AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மு.க.ஸ்டாலின் தோல்வியை தாங்காத இதயம்.. திமுக கிளைச் செயலர் அதிர்ச்சியில் மரணம்.. கடலூரில் சோக சம்பவம்!

DMK Member Dies: தமிழக சட்டமன்ற தேர்திலில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில், இதனால், அதிர்ச்சி அடைந்த திமுக கிளைச் செயலர் ஒருவர் வீட்டிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

மு.க.ஸ்டாலின் தோல்வியை தாங்காத இதயம்.. திமுக கிளைச் செயலர் அதிர்ச்சியில் மரணம்.. கடலூரில் சோக சம்பவம்!
ஸ்டாலின் தோல்வியால் திமுக உறுப்பினர் உயிரிழப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 06 May 2026 08:43 AM IST

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் ( 56 வயது). இவர், திமுக கிளை செயலாளராக இருந்து வந்தார். மேலும், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பழனியம்மாள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் திங்கள்கிழமை ( மே 4- ஆம் தேதி) தேர்தல் முடிவுகளை வீட்டில் இருந்து பன்னீர்செல்வம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்ததையும், மற்ற அனைத்து தொகுதிகளில் தோல்வி அடைந்ததையும் பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தார். மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மயங்கி விழுந்து உயிரிழந்த திமுக கிளை செயலர்

இதில், திடீரென பன்னீர் செல்வத்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீவிர சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க: தேர்தலில் பண நாயகம் ஆழ குழுி தோண்டி புதைக்கப்பட்டது.. தவெக தலைவர் விஜய்!

கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த மு.க.ஸ்டாலின்

இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து, பன்னீர் செல்வத்தின் உறவினர்கள் சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சேத்தியாதோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி. எஸ். பாபுவிடம் பெரும் தோல்வியே தழுவினார்.

தவெக தொண்டர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

இந்த அதிர்ச்சியான சம்பவத்தை கேட்டு பன்னீர்செல்வம் வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டும் இன்றி கிராமம் மற்றும், கட்சியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முந்தைய நாள் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தோல்வி அடைந்து விடுவார் என்று பரவிய வதந்தியை நம்பி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு இளைஞர் தன்னைத்தானே கழுத்தில் கத்தியால் அறுத்துக் கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் காங்கிரஸ்?.. கடும் நிபந்தனையுடன் அதிரடி முடிவு..

Follow Us