AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வராக பொறுப்பேற்றதும் விஜய்யின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?..

அக்கட்சிக்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன. எனினும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய், ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார். அதன்படி, ஆளுநரும் அதிக வாக்குசதவீதம் பெற்ற கட்சி என்ற அடிப்படையில், விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க உள்ளார். நாளை நேரு அரங்கத்தில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வராக பொறுப்பேற்றதும் விஜய்யின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?..
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 May 2026 11:24 AM IST

தமிழக அரசியலில் புதிய வரவாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அதோடு, முதல் முறையாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தவெக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடிக்க உள்ளது. தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், அக்கட்சிக்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன.

இதையும் படிக்க: விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் காங்கிரஸ்?.. கடும் நிபந்தனையுடன் அதிரடி முடிவு..

ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய்:

எனினும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய், ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார். அதன்படி, ஆளுநரும் அதிக வாக்குசதவீதம் பெற்ற கட்சி என்ற அடிப்படையில், விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க உள்ளார். நாளை நேரு அரங்கத்தில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்றதும் முதல் கையெழுத்து எதற்காக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தவெக கொடுத்த முக்கிய வாக்குறுதிகள்:

தவெக தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றிருந்தது. அதில், குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் 60 வயது எட்டும் வரையில், அவர்க ளுடைய வங்கிக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 வரவு வைக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாநிலம் முழுவதும் இயங்கும் நகர, மாநகர, மாவட்டங்களுக்கு இடை யேயான அனைத்து அரசு பஸ்களிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் வெற்றிப்பயணம் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் எனவும் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.

இதையும் படிக்க: 2026 சட்டமன்றத் தேர்தல் அதிர்வுகள்.. தவெகவின் அதீத எழுச்சி.. பின்னடைவைச் சந்தித்தது திமுகவா.. அதிமுகவா?..

விஜய்யின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?

இந்நிலையில், ஆட்சி பொறுப்பேற்றதும் விஜய் இரண்டு முக்கிய திட்டங்களில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் ‘வெற்றிப்பயணம்’ திட்டத்திலும், தகுதியுள்ள வீடுகளுக்கு வ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் ஆகிய 2 திட்டங்களில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us