அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம் – தமிழக அரசு அறிவிப்பு – ஓய்வூதியம் எப்போது?
Bank Strike Alert : நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை செப்டம்பர் 25, 2026 நாளையே வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 24 : நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை செப்டம்பர் 25, 2026 நாளையே வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக நிதித் துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணிபுரியும் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 28, 2026 முதல் 30, 2026 வரை 3 நாட்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்ற சூழல் உருவானது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு முன்கூட்டியே சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க முடிவெடுத்துள்ளது.
இதையும் படிக்க : சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55 பவுன் தங்க கிரீடம் மாயம்.. என்ன தான் நடந்தது.. போலீசாரின் முதல் கட்ட விசாரணை கூறுவதென்ன!




இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செப்டம்பர் மாத ஊதியம் செப்டம்பர் 25, 2026 நாளையே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் அன்றைய தினமே ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கும் நாளையே சம்பளம்
மத்திய அரசு ஊழியர்களுக்கும் செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் செப்டம்பர் 25, 2026 அன்று வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியமும் அதே நாளில் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் ஏற்கெனவே உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வங்கி வேலைநிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க தமிழக நிதித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் ஜனவரி மாதத்துக்குள் தவெக ஆட்சி கவிழும்.. திமுக ஆட்சியமைக்கும்.. ஆர். எஸ். பாரதி!
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்
வேலை நிறுத்தம் அறிவித்துள்ள செப்டம்பர் 28, 2026 திங்கட்கிழமை என்பதால், அதற்கு முந்தைய செப்டம்பர் 26, 2026 சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 27, 2026ஞாயிற்றுக்கிழமை ஆகியவை வார விடுமுறையையும் சேர்த்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படவாய்ப்பிருக்கிறது. இதனையடுத்து வங்கி வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய நிதி அமைச்சகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 27, 2026 ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் வங்கி சேவைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைநிறுத்தத்துக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையில் பொதுமக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.