Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu News Live : திருச்செந்தூரில் புதிய பேருந்து நிலையம்.. கட்டுமான பணிகள் தொடக்கம்!

Tamil Nadu Breaking News Today 10 August 2025, Live Updates: நெல்லை மாவட்டங்களில் அடிக்கடி கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக வெட்டிக்கொலை செய்யப்படுவது சாதாரணமாக நடக்கிறது. இந்நிலையில் ஆயுதங்கள் தொடர்பான முக்கிய முடிவை நெல்லை போலீசார் கையில் எடுத்துள்ளனர்

C Murugadoss
C Murugadoss | Updated On: 10 Aug 2025 14:47 PM
Share
Tamil Nadu News Live : திருச்செந்தூரில் புதிய பேருந்து நிலையம்.. கட்டுமான பணிகள் தொடக்கம்!
Tn Live Blog

LIVE NEWS & UPDATES

  • 10 Aug 2025 03:20 PM (IST)

    திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து சிறைப்பிடிப்பு..!

    திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் மழைநீருடன் கலந்து கழிவு நீர் வீடுகளுக்கு நுழைந்து விட்டதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிப்பட்டு கூட்டு சாலையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • 10 Aug 2025 03:05 PM (IST)

    தொழிலாளர்களை போராட்டம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

    பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 10வது நாளாக போராடி வரும் தொழிலாளர்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் ஆதரவு தெரிவித்தார்.

  • 10 Aug 2025 02:50 PM (IST)

    கன்னியாகுமரி: படகுசேவை மீண்டும் தொடங்கியது..!

    கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் நிலையற்ற தன்மையில் இருப்பதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

  • 10 Aug 2025 02:34 PM (IST)

    தேனி அருகே 13 வயது சிறுவன் மீது பாய்ந்த ஈட்டி.. மூளை சாவு அடைந்த சோகம்..!

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பள்ளி மைதானத்தில் ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, ஈட்டி பாய்ந்து 13 வயது சிறுவன் சாய் பிரகாஷ் தலையில் பலத்த காயங்களுடன் மூளை சாவு அடைந்த சோகம். இதுகுறித்து தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

  • 10 Aug 2025 02:20 PM (IST)

    Tiruchendur New Bus Stand: திருச்செந்தூரில் புதிய பேருந்து நிலையம்.. கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

    திருச்செந்தூரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் திருச்செந்தூர் – உடன்குடி இடையே புதிய பேருந்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  • 10 Aug 2025 01:56 PM (IST)

    போராடி நாயை பிடித்த சுகாதாரத்துறை

    உடனடியாக இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரமாக போராடி நாயை பிடித்தனர்.   

    வீடியோ:

    மேலும் படிக்க

  • 10 Aug 2025 01:38 PM (IST)

    Madurai Crime News : சிறுவனை கடித்த தெருநாய்

     மதுரை: வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த 8 வயது சிறுவனையும், அவரது தந்தையும் தெரு நாய் கடித்து குதறிய  அதிர்ச்சி சம்பவம். இதில் இருவருக்கும் பலத்த காயம்

  • 10 Aug 2025 01:33 PM (IST)

    அபாயகரமான ஆயுதங்கள் – போலீசார் எச்சரிக்கை

    அரிவாள்,கத்தி போன்ற அபாயகரமான ஆயுதங்களை தயார் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். அந்த வகையில் நடந்த ஆய்வில் மூன்று பேருக்கு சொந்தமான பட்டறைகளில் இருந்து ஒன்பது அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விரிவாக படிக்க

  • 10 Aug 2025 01:19 PM (IST)

    Nellai Crime News : இரும்பு பட்டறைகளில் ஆயுதங்கள் கூடாது

    திருநெல்வேலியில் கொலை என்பது சாதாரண குற்றமாக நடந்து வருகிறது. இப்படியான குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இரும்பு பட்டறைகளில் அபாயகரமான ஆயுதங்கள் தயார் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • 10 Aug 2025 01:13 PM (IST)

    பி.எல். சந்தோஷ்  தலைமையில் ஆலோசனை

       இன்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல். குறிப்பாக ஓபிஎஸ் சமாதானம் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

    விவரமாக படிக்க

  • 10 Aug 2025 01:05 PM (IST)

    கோவிலை சுற்றி சுவர்.. தொடர்ந்த போராட்டம்

    பட்டியலின மக்கள் வரக் கூடாது என்பதற்காக கோயிலைச் சுற்றி தீண்டாமை சுவர் அமைக்கப்ப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போரட்டங்களும், ஆர்ப்பாட்டமும் நடந்தன. இந் நிலையில், தற்போது அந்த சுவர் இடிக்கப்பட்டது

    முழு விவரம்

  • 10 Aug 2025 12:45 PM (IST)

    கரூர் : தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது

    கரூர் மாவட்டத்தில் உள்ள முத்துலடம்பட்டியில் கிராமத்தில் இருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது.

