AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை மற்றும் வட மாவட்டங்களில் எடுபட்ட தவெக ஃபார்முலா.. டெல்டா மாவட்டங்களிலும் கைகொடுத்ததா?

திமுகவின் கோட்டையாக விளங்கிய சென்னை நகரிலும் தமிழக வெற்றிக்கழகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 16 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வடமாவட்டங்களிலும் அதன் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த சூழலில், டெல்டா மாவட்டங்களில் கலவையான நிலை காணப்படுகிறது.

சென்னை மற்றும் வட மாவட்டங்களில் எடுபட்ட தவெக ஃபார்முலா.. டெல்டா மாவட்டங்களிலும் கைகொடுத்ததா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 05 May 2026 07:07 AM IST

மே 4, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சுமார் 107 இடங்களில் முன்னிலை வகித்து அபார வெற்றி பெற்றுள்ளது. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத சாதனையை தமிழக வெற்றிக்கழகம் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, தனது முதல் தேர்தலிலேயே சுமார் 34.90% வாக்குகளை பெற்றுள்ளது.

திமுகவின் கோட்டையாக விளங்கிய சென்னை – தகர்த்த தவெக:

திமுகவின் கோட்டையாக விளங்கிய சென்னை நகரிலும் தமிழக வெற்றிக்கழகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 16 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வடமாவட்டங்களிலும் அதன் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த சூழலில், டெல்டா மாவட்டங்களில் கலவையான நிலை காணப்படுகிறது. சில பகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்றாலும், பொதுவாக அந்த பகுதிகள் திமுகவின் கோட்டையாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் திமுகவின் ஆதிக்கம் தொடர்கிறது.

தஞ்சையில் நிலவரம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், ஆறு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திருவையாறு, திருவிடைமருதூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாபநாசம் தொகுதியில் அதிமுகவும், தஞ்சாவூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகமும் வெற்றி பெற்றுள்ளன.

புதுக்கோட்டையில் திமுக முன்னிலை:

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக பத்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றி பெற்றுள்ளார்; தமிழக வெற்றிக்கழகத்தின் வீரமணி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்திலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. தமிழக வெற்றிக்கழகம் சில இடங்களில் மட்டுமே தன்னுடைய நிலையை பதிவு செய்துள்ளது

நாகை மாவட்டம்:

நாகை மாவட்டத்தை பொறுத்தவரை 3 தொகுதிகள்  உள்ளன. மூன்றையுமே திராவிட கட்சிகளே வென்றுள்ளன. நாகை, கீழ்வேளூரை திமுக கூட்டணி கட்சிகளும், வேதாரண்யத்தை அதிமுகவும் வென்றுள்ளன

எனவே, சென்னை மற்றும் வடமாவட்டங்களில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கிடைத்த அபார ஆதரவு, டெல்டா மாவட்டங்களில் அதே அளவில் இல்லை என்பதும், அங்கு திமுக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வைத்திருப்பதும் தெளிவாகிறது. இருப்பினும், சில தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் தனது வெற்றியை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், தமிழக வெற்றிக்கழகம் 107 இடங்களில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இரண்டாவது இடத்தில் திமுகவும், மூன்றாவது இடத்தில் அதிமுகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us