AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோட்டையை அலங்கரிக்கும் பெண் ஆளுமைகள்.. 17-ஆவது சட்டப்பேரவையில் 22 பெண் எம்எல்ஏக்கள்!

22 Women Enter Legislative Assembly: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 22 பெண் வேட்பாளர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்று 17- ஆவது சட்டப் பேரவைக்குள் நுழைய உள்ளனர். அவர் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோட்டையை அலங்கரிக்கும் பெண் ஆளுமைகள்.. 17-ஆவது சட்டப்பேரவையில் 22 பெண் எம்எல்ஏக்கள்!
சட்டப்பேரவைக்குள் நுழையும் 22 பெண் எம்எல்ஏக்கள்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 May 2026 18:28 PM IST

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளை பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றி கழகம் களம் கண்ட முதல் தேர்தலிலேயே 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 73 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 53 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று 3- ஆவது இடத்துக்கு பின் தங்கி உள்ளது. இந்த நிலையில், மாபெரும் வெற்றியை பதிவு செய்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பல்வேறு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில், 22 பெண் உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் எம்எல்ஏக்களாக அடியெடுத்து வைக்க உள்ளனர்.

மேலும் படிக்க: பனையூரில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. ஆட்சி அமைக்க விஜய் போடும் ‘மாஸ்டர் பிளான்’!

சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களாக நுழையும் 22 பெண்கள்

இதில், தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 12 பெண்கள், அதிமுகவில் இருந்து 6 பெண்கள், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒரு பெண் எம்எல்ஏக்களாக பதவி ஏற்று சட்டப் பேரவையில் நுழைய உள்ளனர். அவர்கள் குறித்த விவரம்:

  • எம். ஆர். பல்லவி – தமிழக வெற்றிக் கழகம் (திரு. வி. க. நகர் தொகுதி).
  • காமாட்சி – தமிழக வெற்றிக் கழகம் ( பல்லாவரம் தொகுதி).
  • மரகதம் குமரவேல் – அதிமுக ( மதுராந்தகம் தொகுதி).
  • சிந்து – தமிழக வெற்றி கழகம் ( குடியாத்தம் தொகுதி).
  • எல். ஜெயசுதா – தமிழக வெற்றி கழகம் ( ஆரணி தொகுதி).
  • பிரேமலதா விஜயகாந்த் – தேசிய முற்போக்கு திராவிட கழகம் ( விருதாச்சலம் தொகுதி).
  • உஷாராணி – அதிமுக ( ஏற்காடு தொகுதி).
  • சௌமியா அன்புமணி – பாட்டாளி மக்கள் கட்சி ( தர்மபுரி தொகுதி).
  • மரகதம் வெற்றிவேல் – அதிமுக ( பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி).
  • விஜயலட்சுமி – தமிழக வெற்றி கழகம் ( குமாரபாளையம் தொகுதி).
  • தமிழ்ச்செல்வி – தமிழக வெற்றி கழகம் ( பவானி சாகர் தொகுதி).
  • சத்தியபாமா – தமிழக வெற்றிக் கழகம் ( திருப்பூர் வடக்கு தொகுதி).
  • கமலி – தமிழக வெற்றிக் கழகம் ( அவிநாசி தொகுதி).
  • சத்தியபாமா – அதிமுக ( தாராபுரம் தொகுதி).
  • கனிமொழி சந்தோஷ் – தமிழக வெற்றி கழகம் ( கவுண்டம்பாளையம் தொகுதி).
  • லீமா ரோஸ் அதிமுக ( லால்குடி தொகுதி).
  • சத்யா தமிழக வெற்றிக் கழகம் ( கிருஷ்ணராயபுரம்).
  • லதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ( கீழ்வேளூர் தொகுதி).
  • குழந்தை ராணி நாச்சியார் தமிழக வெற்றி கழகம் ( சிவகங்கை தொகுதி).
  • கீர்த்தனா – தமிழக வெற்றிக் கழகம் ( சிவகாசி தொகுதி).
  • ஜெகதீஸ்வரி – தமிழக வெற்றிக் கழகம் ( ராஜபாளையம் தொகுதி).
  • தாரகை கத்பர்ட் – காங்கிரஸ் ( குளச்சல் தொகுதி).

மேலும் படிக்க: சகோதரர் விஜய்க்கு வாழ்த்து.. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாதக செயல்படும்.. சீமான்!

Follow Us