AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

101 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த அதிமுக வேட்பாளர்கள்.. யார்.. யார்.. தெரியுமா?

AIADMK Candidates Lose Deposits: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 101 இடங்களில் பெரும் தோல்வியை தழுவியதுடன் டெபாசிட் தொகையை இழந்தனர். இதே போல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

101 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த அதிமுக வேட்பாளர்கள்.. யார்.. யார்.. தெரியுமா?
101 இடங்களில் டெபாசிட் இழந்த அதிமுக வேட்பாளர்கள்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 06 May 2026 07:08 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள தொகுதிகளை தனது கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்தது. இதில், அதிமுக போட்டியிட்ட 169 சட்டமன்ற தொகுதிகளில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளில் 3- ஆம் இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதில், 101 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் தொகையை இழந்தது. 6- இல் ஒரு பங்கு வாக்கு பெறாத காரணத்தால் டெபாசிட் தொகை திரும்ப பெற முடியாமல் போனது. அதன்படி, சென்னை ராயபுரத்தில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா, 1000 விளக்கு தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி ஆகியோர் தோல்வியை தழுவினர். டெபாசிட் தொகையை இழந்தனர்.

டெபாசிட் தொகையை இழந்த 101 அதிமுக வேட்பாளர்கள்

மேலும், மாதவரம் தொகுதியில் போட்டியிட்ட மூர்த்தி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜயை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜசேகரன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட ஆதிராஜாராம், கம்பம் மற்றும் மதுரை கிழக்கு உள்ளிட்ட 101 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவியதுடன் தங்களது வைப்புத் தொகையையும் இழந்தனர். கடந்த 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சுமார் 7 இடங்களில் தோல்வியை கண்டதுடன் வைப்பு தொகையையும் இழந்தது.

மேலும் படிக்க: மே 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் விஜய்? இணையத்தில் வைரலாகும் GOAT பட காட்சி..

சென்னையில் 14 தொகுதிகளில் திமுகவை வீழ்த்திய தவெக

இதே போல, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, டி நகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக தோல்வியை சந்தித்தது. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு க ஸ்டாலின் போட்டியிட்ட சொந்த தொகுதியான கொளத்தூரில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி. எஸ். பாபுவிடன் தோல்வியை தழுவினார். இதில், சில தொகுதிகளில் திமுகவினர் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 9 தொகுதியிலும் திமுகவை வீழ்த்தி தமிழக வெற்றி கழகம் வெற்றியே பதிவு செய்துள்ளது.

நாதக சீமான் – வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

இதே போல சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 17 சட்டமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும் தோல்வியை சந்தித்ததுடன் 3- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர் அதேபோல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் பெரும் தோல்வி அடைந்ததுடன், டெபாசிட் தொகையையும் இழந்துள்ளார். அவரது கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

மேலும் படிக்க: ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் ஆதரவு கோரிய விஜய் – கே.சி வேனுகோபால்

Follow Us