எடப்பாடியுடன் தவெக பொதுச்செயலர் ஆனந்த் சந்திப்பு? ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை!
TVK Anand Meet Edappadi K Palaniswami : தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் திடீரென சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், ஆதரவு குறித்து கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 சட்டமன்ற தொகுதிகள் இல்லாத காரணத்தால் தமிழக வெற்றிக் கழகம் பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி கடிதம் அனுப்பியதுடன், தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது, அந்த வகையில் முதல் கட்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்குமாறு விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இது மட்டுமின்றி, திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சி 2 மன்ற உறுப்பினர்கள் இருப்பதால் அந்த கட்சிகளிடமும் ஆதரவு அளிக்குமாறு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எடப்பாடியுடன் என்.ஆனந்த் திடீர் சந்திப்பு
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் இன்று திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவை அதிமுக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: 101 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த அதிமுக வேட்பாளர்கள்.. யார்.. யார்.. தெரியுமா?




நாளை பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா
இதில், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதா அல்லது ஆதரவு தெரிவிக்காமல் திமுக கூட்டணியில் தொடர்வதா என்பது தொடர்பான முடிவை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் அறிவிக்க உள்ளார். மேலும், இன்று பிற்பகல் 2 மணிக்கு கேரள மாநிலத்தில் இருந்து சென்னை திரும்பும் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்து பேச உள்ளார். இதில், ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்கும் பட்சத்தில், நாளை பதவி ஏற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
தீவிரமாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை
இதில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காங்கிரஸ் ஆதரவை பெற போகிறாரா அல்லது அதிமுக ஆதரவை பெற போகிறாரா அல்லது இடதுசாரி கட்சிகளின் ஆதரவை பெற போகிறாரா என்பது விஜய் எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, தவெக ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை அனைத்து கட்சிகள் சார்பிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி அதிரடி கைது.. பெரும் பரபரப்பு!