AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: நாளை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather today : இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கலிங்கப்பட்டினத்தின் தென்மேற்கு பகுதியில் செப்டம்பர் 24, 2026 இன்று அதிகாலை 1 மணியளவில் கரையை கடந்தது. இதன் காரணமாக செப்டம்பர் 30, 2026 வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tamil Nadu Weather forecast: நாளை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Sep 2026 15:04 PM IST

சென்னை, செப்டம்பர் 24 : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கலிங்கப்பட்டினத்தின் தென்மேற்கு பகுதியில் செப்டம்பர் 23, 2026 நேற்று இரவு 11 மணி முதல் செப்டம்பர் 24, 2026 இன்று அதிகாலை ஒரு மணிக்குள் கரையைக் கடந்ததாக வானிலை மையம் தெரிவித்ததுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் செப்டம்பர் 25, 2026 நாளை 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நாளை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கலிங்கப்பட்டினத்தின் தென்மேற்கு பகுதியில் செப்டம்பர் 24, 2026 இன்று அதிகாலை 1 மணியளவில் கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் செப்டம்பர் 30, 2026 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் 24, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்று அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : சென்னையில் கொடூரம்.. படிக்கட்டுப் பயணத்தை கண்டித்த நடத்துனர் மீது மாணவர்கள் சரமாரி தாக்குதல்!

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 25, 2026 நாளை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் படி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 26, 2026 சனிக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “இடைத்தேர்தலில் தவெகவுக்கு தமாகா ஆதரவு!”.. ஜி.கே.வாசன் திடீர் அறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை செப்டம்பர் 25, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us