சமீபத்திய வணிக செய்திகள் Business, Finance and Share Market News in Tamil, வணிக தமிழ் செய்திகள்
தங்கம் குறித்த ஷாக் கணிப்பை வெளியிட்ட Bank Of India.. என்ன தெரியுமா?
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. யாரெல்லாம் தகுதி உடையவர்கள்.. தெரிந்துக்கொள்ளா வேண்டிய முக்கிய விஷயங்கள்!
தேர்தல் பிரசாரத்தில் அறிவித்ததை போலவே, ஆட்சி அமைத்த பிறகு தமிழக வெற்றிக் கழக (TVK - Tamilaga Vettri Kazhagam) அரசு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை (Thai Maman Thanga Modhiram Scheme) தொடங்கியுள்ளது. ஜூன் 22, 2026 முதலே இந்த திட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெற என்ன என்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டன் ஜூன் மாதம் முதலே செயல்பாட்டில் உள்ள நிலையில், செப்டம்பர் 28, 2026 அன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் முதற்கட்டமாக சுமார் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில்,  அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பொது வருங்கால வைப்பு நிதி.. மாதம் ரூ.10,000 முதலீடு செய்து ரூ.31 லட்சம் பெறலாம்.. எப்படி?
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்படும். இந்த மோதிரத்தில் தமிழ்நாடு அரசின் சின்னம், பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை மற்றும் தனிப்பட்ட வரிசை எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 4.2 லட்சம் முதல் 4.4 லட்சம் குழந்தைகள் வரை பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டருக்கு கேஒய்சி மேற்கொள்ளவில்லையா?.. இனி மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!
திட்டத்தில் பயன்பெற என்ன என்ன தகுதிகள்?
தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வெளி மாநிலத்தை சேர்தவர்கள் அல்லது தற்காலிகமாக தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
குழந்தை அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் பிறந்திருக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படாது.
இந்த திட்டத்தில் பயன்பெற தாய் அமைப்பில் பதிவு செய்து, அடையாள் எண் பெற்றிருக்க வேண்டும்.
இனி குறைந்தபட்ச பிஎஃப் பங்களிப்பு ரூ.3,000.. EDLI காப்பீடு வரம்பு உயருமா?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO - Employee Provident Fund Organization) சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதன் மூலம் பிஎஃப் (PF - Provident Fund) கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த மாதம் முதல் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. குறிப்பாக பிஎஃப் சம்வள வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.25,000 அடிப்படை சம்பளம் பெறும் பலருக்கும் தங்களது பிஎஃப் பங்களிப்பு விகிதம் இந்த மாதம் முதல் அதிகரிக்க உள்ளது.
இந்த நிலையில் தான், பிஎஃப் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதை போலவே, இலவச காப்பீட்டு தொகையும் உயர்த்தப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டருக்கு கேஒய்சி மேற்கொள்ளவில்லையா?.. இனி மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!
இனி குறைந்தபட்ச பிஎஃப் பங்களிப்பு ரூ.3,000
கடந்த மாதம் வரை பிஎஃப் உச்ச வரம்பு ரூ.15,000 ஆக இருந்தது. அதில் 12 சதவீதம் ஊழியர்களின் சார்பிலும், 12 சதவீதம் நிறுவனத்தின் சார்பிலும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த வரம்பை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது, பிஎஃப் உச்ச வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இனி ரூ.25,000-ல் 12 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்படும். அப்படியென்றால் மாதம் மாதம் ஊழியர்களின் பிஎஃப் கணக்குக்கு அவர்களது சம்பளத்தில் இருந்து ரூ.3,000 வரவு வைக்கப்படும்.
இதையும் படிங்க : ரேஷன் கார்டு KYC மேற்கொள்ளவில்லை என்றால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதா?.. தமிழ்நாடு அரசு எடுத்த முக்கிய முடிவு!
காப்பீட்டு தொகையும் அதிகரிக்குமா?
தீபாவளியின்போது தங்கம் விலை குறையுமா, உயருமா?.. கணிப்புகள் கூறுவது என்ன?
தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது விழாக்கலாம் மற்றும் திருமண சீசனும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான், இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை வர உள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களின்போது பொதுமக்கள் மத்தியில் நகை வாங்கும் வழக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு (2026) தீபாவளி பண்டிகையின்போது தங்கம் விலை குறையுமா அல்லது உயர்வை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் சரிவில் தங்கம் விலை
2026 தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை அதன் பிறகு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான், தற்போது தங்கம் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது ஆண்டின் தொடக்கத்தில் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான், தீபாவளி பண்டிகையின்போது தங்கம் விலை மேலும் குறையுமா அல்லது உயர்வை சந்திக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : ரேஷன் கார்டு KYC மேற்கொள்ளவில்லை என்றால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதா?.. தமிழ்நாடு அரசு எடுத்த முக்கிய முடிவு!
தீபாவளிக்கு தங்கம் விலை உயருமா, குறையுமா?
செப்டம்பர் மாதம் முதலே தங்கம் விலை சற்று சரிவில் தான் உள்ளது. அக்டோபரிலும் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது. இதே நிலை நீடித்து அக்டோபர் மாதம் முழுவதும் தங்கம் தொடர் சரிவை சந்தித்து வரும் பட்சத்தில் ஒரு சவரன் ரூ.1.05 லட்சத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதுவே செப்டம்பரில் தங்கம் விலை சரிவை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் ரூ.800 சரிந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?
டிசம்பர் மாதத்திற்குள் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்?.. ஐசிஐசிஐ முக்கிய கணிப்பு!
இந்த ஆண்டு தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. 2026 ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த தங்கம் விலை அதன் பிறகு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தது. தற்போது தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தங்கம் விலை என்னதான் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும், ஆண்டின் இறுதியில் உயர்வை சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான், 2026 டிசம்பர் மாதத்துக்குள் தங்கம் விலை என்னவாகும் என்பது குறித்த கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் அக்டோபர் மாதம் முதல் நல்ல உயர்வை சந்தித்தது. இந்த நிலையில் தான், இந்த ஆண்டும் 2025 ஆம் ஆண்டை போலவே தங்கம் விலை அக்டோபர் மாதத்தில் இருந்து உயர்வை சந்திக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் ஐசிஐசிஐ வங்கி அது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, டிசம்பர் மாதத்திற்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,200 டாலர்கள் முதல் 4,600 டாலர்கள் வரை வர்த்தகமாகும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்து ரூ.4,600 டாலர்கள் முதல் ரூ.5,000 டாலர்கள் வரை செல்லக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கம் விலையில் உயர்வு ஏற்படும்போது, இந்தியாவிலும் விலை உயரும். காரணம், இந்தியா தனது தங்க தேவையை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. எனவே, ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள இந்த கணிப்பின்படி, 2026 டிசம்பர் மாதத்துக்குள் தங்கம் விலை இந்தியாவிலும் உயர்வை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று டெலிவரி ஊழியர்.. இன்று நிறுவனங்களின் தலைவர்.. பெங்களூரு இளைஞரின் வெற்றிக் கதை!
தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து துறைகளும் போட்டி மயமாக மாறியுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளில் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக ஏராளமான இளைஞர்கள்  படித்த படிப்புக்கு முறையான வேலை கிடைக்காமல் ஏதேனும் ஒரு வேலையை செய்து தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர். அவ்வாறு ஏராளமான இளைஞர்களுக்கு கை கொடுத்த வேலை தான் டெலிவரி ஊழியராக பணியாற்றுவது. ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஏராளமான இளைஞர்கள் டெலிவரி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், டெலிவரி ஊழியராக பணியாற்றிய இளைஞர் ஒருவர் தற்போது இரண்டு நிறுவனங்களுக்கு உரிமையாளராக மாறியுள்ளார். அவர் யார், என்ன செய்துள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டெலிவரி ஊழியர் முதல் சுயதொழில் வரை
பெங்களூரை சேர்ந்தவர் கௌஷிக் கார்வி, தற்போது இரண்டு தொழில்களை நடத்தி வரும் வளர்ந்துவரும் தொழிலதிபராக உள்ளார். ஆனால், அவர் தனது கடந்த கால கடினமான பக்கங்கள் குறித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். கௌஷிக், பெங்களூரில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் கணினி அறிவியல் படித்துள்ளார். இவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணியில் சேர்ந்துள்ளார். அதற்கும், தற்போதுள்ள தனது வாழ்க்கைக்குமான இடைவெளி குறித்தும், மாற்றங்கள் குறித்து அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : ஒரே நாளில் இரண்டு முறை சரிந்த தங்கம் விலை.. ஒரு கிராம் தங்கம் இவ்வளவு தானா?
நண்பர்களை பார்த்தால் ஓடி ஒளிந்துக்கொள்வேன்
நீண்ட நேரம் வேலைப்பார்ப்பது கடினமாக இருந்தாலும், எனது நண்பர்களை பார்த்தால் ஓடி ஒளிந்துக்கொள்வேன். எனது நண்பர்கள் என்னை வெறும் டெலிவரி பாயாக மட்டுமே பார்த்துவிடுவார்களோ என்ற கூச்சத்தில் அவ்வாறு செய்வேன் என்று கூறியுள்ளார். இவ்வாறு நண்பர்களை பார்த்தாலே ஓடி ஒளிந்துக்கொள்ளும் நிலையில் இருந்த அந்த இளைஞர் தற்போது பெங்களூரின் பிரபலமான சுயதொழில் முனைவராக உருவெடுத்துள்ளார். இவர் "Mangalore In Bangalore" என்ற பிரபல உணவகத்தை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க : கர்ப்பிணிகளுக்கு ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்?
பொது வருங்கால வைப்பு நிதி.. மாதம் ரூ.10,000 முதலீடு செய்து ரூ.31 லட்சம் பெறலாம்.. எப்படி?
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்தால் மட்டும் தான் அதனை பல மடங்காக உயர்த்த முடியும். மனிதர்களுக்கு எப்போதுமே பண தேவை இருந்துக்கொண்டே இருக்கும் என்பதால் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உதவியாக இருக்கும். உதாரணமாக பிள்ளைகளின் கல்வி செலவு, வீடு கட்ட தேவையான  பணம், நகை வாங்க என தேவைகளுக்கு ஏற்ப முதலீடு செயவ்து சிறந்ததாக இருக்கும்.
இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (PPF - Public Provident Fund Scheme) மாதம் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.36 லட்சம் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
அஞ்சலகங்கள் மூலம் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். 7.1 சதவீதம் வட்டி கொண்ட இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாக உள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல லாபத்தை பெற முடியும்.
இதையும் படிங்க : “கார்டு இல்லாமலேயே ATM-ல் பணம் எடுக்கலாம்!”.. வங்கி பரிவர்த்தனையில் அடுத்தகட்ட பாய்ச்சல்!
ரூ.10,000 முதலீடு செய்து ரூ.36 லட்சம் பெறலாம் - எப்படி?
நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கி மாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் ஒரு ஆண்டுக்கு ரூ.1,20,000 முதலீடு செய்திருப்பீர்கள். திட்டத்தின் முதிர்வு காலமான 15 ஆண்டுகளும் இதனை நீங்கள் தொடர்ந்து செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மொத்தமாக ரூ.18,00,000 முதலீடு சேர்ந்திருக்கும்.
இதையும் படிங்க : Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?
கேஸ் சிலிண்டருக்கு கேஒய்சி மேற்கொள்ளவில்லையா?.. இனி மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!
எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) பயனர்கள், ஆதார் (Aadhaar) கேஒய்சி (KYC - Know Your Customer) சரிப்பார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் சில பயனர்கள் தங்கள கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான கேஒய்சியை மேற்கொள்ளாமல் உள்ளனர். இந்த நிலையில் தான், அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு மானியம் கிடைக்காது என அறிவித்துள்ளது. அரசின் இந்த முக்கிய நடவடிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு கேஒய்சி கட்டாயம்
எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள சில தகுதியுள்ள பயனர்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தான், மத்திய அரசு முக்கிய டிவிஸ்ட் வைத்துள்ளது. அதாவது, கேஒய்சி முடிக்காதவர்கள் இனி மானிய விலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது என கூறப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்க செப்டம்பர் 30, 2026 வரை கடைசி தேதி வழங்கப்பட்ட நிலையில், அக்டோபர் 01, 2026 முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க : “கார்டு இல்லாமலேயே ATM-ல் பணம் எடுக்கலாம்!”.. வங்கி பரிவர்த்தனையில் அடுத்தகட்ட பாய்ச்சல்!!
பலமுறை நீட்டிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் கேஒய்சி முறை
2023 ஆம் ஆண்டு முதலே அரசு இந்த கேஸ் சிலிண்டர் கேஒய்சி முறையை கையில் எடுத்துள்ளது. அது முதலே கேஒய்சி முடிக்க வேண்டும் என பொதுமக்களை வலியுறுத்தி வரும் நிலையில், சமீப காலமாக அதனை தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது, இந்த கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்க ஜூன் 30, 2026, ஜூலை 31, 2026 என தேதி மாற்றம் செய்யப்பட்டது. அப்போதும் ஏராளமான பயனர்கள் கேஒய்சி முடிக்கவில்லை என்பதால் ஆகஸ்ட் 07, 2026, ஆகஸ்ட் 15, 2026, ஆகஸ்ட் 31, 2026, செப்டம்பர் 07, 2026, செப்டம்பர் 14, 2026 மற்றும் செப்டம்பர் 30, 2026 வரை கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : ஹைப்ரிட் கார்கள் அதிக மைலேஜ் தருவது எப்படி? எஞ்சின் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
ரேஷன் கார்டு KYC மேற்கொள்ளவில்லை என்றால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதா?.. தமிழ்நாடு அரசு எடுத்த முக்கிய முடிவு!
தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் ரேஷன் அட்டை (Ration Card) திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றன. ரேஷன் கார்டு திட்டங்கள் உரிய மக்களை சென்று சேரும் வகையில், ரேஷன் கார்டில் உள்ளவர்கள் அனைவரும் தங்களது ஆதார் (Aadhaar) அடிப்படையிலான பயோமெட்ரிக் விவரங்களை (Biometric Details) ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. அவ்வாறு பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யாதவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வது கட்டாயம்
ரேஷன் கார்டு மூலம் ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் ரேஷன் கார்டு மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், உரிய பயனர்களுக்கு மட்டும் சேவைகள் சென்று சேருவதை உறுதி செய்யவும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து பயனர்களும் தங்களது ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க : ஹைப்ரிட் கார்கள் அதிக மைலேஜ் தருவது எப்படி? எஞ்சின் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
அரசின் அறிவுரையின் படி ஏராளமான பயனர்கள் தங்களது ரேஷன் கார்டில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துள்ள நிலையில், இன்னும் சில அப்டேட் செய்யாமல் உள்ளனர். அவ்வாறு பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யாத ரேஷன் அட்டைகளுக்கு உணவு பொருட்களை வழங்க வேண்டாம் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு
மத்திய அரசின் இந்த உத்தரவின் மூலம், தங்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்காதோ என பொதுமக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் தான், எந்த ஒரு ரேஷன் அட்டைதாரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ, தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?
Gold Price : ஒரே நாளில் ரூ.800 சரிந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?
அக்டோபர் 03, சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர் 03, 2026) தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில்,  இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை
புவிசார் பதற்றம், தங்கத்தின் தேவை மற்றும் இறுப்பு ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலையில் நாள்தோறும் மாற்றம் வரும். அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் இருக்க முடிவு செய்துள்ளது ஆகியவை முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் இருந்து திரும்பி வேறு முதலீடுகளில் கவனம் செலுத்த வைக்க தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க : Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?
இந்த நிலையில் தான், தங்கம் தற்போது தொடர் விலை சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது. அதாவது, கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.5,000 வரை சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை இத்தகைய சரிவை சந்தித்து வரும் நிலையில், தங்கத்தில் தற்போது முதலீடு செய்யலாமா, வேண்டாமா என முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 சரிவை சந்தித்து ஒரு கிராம் ரூ.13,675-க்கும், சவரனுக்கு ரூ.800 சரிந்து ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கமும் விலை சரிந்து ஒரு கிராம் ரூ.14,918-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,344-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : வணிக கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
2026 தீபாவளிக்குள் எகிறப்போகும் தங்கம் மற்றும் வெள்ளி விலை.. நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கை!!
