிவியல் ஆய்வுகள் விளக்குகின்றன.
சோப் மற்றும் பழங்களின் தாக்கம்
நாம் தினமும் பயன்படுத்தும் குளியல் சோப்புகள் உடலின் வாசனையைத் தீர்மானிக்கின்றன. சில வகை சோப்புகளைப் பயன்படுத்தும்போது வெளிப்படும் வாசனை கொசுக்களை அதிக அளவில் ஈர்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல, நாம் உண்ணும் உணவுகளும் இதில் பங்கு வகிக்கின்றன; குறிப்பாக வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு கைகளில் ஏற்படும் வாசனை கொசுக்களை ஈர்ப்பதாகவும், திராட்சை பழம் சாப்பிடுவதால் இத்தகைய மாற்றம் ஏற்படுவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
Also Read: ‘மொறுமொறு’ தோசை… இந்த 1 ஸ்பூன் மேஜிக் மாவு இருந்தா போதும்!
டியோடரண்ட் பயன்பாடும் கொசு விரட்டிகளும்
உடற்பயிற்சி அல்லது வேலை செய்யும்போது ஏற்படும் வேர்வை வாசனை கொசுக்களை எளிதில் ஈர்க்கக்கூடியது. இந்நிலையில், குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் கொண்ட டியோடரண்டுகளைப் பயன்படுத்தும்போது, கொசுக்கள் சருமத்தில் வந்து அமர்வது பாதியாகக் குறைகிறது. மேலும், தோலின் மீது நேரடியாகப் பூசப்படும் 'டீட்' (DEET) ரசாயனம் கொண்ட கொசு விரட்டிகளும், ஆடைகளின் மீது தெளிக்கப்படும் 'பெர்மித்ரின்' தெளிப்பான்களும் கொசுக்கடியிலிருந்து நீண்ட நேரம் பாதுகாப்பு அளிக்கின்றன.
கட்டுக்கதைகளும் மரபணு உண்மைகளும்
பூண்டு சாப்பிடுவதோ அல்லது வைட்டமின் பி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதோ கொசுக்களை விரட்டும் என்ற பரவலான நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால், அறிவியல் ஆய்வுகளின்படி இவற்றுக்கும் கொசுக்களை விரட்டுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. பல வழிகளைப் பின்பற்றிய பிறகும் கொசுக்கடி தொடர்ந்தால், அது ஒருவரின் மரபணு (Genetics) அமைப்பால் தீர்மானிக்கப்படும் இயற்கை உடலியல் பண்பே காரணமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விற்பனைகளை நடத்தும். அந்த வகையில், அமேசா நிறுவனத்தின் கிரேட் இந்தியல் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) அக்டோபர் 08, 2026 அன்று தொடங்க உள்ளது. இந்த சேலில் மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்
அமேசான் நிறுவனம் தனது கிரேட் இந்தியன் சேலை அக்டோபர் 08, 2026 முதல் தொடங்க உள்ளது. இந்த சேலில் ஐபோன்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ஐபோன்களுக்கு எவ்வளவு சலுகை வழங்க உள்ளது என குறிப்பிடவில்லை. அதுமட்டுமன்றி, சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 7, விவோ வி300 எப்ஃஇ, ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் நோர்டு 6 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு தள்ளுபடிகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிம் கார்டை வேறு ஒருவருக்கு கொடுத்தால் ரூ.50 லட்சம் அபராதம்.. 3 ஆண்டுகள் சிறை!
அமேசான் வெளியிட்டுள்ள சலுகை விவரங்கள்
ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.18,499-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கி சலுகைகளும் அடங்கும்.
ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.23,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போன் ரூ.15,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கி சலுகைகளும் அடங்கும்.
இதேபோல iQOO Neo 10 ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகள் உடன் ரூ.41,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஏ18 ப்ரோ சிப் ரூ.71,990-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் ரூ.9,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 6 இலக்க பாஸ்வேர்டு போதுமானதாக இருக்காது.. பாதுகாப்பை Double Strong ஆக மாற்றிய வாட்ஸ்அப்!
98 மலைக் கிராம மக்களை வெளியேற்ற எதிர்ப்பு.. 500க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்புப் போராட்டம்!!
தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 மலைக் கிராமங்களில் தலைமுறை தலைமுறையாகப் பலாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த 2021-ஆம் ஆண்டு மேகமலை வனஉயிரின சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து 'ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்' புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த விரிவாக்க நடவடிக்கைக்குப் பின்னரே, அப்பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மலைக் கிராம மக்களுக்குப் பல்வேறு கடுமையான நெருக்கடிகளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் உருவெடுக்கத் தொடங்கின.
இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செலவழித்தது இத்தனை கோடியா?.. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த பகீர் கணக்குகள்!
உச்ச நீதிமன்ற உத்தரவும் மக்களின் கொந்தளிப்பும்:
புலிகள் காப்பகப் பகுதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனப்பகுதியில் உள்ள 98 மலைக் கிராம மக்களையும் 'ஆக்கிரமிப்பாளர்கள்' எனக் குறிப்பிட்டு, அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறுவது முற்றிலும் தவறானது என்றும், தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற முடியாது என்றும் வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வருசநாடு அருகே உள்ள கடமலைக்குண்டு பேருந்து நிலையப் பகுதியில் பிரம்மாண்டப் பந்தல் அமைக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திரண்டு இரவோடு இரவாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் முதன்மைக் கோரிக்கைகளும் கள நிலவரமும்:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் முதன்மைக் கோரிக்கை, தங்களை வனப்பகுதி ஆக்கிரமிப்பாளர்களாகப் பார்க்கக் கூடாது என்பதும், 98 மலைக் கிராமங்களிலிருந்தும் மக்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது என்பதுமே ஆகும். மேலும், தங்களது பாரம்பரிய நிலங்களுக்கு உரிய வீட்டுமனைப் பட்டா மற்றும் விவசாய நிலப் பட்டாக்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். போராட்டம் நடைபெறும் இடத்திலேயே உணவு சமைக்கப்பட்டுப் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டு வரும் நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு இரவு பகலாக இந்தத் தொடர் காத்திருப்புப் போராட்டம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தின் காரணமாகக் கடமலைக்குண்டு பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: தவெகவின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு.. விமான பயணத்துக்கே இத்தனை கோடியா?.. முழு விவரம்!
எதிர்பார்க்கப்படும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை:
மலையாள சினிமாவை தெறிக்கவிடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம் – இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?
மலையாள சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவர் சினிமாவில் நடிகராக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் படங்களில் நாயகனாக நடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிகர் நிவின் பாலி நடிக்கத் தொடங்கிய போது தொடர்ந்து அவரது படங்கள் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. தொடர்ந்து மலையாள சினிமாவில் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த நிவின் பாலிக்கு சினிமாவில் ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகள் மட்டுமே இருந்தது. அவ்வளவுதான் நிவின் பாலியின் சினிமா கெரியர் முடிந்துவிட்டது என்று எண்ணம் தோன்றும் போது ஒரு மாஸான கம்பேக்கை கொடுத்தார் நடிகர் நிவின் பாலி.
அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது. மேலும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி படங்கள் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவை தெறிக்கவிடும் பெத்தலேக குடும்ப யூனிட் படம்:
அதன்படி நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படத்தை இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் வெளியான முந்தைய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்த பெத்தலேக குடும்ப யூனிட் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நடித்துள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து பல முக்கிய நடிகர்களும் நடித்து உள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் உலக அளவில் சுமார் 327 கோடிகளைக் கடந்து வசூலில் சாதனைப் படைத்து வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read... பிக் பாஸில் தலைவர் எக்சிட் லிஸ்ட்.. இந்தவாரம் வெளியேற்றப்படுபவர் இவரா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#BethlehemKudumbaUnit 35 Days Worldwide Box Office Estimate;
Kerala : ₹151.80 Cr
Rest of India : ₹37.4 Cr
Overseas ~ $14.5M | ₹138.5 Cr
Total Worldwide Gross : ₹327.70 Cr
Industry Hit of Mollywood 🥇🔥
4th Highest South Indian Grosser of The Year✅ pic.twitter.com/BgMgGbt67H
— South Indian BoxOffice (@BOSouthIndian) September 25, 2026
அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price), பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol and Diesel Price), ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவற்றில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். செப்டம்பர் மாதம் இன்னும் ஒருசில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அக்டோபர் மாதம் தொடங்கள் உள்ளது. இந்த நிலையில் தான், அக்டோபர் மாதம் முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அந்த வகையில் என்ன என்ன மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு என பல்வேறு மாற்றங்கள் அக்டோபர் முதல் அமலுக்கு வர உள்ளன.
கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், அக்டோபர் 01, 2026 அன்று கேஸ் சிலிண்டர் விலையில் முக்கிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
கேஸ் சிலிண்டர் முன்பதிவு
கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் அதற்கான ஆதார் அடிப்படையிலான இகேஒய்சி (eKYC - Know Your Customer) மேற்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன்னும் சிலர் இதனை முடிக்க நிலையில், செப்டம்பர் 30, 2026-க்கு கேஒய்சி முடிக்காதவர்கள் அக்டோபர் 01, 2026 முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
யுபிஐ-ல் எம்டிஆர் கட்டணம்
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இந்திய குடிமக்கள் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை யுபிஐ (UPI - Unified Payment Interface) மூலம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், அக்டோபர் 15, 2026 முதல் யுபிஐ-ல் எம்டிஆர் (MDR - Merchant Discount Rate) கட்டணம் அமலுக்கு வர உள்ளது. ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு வணிக நிறுவனங்கள் செலுத்தும் கட்டணம் இதுவாகும்.
இதையும் படிங்க : சேமிப்புக்கு இன்னுமா 50:30:20 ஃபார்முலா பயன்படுத்துறீங்க.. நிபுணர்கள் கூறும் இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்!
ஆதார் கார்டு அப்டேட்
உழைக்கும் இனமே உலக ஜெயித்திடும் ஒருநாள் – 12 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் கார்த்தியின் மெட்ராஸ் படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் மற்ற மொழிப் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி வருகிறார் நடிகர் கார்த்தி. அதன்படி நடிகர் கார்த்தியின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் கார்த்தியின் நடிப்பில் வா வாத்தியார் படம் திரையரங்குகளில் வெளியானது. அந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்ச்னத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் சர்தார் 2.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அவரது முந்தையப் படங்களையும் ரசிகர்கள் கொண்டாடத் தவறியதில்லை.
12 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் கார்த்தியின் மெட்ராஸ் படம்:
அதன்படி நடிகர் கார்த்தி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த படம் மெட்ராஸ். சென்னையின் பூர்வ குடிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த மெட்ராஸ் படம் உருவாகி இருந்தது. அரசியல் என்பது நமக்கு விருப்பமே இல்லைனாலும் நம்ம வாழ்க்கையோட இணைந்த ஒன்றாகதான் இருக்கும் என்பதை இந்தப் படம் தெளிவாக காட்டி இருக்கும். இந்தப் படம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read... அப்பா விஜயோட அந்தப் படத்தை பார்ட் 2 செய்ய ஆசை – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#12YearsofMadras! ❤️‍🔥🎬
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்று.
ஒரு சுவரை மையமாக வைத்து அரசியல், நட்பு, காதல், துரோகம், வாழ்க்கை, வடசென்னையின் மண் வாசனை என ஒரு முழு உலகத்தையே திரையில் பதிவு செய்த படம்.
Pa. Ranjith-ன் எழுத்தும் இயக்கமும்,
Karthiயின் இயல்பான நடிப்பும்,… pic.twitter.com/Wkt8WvvHNl
— cinema cinema (@kailashsatana) September 26, 2026
மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்.. தமிழ்நாட்டில் 246 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!!
சென்னை, செப்.26: கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியை இலவசமாகவும் தரமாகவும் வழங்குவதில் அரசுத் தொடக்கப் பள்ளிகள் மிக முக்கியமான பங்கை வகித்து வருகின்றன. இடைநிறுத்தலைக் குறைக்கவும், பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் காலை உணவுத் திட்டம், சத்தான மதிய உணவு, இலவசச் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் எனப் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எதிர்பார்த்த அளவில் சீராக இல்லாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக, நடப்பு கல்வியாண்டில் ஒற்றை மாணவர் சேர்க்கை கூட இல்லாததால் 246 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் தீவிர அபாயத்தை எதிர்கொண்டுள்ளது கல்வித்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தவெகவின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு.. விமான பயணத்துக்கே இத்தனை கோடியா?.. முழு விவரம்!
