AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விசிக – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக கடிதம்.. என்ன நிலைபாட்டில் உள்ளது இடதுசாரிகள்!

Tvk Letter To Left Parties: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுதாரி கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

விசிக – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக கடிதம்.. என்ன நிலைபாட்டில் உள்ளது இடதுசாரிகள்!
இடதுசாரிகளுக்கு கடிதம் எழுதிய தவெக தலைவர் விஜய்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 06 May 2026 11:15 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால் தமிழக வெற்றி கழகம் பிற கட்சிகளின் ஆதரவை பெறும் நிலை உள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியிடம் ஆதரவு கேட்டு விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை ஆலோசனை மேற்கொண்டதுடன், இதில், தமிழக காங்கிரஸ் முடிவெடுக்கலாம் என்று அதிகாரம் அளித்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் காங்கிரஸ் நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், கிட்டத்தட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிகிறது.

விசிக – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக கடிதம்

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு வீரபாண்டியன் ஆகியோருக்கு ஆதரவு கோரி கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, காங்கிரஸ் கட்சி வசம் 5 எம்எல்ஏக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி வசம் 2 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வசம் 2 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வசம் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

மேலும் படிக்க: அதிமுகவின் தொடர் வீழ்ச்சி.. 150லிருந்து 47 இடங்களாகச் சரிவு.. இபிஎஸ்-க்கு வலுக்கும் நெருக்கடி!!

இடதுசாரிகள் வசமிருக்கும் 11 எம்எல்ஏக்கள்

மொத்தமாக 11 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் என தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் நம்புகின்றன. இதனிடையே, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸிடம் ஆதரவு கோரி விஜய் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால், பாட்டாளி மக்கள் கட்சி வசம் 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் மூலம் ஆட்சி அமைத்தல் பெரும்பான்மை கிடைத்து விடும் என எண்ணப்படுகிறது.

இடதுசாரி கட்சிகள் நிலைப்பாடு என்ன

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வருகிற மே 9- ஆம் தேதி செயற்குழு கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டு தெரிவிப்பதாக அந்த கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதே போலஸ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகமும் ஆலோசனை மேற்கொண்டு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க: முதல்வராக பொறுப்பேற்றதும் விஜய்யின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?..

Follow Us