இந்தியாவில் தீபாவளி, தனத்திரயோதசி மற்றும் அடுத்தடுத்து வரும் திருமணப் பருவங்கள் என்பவை தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை வாங்குவதற்கான மிக முக்கியமான கால கட்டங்களாகும். பரவலான சர்வதேச பொருளாதார மாற்றங்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பங்குச் சந்தைகளின் நிலையற்ற தன்மைக்கு மத்தியில், முதலீட்டாளர்களும் பொதுமக்களும் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைப் போக்கை மிக தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். நடப்பு 2026 ஆம் ஆண்டின் தீபாவளி மற்றும் ஆண்டின் இறுதிக்குள் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் எந்த அளவுக்கு மாற்றத்தைச் சந்திக்கும் என்பது குறித்த முக்கியமான கணிப்புகளைச் சந்தை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: “கார்டு இல்லாமலேயே ATM-ல் பணம் எடுக்கலாம்!”.. வங்கி பரிவர்த்தனையில் அடுத்தகட்ட பாய்ச்சல்!!
தற்போதைய சந்தை நிலவரமும் சர்வதேச அழுத்தங்களும்:
சமீபத்திய வர்த்தக நிலவரங்களின்படி, எம்.சி.எக்ஸ் (MCX) எதிர்கால வர்த்தகத்தில் 24 காரட் தங்கம் 10 கிராமிற்கு ரூ.1,50,960 ஆகவும், சில்லறை சந்தையில் ரூ.1,51,760 ஆகவும் வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,318.90 டாலர் என்ற அளவில் உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் கருவூலப் பத்திரங்களின் வட்டி விகித அதிகரிப்பு காரணமாகச் சர்வதேசச் சந்தையில் தங்கம் சற்று ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், உள்நாட்டுச் சந்தையில் அதன் தேவை குறையவில்லை. அதேபோல, வெள்ளியின் விலையும் கிலோவிற்கு ரூ.2,33,650 என்ற வரம்பில் வர்த்தகமாகி வருகிறது.
2026 தீபாவளி, ஆண்டு இறுதி தங்கம் விலை கணிப்பு:
கேடியா அட்வைசரி நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான அஜய் சுரேஷ் கேடியா அளித்துள்ள தரவுகளின்படி, கடந்த 2025 அக்டோபர் 20 அன்று 10 கிராம் தங்கம் ரூ.1,30,588 ஆக இருந்த நிலையில், 2026 செப்டம்பர் இறுதியில் ரூ.1,52,000 ஆக உயர்ந்து சுமார் 16.40% லாபத்தை வழங்கியுள்ளது. உலகளாவிய மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கிச் சேமிப்பது, இ.டி.எஃப் (ETF) முதலீடுகளின் வரத்து மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, 2026 தீபாவளி அல்லது ஆண்டின் இறுதிக்குள் தங்கம் 10 கிராமிற்கு ரூ.1,80,000 என்ற புதிய இலக்கை எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நிலையிலிருந்து சுமார் 18% கூடுதல் உயர்வாகும்.
வெள்ளியின் அதிரடி வளர்ச்சி:
தங்கத்தை விட வெள்ளி முதலீடு அதிக லாப ஆற்றலையும், அதே வேளையில் சற்று அதிகமான சந்தை மாற்றங்களையும் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் வெள்ளி கிலோவிற்கு ரூ.1,53,131-ல் இருந்து ரூ.2,34,000 ஆக உயர்ந்து 52.81% என்ற பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் சப்ளை பற்றாக்குறை, மின்சார வாகனங்கள் (EV), மின்னணு சாதனங்கள், சூரிய ஒளி மின்சாரம் போன்ற தூய்மை ஆற்றல் துறைகளில் வெள்ளிக்கான தேவை தொடர்ந்து அதிகரிப்பதே இதற்குக் காரணமாகும். இதன் காரணமாக, 2026 தீபாவளிக்குள் வெள்ளி கிலோவிற்கு ரூ.3,00,000 வரை உயர்ந்து சுமார் 28% வரை லாபம் அளிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: 10 நாட்களில் ரூ.5,000 சரிந்த தங்கம் விலை.. திடீர் டிவிஸ்டுக்கு காரணம் என்ன?
முதலீட்டாளர்களுக்கான நிபுணர்களின் ஆலோசனை:
அதிரடியாக எகிறிய தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் ரூ. 760 அதிகரித்து விற்பனை..
அக்டோபர் 2, 2026: அக்டோபர் 2ஆம் தேதியான இன்று தமிழகத்தில் தங்கம் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, அமெரிக்க பத்திரங்களின் வருவாய் விகிதம், வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்புகள், புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உலக தங்க கவுன்சில் ஆய்வின்படி, புவிசார் அரசியல் அபாயம் அதிகரிப்பதும், வட்டி விகித எதிர்பார்ப்புகளில் மாற்றம் ஏற்படுவதும் தங்கத்தின் விலையை பாதிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:
அக்டோபர் 1ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,680-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ரூ.13,775-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.1,10,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.15,027 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,20,216 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.245 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் சர்வதேச சந்தை நிலவரம், தொழில்துறை தேவை மற்றும் முதலீட்டு தேவை ஆகியவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தங்கம் விலை ஏன் மாறுகிறது?
அமெரிக்க டாலர் வலுப்பெறும்போது பொதுவாக டாலரில் நிர்ணயிக்கப்படும் தங்கத்தின் விலையில் அழுத்தம் ஏற்படலாம். அதேபோல், அமெரிக்க பத்திரங்களின் வருவாய் அதிகரித்தால் வட்டி வருவாய் இல்லாத தங்கத்தின் மீதான முதலீட்டு ஈர்ப்பு குறையக்கூடும். மறுபுறம், பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் uncertainty அதிகரிக்கும் போது பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நாடும் போக்கு அதிகரிக்கலாம்.
மேலும், மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் மற்றும் இந்தியாவில் பண்டிகை, திருமண கால தேவையும் விலை நகர்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் படிக்க: “கார்டு இல்லாமலேயே ATM-ல் பணம் எடுக்கலாம்!”.. வங்கி பரிவர்த்தனையில் அடுத்தகட்ட பாய்ச்சல்!!
“கார்டு இல்லாமலேயே ATM-ல் பணம் எடுக்கலாம்!”.. வங்கி பரிவர்த்தனையில் அடுத்தகட்ட பாய்ச்சல்!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது டிஜிட்டல் வங்கியியல் சேவையான 'யோனோ' (YONO) செயலியைப் புதிய அம்சங்களுடன் முழுமையாகப் புனரமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் செயலியில், டெபிட் கார்டு (Debit Card) இல்லாமலேயே ஏடிஎம் மையங்களில் மிகவும் பாதுகாப்பான முறையில் பணம் எடுக்கும் வசதி பிரதானமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, யுபிஐ (UPI) அடிப்படையிலான பரிவர்த்தனைகள், 'ஸ்கேன் அண்ட் பே' உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சேவைகளும் இதில் எளிமைப்படுத்தப்பட்டு ஒரே தளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: வங்கி கணக்கை போல PF கணக்குக்கும் Minimum Balance கட்டாயமா?.. இத கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு வசதிகள்:
டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தற்போதைய சூழலில், பணப்பரிவர்த்தனைகளுக்காகப் பிளாஸ்டிக் கார்டுகளை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை மாற்றுவதற்கு வங்கி நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருகிறது. ஏடிஎம் கார்டுகளைத் தொலைத்துவிடுவது, கார்டு தகவல்கள் திருடப்படும் 'ஸ்கிம்மிங்' மோசடிகள் மற்றும் ஏடிஎம் எந்திரங்களில் கார்டுகள் மாட்டிக்கொள்வது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு இந்த 'கார்ட்லெஸ்'பரிவர்த்தனை முறை மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது. இந்த யோனோ மேம்பாட்டின் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி, பிற வங்கிப் பயனர்களும் பயன்பெறும் வகையில் யுபிஐ சேவைகளின் அணுகல் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
செயலியில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்:
எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க 'யோனோ கேஷ்' (YONO Cash) என்ற அம்சம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதியைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், முதலில் யோனோ செயலியில் நுழைந்து 'YONO Cash' பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் 'Request YONO Cash' அல்லது 'Withdraw Cash' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்குத் தேவையான தொகையை உள்ளிட வேண்டும். இதன்பின், வாடிக்கையாளர் 6 இலக்க தற்காலிக 'யோனோ கேஷ் பின்' (YONO Cash PIN) ஒன்றை செயலியில் உருவாக்க வேண்டும். இந்தச் செயல்முறை முடிந்ததும், வங்கியிலிருந்து வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு 6 இலக்க குறிப்பு எண் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் எளிய முறை:
அடுத்த கட்டமாக, வாடிக்கையாளர் ஏடிஎம் மையத்திற்குச் சென்று அங்குள்ள திரையில் 'YONO Cash' என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மொபைலுக்கு வந்த 6 இலக்க குறிப்பு எண், தாங்கள் எடுத்த தொகையின் அளவு மற்றும் செயலியில் தாங்களே உருவாக்கிய 6 இலக்க யோனோ கேஷ் பின் ஆகிய விவரங்களை வரிசையாகப் பதிவிட வேண்டும். தகவல்கள் சரியாகச் சரிபார்க்கப்பட்டதும் ஏடிஎம் எந்திரத்திலிருந்து பணம் வெளிவரும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்தனியாக பின் எண் உருவாக்கப்படுவதால், பிறர் நமது ரகசிய எண்களைக் களவாடும் அபாயம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மேலும், ஒருமுறை உருவாக்கப்படும் இந்த சேவை குறிப்பிட்ட நேர வரம்பிற்குள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் இதன் பாதுகாப்புத் தன்மை பல மடங்கு அதிகரிக்கிறது.
இதையும் படிக்க: 10 நாட்களில் ரூ.5,000 சரிந்த தங்கம் விலை.. திடீர் டிவிஸ்டுக்கு காரணம் என்ன?
மேம்படுத்தப்பட்ட யுபிஐ சேவைகள்:
ஹைப்ரிட் கார்கள் அதிக மைலேஜ் தருவது எப்படி? எஞ்சின் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
இந்தியாவிலும்கூட, கார் சந்தை பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்படவில்லை. டொயோட்டா, மாருதி சுசுகி மற்றும் ஹோண்டா போன்ற பிராண்டுகள் சிறந்த ஹைப்ரிட் மாடல்களை விற்பனை செய்து வருகின்றன, அவற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. ஒரு கலப்பின மின்சார வாகனம் (HEV) என்பது பெட்ரோல் எஞ்சினுடன் ஒரு மின்சார மோட்டார் மற்றும் ஒரு பேட்டரியை இணைக்கிறது. வாகனத்தின் வேகம் மற்றும் ஓட்டும் நிலைமைகளைப் பொறுத்து, சில நேரங்களில் மின்சார மோட்டாரும், சில நேரங்களில் பெட்ரோல் எஞ்சினும், தேவைப்படும்போது இரண்டும் சேர்ந்தும் வாகனத்தை இயக்குகின்றன. இதன் பொருள், எப்போது பெட்ரோலைப் பயன்படுத்த வேண்டும், எப்போது பேட்டரியைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதை வாகனம் தானாகவே தீர்மானிக்கிறது.
ஏன் அதிக மைலேஜ் கிடைக்கிறது?
நகரங்களில், வாகனங்கள் அடிக்கடி நின்று இயங்குகின்றன. இந்த நேரங்களில், மின்சார மோட்டார் பெட்ரோல் இன்ஜினின் (hybrid cars) வேலைப்பளுவைக் குறைக்க உதவுகிறது. பிரேக் பிடிக்கும்போதோ அல்லது வேகத்தைக் குறைக்கும்போதோ உருவாகும் ஆற்றலில் ஒரு பகுதி, பேட்டரியில் மீண்டும் சேமிக்கப்படுகிறது. இது மீளுருவாக்க பிரேக்கிங் என்று அழைக்கப்படுகிறது.
Also Read: ஹேட்ச்பேக் கார் வாங்க பிளானா? கண்டிப்பாக இதை கவனிங்க!
இதனால்தான் ஹைப்ரிட் கார்கள், குறிப்பாக நகரப் பகுதிகளில், அவற்றின் எரிபொருள் சிக்கனத்திற்காகப் பெயர் பெற்றவை. இருப்பினும், ஹைப்ரிட் கார்கள் தங்களின் பயண நேரத்தில் ஒரு பகுதிக்கு பேட்டரி சக்தியில் இயங்க முடியும் என்பதால், நெடுஞ்சாலையிலும் நல்ல எரிபொருள் சிக்கனத்தை வழங்க முடியும் என்று வாகனத் துறை கூறுகிறார்.
விற்பனையில் பெரிய ஏற்றம்
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் வாகன இணையதளத்தின் தரவுகளின்படி, 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 26,460 ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்கள் விற்பனையாகியுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தெரிவிக்கிறது. ஓராண்டுக்கு முன்பு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 12,111 ஆக இருந்தது. இது விற்பனையில் சுமார் 118 சதவிகித அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த விற்பனையில் டொயோட்டாவின் பங்கு சுமார் 81 சதவிகிதமாகவும், மாருதி சுசுகியின் பங்கு 18 சதவிகிதமாகவும், ஹோண்டாவின் பங்கு சுமார் 1 சதவிகிதமாகவும் இருந்தது.
2024-25 நிதியாண்டில், வாகன் இணையதளத்தில் ஏறத்தாழ 3.64 லட்சம் ஹைப்ரிட் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. 2023-24 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 91,720 ஆக இருந்தது. இது பதிவுகளில் 297% அதிகரிப்பைக் குறிக்கிறது.
Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?
சென்னை, அக்டோபர் 01 : சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று (அக்டோபர் 01, 2026) தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5  குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை
2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு படிப்படியாக சரிவை சந்தித்தது. இவ்வாறு நிலையற்ற தன்மை இல்லாமல் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை கொண்டு இருந்த நிலையில் தான், கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : ஆதார் பயோமெட்ரிக் இலவச அப்டேட்.. இன்றுதான் கடைசி.. சிறுவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!
ரூ.14,000-ல் இருந்து ரூ.13,000 ஆக குறைந்த தங்கம் விலை
கடந்த சில நாட்களாக தங்கம் தொடர் சரிவை சந்தித்து வருவதன் காரணமாக ரூ.14,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் உயர்வுக்கு மத்தியில் நேற்று (செப்டம்பர் 30, 2026) உயர்வை சந்தித்த தங்கம், தற்போது மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : அக்டோபர் 1 முதல் ரயில்களில் தீவிர டிக்கெட் சோதனை – பயணிகளுக்கு எச்சரிக்கை!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
வணிக கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
சென்னை, அக்டோபர் 01 : சென்னையில் (Chennai) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை (Commercial Gas Cylinder Price) அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வணிக சிலிண்டர்கள் விலை ரூ.66.50 உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஓட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றுக்கான சிலிண்டர் செலவுகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிரடியாக உயர்ந்த வணிக கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலைகளில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் தான், அக்டோபர் 01, 2026 ஆன இன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் இன்று ரூ.66.50 உயர்வை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : ஆதார் பயோமெட்ரிக் இலவச அப்டேட்.. இன்றுதான் கடைசி.. சிறுவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!
வணிக கேஸ் சிலிண்டர் விலை எவ்வளவு?
இதன் காரணமாக இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த விலையை விடவும், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.66.50 கூடுதலாக விற்பனை செய்யப்பட உள்ளது. அதாவது, விலை உயர்வுக்கு பிறகு வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.2,984-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. முன்னதாக ரூ.2,917.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக கேஸ் சிலிண்டர் தற்போது விலை உயர்வுக்கு பிறகு இந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : அக்டோபர் 1 முதல் ரயில்களில் தீவிர டிக்கெட் சோதனை – பயணிகளுக்கு எச்சரிக்கை!