புள்ளிவிவர அதிர்ச்சியும் ஆசிரியர் பற்றாக்குறையும்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் மாநகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் சில இடங்களில் உயர்ந்திருந்தாலும், கிராமப்புறப் பள்ளிகளின் நிலைமை கவலையளிப்பதாகவே உள்ளது. மாநிலத்தில் உள்ள 24,349 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான, அதாவது 14,829 பள்ளிகளில் 30-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். இத்தகைய குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே கொண்ட பள்ளிகளில், ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்த வேண்டிய நிர்பந்தம் நிலவுவதாக ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பெற்றோர் சந்திக்கும் குறைபாடுகள்:
அரசுப் பள்ளிகளில் இலவசத் திட்டங்களும் சலுகைகளும் இருந்தாலும், தூய்மையான கழிவறை வசதிகள், குடிநீர் வசதி, கட்டடத் தரம் மற்றும் ஆங்கில வழிக் கல்வி போன்ற உள்கட்டமைப்புகளில் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியிருப்பதே பெற்றோர் பலரையும் தனியார் பள்ளிகளை நோக்கி நகர வைக்கிறது. மேலும், கிராமப்புறங்களில் தனியார் மழலையர் (LKG/UKG) பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அரசுத் தொடக்கப் பள்ளிகளிலேயே முறையான தகுதி படைத்த ஆசிரியர்களைக் கொண்டு எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை அரசுத் தொடங்குவதோடு, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே கிராமப்புறப் பெற்றோரை மீண்டும் ஈர்க்க முடியும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செலவழித்தது இத்தனை கோடியா?.. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த பகீர் கணக்குகள்!
கல்வியாளர்களின் யோசனைகளும் எதிர்காலத் தீர்வுகளும்:
பிறப்பு சான்றிதழில் பெயர் இல்லையா? பெற்றோரே இதை உடனே கவனிங்க!
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்வது முக்கியமான நடைமுறையாகும். பெயர் குறிப்பிடாமல் பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால், பின்னர் பெயரைச் சேர்க்க அரசு வாய்ப்பு வழங்குகிறது. இதற்காக அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும். காலக்கெடு முடிந்த பிறகு பெயர் சேர்ப்பதில் கூடுதல் நடைமுறைகள் ஏற்படலாம். பெயர் சேர்க்க தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது அவசியம். விண்ணப்பிக்கும் முன் பிறப்பு பதிவு தொடர்பான விவரங்களை சரிபார்க்க வேண்டும். காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு-இறப்பு பதிவாளர் அலுவலகத்தை அணுகி பெயரை பதிவு செய்து கொள்வது முக்கியம்.
பிறப்பு சான்றிதழில் பெயர் அவசியம்
பிறப்பு சான்றிதழ் என்பது குழந்தையின் அடையாளம் மற்றும் எதிர்காலத்தில் பல்வேறு அரசு ஆவணங்களைப் பெறுவதற்கு முக்கியமான ஆவணமாகும். குழந்தை பிறந்தபோது பெயர் பதிவு செய்யப்படாமல் இருந்தால், பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பெயரைப் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.
பெயர் சேர்க்க காலக்கெடு
தமிழகத்தில் பெயர் குறிப்பிடப்படாமல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ்களில், குழந்தையின் பெயரைச் சேர்ப்பதற்கான வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெற்றோர் உரிய நடைமுறையைப் பின்பற்றி பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பெற்றோர் கவனிக்க வேண்டியது
காலக்கெடு முடிந்த பிறகு பெயரைச் சேர்ப்பதில் கூடுதல் நடைமுறைகள் அல்லது தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதுவரை பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்யாத பெற்றோர் உரிய அலுவலகத்தை அணுகி விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.
ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்
பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு பதிவு தொடர்பான விவரங்களில் தவறு இருந்தால், சம்பந்தப்பட்ட பிறப்பு-இறப்பு பதிவாளர் அலுவலகத்தை அணுகி தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
முக்கிய அறிவுறுத்தல்
குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெயர் இல்லாமல் இருந்தால், கடைசி வாய்ப்பை தவறவிடாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் பெயரை பதிவு செய்வது முக்கியம். அரசு அறிவுறுத்தியுள்ள நடைமுறை மற்றும் காலக்கெடு குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அல்லது அதிகாரப்பூர்வ பதிவாளர் அலுவலகத்தில் உறுதி செய்து நடவடிக்கை எடுக்கலாம்.
நானியின் தி பாரடைஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா? படக்குழு வெளியிட்ட அப்டேட்
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. மேலும் நடிகர் நானியின் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் அதிக அளவில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வந்தாலும் அந்தப் படங்கள் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் நானியின் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரானது தி பாரடைஸ் படம். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 24-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.
பீடியட் ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தில் நடிகர் நானி உடன் இணைந்து நடிகர்கள் மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு, ஈஸ்வரி ராவ், தனிகெள பரணி, விஷிகா, கிருஷ்ண தேஜா, பிரியதர்ஷி புலிகொண்டா, பி. விஜய் குமார், ராஜா ரவீந்திரன், சத்ய பிரகாஷ், ராம் ஜெகன், எம்.எஸ். சௌத்ரி, துவவாசி மோகன், அசோக் குமார், கீதா பாஸ்கர், சத்யராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து உள்ளனர்.
