AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரியில் அதிரடி என்ட்ரி.. தேசிய – மாநில கட்சிகளை அதிரவைத்து 3-ஆவது சக்தியாக உருவெடுத்த தவெக!

Puducherry Election Tvk: புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய மற்றும் மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ளி 16.66 சதவீத வாக்குகளுடன் தமிழக வெற்றிக் கழகம் 3- ஆம் இ"த்தை பிடித்துள்ளது. அத்துடன், 1 லட்சத்து 43 ஆயிரத்து 477 வாக்குகள் பெற்றுள்ளது.

புதுச்சேரியில் அதிரடி என்ட்ரி.. தேசிய – மாநில கட்சிகளை அதிரவைத்து 3-ஆவது சக்தியாக உருவெடுத்த தவெக!
புதுச்சேரியில் 3- ஆம் இடம் பிடித்த தவெக
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 May 2026 15:18 PM IST

புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று திங்கள்கிழமை எண்ணப்பட்டன. இதில், புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் தேசிய மற்றும் மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அதன்படி, என். ஆர். காங்கிரஸ் கட்சி 16 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 1 லட்சத்து 98 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று 23.02 சதவீத வாக்குகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 1 லட்சத்து 51 ஆயிரத்து 492 வாக்குகள் பெற்று 17.60 சதவீத வாக்குகளுடன் 2- ஆம் இடத்தை பிடித்துள்ளது.

16.66 சதவீத வாக்குகளுடன் 3- ஆம் இடத்தில் தவெக

இந்த தேர்தலில் யாரும் பெரிதளவில் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக்கழகம் 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டதுடன் 1 லட்சத்து 43 ஆயிரத்து 477 வாக்குகளை பெற்று 16.66 சதவீத வாக்குகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், தமிழக வெற்றி கழகத்திற்கு 2 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர். அரசியலில் பெரிய கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்பட பெரிய கட்சிகளை வாக்கு சதவீதத்தில் பின்னுக்கு தள்ளி 3- ஆம் இடத்தை தமிழக வெற்றிக் கழகம் பிடித்துள்ளது.

மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. நோட்டாவுக்கு குறைந்த மக்கள் ஆதரவு.. புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

பின்னுக்கு தள்ளப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள்

13 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 36 வாக்குகள் பெற்று 13.83 சதவீதத்துடன் 4- ஆம் இடத்தையும், 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 5,583 வாக்குகள் பெற்று 12.26 சதவீதத்துடன் 5- ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் நேயம் மக்கள் கட்சி உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

புதுச்சேரியில் தவெகவுக்கு 3 எம்எல்ஏக்கள்

அந்த தொகுதியில், நேயம் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் சுயேட்சை எம்எல்ஏவும் ஆன நேரு என்ற குப்புசாமி வெற்றி பெற்றார். இதன் மூலம், புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்திற்கு 3 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர். அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் களம் கண்ட முதல் தேர்தலிலேயே இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை பெற்றது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க: வறுத்தம் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள்.. நீங்கள் இருக்க கவலை என்ன? மு.க ஸ்டாலின் உருக்கமான பதிவு..

Follow Us