AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஜோசப் விஜய் எனும் நான்” தவெக தலைவர் பதவியேற்பு விழா? வெளியானது முக்கிய அறிவிப்பு?

Tvk Leader Vijay To Take Oath : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற த. வெ. க. வேட்பாளர் ஆகியோர் வருகிற மே 7-ஆம் தேதி பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

“ஜோசப் விஜய் எனும் நான்” தவெக தலைவர் பதவியேற்பு விழா? வெளியானது முக்கிய அறிவிப்பு?
விஜய் பதவி ஏற்பு விழா
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 05 May 2026 16:29 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் சுமார் 1.58 கோடி வாக்குகளுடன் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்துடன், தவெக களம் கண்ட முதல் தேர்தலிலேயே 34.8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இருந்தாலும், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத நிலை உள்ளது. இதன் காரணமாக, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இடதுசாரி கட்சிகள் என்பன உள்ளிட்ட கட்சிகளிடம் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆதரவு கோரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்

மேலும், கேரளாவில் இருந்து இன்று சென்னை திரும்பும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை புதன்கிழமை ( மே 5- ஆம் தேதி) சந்திக்க இருப்பதாகவும், அப்போது, ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாகவும் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் ஆலோசகர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரிடம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

மே 7- ஆம் தேதி முதல்வராக விஜய் பதவியேற்க திட்டம்

மேலும், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரையும் மாமல்லபுரத்துக்கு வருகை தருமாறு விஜய் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, அவர்கள் 3 நாட்கள் மாமல்லபுரத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று தவெக தலைமை அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகிற மே 7- ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சி

அத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவி ஏற்கும் விழாவை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விஜய் பதவி ஏற்பு விழா நடத்த திட்டமிட்டு இருக்கும் காரணத்தால், இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் விஜய் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டமன்ற குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Follow Us