கேஸ் சிலிண்டர் செலவு அதிகரிக்கும்
வங்கி கணக்கை போல PF கணக்குக்கும் Minimum Balance கட்டாயமா?.. இத கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் அமைப்பு தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO - Employee Provident Fund Organization). காரணம், இந்த அமைப்பு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது அவர்களது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து பிஃப் கணக்கில் வரவு வைக்கும். இந்த பணம், ஊழியர்களின் ஓய்வு காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்படும்.
இந்த பிஎஃப் (PF - Provident Fund) பணத்தை ஓய்வுக்கு பிறகு மட்டுமன்றி, பணியின்போதும் ஊழியர்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பிஎஃப் பணத்தை முழுவதுமாக எடுத்துக்கொள்ளலாமா அல்லது வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதை போல பிஎஃப் கணக்குக்கும் ஏதேனும் குறைந்தபட்ச இருப்பு தொகை உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : 10 நாட்களில் ரூ.5,000 சரிந்த தங்கம் விலை.. திடீர் டிவிஸ்டுக்கு காரணம் என்ன?
பிஎஃப் கணக்குக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை கட்டாயமா?
என்னதான் பிஎஃப் பணத்தை ஓய்வுக்கு முன்பு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டாலும், பிஎஃப் கணக்கில் இருக்கும் முழு தொகையையும் ஊழியர்களால் எடுக்க முடியாது. காரணம், ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை பிஎஃப் கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அதாவது, ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் 25 சதவீத பணத்தை கட்டாயம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க : இவ்வளவு மைலேஜா? ரெனால்ட் டிரைபரின் சக்திவாய்ந்த டர்போ வேரியன்ட்!
இனி தான் தடுமாற்றமே இருக்கு.. தங்கம் குறித்து கோல்டுமேன் சாக்ஸ் மூத்த அதிகாரி எச்சரிக்கை!
2026 ஆம் ஆண்டு தங்கம் நிலையற்ற தன்மையையே கொண்டுள்ளது. காரணம், ஆண்டின் தொடக்கத்தில் உயர்வில் இருந்த தங்கம் அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்து தற்போது ஒரு கிராம் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, தொடக்கத்தில் இருந்ததை விடவும் கிராமுக்கு ரூ.2,000 சரிவை சந்தித்துள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில் உயர்வில் இருந்த தங்கம், அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்து தற்போது ரூ.13,000-க்கு விற்பனையாகும் நிலையில், இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறையுமா அல்லது தலைகீழாக மாறி கடும் உயர்வை சந்திக்குமா என்ற குழப்பம் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்த நிலையில் தான், இந்த தடுமாற்றம் இனி வரும் காலக்கட்டத்தில் அதிகரிக்கும் என்றும், தங்கத்தை தாண்டி வெள்ளி, காப்பர், பிளாட்டினம், பல்லாடியம் போன்ற முக்கிய விலோகத்தின் மீது இந்த விலை தடுமாற்றம் மிக கடுமையாக எதிரொலிக்கும் என்று கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் குளோபல் கமாடிட்டீஸ் ரிசர்ச் பிரிவின் துணைத் தலைவர் Daan Struyven கூறியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த வாரம் Daan Struyven அனுப்பிய கடிதத்தில் ஏற்கனவே இருக்கும் காரணிகளை தாண்டி உலோக சந்தையில் ஏற்படும் வர்த்தக போர், வரி விதிப்பு மூலம் கூடுதல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். கச்சா எண்ணெய் ஒரு வழித்தடத்தில் முடங்கினால் மற்றொரு வழித்தடத்தில் இருந்து சப்ளை செய்ய முடியும்.
ஆனால், தங்கத்தின் உற்பத்தி அத்தகையது அல்ல. வரி விதிப்பால் ஒரு இடத்தில் தங்கம் முடங்கினால் மற்றொரு இடத்தில் இருந்து தங்கத்தை வாங்க முடியாது. 2026 ஜனவரி மாதம் இருந்ததை விட தங்கம் தற்போது மிக கடுமையான தடுமாற்றத்தை எதிர்க்கொண்டுள்ள நிலையில், ஏஐ துறையின் வளர்ச்சியால் காப்பரும் அத்தகைய தாக்கத்தை எதிர்க்கொள்ளும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ஹேட்ச்பேக் கார் வாங்க பிளானா? கண்டிப்பாக இதை கவனிங்க!
இந்தியாவில் பல ஹேட்ச்பேக் கார்கள் விற்கப்படுகின்றன, ஆனால் பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பொறுத்தவரை அனைத்தும் ஒரே மாதிரியாகச் சிறப்பாகச் செயல்படுவதில்லை. சில மாடல்கள் மோதல் சோதனைகளில் 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளன, அதே சமயம் சில பிரபலமான கார்கள் குறைந்த மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன. டாடா ஆல்ட்ரோஸ் மற்றும் டாடா பஞ்ச் ஆகியவை இவற்றில் அடங்கும்.
Tata Altroz ​​5 நட்சத்திரம்
டாடா ஆல்ட்ரோஸ் நாட்டின் மிகவும் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக்குகளில் ஒன்றாகும். இது பாதுகாப்பிலும் ஒரு வலுவான நற்பெயரை நிலைநாட்டியுள்ளது. குளோபல் NCAP மற்றும் பாரத் NCAP ஆகிய இரண்டு மோதல் சோதனைகளிலும் ஆல்ட்ரோஸ் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது, ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக்கில் உயர்ந்த பாதுகாப்பை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இதை ஒரு விருப்பமான தேர்வாக ஆக்குகிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மற்றும் CNG பவர்டிரெய்ன் விருப்பங்களில் கிடைக்கிறது, இது வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான மாடலைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.
ஆல்ட்ரோஸ் உறுதியான கட்டமைப்புத் தரம் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தினசரி நகரப் பயணங்கள் முதல் நெடுந்தூரப் பயணங்கள் வரை அனைத்திற்கும் இதைப் பயன்படுத்தலாம். எனவே, பிரீமியம் தோற்றம், பல்வேறு இன்ஜின் தேர்வுகள் மற்றும் வலுவான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஒரு ஹேட்ச்பேக்கை யாராவது தேடுகிறார்களானால், ஆல்ட்ரோஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
டாடா பஞ்ச் ஒரு 5-நட்சத்திர பாதுகாப்பு
டாடா பஞ்ச்சின் வடிவமைப்பு, வழக்கமான ஹேட்ச்பேக் கார்களிலிருந்து சற்றே மாறுபட்டுள்ளது. அதன் மைக்ரோ-எஸ்யூவி போன்ற தோற்றமே, அதன் பிரிவில் அதைத் தனித்து நிற்கச் செய்கிறது. சிறியதாக இருந்தாலும், பஞ்ச் அதன் உறுதியான வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்காக அறியப்படுகிறது.
டாடா பஞ்ச், குளோபல் NCAP மற்றும் பாரத் NCAP ஆகிய இரண்டு மோதல் சோதனைகளிலும் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது . காரின் சிறிய அளவு, நகர்ப்புறப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. நெரிசலான சாலைகளிலும், குறுகிய இடங்களிலும் இதை இயக்குவது ஒப்பீட்டளவில் எளிதானது.
உயர்ந்த இருக்கை நிலையும் ஒரு முக்கிய அம்சமாகும். இது ஓட்டுநருக்கு முன்னால் உள்ள சாலையையும் சுற்றியுள்ள போக்குவரத்தையும் தெளிவாகப் பார்க்க உதவுகிறது. SUV போன்ற தோற்றம் மற்றும் 5-நட்சத்திர பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஒரு சிறிய காரை விரும்பும் வாடிக்கையாளர்கள், பஞ்ச் காரையும் கருத்தில் கொள்ளலாம்.
ஸ்விஃப்ட், பலேனோ, டியாகோ மற்றும் ஐ20
டாடா ஆல்ட்ரோஸ் மற்றும் பஞ்ச் தவிர, மாருதி சுசுகி ஸ்விஃப்ட், பலேனோ, டாடா டியாகோ மற்றும் ஹூண்டாய் ஐ20 போன்ற ஹேட்ச்பேக் கார்களும் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளன. இருப்பினும், இந்தக் கார்களின் பாதுகாப்பு மதிப்பீடுகளை ஆல்ட்ரோஸ் மற்றும் பஞ்ச் கார்களின் 5-நட்சத்திர மதிப்பீட்டுடன் ஒப்பிட முடியாது.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் அதன் எரிபொருள் சிக்கனம், எளிதான ஓட்டுதல் மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவற்றால் நீண்ட காலமாகப் பலராலும் விரும்பப்பட்டு வருகிறது. இது அன்றாட நகரப் பயன்பாட்டிற்கு மிகவும் நடைமுறைக்கு ஏற்ற காராகக் கருதப்படுகிறது. அதே சமயம், மாருதி சுஸுகி பலேனோ ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும், இது விசாலமான கேபின் மற்றும் பல நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. அதன் வடிவமைப்பும், அதன் பிரிவில் உள்ள மற்ற கார்களிலிருந்து இதைத் தனித்து நிற்கச் செய்கிறது.
டாடா டியாகோ பட்ஜெட் பிரிவில் ஒரு பிரபலமான ஹேட்ச்பேக் ஆகும். இது குளோபல் NCAP மோதல் சோதனையில் 4-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. மறுபுறம், ஹூண்டாய் i20 அதன் பிரீமியம் உட்புறம், நவீன வடிவமைப்பு மற்றும் அம்சங்களுக்காக அறியப்படுகிறது.
கார் வாங்கும்போது பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
ஒரு ஹேட்ச்பேக் காரை வாங்கும்போது மைலேஜ் மற்றும் விலை ஆகியவை முக்கியமான காரணிகளாகும், ஆனால் பாதுகாப்பையும் புறக்கணிக்கக் கூடாது. குறிப்பாக, அந்தக் கார் தினசரி குடும்பப் பயன்பாட்டிற்காக வாங்கப்படவிருந்தால், விபத்து சோதனை மதிப்பீடுகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் முன்கூட்டியே சரிபார்ப்பது நன்மை தரும். டாடா ஆல்ட்ரோஸ் மற்றும் டாடா பஞ்ச் ஆகியவை குளோபல் NCAP-இடமிருந்து 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன, அதேசமயம் டாடா டியாகோ 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. மற்ற மாடல்களை ஒப்பிடும்போது, ​​அவற்றின் விபத்து சோதனை மதிப்பீடுகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சோதனை நெறிமுறைகளைக் கருத்தில் கொள்வது அவசியம்.
ஆதார் பயோமெட்ரிக் இலவச அப்டேட்.. இன்றுதான் கடைசி.. சிறுவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், வயது, பாலினம் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் (Biometric Details) இடம்பெற்றிருக்கும். ஆனால், சிறிய குழந்தைகளுக்கு அதாவது 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் இல்லாமல் ஆதார் கார்டு வழங்கப்படும். இந்த நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய இன்றே (செப்டம்பர் 30, 2026) கடைசி தேதியாக உள்ளது. எனவே, இன்று பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
1 முதல் 5 வயது குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு
1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கண் கருவிழி படலம், கை ரேகை உள்ளிட்டவை முழுமையாக இருக்காது. இதன் காரணமாக 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் இல்லாத ப்ளூ ஆதார் கார்டு வழங்கப்படும். இந்த ஆதார் கார்டில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். குழந்தைகள் உயர்கல்வி செல்லும்போது இந்த பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய ஆதார் கார்டு கட்டாயமாக கோரப்படும்.
இதையும் படிங்க : அஞ்சலக RD திட்டம்.. மாத தவணைகளை தவறவிட்டால் என்ன ஆகும்?
இன்றுவரை மட்டுமே இந்த சேவை இலவசம்
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பால் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI - Unique Identification Authority Of India) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தான், அது தொடர்பாக முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதாவது, இன்று (செப்டம்பர் 30, 2026) வரை மட்டுமே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக புதிப்புத்துக்கொள்ள முடியும். நாளை (அக்டோபர் 01, 2026) முதல் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க : Gold Price : 2வது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. மீண்டும் சரிந்தது.. இன்றைய நிலவரம்!
அக்டோபர் 1 முதல் ரயில்களில் தீவிர டிக்கெட் சோதனை – பயணிகளுக்கு எச்சரிக்கை!
ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதைத் தடுப்பது , சலுகை பயணம், குறிப்பிட்ட ஒதுக்கீடு மற்றும் ரயில்வே பாஸ் உள்ளிட்டவற்றன் மூலம் பயணம் செய்பவர்களின் தகுதியையும் சரிபார்க்கும் வகையில் அக்டோபர் 1, 2026 நாளை முதல் சிறப்பு டிக்கெட் சோதனை நடவடிக்கை தொடங்கப்படவுள்ளது. மத்திய ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அக்டோபர் 1, 2026 முதல் 31, 2026 வரை ஒரு மாத காலத்துக்கு இந்த தீவிர சோதனை நடத்தப்படுகிறது. முக்கிய ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, உள்ளூர் ரயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 முதல் தீவிர டிக்கெட் சோதனை
வழக்கமான டிக்கெட் பரிசோதனையைவிட, இந்த சிறப்பு நடவடிக்கையில் சில வகை பயணிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக, சலுகைக் கட்டணத்தில் டிக்கெட் பெற்றவர்கள், குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் பெற்றவர்கள், ரயில்வே பாஸ் மூலம் பயணம் செய்பவர்கள் குழுவாக ஒரே டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள் ஆகியோரின் டிக்கெட் மற்றும் அதற்கான தகுதி ஆவணங்கள் பரிசோதிக்கப்பட உள்ளன.
இதையும் படிக்க : கர்ப்பிணிகளுக்கு ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்?
சலுகை அல்லது குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் பெற்ற பயணிகள், தங்களுக்கு அந்தச் சலுகை அல்லது ஒதுக்கீடு கிடைப்பதற்கான தகுதியை நிரூபிக்கும் அசல் அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் சாதாரண பயணிகள் பயன்படுத்தக்கூடிய ஆவணங்களில் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரி வழங்கிய புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி பாஸ்புக் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வங்கி கிரெடிட் கார்டு ஆகியவையும் குறிப்பிட்ட விதிகளின்படி ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக செல்போனில் இருக்கும் அடையாள அட்டையின் புகைப்படம் அல்லது நகல் மட்டும் வைத்திருப்பது மட்டும் போதாது. நம் கையில் அசல் ஆவணத்தை எடுத்துச் செல்வது முக்கியம். குழுவாகப் பயணம் செய்பவர்களும் இந்த விதியை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரே டிக்கெட்டில் பல பயணிகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பயணிகளில் குறைந்தது ஒருவராவது, தேவையான அசல் அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆவணம் இல்லாத நிலையில், அந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் அனைவரின் பயணமும் விதிகளின்படி செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாத பயணமாகக் கருதப்படும் சூழல் ஏற்படலாம்.
இதையும் படிக்க : வீட்டு உபயோக பொருட்களின் விலை 5-8% உயரப்போகிறது?.. தீபாவளிக்கு முன்பு நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் எவ்வளவு?
10 நாட்களில் ரூ.5,000 சரிந்த தங்கம் விலை.. திடீர் டிவிஸ்டுக்கு காரணம் என்ன?
புவிசார் பதற்றம், தேவை மற்றும் இருப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணிகளாக உள்ளன. சூழலுக்கு ஏற்ப தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றம் ஏற்படும். கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான உயர்வை சந்தித்தது. ஆனால், 2026 ஆம் ஆண்டு 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளை போல தங்கத்திற்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை. காரணம், 2026 ஆம் ஆண்டு தங்கத்தின் வேகம் சற்று குறைவாகவே உள்ளது.
ரூ.15,000-ல் இருந்து ரூ.13,000-க்கு வந்த தங்கம் விலை
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஜனவரி மாதம் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.5,000 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், 10 நாட்களில் தங்கம் விலை ரூ.5,000 வரை குறைந்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : வீட்டு உபயோக பொருட்களின் விலை 5-8% உயரப்போகிறது?.. தீபாவளிக்கு முன்பு நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!
