AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை.. நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க திட்டம்.. பரபரக்கும் அரசியல் களம்?

Tvk Talks AIADMK : தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கேட்டு அதிமுக தலைமையிடம், தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் முடிவில் அதிமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது .

அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை.. நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க திட்டம்.. பரபரக்கும் அரசியல் களம்?
அதிமுகவுடன், தவெக பேச்சுவார்த்தை
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 06 May 2026 06:30 AM IST

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சுமார் 50 ஆண்டுகால வரலாற்று கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி முதல் தேர்தலிலேயே தனித்து 108 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னால் 1.50 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக தமிழக வெற்றி கழகம் 34.8 சதவீத வாக்கு வங்கியை பெற்றுள்ளது. இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 தொகுதிகள் தமிழக வெற்றி கழகம் வசம் இல்லாமல் போனது. இதனால், ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரி காங்கிரஸ் தலைமையிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரியதாகவும் தெரிகிறது.

அதிமுகவுடன் – தவெக பேச்சுவார்த்தை

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருமாறு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக அதிமுக தலைமையிடம், தமிழக வெற்றி கழகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று முடியும் என எதிர்பார்க்கிறேன்.

மேலும் படிக்க: விஜய் அமைச்சரவையில் யார்.. யார்.. இடம் பெறுவார்? தவெக பதவியேற்பு விழா எப்போது!

விஜய்க்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் ஒருமனதாக முடிவு

தமிழகத்தில் மீண்டும் அண்ணன் எடப்பாடி தலைமையிலான நல்லாட்சி அமையும் என்று தெரிவித்தார். அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், விஜய் ஆதரவு கோரி இருந்தார். இதற்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் முடிவை தமிழக காங்கிரஸ் கட்சி எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆளுநருடன் விஜய் சந்திப்பு – நாளை பதவியேற்பு?

அந்த வகையில், ஏற்கனவே தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தவெக தலைவர் விஜய் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில், இன்று புதன்கிழமை தமிழக ஆளுநரை விஜய் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் நிலையில், நாளை மே 7- ஆம் தேதி ( வியாழக்கிழமை) தவெக தலைவர் விஜய் தமிழக முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்று தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: தேர்தலில் பண நாயகம் ஆழ குழுி தோண்டி புதைக்கப்பட்டது.. தவெக தலைவர் விஜய்!

Follow Us