நானியின் தி பாரடைஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?
இந்த தி பாரடைஸ் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து பெரிய அளவில் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெறவில்லை. மாறாக பல ட்ரோல்களையே சந்தித்து வருகின்றது. மேலும் இந்த ட்ரோல்கள் குறித்தும் நடிகர் நானி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பாசிட்டிவாக பேசி இருந்தார். மேலும் இந்தப் படம் இப்படியான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் இரண்டு நாட்களில் உலக அளவில் ரூபார்ய் 114 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read... வெளியானது ரன்பீர் கபூரின் லவ் அண்ட் வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It is JADAL ZAMANA & we are witnessing its RAMPAGE 🔥🔥#TheParadise collects 114 CRORES+ GROSS WORLDWIDE in 2 days ❤‍🔥❤‍🔥
Book your tickets now!
🎟️ https://t.co/QWwS4Ichic pic.twitter.com/mhNJ2iLdhk
— THE PARADISE (@TheParadiseOffl) September 26, 2026
தவெகவின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு.. விமான பயணத்துக்கே இத்தனை கோடியா?.. முழு விவரம்!
சென்னை, செப்.26: நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முறையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்டப்பூர்வமான விதிமுறையாகும். இதன் அடிப்படையில், தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு முதன்மை அரசியல் கட்சிகள் தங்களது நிதி நிர்வாக அறிக்கைகளைத் தாக்கல் செய்து வந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் செலவுக் கணக்கு தற்போது இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செலவழித்தது இத்தனை கோடியா?.. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த பகீர் கணக்குகள்!
மொத்தச் செலவு ரூ.19.8 கோடி:
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சி சார்ந்த செயல்பாடுகளுக்காக மொத்தம் ரூ.19.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ள இந்தக் கணக்கில் கட்சித் தலைவரின் பயணங்கள், விளம்பர உத்திகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் தனித்தனியாகப் பகுத்து வழங்கப்பட்டுள்ளன.
விளம்பரம் மற்றும் பொதுக்கூட்டச் செலவுகள்:
இந்தச் செலவுக் கணக்கின் விவரங்களை நோக்கும்போது, கட்சித் தலைவரின் தேர்தல் கால விமானப் பயணங்களுக்காக மட்டும் ரூ.3 கோடியே 54 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல, தேர்தல் களத்தில் கட்சியின் கொள்கைகளையும் வாக்குறுதிகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விளம்பரப் பணிகளுக்காக ரூ.6 கோடியே 34 லட்சம் வரை செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் காலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரக் கூட்டங்களுக்காக ரூ.2 கோடியே 6 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கான நிதி உதவி:
கூடுதலாக, தவேக தாக்கல் செய்துள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் கட்சி வேட்பாளர்களுக்கென தனியாகத் தேர்தல் நிதி எதுவும் தலைமை அலுவலகத்திலிருந்து வழங்கப்படவில்லை என்றும், வேட்பாளர்களே தங்களது பிரச்சாரச் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்கள் வாயிலான இணையவழி பிரச்சாரங்களுக்கு தனியாக எவ்விதச் செலவும் காட்டப்படவில்லை. தேர்தல் காலத்தில் அனைத்து வழிகளிலும் கிடைத்த வருவாய் ரூ.7.02 கோடி என்றும், தேர்தல் அறிவிக்கப்பட்ட போது கட்சியின் தொடக்க கையிருப்பாக ரூ.3.03 கோடி இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!
பிற முதன்மைக் கட்சிகளுடனான ஒப்பீடு:
IND vs WI: ஊழியர்களிடம் கோபப்பட்ட கோலி.. பொறுமை இழந்த கே.எல்.ராகுல்! என்ன நடந்தது?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அதாவது 2026 செப்டம்பர் 27ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி கடந்த 2026 செப்டம்பர் 24ம் தேதி முதல் இங்கு பயிற்சி செய்து வருகிறது. விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா சம்பந்தப்பட்ட பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அத்தகைய ஒரு வீடியோவில், விராட் கோலி ஒரு ஊழியருடன் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  மற்றொரு வீடியோவில், விராட் கோலி சுப்மன் கில் மீது கோபப்படுவது போன்ற வீடியோவும் ட்ரெண்டாகி வருகிறது.
ALSO READ: ருதுராஜ்க்கு வாய்ப்பு.. வெயிட்டிங்கில் ஜெய்ஸ்வால்.. இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு!
