முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்.. போலீஸ் பாதுகாப்புகள் வாபஸ்!!
இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் பொறுப்பு ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏற்றுக்கொண்டுள்ளார். தொடர்ந்து, அவர் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை அவர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது.
சட்டமன்றத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த ஏப்.23ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், தமிழகமே எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தது. அதன்படி, முதல்முறையாக தேர்தலை எதிர்கொண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 74 இடங்களை பெற்று எதிர்கட்சியாக அமைந்துள்ளது. தொடர்ந்து, அதிமுக கூட்டணி 53 இடங்களை பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’யையே மக்கள் விரும்புகின்றனர்”.. புயலை கிளப்பிய திருமாவளவன்!!
திராவிட கட்களுக்கு மாற்றாக தவெக:
இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. தமிழகத்தில் 1952 முதல் 1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி செய்தது. அதன்பின் தற்போது வரை, அதாவது 59 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி செய்தன. அவர்கள் இருவரும் வேறு யாருக்கும் வாய்ப்புத் தரவில்லை. ஆனால் முதல் முறையாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவுக்கு அந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று தெரிகிறது.
ராஜினாமா செய்த முதல்வர் ஸ்டாலின்:
இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் பொறுப்பு ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏற்றுக்கொண்டுள்ளார். தொடர்ந்து, அவர் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை அவர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது. இதையடுத்து தவெக ஆட்சி அமைக்கும். குறிப்பாக, பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு இன்னும் 11 இடங்கள் தேவை எனும் நிலை உள்ளது. இதற்காக, விரைவில் சட்டசபையை கூட்டி தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
போலீஸ் பாதுகாப்பு வாபஸ்:
முதல்வர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதேபோல், அமைச்சர்களும் தங்களது அரசு பங்களாவையும், தலைமைச்செயலகத்தில் உள்ள தங்களது அறைகளையும் காலி செய்து வருகின்றனர். இதனிடையே, அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: 2026 தேர்தல் களம்.. வீழ்ந்த திமுக கோட்டைகளும், அமைச்சர்களும்.. தவெகவின் வரலாற்று சாதனையும்..