10 நாட்களில் ரூ.5,000 வரை சரிந்த தங்கம் விலை
தேதி
ஒரு கிராம்
ஒரு சவரன்
20 செப்டம்பர் 2026
ரூ.14,285
ரூ.1,14,280
21 செப்டம்பர் 2026
ரூ.14,270
ரூ.1,14,160
22 செப்டம்பர் 2026
ரூ.14,185
ரூ.1,13,480
23 செப்டம்பர் 2026
ரூ.14,135
ரூ.1,13,080
24 செப்டம்பர் 2026
ரூ.14,000
ரூ.1,12,000
25 செப்டம்பர் 2026
ரூ.14,010
ரூ.1,12,080
26 செப்டம்பர் 2026
ரூ.14,000
ரூ.1,12,000
27 செப்டம்பர் 2026
ரூ.14,000
ரூ.1,12,000
28 செப்டம்பர் 2026
ரூ.13,665
ரூ.1,09,320
29 செப்டம்பர் 2026
ரூ.13,640
ரூ.1,09,120
இவ்வாறு கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.645 சரிவை சந்தித்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.5,160 சரிந்துள்ளது.
இதையும் படிங்க : இபிஎஃப்ஓ முகாம்.. சிக்கல்களுக்கு உடனடி தீர்வு.. மிஸ் பண்ணீடாதீங்க!
தங்கம் விலை திடீர் சரிவுக்கு காரணம் என்ன?
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தலாம் என்ற எதிர்ப்பார்ப்பின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகளை கைவிட்டு, பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வரும் சிக்கல் காரணமாக கச்சா எண்ணெயின் விலையும் அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது. இவற்றின் விளைவாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இவ்வளவு மைலேஜா? ரெனால்ட் டிரைபரின் சக்திவாய்ந்த டர்போ வேரியன்ட்!
ரெனால்ட் நிறுவனம், டிரைபர் எம்பிவி-யின் புதிய டர்போ பெட்ரோல் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த ஏழு இருக்கைகள் கொண்ட எம்பிவி-க்கு மேலும் சக்திவாய்ந்த இன்ஜின் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 1.0-லிட்டர், மூன்று சிலிண்டர் TCe டர்போ-பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 100 hp சக்தியையும் 180 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. மேலும், இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் ரெனால்ட் டஸ்டர் மற்றும் கைகர் கார்களிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெனால்ட் டிரைபர் டர்போ விலை
ரெனால்ட் டிரைபர் TCe 100-இன் விலைகள், எவல்யூஷன் வேரியன்ட்டிற்கு ₹7.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்கி, டாப்-ஆஃப்-லைன் எமோஷன் வேரியன்ட்டிற்கு ₹8.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கின்றன. ஒப்பிடுகையில், 1.0-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஸ்டாண்டர்ட் டிரைபர் வேரியன்ட்டின் விலை ₹5.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்குகிறது. இதன் மூலம், டர்போ-பெட்ரோல் மாடல் ₹2 லட்சம் அதிக விலை கொண்டது என்பது தெளிவாகிறது.
Also Read: செம ஸ்ட்ராங்கா? 20 டன் கற்களை தாங்கிய டாடா ஏரிஸ் கார்.. கவனிக்க வேண்டியது என்ன?
ரெனால்ட் டிரைபர் டர்போ இன்ஜின் விவரங்கள்
புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் 100hp சக்தியையும் 180Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது, இது ஸ்டாண்டர்ட் டிரைபரின் 72hp மற்றும் 96Nm-ஐ விட கணிசமாக அதிகமாகும். இந்த இன்ஜின், ரெனால்ட் கைகர் மற்றும் டஸ்டரில் பயன்படுத்தப்படும் டர்போ-பெட்ரோல் யூனிட்டுடன் தொடர்புடையதாக இருந்தாலும், இது 180Nm என்ற அதிக டார்க்கை உற்பத்தி செய்யும்படி ட்யூன் செய்யப்பட்டுள்ளது மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஜின் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது.
ரெனால்ட் டிரைபர் டர்போ மைலேஜ்
டர்போசார்ஜ் செய்யப்பட்ட டிரைபர், இயல்பான இன்ஜின் கொண்ட மாடலை விட வேகமானது மட்டுமல்ல, சற்றே அதிக செயல்திறன் கொண்டதுமாகும். TCe 100 மாடல் 0 முதல் 100 கி.மீ./மணி வேகத்தை 10.8 வினாடிகளில் எட்டும் என்று ரெனால்ட் நிறுவனம் கூறுகிறது. வழக்கமான 1.0-லிட்டர் பெட்ரோல்-மேனுவல் டிரைபரின் 19.76 கி.மீ./லி மைலேஜுடன் ஒப்பிடும்போது, ​​இந்த வாகனம் 21 கி.மீ./லி வரை மைலேஜ் வழங்குகிறது.
Also Read: குடும்பத்துக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போகிறீர்களா? இந்த 4 மாடல்களை பாருங்க !
வடிவமைப்பு மாற்றங்கள்
அஞ்சலக RD திட்டம்.. மாத தவணைகளை தவறவிட்டால் என்ன ஆகும்?
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்தால் தான் பொருளாதார பாதுகாப்பை பெற முடியும். இவ்வாறு பொதுமக்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய அரசு, அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் தொடர் வைப்பு நிதி திட்டம்.
இந்த திட்டத்தில் நிலையான வைப்பு நிதி திட்டத்தை போல மொத்தமாக பணத்தை செலுத்திவிட்டு அதற்கான வட்டியை மாதம் மாதம் பெற முடியாது. ஆனால், மாதம் மாதம் சிறிய தொகையை செலுத்தி நல்ல லாபத்தை பெற முடியும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் குறைந்தது ரூ.100 முதல் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முறையாக முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மாத தவணையை செலுத்த தவறிவிட்டால் என்ன ஆகும் என குழப்பம் பலருக்கும் உள்ளது.
அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு வைத்துள்ள நபர், தொடர்ந்து பல மாதங்கள் முதலீடு செய்யாமல் இருந்தால் அந்த நபரின் கணக்கு Irregular கணக்காக வைக்கப்படும். அதுமட்டுமன்றி, இவ்வாறு கணக்கில் மாதம் மாதம் பணம் வரவு வைக்கப்படுவது தவிர்க்கப்படும் பட்சத்தில் இறுதியில் கணக்கு மூடப்படும் வாய்ப்பும் உள்ளது.
இதுவே தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் ஒரு மாதம் முதலீடு செய்ய தவறினால் பெரிய அளவில் மாற்றம் எதுவும் நடக்காது. அதாவது, ஒருவர் ஒரு மாதம் முதலீட்டை தவறவிடும் பட்சத்தில் அதற்கு அவர் ரூ.1.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Gold Price : 2வது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. மீண்டும் சரிந்தது.. இன்றைய நிலவரம்!
சென்னை, செப்டம்பர் 29 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) இரண்டாவது நாளாக நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது, தங்கம் விலை இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. தங்கம் ரூ.200 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை (Silver Price) ரூ.5,000 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் - நகைப் பிரியர்கள் குஷி
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும். அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதாவது ஒரு நாள் உயர்வை சந்திக்கும் தங்கம், மறுநாள் கடும் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து குழப்பத்தை ஏற்படுத்தி வந்த தங்கம், கடந்த இரண்டு நாட்களாக தொடர் சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : இபிஎஃப்ஓ முகாம்.. சிக்கல்களுக்கு உடனடி தீர்வு.. மிஸ் பண்ணீடாதீங்க!
ஒரே நாளில் இரண்டு முறை சரிந்த தங்கம் விலை
நேற்று (செப்டம்பர் 28, 2026) தங்கம் விலை இரண்டு முறை சரிவை சந்தித்தது. அதாவது, 22 காரட் தங்கம் காலையில் கிராமுக்கு ரூ.235 சரிந்து ஒரு கிராம் ரூ.13,765-க்கும், சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் தங்கம் விலை மீண்டும் சரிந்தது. அதாவது கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,665-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : Gold Price : மீண்டும் ரூ.13,000-க்கு வந்த தங்கம்.. ஒரே நாளில் ரூ.1,880 சரிவு.. ரூ.5,000 சரிந்த வெள்ளி!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
ஒரே நாளில் இரண்டு முறை சரிந்த தங்கம் விலை.. ஒரு கிராம் தங்கம் இவ்வளவு தானா?
சமீப காலமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆனால், இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை சரிவை சந்தித்துள்ளது. அதாவது, காலையில் சரிந்த தங்கம் மீண்டும் மாலையில் இரண்டாவது முறையாக சரிந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும், ஒரு வரம்புக்குள்ளாகவே இருந்தது. அதாவது ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.15,000-த்தை தாண்டாமலும், ரூ.14,000-ல் இருந்து குறையாமலும் ரூ.14,000 முதல் ரூ.15,000 வரையிலே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தான், இன்று காலையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் ஒரு கிராம் ரூ.14,000-க்கு கீழ் குறைந்து ரூ.13,000-க்கு விற்பனையானது. அதாவது, இன்று காலை 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் ரூ.13,665-க்கும், சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சரி காலையில் தான் தங்கம் விலை குறைந்தது என பார்த்தால், மாலையிலும் விலை குறைந்து நகை பிரியர்களுக்கு டபுள் ஷாக் மகிழ்ச்சி கொடுத்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் மாலையில் கிராமுக்கு மேலும் ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,665-க்கு, ஒரு சவரன் ரூ.1,09,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இத்தகை நாட்களாக தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து ரூ.14,000 முதல் ரூ.15,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.13,000-க்கு வந்துள்ளது. தங்கத்தின் இந்த திடீர் டிவிஸ்ட் நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்?
ரயிலில் பயணிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்காக ரயில்வே நிர்வாகம் தனியாக லோயர் பெர்த் ஒதுக்கீட்டை பிரத்யேகமாக வழங்குகிறது ஆனால் இந்த விஷயம் பலருக்கும் தெரிவதில்லை. இதனால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது மேல் அல்லது நடு பெர்த் ஒதுக்கப்பட்டு, பயணம் முழுவதும் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
கர்ப்பிணிகளுக்கு ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா ?
கர்ப்ப காலத்தில் நீண்ட தூரம் பயணிப்பது நல்லதல்லை என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இருந்தாலும், தவிர்க்க முடியாத நேரங்களில் பயணம் செய்ய வேண்டியவர்கள், சாலைப் பயணத்தின் சிரமங்களையும் தவிர்க்கப் பெரும்பாலும் ரயிலில் பயணிக்க விரும்பிகிறார்கள். அப்படி கர்ப்பிணிகள் பகல் நேரப் பயணத்தை ஓரளவு சமாளித்துவிடலாம். ஆனால் இரவுப் பயணத்தில் லோயர் பெர்த் கிடைக்காவிட்டால் பெரும் சிரமம்தான்.
இதையும் படிக்க : வருகிற செப்.30 தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம் – காரணம் என்ன?
இந்தப் பிரச்னை சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வரை எதிரொலித்தது. கர்ப்பிணிப் பயணிகளுக்குக் கூடுதல் வசதிகள் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், கர்ப்பிணிகளுக்கான லோயர் பெர்த் ஒதுக்கீட்டு இருக்கைகளை ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வழியாக ஏன் நேரடியாகத் தேர்வு செய்ய முடிவதில்லை என்று மத்திய அரசும் ரயில்வே அமைச்சகமும் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
லோயர் பெர்த் பெறுவது எப்படி?
தற்போதைய நடைமுறைப்படி, கர்ப்பிணி பெண்கள் லோயர் பெர்த் பெற ரயில் நிலைய முன்பதிவு மையத்துக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் பெற்ற மருத்துவச் சான்றிதழை உடன் கொண்டு செல்ல வேண்டும். அதில், கர்ப்பமாக இருப்பது மற்றும் பயணம் செய்யும் உடல்தகுதி இருப்பது ஆகிய இரண்டும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். முன்பதிவுப் படிவத்தை நிரப்பும்போது, இருக்கை விருப்பத்தில் 'லோயர் பெர்த்' என்பதைத் தேர்வு செய்து, மருத்துவச் சான்றிதழை அதனுடன் இணைக்க வேண்டும்.
இதையும் படிக்க : பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்.. மாணவியிடம் இப்படி பேசலாமா? பதிவாளர் எடுத்த கடும் நடவடிக்கை!
வீட்டு உபயோக பொருட்களின் விலை 5-8% உயரப்போகிறது?.. தீபாவளிக்கு முன்பு நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!
இந்தியா முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் தீபாவளி (Diwali). ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது வணிக நிறுவனங்கள் அசத்தல் தள்ளுபடிகளை அறிவிக்கும். ஜவுளிக்கடை முதல், மின்சாதன பொருட்கள், உணவகங்கள் என எங்கு பார்த்தாலும் சலுகைகளும், தள்ளுபடிகளும் கொட்டிக் கிடக்கும். இதன் காரணமாக பொதுமக்கள் சிலர் தீபாவளி பண்டிகையின் போது வீட்டுக்கு தேவையான பொருட்களை, மின்சாதன பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டு இருப்பர்.
அந்த வகையில், இந்த ஆண்டு பெரும்பாலான பொதுமக்கள் தீபாவளி சலுகைகள் மட்டும் தள்ளுபடிகளுக்காக காத்திருந்த நிலையில், வீட்டு உபயோக மற்றும் மின்சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதிர்ச்சி அளிக்ககூடிய முடிவை எடுத்துள்ளன. அதாவது, வீட்டு உபயோக மற்றும் மின்சாதன பொருட்களின் விலையை உயர்த்த அவை திட்டமிட்டுள்ளன.
இதையும் படிங்க : பெற்றோர்களே.. பால் ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய செப்.30 தான் கடைசி தேதி!
5 முதல் 8 சதவீதம் வரை விலை உயர்த்த உள்ள நிறுவனங்கள்
வழக்கம் போல் இல்லாமல் இந்த ஆண்டு பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே நிறுவனங்கள் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்களின் விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் ஏசி, எல்ஈடி டிவி, வாஷிங் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலைகளை 5 முதல் 8 சதவீதம் வரை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த புதிய விலை உயர்வை அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு கொண்டுவர நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதையும் படிங்க : செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
காப்பர், ஸ்டீல், கச்சா எண்ணெய், இறக்குமதி செலவு என அனைத்தும் அதிகரித்துள்ளதன் காட்ரணமாக விலை உயர்த்தும் கட்டாயத்தில் உள்ளதால் வணிகர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். வணிக நிறுவனங்கள் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்களின் விலையை 2026 ஆம் ஆண்டில் மட்டும் மூன்று முறை உயர்த்தியுள்ளன. இந்த நிலையில் தான், இந்த நிறுவனங்கள் அடுத்த விலை உயர்வுக்கு தயாராகியுள்ளன.
இபிஎஃப்ஓ முகாம்.. சிக்கல்களுக்கு உடனடி தீர்வு.. மிஸ் பண்ணீடாதீங்க!
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO - Employee Provident Fund Organization) மூலம் ஏராளமான ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். அனைத்து சேவைகளும் ஆன்லைனிலேயே பெரும் வகையில், உழியர்கள் எங்கும் அலைய வேண்டிய தேவை இல்லை. ஆனால், சில சேவைகளுக்கு ஆன்லைனில் தீர்வு கிடைக்காமல் ஏராளமான ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், ஊழியர்கள் இபிஎஃப்ஓவின் சேவைகள் மற்றும் தங்களது சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் நிதி ஆப்கே நிகத் 2.0 (Nidhi Aapke Nikat 2.0) என்ற முகாமை அரசு இன்று (செப்டம்பர் 28, 2026) நடத்துகிறது. இந்த நிலையில், இந்த முகாமின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரே இடத்தில் தீர்வு - சிறப்பு முகாமை நடத்தும் இபிஎஃப்ஓ
பிஎஃப் (PF - Provident Fund) பணத்தை எடுப்பது, இருப்பு சோதனை செய்வது, நாமினி இணைப்பது உள்ளிட்ட அனைத்து செவைகளும் இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மிக சுலபமாக கிடைக்கிறது. ஆனால், ஒருசில காரணங்களால் சில ஊழியர்கள் சில சேவைகளை பெற முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக பல ஊழியர்கள் தங்களது கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான், நிதி ஆப்கே நிகத் 2.0 கீழ் இந்த முகாமை நடத்த அரசு இந்த முக்கிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க : செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
முகாமின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Visit Nidhi Aapke Nikat 2.0 - District Outreach Program on 28 September 2026 to learn about EPFO schemes & services, get guidance and on the spot grievance redressal.