  • 10 Aug 2025 12:25 PM (IST)

    அரக்கோணம் வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில்

    சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் சேவை 2025 நவம்பர் மாதம் முதல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஏற்கனவே, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் ஏசி ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

    முழு விவரம்

  • 10 Aug 2025 12:10 PM (IST)

    வாய்ப்புகள் இல்லை – பி.எல் சந்தோஷ்

    தவெக கூட்டணி குறித்து பேசிய பி.எல் சந்தோஷ், ”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக என்ஆர் காங்கிரஸ் அதிமுக கட்சிகளை உள்ளன.  தேசிய ஜனநாயகியை போட்டியில் தமிழக வெற்றிக் கழகம் இணைவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றார்

    முழு விவரம்

  • 10 Aug 2025 11:52 AM (IST)

    Tamilaga Vettri Kazhagam : தவெக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. மேலும் தங்கள் பக்கம் மற்ற கட்சிகளை இழுக்கவும் அதிமுக பாஜக முயற்சிக்கிறது. இதற்கிடையில், பாஜக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணையும் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது

  • 10 Aug 2025 11:32 AM (IST)

    TVK and BJP : பாஜக கூட்டணியில் தவெக ? விவரம் இதோ

    பாஜக கூட்டணியில் , தமிழக வெற்றிக் கழகம் இணையாது என பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல் சந்தோஷ் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணையும் என தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு தற்போடு முடிவு ஏற்பட்டுள்ளது

  • 10 Aug 2025 11:18 AM (IST)

    நேதாஜி மைதானத்தில் உரையாற்றும் ஸ்டாலின்

    நாளை காலை 10 மணி அளவில் உடுமலை நேதாஜி மைதானத்தில் நடக்கக்கூடிய அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர் காமராஜர் உள்ளிட்ட சில தலைவர்களின் சிலை திறப்பு உள்ளது

    விவரமாக படிக்க

  • 10 Aug 2025 11:06 AM (IST)

    நாளை திருப்பூர் விசிட்டடிக்கும் முதல்வர் ஸ்டாலின்

    ஜூலை மாதம் 22 மற்றும் 23ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திட்டமெல்லாம் தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, இன்று மாலை தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டு செல்கிறார். கோவை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நாளை திருப்பூர் சென்றடைகிறார்.

  • 10 Aug 2025 10:50 AM (IST)

    MK Stalin Covai Visit : கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின்

    இன்று கோவை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மாவட்டம் தோறும் விசிட் செய்து நலத்திட்ட உதவிகளையும், அரசு விழாக்களிலும் பங்கேற்று வரும் ஸ்டாலின், இன்று கோவை சென்று நாளை திருப்பூர் செல்லவுள்ளார்.

  • 10 Aug 2025 10:35 AM (IST)

    ஓபிஎஸ் யார் பக்கம்?

    2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.  தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால்இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தின் அணி இடம்பெருமா என்ற கேள்வி எழுந்துள்ளது

    விரிவாக படிக்க

  • 10 Aug 2025 10:19 AM (IST)

    ஓ.பன்னீர்செல்வத்திறகு அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்ப்பு

    இன்று தேசிய பாஜக பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் தமிழகத்திற்கு வர உள்ளார். தமிழகத்துக்கு வருகை தரும் பி.எல். சந்தோஷ் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், குறிப்பாக  சேர ஓ.பன்னீர்செல்வத்திறகு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிகிறது

  • 10 Aug 2025 10:10 AM (IST)

    ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை செய்யும் பாஜக

    ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் கூட்டணிக்குள் மீண்டும் கொண்டு வர பாஜக முயற்சித்து வருவதாக தெரிகிறது. 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது

  • 10 Aug 2025 09:50 AM (IST)

    பத்து நொடிகளில் குறுஞ்செய்தி வடிவில் நோட்டீஸ்

    போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவரில் வாகன எண்ணை அந்த கேமரா உடனே படம் பிடித்து தேசிய தகவல் தொழில்நுட்பத்தின் சர்ருக்கு அனுப்பும். உடனடியாக வண்டி உரிமையாளரின் செல்போனுக்கு சுமார் பத்து நொடிகளில் குறுஞ்செய்தி வடிவில் நோட்டீஸ் அனுப்பும்

    விரிவாக படிக்க

  • 10 Aug 2025 09:32 AM (IST)

    ஏ.என்.பி.ஆர் கேமரா எதற்காக?

