AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.. மண்டல வாரியாகக் கட்சிகள் பெற்ற சீட் விவரம்..

மேற்கு மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் தவெக மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது. இங்கு தவெக 28 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. திமுக கடந்த முறை 16 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை 9 இடங்களாகக் குறைந்துள்ளது. அதிமுக மிகக்கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த முறை வென்ற 21 தொகுதிகளில் 20 இடங்களை இழந்துள்ளது.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.. மண்டல வாரியாகக் கட்சிகள் பெற்ற சீட் விவரம்..
இபிஎஸ், மு.க. ஸ்டாலின், விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 May 2026 12:12 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், மண்டல வாரியாகக் கட்சிகள் பெற்ற இடங்கள் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக-வின் இந்த வெற்றிக்கு வட மற்றும் மேற்கு மண்டலங்கள் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றிப் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களைப் பெற்று எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், அக்கட்சிக்கு இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகின்றன.எனினும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய், ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார். அதன்படி, ஆளுநரும் அதிக வாக்குசதவீதம் பெற்ற கட்சி என்ற அடிப்படையில், விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க உள்ளார்.

இதையும் படிக்க: 2026 சட்டமன்றத் தேர்தல் அதிர்வுகள்.. தவெகவின் அதீத எழுச்சி.. பின்னடைவைச் சந்தித்தது திமுகவா.. அதிமுகவா?..

சென்னை மற்றும் வடக்கு மண்டலம்:

திமுக கூட்டணி தனது செல்வாக்கை டெல்டா மற்றும் தெற்கு மண்டலங்களில் ஓரளவிற்குத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் கைப்பற்றி ‘ஒயிட் வாஷ்’ செய்திருந்தது திமுக. ஆனால், இந்த முறை திமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளையும் தவெக அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது. அதோடு, வடக்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 43 தொகுதிகளில், தவெக 18 இடங்களிலும், அதிமுக 16 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக இங்கு பெரும் பின்னடைவைச் சந்தித்து 9 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

மேற்கு மண்டலத்தில் தவெக-வின் ஆதிக்கம்:

மேற்கு மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் தவெக மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது. இங்கு தவெக 28 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. திமுக கடந்த முறை 16 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை 9 இடங்களாகக் குறைந்துள்ளது. அதிமுக மிகக்கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த முறை வென்ற 21 தொகுதிகளில் 20 இடங்களை இழந்துள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9-ல் அதிமுக தோல்வியடைந்துள்ளது. கோவையில் தவெக 6 இடங்களையும், திமுக 3 இடங்களையும், அதிமுக வெறும் 1 இடத்தையும் பெற்றுள்ளன.

இதையும் படிக்க: விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் காங்கிரஸ்?.. கடும் நிபந்தனையுடன் அதிரடி முடிவு..

டெல்டா மற்றும் மத்திய மண்டலம்:

மத்திய மற்றும் டெல்டா மண்டலத்தில் உள்ள 59 தொகுதிகளில் திமுக 31 இடங்களைக் கைப்பற்றித் தனது செல்வாக்கைத் தக்கவைத்துள்ளது (கடந்த முறை 41 இடங்களில் வென்றிருந்தது). தவெக 17 இடங்களையும், அதிமுக 11 இடங்களையும் இந்தப் பகுதியில் பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், திமுக மற்றும் அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பல இடங்களைத் தவெக தனது வசமாக்கி, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இத்தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவருகிறது.

Follow Us