Click here to locate nearest camp-https://t.co/ZuHZtyODcJ#NidhiAapkeNikat #EPFO #EPFOWithYou #HumHainNa pic.twitter.com/JYiA2gmENQ
— EPFO (@officialepfo) September 22, 2026
Gold Price : மீண்டும் ரூ.13,000-க்கு வந்த தங்கம்.. ஒரே நாளில் ரூ.1,880 சரிவு.. ரூ.5,000 சரிந்த வெள்ளி!
சென்னை, செப்டம்பர் 28 : கடந்த சில மாதங்களாக தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் (Gold), இன்று (செப்டம்பர் 28, 2026) நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. காரணம், இன்று ஒரு நாள் மட்டும் தங்கம் விலை (Gold Price) ரூ.1,880 சரிவை சந்தித்துள்ளது. அதுமட்டுமன்றி வெள்ளி விலையும் ரூ.5,000 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மீண்டும் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படும் தங்கம்
2026 ஆண்டு உச்சத்தில் இருந்த தங்கம் விலை அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்திக்க தொடங்கியது. பிறகு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. உதாரணமாக ஒரு மாதம் தொடர் உயர்வை சந்திக்கும் தங்கம் அடுத்த மாதம் கடும் சரிவை சந்தித்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ஒரு நாள் உயர்வு, மறு நாள் சரிவு என தங்கம் நிலையற்ற தன்மையை கொண்டு இருந்தது.
இதையும் படிங்க : செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
தங்கம் என்னதான் நிலையற்ற தன்மையை கொண்டு இருந்தாலும், ஒரு கிராம் ரூ.14,000-க்கு கீழ் செல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சில மாதங்கள் கழித்து தற்போது தங்கம் விலை மீண்டும் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை கடும் சரிவை சந்தித்த நிலையில், வெள்ளியும் மிக கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் ரூ.13,765-க்கும், சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,016-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,128-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : முதலீடு எப்போது டபுள் ஆகும்.. பணத்தை இப்படி கணக்கு செய்து முதலீடு செய்யுங்கள்!
வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு.. இன்று வழக்கம் போல் வங்கிகள் இயங்கும்!
சென்னை, செப்டம்பர் 28 : இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று (செப்டம்பர் 28, 2026) முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வங்கி ஊழியர்களின் போராட்டம் (Bank Employees Strike) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும். தொடர்ந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த வங்கிகள்
வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை, அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இடையேயான பாரபட்சமான நடவடிக்கைகள் மாறுதல், ஐடிபிஐ வங்கியை தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் நிறுத்தி, செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக யுனைடட் ஃபோரம் பேங்க்ஸ் யூனியன் (UFUB - United Forum Banks Union) அறிவித்தது. இதன் காரணமாக வேலை நாட்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுமக்கள் வங்கி சேவைகளை பெற முடியாத சூழல் உருவானது.
இதையும் படிங்க : முதலீடு எப்போது டபுள் ஆகும்.. பணத்தை இப்படி கணக்கு செய்து முதலீடு செய்யுங்கள்!
ஞாயிற்றுக் கிழமை செயல்பட்ட வங்கிகள்
மாத கடைசியில் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என்ற சூழல் உருவானபோது, ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்காதோ என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் தான், வங்கி ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான நேற்று (செப்டம்பர் 27, 2026) இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் வழக்கம் போல செயல்பட்டன.
இதையும் படிங்க : அடுத்த 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. யுபிஐ, ஏடிஎம் ஆகியவை செயல்படுமா?
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு
இந்த நிலையில், இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகளும், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புக்கும் இடையே நேற்று (செப்டம்பர் 27, 2026) பேச்சுவார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சுமூகமான உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இந்த போரட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசி, டிவி, வாஷிங் மெஷின் வாங்குற ப்ளான் இருக்கா? அக். 1 முதல் எகிறப்போகும் விலை.. என்ன காரணம்?
செப்டம்பர் 27, 2026: பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ஏசி, எல்இடி டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்தப் பொருட்களின் விலை 8 சதவீதம் வரை உயரக்கூடும் என தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் அடுத்த சில மாதங்களில் வர உள்ளதால், இந்த காலகட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் நிறுவனங்கள் அதன் சுமையை நுகர்வோரிடம் மாற்றக்கூடும் எனக் கூறப்படுகிறது.
மூலப்பொருட்களின் விலை உயர்வே காரணம்:
செம்பு, அலுமினியம், எஃகு மற்றும் கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை உயர்வு உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் ரூபாய் உள்ளிட்ட நாணயங்களின் மாற்று மதிப்பு ஏற்ற இறக்கமும் நிறுவனங்களின் செலவுகளை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: செம ஸ்ட்ராங்கா? 20 டன் கற்களை தாங்கிய டாடா ஏரிஸ் கார்.. கவனிக்க வேண்டியது என்ன?
இதன் காரணமாக முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-ல் மூன்றாவது முறையாக உயரும் விலை:
2026-ம் ஆண்டில் இந்தத் துறையில் விலை உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் மூலப்பொருள் செலவுகள் காரணமாக மேலும் விலை திருத்தம் செய்வது தவிர்க்க முடியாததாக இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
அக்டோபர் 1 முதல் குவிக் காமர்ஸ் விதிகள்:
பெற்றோர்களே.. பால் ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய செப்.30 தான் கடைசி தேதி!
இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளதுதான் ஆதார் கார்டு (Aadhaar Card). ஆதார் கார்டு இல்லை என்றால் பல்வேறு வேலைகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் முதியவர்கள் ஓய்வூதியம் பெறுவது வரை என அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான், குழந்தைகளுக்கான ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய செப்டம்பர் 30, 2026 கடைசி தேதி என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI - Unique Identification Authority Of India) கூறியுள்ளது. இந்த நிலையில், பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய கடைசி விரைவில் முடிவடைய உள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பால் ஆதார் - பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்
5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்படும். இந்த ஆதார் கார்டில் குழந்தைகளின் கைரேகை பதிவு, கண் கருவிழி படலம் உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் இருக்காது. இந்த நிலையில் தான், 5 வயதுக்கு பிறகு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. இந்த நிலையில், பால் ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வது தொடர்பான ஒரு முக்கிய செய்து உள்ளது.
இதையும் படிங்க : இன்று, ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் வங்கிகள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அடுத்த 3 நாட்களுக்கு சிக்கல்!
செப்டம்பர் 30 தான் கடைசி தேதி
பால் ஆதாரில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய செப்டம்பர் 30, 2026 தான் கடைசி தேதியாக உள்ளது. இந்த தேதிக்குள் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க : செம ஸ்ட்ராங்கா? 20 டன் கற்களை தாங்கிய டாடா ஏரிஸ் கார்.. கவனிக்க வேண்டியது என்ன?
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
வருங்கால பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் சேமிப்பு (Saving) மற்றும் முதலீடு (Investment) செய்ய அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY - Sukanya Samriddhi Yojana Scheme). இந்த திட்டம் முற்றிலும் பெண் குழந்தைகளுக்கானது ஆகும். இந்த நிலையில், இந்த திட்டத்தில் ரூ.1,500 முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் தரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
பெண் குழந்தைகளுக்காக அரசு செயல்படுத்தும் பிரத்யேக திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளின் பெயர்களில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும்போதே கணக்கு தொடங்கி முதலீடு செய்யும் பட்சத்தில், அவர்களின் எதிர்காலம் நிதி பாதுகாப்பு மிக்கதாக மாறும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், இந்த திட்டத்தில் நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.
இதையும் படிங்க : EPFO : பிஎஃப் கணக்கில் நாமினியை நியமிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?.. பணம் அரசுக்கு சென்றுவிடுமா?
ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளின் 15 வயது வரை முதலீடு செய்தால் போது. அதன் பிறகு 6 ஆண்டிகள் அப்படியே அந்த முதலீட்டை வைத்துவிட வேண்டும். பிறகு, 6 ஆண்டுகள் கழித்து அதாவது 21வது வயதில் முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : குடும்பத்துக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போகிறீர்களா? இந்த 4 மாடல்களை பாருங்க !
முதலீடு எப்போது டபுள் ஆகும்.. பணத்தை இப்படி கணக்கு செய்து முதலீடு செய்யுங்கள்!
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்தால் தான் நிதி பாதுகாப்பு பெற முடியும் என பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதன் காரணமாக தான் சமீப காலமாக பலரும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்து வருகின்றனர்.
முதலீடு செய்யும் பலரும் தாங்கள் முதலீடு செய்யும் தொகை நல்ல லாபத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதலீடு செய்கின்றனர். அவர்கள் தங்களது பணத்திற்கு சிறந்த லாபம் கிடைக்க வேண்டும் என முதலீடு செய்கின்றனர். ஆனால், முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற பலரும் யோசிப்பதில்லை.
முதலீடு செய்யும் நபர்களுக்கு ஏதேனும் ஒரு தேவை இருக்கும். அப்படி இருக்கும் நிலையில், அவர்கள் தங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும். இந்த நிலையில் தான் முதலீடு செய்யும் பணம் எப்போது வளர்ச்சி அடையும் என்ற ஃபார்முலாவை பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.
அதற்கு தான் 72 என்ற விதியை பயன்படுத்த வேண்டும். அதாவது, 72 என்ற எண்ணை நீங்கள் முதலீடு செய்யும் திட்டத்திற்கான முதிர்வு காலத்துடன் வகுக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் 10 சதவீதம் வட்டி கொண்ட திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 72/10 = 7.2 ஆண்டுகளில் உங்களது முதலீடு ரூ.2 லட்சமாக மாறும்.
இதுவே நீங்கள் 8 சதவீதம் வட்டி கொண்ட ஒரு திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 72/8 என்றால் மொத்தம் 8 ஆண்டுகளில் உங்களது ரூ.1 லட்சம் முதலீடு ரூ.2 லட்சமாக மாறும். இந்த ஃபார்முலாவை பின்பற்றி உங்களது முதலீடு எப்போது இரண்டு மடங்காக மாறும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
அடுத்த 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. யுபிஐ, ஏடிஎம் ஆகியவை செயல்படுமா?
யுனைடட் ஃபோரம் பேங்க்ஸ் யூனியன் (UFBU - United Forum Banks Union) நாளை (செப்டம்பர் 28, 2026) முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே வார விடுமுறை இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், மீண்டும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் செயல்படவில்லை என்றால் சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகுவர். இதன் காரணமாக தான் இன்று (செப்டம்பர் 27, 2026) பொதுத்துறை மற்றும் கிராம் வங்கிகள் செயல்படுகின்றன.
இந்த நிலையில், நாளை முதல் செப்டம்பர் 30, 2026 வரை உள்ள மொத்த மூன்று நாட்களில், யுபிஐ (UPI - Unified Payment Interface), ஏடிஎம் (ATM - Automated Teller Machine) உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் தடையின்றி பெற முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : கடனை அடைத்த பிறகும் வங்கி நகையைத் தர மறுக்க முடியுமா? உண்மை என்ன?
அடுத்த மூன்று நாட்கள் - யுபிஐ, ஏடிஎம் ஆகியவை செயல்படுமா?
செப்டம்பர் 26, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை உருவாகியுள்ள நிலையில், இந்த மூன்று நாட்களும் யுபிஐ, செயலிகள் மற்றும் ஏடிஎம் ஆகியவை செயல்பாட்டில் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தடையின்றி சேவைகளை பெறலாம்
இந்த மூன்று நாட்கள் வங்கியில் மட்டுமே பெறக்கூடிய சேவைகளை மட்டும் தான் பெற முடியாது. அது தவிர யுபிஐ, வங்கிகளின் செயலிகள் மற்றும் ஏடிஎம் ஆகியவற்றை எந்தவித தடையுமின்றி பெற முடியும். யுபிஐ செயலிகள், வங்கிகளின் செயலிகள் மற்றும் ஏடிஎன் ஆகியவற்றை 24 மணி நேரமும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
ஞாயிற்று கிழமையில் இயங்கும் வங்கி
இன்று, ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் வங்கிகள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அடுத்த 3 நாட்களுக்கு சிக்கல்!
இந்தியாவை பொருத்தவரை ஞாயிற்று கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஞாயிற்று கிழமை மட்டுமன்றி, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால், இந்த வாரம் ஞாயிற்று கிழமையான இன்று (செப்டமர் 27, 2026) பொதுத்துறை வங்கிகள் (Public Sector Banks) மற்றும் கிராம வங்கிகள் (Rural Banks) செயல்படுகின்றன. இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. அதனை தெரிந்துக்கொண்டு உங்களது வங்கி தேவைகளை இன்றே பூர்த்தி செய்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று வங்கிகள் இயங்குவதன் காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கிகள் வழக்கம் போல செயல்படும்
இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை உள்ளது. வார விடுமுறையை தொடர்ந்து யுனைடட் ஃபோரம் பேங்க் யூனியன் (UFBU - United Forum Of Banks Union) மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத சூழல் உருவானது.
இதையும் படிங்க : அக்டோபர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
இந்த நிலையில் தான், இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் கிராம் வங்கிகள் ஞாயிற்றுக் கிழமையான இன்று செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகள் இன்று வழக்கம் போல இயங்குகின்றன.
அடுத்த மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது
என்னதான்  ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் இன்று (செப்டம்பர் 27, 2026) வங்கிகள் செயல்படும் நிலையில், நாளை (செப்டம்பர் 28, 2026) முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது. அதாவது, அடுத்த மூன்று நாட்களுக்கு பொதுமக்களால் வங்கிகளில் மட்டுமே கிடைக்கும் சேவைகளை பெற முடியாத சூழல் உள்ளது.
இதையும் படிங்க : Gold Price : தங்கம் சவரன் ரூ.2 லட்சத்தை நெருங்கும்.. சலானி ஷாக் தகவல்!
செம ஸ்ட்ராங்கா? 20 டன் கற்களை தாங்கிய டாடா ஏரிஸ் கார்.. கவனிக்க வேண்டியது என்ன?
டாடா ஸ்ட்ட்ராங் சோதனையில், ஒரு டம்ப் டிரக்கிலிருந்து காரின் மீது சுமார் 20 டன் கற்களும் சரளைக்கற்களும் கொட்டப்பட்டன. அப்படியிருந்தும், காரின் கட்டமைப்பு பெரும்பாலும் பாதுகாப்பாகவே காணப்பட்டது, மேலும் செயல்விளக்கத்திற்குப் பிறகு அது ஓட்டவும் பட்டது. இந்த வீடியோவின் மூலம், நிறுவனம் காரின் உடல் கட்டமைப்பையும் அதன் சேசிஸின் வலிமையையும் வெளிப்படுத்த முயற்சித்துள்ளது. இந்திய சந்தையில் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற செடான் கார்களுடன் டாடா ஏரிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலானது.
டாடா ஏரிஸின் உறுதித்தன்மையை வெளிக்காட்டும் இந்த செயல்விளக்கம், சமூக ஊடகங்களில் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. அந்த வீடியோவில், காரின் மீது ஏராளமான கற்களும் சரளைக்கற்களும் விழுவது காட்டப்பட்டுள்ளது. அதிக எடை இருந்தபோதிலும், செயல்விளக்கத்திற்குப் பிறகு கார் நகர்வது காட்டப்பட்டது. இது போன்ற செய்முறை விளக்கங்கள், காரின் பிளாட்ஃபார்ம் மற்றும் சேசிஸின் வலிமையை மதிப்பிட உதவும் என்று நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், இதுபோன்ற செய்முறை விளக்கங்கள் அதிகாரப்பூர்வ மோதல்-சோதனை மதிப்பீடுகளுக்கு மாற்றாக அமையாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
வீடியோ
#TataAeris survives 20 ton of rock and gravel… #aeris #tatacars #namastecar pic.twitter.com/IRJNjJog8p
— NamasteCar 🙏🏻🚗 (@NamasteCar) September 25, 2026
Also Read: குடும்பத்துக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போகிறீர்களா? இந்த 4 மாடல்களை பாருங்க !
