AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாபெரும் வெற்றி பெற்றும் தனிப்பெரும்பான்மை இல்லை.. ஆட்சி அமைப்பதற்கு விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன!

Tamilaga Vettri Kazhagam: தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் 12 இடங்கள் தேவைப்படுகிறது. இதில், விஜய் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம்.

மாபெரும் வெற்றி பெற்றும் தனிப்பெரும்பான்மை இல்லை.. ஆட்சி அமைப்பதற்கு விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன!
ஆட்சி அமைப்பதற்கு விஜய்க்கு இருக்கும் வழிகள்Image Source: social media
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 May 2026 14:41 PM IST

தமிழக அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்துடன், தமிழக வெற்றி கழகம் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் உயர்ந்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தது 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். அத்துடன் 118 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி அல்லது தேர்தல் கூட்டணியால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். ஆனால், தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளிலும், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

தவெகவுக்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை

இதனிடையே, தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், தவெக வெற்றி பெற்ற தொகுதி 107- ஆக குறையும். அதுமட்டுமின்றி, தவெகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் சபாநாயகராக நியமனம் செய்யப்படுவார். இதனால், வாக்கெடுப்பின்போது அவர் வாக்களிக்க தகுதியற்றவர் ஆவார். இதனால், மேலும் ஒரு இடம் குறையும். அதன்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மையே நிரூபிப்பதற்காக 12 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலை உள்ளது.

மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. நோட்டாவுக்கு குறைந்த மக்கள் ஆதரவு.. புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

ஆட்சி அமைப்பதற்கு விஜய் முன் இருக்கும் வாய்ப்புகள்

எனவே, திராவிட முன்னேற்ற கழகம் அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் உள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதில், விஜய்க்கு அதிமுக ஆதரவு அளிக்கலாம். ஆனால், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை தமிழக வெற்றி கழகத்திடம் இருந்து அதிமுக எதிர் பார்க்கும் நிலை உருவாகும். இதனிடையே, தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அத்துடன், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், விஜய்யிடம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

ராகுல் காந்தியிடம் ஆதரவு கேட்ட விஜய்

அப்போது, தங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு ராகுல் காந்தியிடம், விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் ஆதரவு தமிழக வெற்றி கழகத்திற்கு கிடைக்கும் என தெரிகிறது. இது மட்டும் இன்றி இடதுசாரி கட்சிகள், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பனையூரில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. ஆட்சி அமைக்க விஜய் போடும் ‘மாஸ்டர் பிளான்’!

Follow Us