    ஏ.என்.பி.ஆர் கேமரா என்பது ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் கேமராக்கள். இந்த கேமராக்கள் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியவும் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.  வாகனத்தின் நம்பர் பிளேட்டை போட்டோ எடுத்து போலீசிக்கு அனுப்பும்

  • 10 Aug 2025 09:18 AM (IST)

    Chennai News : 169 இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமிரா

     சென்னை மாநகரத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டுபிடிக்கும் வகையில் மேலும் 169 இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமிராக்கள் பொறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது

  • 10 Aug 2025 09:05 AM (IST)

    எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் இல்லை – திருமாவளவன்

     தமிழக அரசியலின் வரலாற்றுப் பின்னணியை விளக்கவே தான் பேசியதாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மீது மரியாதை கொண்டவன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கமும் என்னிடம் இல்லை, ஜெயலலிதா, எம்ஜிஆரை ஒரு சாதிக்குள் சுருக்கவும் இல்லை என்றார்

    Read More

  • 10 Aug 2025 08:53 AM (IST)

    Chennai Crime News : 19 வயது இளைஞர் கொலை

    சென்னை சூளைமேட்டில் 19 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் தாயை தாக்கியதால், தம்பியை கொலை செய்ததாக அண்ணண் வாக்குமூலம் அளித்துள்ளார். தாயும் சரணடைந்த நிலையில் கைது

    விரிவாக படிக்க

  • 10 Aug 2025 08:46 AM (IST)

    எம்ஜிஆர் குறித்த பேச்சு – திருமாவளவன் விளக்கம்

    எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து தவறாக விமர்சனம் செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் திருமாவளவன். கருணாநிதி நினைவுச்சின்ன நிகழ்வில் பேசிய பேச்சுக்கு விளக்கம்

  • 10 Aug 2025 08:29 AM (IST)

    ரயில் ரத்து – ரூட் இதுதான்

    சென்ட்ரல் –  அரக்கோணம் வழித்தடத்தில் கடம்பத்தூர், திருவளங்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.. இதனால், அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    Read more

  • 10 Aug 2025 08:19 AM (IST)

    சென்னை மின்சார ரயில் ரத்து விபரம்

    சென்னையில் முக்கிய போக்குவரத்தான மின்சார ரயில்கள் 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

  • 10 Aug 2025 08:05 AM (IST)

    வழக்கு தொடர்ந்த ராமதாஸ் – தள்ளுபடி செய்த கோர்ட்

    முன்னதாக, ஆகஸ்ட் 9 2025 தேதி  அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்த போதிலும்,  மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட். இதனைத் தொடர்ந்து இந்த பொதுக்குழு கூட்டமானது நடைபெற்றது.

    விரிவாக படிக்க

  • 10 Aug 2025 07:47 AM (IST)

    Anbumani Ramadoss : சொல்வதற்கு ஒன்றும் இல்லை – ராமதாஸ்

    பாமக பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுகாலம் நீடித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை என கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • 10 Aug 2025 07:32 AM (IST)

    மழை படிப்படியாக குறையும்

    தென்மேற்கு பருவ மழை தொடக்கத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை இருந்தது. இது தற்போது டெல்டா உள் மாவட்டங்களுக்கு பரவுகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும் என்றே சொல்லப்பட்டுள்ளது

    விரிவாக படிக்க

  • 10 Aug 2025 07:18 AM (IST)

    Chennai Rains : சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 10 Aug 2025 07:06 AM (IST)

    Tamil Nadu Rains : மிதமான மழைக்கு வாய்ப்பு

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 10 2025 மற்றும் ஆகஸ்ட் 11 20025 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

  • 10 Aug 2025 07:05 AM (IST)

    Tamil Nadu Weather : லேசான மழைக்கு வாய்ப்பு

    ஆகஸ்ட் 12 2025 முதல் ஆகஸ்ட் 15 2025 வரை தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 10 Aug 2025 01:07 AM (IST)

    கோவிலை சுற்றி இருந்த தீண்டாமை சுவர்

    பட்டியலின மக்கள் அங்கு வரக்கூடாது என்பதற்காகவே, அங்கிருந்த கோயிலைச் சுற்றி தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து, போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் தற்போது அந்த சுவர் இடிக்கப்பட்டது

    முழு விவரம்

Breaking News in Tamil Today 10 August 2025, Live Updates: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை ( Tamil Nadu Rains) இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையே பெய்யக்கூடும்.   பாமகவில் உட்கட்சி பிரச்னை நிலவி வருகிறது. அன்புமணி தலைமையில் பாமக (PMK Party) பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில் , அக்கூட்டம் செல்லாது என்ன ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக பாமகவில் தந்தை மகன் இருவருக்கும் அதிகார போட்டி நிலவி வருகிறது. மேலும், தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களை உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது தொடர்பான அப்டேட்களை இங்கு பார்க்கலாம் . விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஜெயலலிதா எம்ஜிஆர் குறித்து பேசிய கருத்துக்கள் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக கூறி, பாஜக அதிமுக தலைவர்கள் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழக மீனவர்கள் ஏழு பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் பல செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்

தமிழ்நாடு செய்திகளை தெரிந்துகொள்ள க்ளிக் செய்க

Published On - Aug 10,2025 6:56 AM