மு.க.ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு.. திமுக டூ தவெக.. யார் இவர்..!
Kolathur Tvk Candidate VS Babu: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலினை வீழ்த்தி 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்டபாளர் வி. எஸ். பாபு யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், நட்சத்திர தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின், தமிழக வெற்றி கழகம் சார்பில் வி. எஸ். பாபு, சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டனர். இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் என்ன பட்ட நிலையில், ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி. எஸ். பாபு தொடர்ந்து முன்னிலை வகித்தார். இந்த தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்ற மு. க. ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார். அதன்படி, கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற இறுதி வாக்குகள் எண்ணிக்கை சுற்றில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு 80,110 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திமுகவில் இருந்து வந்த வி.எஸ்.பாபு
முதல்வர் மு. க. ஸ்டாலின் 72,988 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இவர்களுக்கு இடையேயான வாக்கு சதவீதம் 8122 ஆகும்., இந்த நிலையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மு. க. ஸ்டாலினை வீழ்த்திய தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு யார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுதி இருக்கும். தற்போது, வி. எஸ். பாபு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், வி. எஸ். பாபு ஒரு காலத்தில் திமுகவில் இருந்துள்ளார். அப்போது, வட சென்னையின் மாவட்ட செயலாளராக பதவி வகித்திருந்தார்.
மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு உதவிய வி.எஸ்.பாபு
கடந்த 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புரசைவாக்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வி.எஸ். பாபு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். பின்னர், 2011 ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உதயமானது. இதில், மு க ஸ்டாலின் வேட்பாளராக களம் இறங்கினார். அப்போது, அவரது வெற்றிக்கு வி. எஸ். பாபு முக்கிய காரணமாக இருந்தார். இதன் காரணமாக அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை விட 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெற்றார். இதனால், திமுக தலைமை வி எஸ் பாபு மீது அதிருப்தியில் இருந்தது.
ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி
அதே வேளையில், அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த சேகர் பாபு வாசம் வடசென்னை சென்றது. பின்னர், கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட வி எஸ் பாபு அதிமுகவில் இணைந்தார். அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது, கொளத்தூர் தொகுதியில் மு க ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்துள்ளார். ஒரு காலத்தில் மு க ஸ்டாலின் வெற்றிக்காக உழைத்தவர், தற்போது அவரையே வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.