பாதுகாப்பிற்காக பல அம்சங்கள் கிடைக்கின்றன
இந்த காரில் பல பாதுகாப்பு அம்சங்கள் நிரம்பியுள்ளன. இந்த செடான் காரில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, உள்ளமைக்கப்பட்ட டாஷ்கேம், பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஆகியவை உள்ளன. மேலும், ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், ரோல்-ஓவர் மிட்டிகேஷன், கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் குழந்தை இருக்கைகளுக்கான ISOFIX மவுண்ட்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இயந்திரம் மற்றும் பவர்டிரெய்ன்
செயல்திறனைப் பொறுத்தவரை, டாடா ஏரிஸ் 1.2-லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின் 86 bhp சக்தியையும் 113 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆகிய தேர்வுகளுடன் கிடைக்கிறது. இந்தக் காரின் CNG மாடலும் கிடைக்கிறது. CNG மாடலில் உள்ள இன்ஜின் 76 bhp சக்தியையும் 97 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இயக்கச் செலவுகளையும் கருத்தில் கொள்ளும் தினசரிப் பயணிகளுக்கு இந்தத் தேர்வு குறிப்பாகப் பொருத்தமானது.
இது யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
ஒரு செடான் காரில் மதிப்பு, அம்சங்கள் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வாடிக்கையாளர்களை டாடா ஏரிஸ் கவரக்கூடும். இதன் அறிமுக விலை, ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பெட்ரோல், சிஎன்ஜி தேர்வுகள் ஆகியவை இந்தப் பிரிவில் இதை ஒரு சுவாரஸ்யமான தேர்வாக ஆக்குகின்றன.
EPFO : பிஎஃப் கணக்கில் நாமினியை நியமிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?.. பணம் அரசுக்கு சென்றுவிடுமா?
இந்தியாவில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO - Employee Provident Fund Organization). காரணம், தனியார் ஊழியர்களுக்கு ஓய்வுக்கால நிதியை இந்த அமைப்பு உருவாக்கி கொடுக்கிறது. ஊழியர்கள் பணியின் இருக்கும்போது அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் சிறிய தொகை, பிற்காலத்தில் அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். இந்த நிலையில், பிஎஃப் (PF - Provident Fund) கணக்கில் நாமினியை இணைக்கப்படவில்லை என்றால் பணம் என்னவாகும், அரசுக்கு சென்றுவிடுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் ஊழியர்களின் பெயர்களின் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த பணம், ஊழியர்களின் ஓய்வுக்காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கவையாக மாற்றும் வகையில் சேமிக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்களது பணி ஓய்வில் மட்டுமன்றி, பணியின்போதும் எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ அனுமதி வழங்குகிறது.
இதையும் படிங்க : Gold Price : தங்கம் சவரன் ரூ.2 லட்சத்தை நெருங்கும்.. சலானி ஷாக் தகவல்!
நாமினியை தேர்வு செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
ஒருவேளை ஊழியர்களது பணி காலம் முழுவதும் பிஎஃப் பணத்தை எடுக்கமால், திடீரென உயிரிழந்துவிட்டால் அந்த பணத்தை நாமினி பெற்றுக்கொள்ளலாம். இதற்கு, ஊழியர்கள் தங்களது பிஎஃ கணக்கில் நாமினியை இணைத்திருக்க வேண்டும். ஒருவேளை ஊழியர்கள் நாமினியை இணைக்கவில்லை, அவர் திடீரென உயிரிழந்துவிட்டால் அந்த பணம் என்ன ஆகும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
இதையும் படிங்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
குடும்பத்துக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போகிறீர்களா? இந்த 4 மாடல்களை பாருங்க !
பெட்ரோல் விலை உயர்வு, தினசரி பயணச் செலவு என பல காரணங்களால் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய குடும்பங்களை குறிவைத்து முன்னணி நிறுவனங்கள் புதிய மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்திய குடும்பங்களுக்கு ஏற்றதாக கருதப்படும் ஏதர் கொனார்க், ஹோண்டா QC3, சிம்பிள் வேவ், டிவிஎஸ் ஐகியூப் மில்லியன்ஆர் ஆகிய 4 புதிய மாடல்களின் விலை, ரேஞ்ச், சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.
ஏதர் கொனார்க்
ஏதர் நிறுவனத்தின் புத்தம் புதிய மாடல் கொனார்க். ஏதர் 450, ரிஸ்டா போன்ற பிரபலமான மாடல்களின் வரிசையில் இது மார்கெட்டுக்கு வந்துள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை செல்லும் என்பது இதன் முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. மேலும், கொனார்க் எஸ், கொனார்க் இசட் என இரண்டு வேரியன்ட்களில் இந்த ஸ்கூட்டர் வருகிறது. இதில் தற்போது கொனார்க் எஸ் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. இதில் 100 கி.மீ., 125 கி.மீ., 161 கி.மீ., 200 கி.மீ என நான்கு ரேஞ்ச் தேர்வுகள் உள்ளன. அடிப்படை மாடலின் விலை 99,999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று சிறப்பு ரேஷன் கார்டு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
டிவிஎஸ் ஐக்யூப் மில்லியன் ஆர்
ஐக்யூப் ஸ்கூட்டரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டதைக் கொண்டாடும் வகையில் டிவிஎஸ் இந்த சிறப்புப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 3.5 கிலோ வாட்ஸ் பேட்டரி வேரியன்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1,40,138 என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மார்கெட்டில் உள்ள மாடலுடன் ஒப்பிடும்போது புதிய வண்ண வடிவமைப்பும் சில கூடுதல் மேம்பாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஹோண்டா QC3
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ள புதிய மாடல் QC3. இந்தியாவில் ஹோண்டாவின் 3வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. ஏற்கெனவே ஆக்டிவா e, QC1 ஆகிய மாடல்கள் விற்பனையில் உள்ளன. QC3ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.35 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. முழு சார்ஜில் 145 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
சிம்பிள் வேவ்
கடனை அடைத்த பிறகும் வங்கி நகையைத் தர மறுக்க முடியுமா? உண்மை என்ன?
அவசர தேவைகளுக்கு நகைகளை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்குவது என்பது நம் ஊர்களில் வழக்கமாக நடைபெறும் ஒன்று. இந்த நிலையில் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திவிட்டால் நகை உடனே கைக்கு வந்துவிடும் என்றுதான் பெரும்பாலானோர் நினைக்கிறோம். ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது. கடன் ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் உங்கள் பெயரில் நிலுவையில் உள்ள வேறு கடன்களைப் பொறுத்து, நகையைத் திருப்பித் தராமல் வைத்திருக்கும் உரிமை வங்கிக்கு இருக்கலாம்.
கடனை அடைத்த பிறகும் வங்கி நகையைத் தர மறுக்க முடியுமா?
இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 பிரிவு 171ன் படி, வங்கிகளுக்கு இந்த உரிமையை வழங்குகிறது. தனியாக வேறு ஒப்பந்தம் எதுவும் இல்லாதபட்சத்தில், தங்களிடம் உள்ள பிணையப் பொருட்களை வங்கிகள் தக்கவைத்துக் கொள்ளலாம். இதைத்தான் பொது உரிமை என அழைக்கப்படுகிறது.
இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று சிறப்பு ரேஷன் கார்டு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
இது தொடர்பாக சமீபத்தில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு இந்த விவகாரத்தை மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்தது. ஒருவர் தனது நகைக் கடனை முழுமையாக அடைத்துவிட்டார். ஆனால் அவர் மீது வேறொரு கடன் இருந்ததால், வங்கி நகையைத் திருப்பித் தர மறுத்தது. அவர் மீது வீட்டுக் கடன் ஒன்று இருந்துள்ளது.
மேலும், நகைக் கடன் அடமானப் படிவத்தில், தனியாகவோ கூட்டாகவோ வாங்கிய முந்தைய மற்றும் எதிர்காலக் கடன்களுக்கும் இந்த நகையைப் பிணையாகக் கருதலாம் என்ற நிபந்தனை இடம் பெற்றிருந்தது. அதற்கு அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டிருந்தார். இதன் அடிப்படையில் வங்கியின் நடவடிக்கை சரியானது தான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீடு தொடர்பான விசாரணை கடந்த ஆகஸ்ட் 31, 2026 அன்று விசாரணைக்கு வந்ததது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, வீட்டுக் கடன் முழுமையாக அடைக்கப்பட்ட பிறகு 4 வேலை நாட்களுக்குள் நகையை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
இதனையடுத்து நகைக் கடன் பெறும் அதற்கான ஒப்பந்தத்தை தெளிவாக படிப்பது நல்லது. ஒரு நகைக் கடனை அடைத்துவிட்டால் மட்டும், நகை உடனடியாக திரும்பி வழங்கப்படாது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அமித்ராஜ் கௌஷல் மணி கண்ட்ரோல் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price), பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol and Diesel Price), ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவற்றில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். செப்டம்பர் மாதம் இன்னும் ஒருசில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அக்டோபர் மாதம் தொடங்கள் உள்ளது. இந்த நிலையில் தான், அக்டோபர் மாதம் முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அந்த வகையில் என்ன என்ன மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு என பல்வேறு மாற்றங்கள் அக்டோபர் முதல் அமலுக்கு வர உள்ளன.
கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், அக்டோபர் 01, 2026 அன்று கேஸ் சிலிண்டர் விலையில் முக்கிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
கேஸ் சிலிண்டர் முன்பதிவு
கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் அதற்கான ஆதார் அடிப்படையிலான இகேஒய்சி (eKYC - Know Your Customer) மேற்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன்னும் சிலர் இதனை முடிக்க நிலையில், செப்டம்பர் 30, 2026-க்கு கேஒய்சி முடிக்காதவர்கள் அக்டோபர் 01, 2026 முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
யுபிஐ-ல் எம்டிஆர் கட்டணம்
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இந்திய குடிமக்கள் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை யுபிஐ (UPI - Unified Payment Interface) மூலம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், அக்டோபர் 15, 2026 முதல் யுபிஐ-ல் எம்டிஆர் (MDR - Merchant Discount Rate) கட்டணம் அமலுக்கு வர உள்ளது. ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு வணிக நிறுவனங்கள் செலுத்தும் கட்டணம் இதுவாகும்.
இதையும் படிங்க : சேமிப்புக்கு இன்னுமா 50:30:20 ஃபார்முலா பயன்படுத்துறீங்க.. நிபுணர்கள் கூறும் இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்!
ஆதார் கார்டு அப்டேட்
அக்டோபர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை, வார விடுமுறை, உள்ளூர் விடுமுறைகள் ஆகியவற்றின் காரணமாக வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் 2026, அக்டோபர் மாதம் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் எந்த எந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அக்டோபர் 2026 - 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
அக்டோபர் மாதத்தில் மொத்த 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியல் இதோ.
அக்டோபர் 02, 2026 : காந்தி ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 04, 2026 - ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 10, 2026 - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11, 2026 - ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 17, 2026 - மகா சப்தமி என்பதால் அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18, 2026 - ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 19, 2026 - மகா அஷ்டமி என்பதால் சில மாநிலங்களின் அறைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை.
அக்டோபர் 20, 2026 - விஜயதசமி என்பதால் அன்றைய தினம் சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 21, 2026 - துர்கா பூஜை என்பதால் அன்றைய தினம் சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 24, 2026 - மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 25, 2026 - ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 26, 2026 - லட்சுமி பூஜை என்பதால் அன்றைய தினம் சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 29, 2026 - கரக்க சதுர்த்தி என்பதால் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சேமிப்புக்கு இன்னுமா 50:30:20 ஃபார்முலா பயன்படுத்துறீங்க.. நிபுணர்கள் கூறும் இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்!
Gold Price : தங்கம் சவரன் ரூ.2 லட்சத்தை நெருங்கும்.. சலானி ஷாக் தகவல்!
கடந்த சில ஆண்டுகளாக தங்கம் (Gold) நல்ல விலை உயர்வை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கனிசமான விலை உயர்வை சந்திக்கும் தங்கம், உச்சத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், தங்கம் சாமானியர்கள் எட்டா கனியாக மாறியுள்ளது. இந்த நிலையில் தான், தங்கம் விலை ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை தொடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை
தங்கம் கடந்த சில ஆண்டுகளாக நல்ல லாபத்தையே கொடுத்து வருகிறது. ஒரு வருடத்தில் சில தொடர் ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்தாலும், அந்த ஆண்டின் முடிவில் நல்ல லாபத்தையே தங்கம் கொடுக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தங்கம் நல்ல விலை உயர்வை சந்தித்து வந்ததன் காரணமாக தற்போது ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ராயல் என்ஃபீல்டுடன் போட்டியிடும் டிவிஎஸ்.. ரோனின் மற்றும் ஹன்டர் வேறுபாடுகள் என்னென்ன?
கடந்த சில மாதங்களாக தங்கம் பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்காமல் தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா, இல்லையா என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில், தங்கம் விலை குறித்த ஷாக் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டும் - சலானி
2027 ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சத்தை எட்டும் என்று தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், தற்போது 18, 14 மற்றும் 9 காரட் தங்க நகைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க : கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் 40% இந்தியர்கள்.. ஷாக் ரிபோர்ட்!
Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னை, செப்டமர் 26 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று (செப்டம்பர் 25, 2026),  4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை சரிந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் (Silver Price) எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிலையற்ற தன்மை - மீண்டும் சரிந்த தங்கம் விலை
2026 ஆம் ஆண்டு தங்கம் விலை நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது. குறிப்பாக ஒரு நாள் உயர்வை சந்திக்கும் தங்கம், மறு நாள் கடும் சரிவை சந்திக்கிறது. புவிசார் பதற்றம், பங்குச்சந்தை, தங்கத்திற்கான தேவை மற்று இருப்பு என பல காரணிகள் தங்கம் விலையை தீர்மானிக்கின்றன. இதன் காரணமாக ஒரு நாள் சரிவை சந்திக்கும் தங்கம், மறுநாள் உயர்வை சந்திக்கிறது. அந்த வகையில் தான், நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று (செப்டம்பர் 25, 2026) உயர்வை சந்தித்த தங்கம், இன்று (செப்டம்பர் 26, 2026) சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் 40% இந்தியர்கள்.. ஷாக் ரிபோர்ட்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.11 குறைந்து ஒரு கிராம் ரூ.15,273-க்கும், சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ரூ.1,22,184-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியுமா?.. ஆர்பிஐ விதிகள் கூறுவது என்ன?
தமிழகத்தில் இன்று சிறப்பு ரேஷன் கார்டு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை, செப்டம்பர் 26 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று (செப்டம்பர் 26, 2026) ரேஷன் கார்டு சிறப்பு முகாம் (Ration Card Special Camp) நடைபெற உள்ளது. ரேஷன் கார்டில் கை விரல் ரேகை பதிவு உள்ளிட்ட சேவைகளை ஒரே இடத்தில் பெரும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த சிறப்பு ரேஷன் கார்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெறும் ரேஷன் கார்டு முகாம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆதார் விவரங்களை சரிப்பார்க்க மத்திய அரசு எடுத்த முயற்சி
மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்நியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் உள்ள ஆதார் விவரங்களை சரிப்பார்க்கும் வகையில், இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. மின்னனு குடும்ப அட்டையில் பெயர் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளும் தங்களது கை விரல் ரேகை மூலம் இந்த சரிப்பார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக மாற்றியுள்ளது.
இதையும் படிங்க : வடபழனி – பூந்தமல்லி ரயில் சேவை – ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் விஜய்
96.21 சதவீதம் கை விரல் ரேகை சரிப்பார்ப்பு நிறைவு
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் இந்த கை விரல் ரேகை சரிப்பார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, அக்டோபர் 2023 முதல் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தற்போது வரை சுமார் 96.21 சதவீத குடும்ப அட்டைகளில் இந்த கை விரல் ரேகை சரிப்பார்ப்பு முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், மீதமுள்ள குடும்ப அட்டைகளில் கை விரல் ரேகை சரிப்பார்ப்பை மேற்கொள்ள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க : மேடையில் அந்நியன்.. களத்தில் அம்பி.. முதல்வர் விஜய்யின் ஆட்சியை பங்கம் செய்த மு.க.ஸ்டாலின்!
