AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு.. உள்ளாட்சி முதல் மக்களவை வரை தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் உறுதி!

Congress TVK Alliance: தமிழக வெற்றிக் கழகத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் உள்ளாட்சி மற்றும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று நிபந்தனையுடன் ஆதரவு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மற்றும் பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு.. உள்ளாட்சி முதல் மக்களவை வரை தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் உறுதி!
உள்ளாட்சி-மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து சந்திப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 06 May 2026 13:16 PM IST

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டதுடன் 108 சட்டமன்ற தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்கள் இல்லாத காரணத்தால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை தமிழக வெற்றி கழகம் கேட்டு பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஆதரவு தருமாறு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இதேபோல, அதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகளிடமும் ஆதரவு கோரி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. இதில், தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று காங்கிரஸ் தலைமை ஒருமனதாக முடிவு எடுத்தது. இதனை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் உறுதிப்படுத்தி இருந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி முடிவெடுக்கலாம் என்று அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்காக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பான அறிவிப்பை பிற்பகலில் வெளியிடுவதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க: எடப்பாடியுடன் தவெக பொதுச்செயலர் ஆனந்த் சந்திப்பு… ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை!

உள்ளாட்சி – மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். இதில், மதவாத கட்சியுடன் எந்த தேர்தலிலும் கூட்டணி அமைக்க கூடாது என்றும், வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் காங்கிரஸ் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைத்து தேர்தலில் சந்திக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டார்.

தவெகவுடன் – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம்

இதைத் தொடர்ந்து, பனையூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவு குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மற்றும் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். இதன் மூலம், கடந்த 2016, 2019, 2021, 2024, 2026 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்த நிலையில், 10 ஆண்டு கால கூட்டணி முடிவடைந்துள்ளது.

மேலும்: அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை.. நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க திட்டம்.. பரபரக்கும் அரசியல் களம்?

Follow Us