என்ன நடந்தது..?
🔴VIRAT KOHLI IN A HEATED MOMENT WITH TEAM INDIA STAFF 🤯
- Virat Kohli argued with the Indian team staff over a fielding position. pic.twitter.com/sky9xuvojc
— Sam (@cricsam02) September 25, 2026
வைரலாகி வரும் வீடியோவில், விராட் கோலி, ரோஹித் சர்மா, துருவ் ஜுரல் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோருடன் ஃபீல்டிங் பயிற்சியின் போது நிற்பது காணப்படுகிறது. அப்போது, ​​அவர் இந்திய அணியின் உதவி பயிற்சியாளர்களிடம் சென்று ஏதோ சொல்கிறார். ஒரு ஊழியர் அவரிடம் ஒரு பலகையைக் கொண்டு வருகிறார். கோலி அதைச் சுட்டிக்காட்டி அவர்களுடன் வாக்குவாதம் செய்கிறார். ஃபீல்டிங்கின் போது பலகையில் ஸ்கோரை எழுதுமாறு ஒரு பணி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதைப்பற்றி கோலி பேசிக்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. சுப்மன் கில்லும் அங்கு இருந்ததால், கோலி கில்லின் மீது கடும் கோபத்தில் இருந்ததாகத் தோன்றியது. விராட் கோலி ஃபீல்டிங் செய்தாலும் சரி, பேட்டிங் செய்தாலும் சரி, அதில் முழுமையாக ஈடுபட்டுவிடுகிறார். இருப்பினும், இந்த விவாதம் தீவிரமானதாக இல்லை. கோலி கேலி செய்துகொண்டிருந்தார். ஆனால் அவர் ஆக்ரோஷமாகத் தெரிந்ததால், ஒரு சண்டை நடப்பது போல் தோன்றியது. விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் நீண்ட காலத்திற்குப் பிறகு விளையாடப் போவதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடையப் போகிறார்கள்.
சுப்மன் கில் காயம்:
Heated Moment between Shubman Gill & Virat Kohli during practice session today! 🤣 pic.twitter.com/epvWiCYZZY
— Rohit Sharma Fan (@hitmanfanfollow) September 25, 2026
நேற்று அதாவது 2026 செப்டம்பர் 25ம் தேதி பயிற்சியின் போது கேப்டன் சுப்மன் கில் மீது சிராஜின் பந்து தாக்கியது. பந்து அவரது முழங்கையில் பட்டதால் கில் பயிற்சியை நிறுத்தினார். தற்போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 27ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
ALSO READ: எந்தெந்த நாட்களில் ரோஹித், கோலி களம்..? இந்திய அணியின் ஒருநாள் அட்டவணை!
இந்திய ஒருநாள் அணி
தயாரிப்பாளர் தொடுத்த வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்…
தமிழ் சினிமாவில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியானது என்ன பெத்த ராசா. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார் ராஜ்கிரண். மேலும் இந்தப் படத்தில் ராமராஜன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் ஒரு சிறிய வேடத்தில் ராஜ்கிரண் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியானது என் ராசாவின் மனசிலே. இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் கஸ்தூரி ராஜா. மேலும் நடிகர் ராஜ்கிரண் இந்தப் படத்தில் தான் நாயகனாக அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாயகனாக அறிமுகமான முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கினார் ராஜ்கிரண்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வந்த ராஜ்கிரண் ஒரு கட்டத்திற்கு பிறகு கதாப்பாத்திர நடிகராக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் ராஜ்கிரண் இறுதியாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து இருந்தார். இவர் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read... Jason Sanjay: குடும்பத்தின் நற்பெயர்.. அதிலிருந்து விலகி இருக்க முயற்சிக்கிறேன்.. விமர்சனங்கள் குறித்து ஜேசன் சஞ்சய்!
தயாரிப்பாளர் தொடுத்த வழக்கில் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்:
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான பிரலமான நடிகராக உள்ள நடிகர் ராஜ்கிரண் மீது தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் வழக்கு பதிவு செய்து இருந்தார். அதில் தன்னிடம் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய 40 லட்சம் ரூபாய் முன் தொகையை ராஜ்கிரண் திருப்பி கொடுக்கவில்லை என்றும் அதனை கேட்டு வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி இருந்த ராஜ்கிரண் வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அந்த வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன் ஜாமினை வழங்கி உள்ளது நீதிமன்றம். இந்த  நிலையில் இந்த செய்தி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.