ரேஷன் கார்டு சிறப்பு முகாம்
வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
அக்டோபர் 05, 06, 07 ஆகிய தேதிகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI - Reserve Bank Of India) நிதி கொள்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக தனிநபர் கடன், வீட்டுக் கடன் மற்றும் தங்க நகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர்பிஐ ரெப்போ வட்டியை உயர்த்துவது குறித்தும் அதன் மூலம் ஏற்படக்கூடிய முக்கிய மாற்றங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
ஆர்பிஐயின் நிதி கொள்கை குழு கூட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிதி கொள்கை குழு கூட்டத்தை நடத்தும். இந்த கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும். அந்த வகையில், அக்டோபர் 05, 06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் ஆர்பிஐ தனது நிதி கொள்கை குழு கூட்டத்தை நடத்த உள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் பண வீக்கம் குறைவாக இருந்ததன் காரணமாக ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைத்து வந்தது. ஆனால், தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : Gold Price : 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?
ரெப்போ வட்டி உயர்ந்தால் என்ன ஆகும்?
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன் விகிதம் தான் ரெப்போ வட்டி. இந்த ரெப்போ வட்டி குறைவாக இருக்கும்போது வங்கிகள் தனது கடன் திட்டங்களுக்கான வட்டியை குறைவாக வைத்திருக்கும். இதுவே, ரெப்போ வட்டியை ஆர்பிஐ உயர்த்தும்போது வங்கிகள் தங்களது கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும்.
இதையும் படிங்க : பிஎஃப் விதிகள்: வீடு கட்ட, கடன் செலுத்த பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?
கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயரும்
சேமிப்புக்கு இன்னுமா 50:30:20 ஃபார்முலா பயன்படுத்துறீங்க.. நிபுணர்கள் கூறும் இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்!
மனிதர்கள் தங்களது பொருளாதாரத்தை பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் வைத்திருக்க வேண்டும் என்றால் கட்டாயம் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும். மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். ஆனால், எப்படி முதலீடு செய்ய வேண்டும், பணத்தை செலவு செய்ய வேண்டும் என தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருப்பர். அத்தகையவர்களுக்கு தான் சில சேமிப்பு ஃபார்முலாக்கள் (Saving Formulas) உள்ளன. அதன் மூலம் சேமிப்பு அல்லது முதலீடு செய்வது நிதி இலக்கை சுலபமாக அடைய உதவியாக இருக்கும்.
சேமிப்பு ஃபார்முலாக்கள்
அத்தகைய சேமிப்பு ஃபார்முலாக்களில் ஒன்றுதான் 50:30:20. இது ஒரு சிறந்த சேமிப்பு ஃபார்முலாவாக இருந்தாலும், தற்போதைய வாழ்க்கை முறைக்கு இது உதவி செய்யாது என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், சேமிப்பு தொடர்பான புதிய விதி ஒன்று பிரபலமாகி வருகிறது. அது என்ன விதி, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Gold Price : 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?
பிரபலமாகும் புதிய சேமிப்பு ஃபார்முலா
பெரும்பாலான நபர்களால் பின்பற்றப்பட்டு வந்த 50:30:20 ஃபார்முலா படி ஒருவர் தனது மாத வருமானத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும். அதில் முதலில் உள்ள 50-ஐ, 50 சதவீதம் என கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது, மாத வருமானத்தில் இருந்து 50 சதவீத பணத்தை வாடகை, மளிகை பொருட்கள், மின்சாரம், தண்ணீர், இன்சூரன்ஸ் மற்றும் கடன்களுக்கான மாத தவணை ஆகியவற்றுக்காக பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். 30 சதவீத பணத்தை பொழுதுபோக்கு மற்றும் இதர செலவுகளுக்காக வைத்துக்கொண்டு, மீதமுள்ள 20 சதவீத பணத்தை முதலீடு மற்றும் அவசரகால நிதிக்காக ஒதுக்கி வைக்க வேண்டும்.
இதையும் படிங்க : பிஎஃப் விதிகள்: வீடு கட்ட, கடன் செலுத்த பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?
ராயல் என்ஃபீல்டுடன் போட்டியிடும் டிவிஎஸ்.. ரோனின் மற்றும் ஹன்டர் வேறுபாடுகள் என்னென்ன?
தினசரி சவாரிக்கு ஏற்ற பைக், நல்ல தோற்றம் மற்றும் நவீன அம்சங்களை விரும்புபவர்களுக்கு, 2026 ரோனின் மற்றும் ஹண்டர் 350 ஆகிய இரண்டுமே சுவாரஸ்யமான மாடல்களாகும். விலைகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், நிறங்கள், தொழில்நுட்பம் மற்றும் இன்ஜின் திறன் ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. ரோனினில் சில கூடுதல் அம்சங்கள் இருக்கும் நிலையில், ஹண்டர் 350 ஒரு பெரிய இன்ஜின் மூலம் அதிக டார்க்கை வழங்குகிறது. இந்த வேறுபாடுகள் வாங்கும் முடிவில் முக்கியமானதாக இருக்கலாம்.
விலையில் பெரிய வித்தியாசம் இல்லை.
2026 TVS ரோனின் பைக்கின் விலை ரூ. 1.42 லட்சம் முதல் ரூ. 1.64 லட்சம் வரை உள்ளது. ராயல் என்ஃபீல்ட் ஹன்டர் 350 பைக்கின் விலை ரூ. 1.38 லட்சம் முதல் ரூ. 1.71 லட்சம் வரை உள்ளது. இதன் மூலம், ஹன்டர் 350 பைக்கின் ஆரம்ப வேரியன்ட்டின் விலை சற்று குறைவாக உள்ளது என்பது தெளிவாகிறது. இருப்பினும், டாப் வேரியன்ட்டின் விலையைப் பார்த்தால், ஹன்டர் 350 பைக்கின் விலை ரோனினை விட சுமார் ரூ. 7 ஆயிரம் அதிகமாக உள்ளது.
வண்ணங்களைப் பொறுத்தவரை, 2026 ரோனின் ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. அவற்றுள் சன்லிட் யெல்லோ, டெசர்ட் மிராஜ், கிளேசியர் சில்வர், சார்கோல் எம்பர், நிம்பஸ் கிரே மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகியவை அடங்கும். ஹண்டர் 350 மொத்தம் பத்து வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஃபேக்டரி பிளாக், ரியோ ஒயிட், ரெபெல் ப்ளூ, லண்டன் ரெட் மற்றும் டோக்கியோ பிளாக் போன்ற வண்ணங்கள் இதில் உள்ளன.
Also Read: ஒரே சார்ஜில் 161 கி.மீ… ஏத்தரின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்!
வேறுபாடுகள் என்ன?
2026 ரோனின் மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல், டைப்-சி சார்ஜிங் போர்ட், பிரீமியம் இருக்கை, டூயல்-சேனல் ஏபிஎஸ், கனெக்டட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன. மேலும், இதில் 17-இன்ச் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், முன் மற்றும் பின் டிஸ்க் பிரேக்குகள், மற்றும் எல்இடி லைட்டிங் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஹன்டர் 350 மாடலில் அலாய் வீல்கள், செமி-டிஜிட்டல் கிளஸ்டர், ஸ்டிட்ச்டு இருக்கை, ஸ்போர்ட்டி கிராப் ரெயில், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஆகியவை உள்ளன. தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, ரோனின் மாடலில் சில கூடுதல் ஆப்ஷன்கள் உள்ளன.
கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் 40% இந்தியர்கள்.. ஷாக் ரிபோர்ட்!
பண தேவை ஏற்படும்போது அதனை பூர்த்தி செய்துக்கொள்ள கடன் வாங்குவது நியாயமானது தான். ஆனால், அந்த கடனை திருப்பி செலுத்த மேலும் மேலும் கடன் பெறுவது தான் சிக்கலுக்கு வழிவகை செய்யும். இந்த கூற்றை கேட்கும்போது சற்று முட்டாள் தனமாக தோன்றும். ஆனால், சமீப காலமாக ஏராளமான இந்தியர்கள் இந்த முறையை தான் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக 40 சதவீதம் மக்கள் தங்களது பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்கியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் பழக்கம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறித்தும், அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன என்ன என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
எக்ஸ்பர்ட் பேனல் தளம் வெளியிட்ட அறிக்கை
கடன் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிடும் எக்ஸ்பர்ட் பேனல் என்ற தளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கடன் பெற்ற 40 சதவீதம் மக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் புதிய கடன் வாங்குவது தெரிய வந்துள்ளது. இதேபோல, ஏற்கனவே பெற்ற கடனை அடைக்க சிலர் கிரெடிட் கார்டுகளை பெற்று வருவதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : ஒரே சார்ஜில் 161 கி.மீ… ஏத்தரின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்!
என்ன என்ன தேவைகளுக்காக கடன் பெற்றுள்ளனர்?
இந்த நிலையில், மீதமுள்ள 60 சதவீத கடனை பொதுமக்கள் தங்களது மாத வருமானத்தின் மூலம் திருப்பி செலுத்தி வருகின்றனர். எக்ஸ்பர்ட் பேனல் தனது தளத்தில் கேட்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தான் இந்த அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. இதில் 26 சதவீதம் மக்கள் தங்களது அவசர மருத்துவ செலவுகளுக்காக கடன் வாங்கியுள்ளனர். 22 சதவீதத்தினர் திருமணம், உயர் கல்வி, குடும்பச் செலவுகள் மற்றும் தனிப்பட்ட செலவுகளுக்காக கடன் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க : விரைவில் அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியுமா?.. ஆர்பிஐ விதிகள் கூறுவது என்ன?
உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுக்கென தனி நாணயம் மற்றும் பணத்தை வைத்திருக்கும். ஒவ்வொரு நாடு பிரத்யேகமாக பணத்தை வடிவமைத்து பயன்படுத்தும். அந்த வகையில், இந்தியாவில் காகிதத்தால் ஆன பணம் பயன்பாட்டில் உள்ளது. இது எளிதில் கிழிந்துவிடக்கூடிய வகையில் இருக்கும்.
இதன் காரணமாக இந்திய ரூபாய் நோட்டுக்களை மிகவும் மென்மையாக கையாள வேண்டிய அவசியம் உள்ளது. அப்படியும் ரூபாய் நோட்டுகள் கிழியும் பட்சத்தில் அதனை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. இந்த நிலையில், இரண்டு துண்டுகளாக கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியுமா, அது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கூறுவது என்ன என பார்க்கலாம்.
ரூபாய் நோட்டுக்கள் கிழிந்துவிட்டால் அவற்றை வைத்து என்ன செய்வது, எப்படி மாற்றுவது என தெரியாமல் பொதுமக்கள் குழப்பமடைவர். இந்த குழப்பங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தீர்வு காண்கிறது. அதாவது, ஆர்பிஐ-ன் விதிகளின் கீழ் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மிக எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், அதற்கு அந்த ரூபாய் நோட்டுக்களின் அனைத்து பாகங்களும் சரியாக இருக்க வேண்டும். கிழிந்த ரூபாய் நோட்டின் 80 சதவீதம் உங்களிடம் உள்ளது என்றால், அதனை மாற்றி நல்ல ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி, ரூபாய் நோட்டுக்களின் ஓரங்கள் கிழிந்தாலும் ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவேளை உங்களிடம் இரண்டாக கிழிந்த பாதி ரூபாய் நோட்டு மட்டும் உள்ளது என்றால் 40 முதல் 80 சதவீதம் வரையிலான தொகையை மட்டுமே திரும்ப பெற முடியும். உதாரணமாக, ரூ.500 நோட்டு கிழிந்து பாதி மட்டும் இருந்தால் ரூ.250 பணம் கிடைக்கும். இதுவே பாதியாக கிழிந்த நோட்டு 40 சதவீதம் மட்டுமே இருந்தால் அதற்கு பணம் திரும்பி வழங்கப்படாது.
வீடு கட்ட எவ்வளவு பணம் எடுக்கலாம்.. பிஎஃப் புதிய விதிகள் கூறுவது என்ன?
தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO - Employee Provident Fund Organization) பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. இந்த சிறப்பு அம்சங்கள் ஊழியர்களின் ஓய்வு காலத்தை மையப்படுத்தியாக இருந்தாலும், ஊழியர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் பணியின்போதே சில சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் புதிய விதிகளின்படி, வீடு கட்டவோ அல்லது வாங்கவோ ஊழியர்கள் எவ்வளவு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
என்ன என்ன தேவைகளுக்கு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்
ஊழியர்களின் ஓய்வு காலத்தை மையப்படுத்தி, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் செயல்பட்டாலும், பணியின் போதே ஊழியர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள பிஎஃப் (PF - Provident Fund) பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. திருமணம், மருத்துவம், கல்வி, வீடு கட்டுதல் அல்லது வாங்குதல் உள்ளிட்ட சில தேவைகளுக்கு மட்டுமே பிஎஃப் பணத்தை எடுக்க இபிஎஃப்ஓ அனுமதி வழங்குகிறது.
இதையும் படிங்க : விரைவில் அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
75 சதவீதம் வரை பணத்தை எடுத்துக்கொள்ளலாம்
இபிஎஃப்ஓ விதிகளின்படி வீடு வாங்குவது, கட்டுவது, மனை வாங்குவது, வீட்டு கடன் செலுத்துவது, வீட்டை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக 75 சதவீதம் வரை பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த சேவையை பெற ஊழியர்கள் குறைந்தது 12 மாதங்களாவது பிஎஃப் பங்களிப்பை செய்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க : 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ள வைரம்.. காரணம் என்ன?
25% கணக்கிலேயே இருக்க வேண்டும்
உதாரணமாக, ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதில் 75 சதவீதம் அதாவது ரூ.3.75 லட்சம் பணத்தை ஊழியர்கள் முன்பணமாக பெற்றுக்கொள்ள முடியும். மீதமுள்ள 25 சதவீதம், அதாவது ரூ.1.25 லட்சம் பணம் பிஎஃப் கணக்கிலேயே இருக்க வேண்டும் என்பதை புதிய விதிகள் வலியுறுத்துகின்றன. மீதமுள்ள இந்த 25 சதவீத பணத்தை ஊழியர்கள் தங்களது ஓய்வு காலத்திற்காக விட்டுவிட வேண்டும்.
Gold Price : 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?
சென்னை, செப்டம்பர் 25 : தங்கம் விலை (Gold Price) ஒவ்வொரு நாளும் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதாவது, ஒரு நாள் உயர்வை சந்திக்கும் தங்கம், மறு நாள் கடும் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் இன்று (செப்டம்பர் 25, 2026) உயர்வை சந்தித்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை
தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. புவிசார் பதற்றம், பங்குச்சந்தை, தங்கத்தின் தேவை மற்றும் இருப்பு ஆகியவற்றை மையமாக கொண்டுதான் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது. ஒருநாள் உயர்வை சந்திக்கும் தங்கம், மறுநாள் கடும் சரிவை சந்திக்கிறது. இத்தகைய தொடர் ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 25, 2026) தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : விரைவில் அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (செப்டம்பர் 25, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.14,010-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,284-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,272-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ள வைரம்.. காரணம் என்ன?
பிஎஃப் விதிகள்: வீடு கட்ட, கடன் செலுத்த பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?
மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஓய்வுக்காலத்தில் கைகொடுக்கும் அரசின் திட்டம் தான் பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் சேமிக்கும் பணத்தை ஓய்வு பெறும்போது மட்டுமல்லாமல் முன்கூட்டியே சில அவசர தேவைகளுக்கும் பணம் எடுத்துக்கொள்ளலாம். சில முக்கியத் தேவைகளுக்காக முன்கூட்டியே பணம் எடுத்துக்கொள்ளவும் வசதி உள்ளது. குறிப்பாக வீடு வாங்குவது, கட்டுவது, வீட்டுக் கடனை அடைப்பது போன்ற முக்கிய தேவைகளுக்கும் பிஎஃப் பணத்தை பயன்படுத்த முடியும். தற்போது வீடு தொடர்பான செலவுகளுக்கு பிஎஃப் பணம் எடுக்கும் நடைமுறை சில மாற்றங்களுடன் எளிமையாக்கப்பட்டுள்ளது.
வீடு கட்ட, கடன் செலுத்த பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?
வீடு தொடர்பான தேவைகளுக்கு பிஎஃப் பணம் எடுக்க வேண்டுமானால், அந்த ஊழியர் குறைந்தது 12 மாதங்கள் Eபிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். இந்தத் தகுதி இருந்தால் போதும், வீட்டுக்காக பிஎஃப் பணத்தை எடுக்க விண்ணப்பிக்கலாம். புதிய விதிகளின்படி, வீட்டுக்காக எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதைக் கணக்கிட தகுதியுள்ள பிஎஃப் பணம் இருப்பது அவசியம். குறிப்பாக தகுதியுள்ள இருப்பில் 100 சதவிகிதம் வரை எடுக்க அனுமதி உண்டு. ஆனால் அதில் ஒரு நிபந்தனை உள்ளது. பிஎஃப் கணக்கில் குறைந்தது 25 சதவிகிதம் தொகை எப்போதும் இருக்க வேண்டும். அதாவது நடைமுறையில் சுமார் 75 சதவகிதம் வரைதான் கைக்கு வரும்.
இதையும் படிக்க : பங்குச்சந்தையில் ரூ.13.9 லட்சம் ஃபோர்ட்போலியோ.. அசத்தும் 10 ஆம் வகுப்பு மாணவி!
பொதுவாக வீடு அல்லது ஃபிளாட் வாங்குதல், நிலம் வாங்குதல், புதிய வீடு கட்டுதல், வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துதல், ஏற்கனவே உள்ள வீட்டை பழுதுபார்த்தல் உள்ளிட்ட தேவைகளுக்கு நம்மால் பணம் எடுத்துக்கொள்ள முடியும். இந்த வசதியை ஒருவர் தனது பணிக்காலத்தில் அதிகபட்சம் 5 முறை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஃப் பயரின் சம்பளம் அல்லது சம்பளத்தின் குறிப்பிட்ட மடங்குதான் கணக்கில் எடுக்கப்பட்டது. இப்போது அந்த நிலை மாறியுள்ளது. வீடு தொடர்பான பணம் எடுப்பில் சம்பளத்தை விட உறுப்பினரின் Eligible Member Balance என்பது தான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : செப்.27 ஞாயிற்றுக் கிழமை வழக்கம் போல வங்கிகள் இயங்கும்.. மத்திய நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு!
ஒரே சார்ஜில் 161 கி.மீ… ஏத்தரின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்!
ஏதர் கோனார்க் தற்போது S மற்றும் Z வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இருப்பினும், S சீரிஸில் உள்ள மூன்று மாடல்களுக்கான விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோனார்க் S 100 மாடலின் ஆரம்ப விலை ₹99,999 ஆகும். S 125 மாடலின் விலை ₹1,21,999 ஆகவும், S 161 மாடலின் விலை ₹1,44,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். எதிர்காலத்தில் கோனார்க் வரிசையில் 200 கி.மீ. தூரம் செல்லும் மாடலைச் சேர்க்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கோனார்க் Z மாடல் 125 கி.மீ. மற்றும் 161 கி.மீ. தூரம் செல்லும் திறன்களுடன் அறிமுகப்படுத்தப்படும். Z சீரிஸிற்கான விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எஸ் 125 மற்றும் எஸ் 161 மாடல்களின் விநியோகம் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ் 100 மாடல் 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும். 200 கி.மீ. தூரம் செல்லும் திறன் கொண்ட எஸ் மாடல், 2027-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இசட் சீரிஸ் 2027-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வரக்கூடும்.
Also Read: வெள்ளைக்குதிரை.. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 புதிய மாடல்.. புதிய அம்சங்கள் என்னென்ன?
161 கி.மீ. வரை தூரம்
கோனார்க் என்பது நிறுவனத்தின் புதிய EL பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். சுமார் 2.6 மில்லியன் கிலோமீட்டர் களத் தரவுகளின் அடிப்படையில் இந்த பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஏதர் நிறுவனம் கூறுகிறது. கோனார்க் S 100 மாடல் 2.1kWh பேட்டரியாலும், S 125 மாடல் 2.7kWh பேட்டரியாலும், மற்றும் S 161 மாடல் 3.5kWh பேட்டரியாலும் இயக்கப்படுகின்றன. S 100 மாடல் 4kW உச்சபட்ச சக்தியையும் 16Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. S 125 மற்றும் S 161 மாடல்கள் 4.7kW உச்சபட்ச சக்தியையும் 16Nm டார்க்கையும் கொண்டுள்ளன. இந்த மூன்று மாடல்களும் மணிக்கு 70 கி.மீ. உச்சபட்ச வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை.
MagicKey மற்றும் AutoHold போன்ற அம்சங்கள்
கோனார்க், அன்றாடப் பயன்பாட்டை எளிதாக்கும் பல அம்சங்களுடன் வருகிறது. பார்க் அசிஸ்ட் ரிவர்ஸ் (Park Assist Reverse) அம்சம், மோட்டாரைப் பயன்படுத்தி ஸ்கூட்டரை எளிதாகப் பின்னோக்கிச் செலுத்த உதவுகிறது.
ஆட்டோ ஹோல்ட் (Auto Hold) அம்சம், நிறுத்திய பிறகு ஸ்கூட்டர் அதே இடத்தில் நிலைத்திருக்க உதவுகிறது.
Z வேரியண்டில் AEBS, அதாவது மேம்பட்ட மின்னணு பிரேக்கிங் சிஸ்டம் (Advanced Electronic Braking System) இடம்பெற்றுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது மின்னணு கட்டுப்பாட்டின் மூலம் பிரேக்கிங்கை மேம்படுத்தவும், நிறுத்தும் தூரத்தைக் குறைக்கவும், மற்றும் கடுமையாக பிரேக் செய்யும்போது பின் சக்கரம் லாக் ஆவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது.
மேஜிக்-கீ (Magic-Key) அம்சம், ஏதர் (Ather) செயலியைப் பயன்படுத்தி ஸ்கூட்டரின் பூட்டைத் திறக்க பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அம்சம் கோனார்க் Z 161-ல் உள்ள ஆட்டோபாப் (AutoPop) உடன் இணைந்து செயல்பட்டு, பூட்டைத் தானாகவே திறக்க அனுமதிக்கிறது.
கூகுள் மேப்ஸ் மற்றும் வாட்ஸ்அப்
இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ரூ. 1,080 வரை சரிந்து விற்பனை..
செப்டம்பர் 26, 2026: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,185-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:
இந்த நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.135 குறைந்து ரூ.14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,080 குறைந்து ரூ.1,12,400-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.15,273-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,184-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ள வைரம்.. காரணம் என்ன?
தங்கம் விலை ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரண்ம்?
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதம், பணவீக்கம், மத்திய வங்கிகளின் கொள்கை முடிவுகள் மற்றும் புவிசார் அரசியல் சூழல் உள்ளிட்ட பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் சூழலில், வட்டி வருவாய் தரும் முதலீடுகளின் மீதான ஆர்வம் அதிகரிப்பதால் தங்கத்தின் விலையில் அழுத்தம் ஏற்படலாம். சமீபத்திய சர்வதேச சந்தை நிலவரத்திலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு தங்கத்தின் விலையை பாதித்துள்ளது.
இந்தியாவில் ஏன் இந்த மாற்றம்:
இந்தியாவைப் பொறுத்தவரை, ரூபாய்-டாலர் மாற்று விகிதமும் தங்கத்தின் உள்ளூர் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தாலும், ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியாவில் அதன் விலை குறைவது கட்டுப்படுத்தப்படலாம்.
விரைவில் அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்.. தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஹாட் டாப்பிக்காக இருப்பது எம்டிஆர் (MDR - Merchant Discount Rate) கட்டணம் தான். இந்த எம்டிஆர் கட்டண முறை தொடர்பான அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் குழப்பத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படுமா, சிறு வணிகர்களுக்கும் பொருந்துமா, மறைமுக கட்டணம் விதிக்கப்படுமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், எம்டிஆர் கட்டண முறை குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
எம்டிஆர் கட்டணம் என்றால் என்ன?
வாடிக்கையாளர்களிடம் இருந்து வணிகர்கள் பெறும் யுபிஐ (UPI - Unified Payment Interface) பண பரிவர்த்தனைகளுக்காக யுபிஐ தளங்களான கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pay) உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் வணிகர்கள் செலுத்தும் கட்டணம் தான் எம்டிஆர். இந்த கட்டணம் முழுவதும் வணிகர்களுக்கானது. இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைமுகமாக வசூல் செய்யக்கூடாது என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : டிசம்பருக்குள் RBI, 2 முறை ரெப்போ வட்டியை உயர்த்த வாய்ப்பு.. வெளியாக முக்கிய தகவல்!
எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்
வாடிக்கையாளர்களிடம் இருந்து யுபிஐ மூலம் வணிகர்கள் பெறும் ரூ.2,000-க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் எம்டிஆர் கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே, வாடிக்கையாளர் ரூ.2,000-க்கும் குறைவாக பண பரிவர்த்தனை செய்கிறார் என்றால் அதற்கு வணிகர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சிறு வணிகர்களுக்கும் பொருந்துமா?
மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை யுபிஐ மூலம் பணம் பெறும் தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு இந்த எம்டிஆர் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. மற்ற நிறுவனங்களுக்கு எம்டிஆர் பொருந்தும்.
இதையும் படிங்க : வெள்ளைக்குதிரை.. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 புதிய மாடல்.. புதிய அம்சங்கள் என்னென்ன?
எம்டிஆர் கட்டண விவரம்
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ள வைரம்.. காரணம் என்ன?
இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளவை தான் தங்கம் (Gold), வெள்ளி (Silver) மற்றும் வைரம் (Diamond). இதில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கும் நபர்கள், எதிர்காலத்தில் நிதி தேவை ஏற்பட்டால் அடமானம் வைத்து நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் பெரும்பாலும் முதலீடு செய்வர். ஆனால், வைரம் அப்படி அல்ல. காரணம், வைரத்தை கடைகளிலோ அல்லது வங்கியிலோ அடகு வைத்து பணம் பெற முடியும். ஆனால், வைரத்தை நகை கடைகளில் விற்பனை செய்துக்கொள்ள முடியும்.
ஆனால், தங்கத்தை போல் இல்லாமல்,  வாங்கியதை விடவும் குறைவான விலைக்கு தான் வைரம் எடுத்துக்கொள்ளப்படும். எனவே அதிக லாபம் பெறும்போதுதான் வைரத்தை விற்பனை செய்ய வேண்டும். இதன் காரணமாக தான் பலரும் வைரத்தில் முதலீடு செய்யாமல் இருப்பர். இந்த நிலையில் தான், வைரம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : டிசம்பருக்குள் RBI, 2 முறை ரெப்போ வட்டியை உயர்த்த வாய்ப்பு.. வெளியாக முக்கிய தகவல்!
20 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவை சந்தித்த வைரம்
வைரத்தின் மதிப்பு காலம் காலமாக அதன் இருப்பு மற்றும் தேவையை மையப்படுத்தியதாக தான் இருந்து வருகிறது. இந்த சூழலில் செயற்கை வைரத்தின் வருகையால், இயற்கை வைரத்தின் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்பாக 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விடவும், தற்போது வைரத்தின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : வெள்ளைக்குதிரை.. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 புதிய மாடல்.. புதிய அம்சங்கள் என்னென்ன?
80 சதவீதம் விலை குறைவாக விற்பனையாகும் வைரம்
பங்குச்சந்தையில் ரூ.13.9 லட்சம் ஃபோர்ட்போலியோ.. அசத்தும் 10 ஆம் வகுப்பு மாணவி!
சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் பங்குச்சந்தை (Share Market) முதலீடு மிகவும் பிரபலமாக உள்ளது. பலரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், பங்குச்சந்தை மீது இருக்கும் அச்சம் அவர்களை முதலீடு செய்ய விடாமல் செய்து விடுகிறது. இந்த நிலையில் தான், 15 வயதே ஆகும் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து சுமார் ரூ.13 லட்சம் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில், பங்குச்சந்தையில் அசத்தும் அந்த சிறுமியின் சுவாரஸ்ய பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
பங்குச்சந்தையில் கலக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி
பெங்களூருவை சேர்ந்தவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிஞ்சனா சந்தோஷ். 15 வயதே ஆகும் இவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்து சாதனை படைத்து வருகிறார். சிஞ்சனாவுக்கு சிறு வயது முதலே பணத்தின் மீதும், சேமிப்பின் மீதும் அதிக அளவு ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக உண்டியலில் சில்லறை காசுகளை சேமிக்க தொடங்கிய அவர், தனது 12வது வயதில் சுமார் ரூ.10,000 சேமித்துள்ளார். இந்த நிலையில், தனது பெற்றோரின் உதவியுடன் அடிப்படை நிதி மேலாண்மை குறித்து தெரிந்துக்கொண்டுள்ளார். பிறகு வார இறுதி நாட்களில் சுயமாக முதலீடுகள் குறித்து படித்து தெரிந்துக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : செப் 28 முதல் 30 வரை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. இந்த மாத சம்பளம் தாமதம் ஆகுமா?
தேர்வுகளை எழுதி சான்றிதழ்களை பெற்ற சிறுமி
சிஞ்சனா முதலீடுகள் குறித்து தெரிந்துக்கொண்டது மட்டுமன்றி, செபி மற்றும் NISM (National Institute of Securities Markets) தொடர்பான தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தான் அவர் தனது முதலீட்டு பாதையை தேர்வு செய்துள்ளார். அதாவது, ஈக்விட்டிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும், வெளிநாட்டு முதலீட்டு சந்தைகளிலும் பரவலாக பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இதையும் படிங்க : வங்கிகளில் வைப்பு தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி!
ரூ.4,000 பில்லை ரூ.2,000 ஆக பிரித்து செலுத்தினால் MDR இல்லையா?.. உண்மை இதுதான்
இந்தியாவில் அக்டோபர் 15, 2026 முதல் எம்டிஆர் (MDR - Merchant Discount Rate) கட்டண முறை அமலுக்கு வர உள்ளது. இந்த முறை அமலுக்கு வரும் பட்சத்தில் வணிகர்கள், யுபிஐ (UPI - Unified Payment Interface) மூலம் பெறும் ரூ.2,000-க்கு மேலான பண பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக வணிகர்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், ரூ.4,000 கட்டணத்தை யுபிஐ மூலம் ரூ.2,000, ரூ.2,000 என பிரித்து பிரித்து செலுத்தினால் அதற்கு எம்டிஆர் கட்டணம் பொருந்துமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம்
யுபிஐ-ல் ரூ.2,000-க்கு மேலே மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் அமலுக்கு வர உள்ளது. அக்டோபர் 15, 2026 முதல் இந்த கட்டண முறை அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை. வணிக நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை பொதுமக்கள் மீது திணிக்கக்கூடாது என அரசு கூறியிருந்தாலும், மறைமுகமாக வாடிக்கையாளர்கள் மீது நிறுவனங்கள் திணிக்க முயற்சி செய்யும்.
இதையும் படிங்க : செப் 28 முதல் 30 வரை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. இந்த மாத சம்பளம் தாமதம் ஆகுமா?
இந்த நிலையில் தான், ரூ.4,000 கட்டணம் வந்தால் அதனை ரூ.2,000 என பிரித்து பிரித்து யுபிஐ மூலம் செலுத்தினால் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதில், இல்லை என்பது தான். உதாரணமாக நீங்கள் ரூ.4,000-க்கு பொருட்களை வாங்கினால் அதனை இரண்டு தனித்தனி பில்களாக பிரித்து ரூ.2,000 என கட்டணம் செலுத்தலாம்.
ரூ.2,000-க்கு குறைவான பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை
எம்டிஆர் கட்டணம் குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட அறிக்கையில், ரூ.2,000-க்கும் குறைவான யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் விதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பரிவர்த்தனை தொகை குறித்த கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதே தவிர, எத்தனை முறை பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க : கூட்டுறவு வங்கிகளில் வைப்பு தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி!