AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீரமணிக்கு தொடர்பான இடங்களில் விடிய விடிய சோதனை.. பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய டிஜிட்டல் ஆதாரங்கள்..

Veeramani Case: இந்த வழக்கில் வீரமணியிடம் கோடிக்கணக்கில் பணம் பெற முயன்றதாக கூறப்படும் நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களின் பங்கு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரமணிக்கு தொடர்பான இடங்களில் விடிய விடிய சோதனை.. பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய டிஜிட்டல் ஆதாரங்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Sep 2026 08:15 AM IST

செப்டம்பர் 24, 2026: சென்னையில் சிறுமி தொடர்பான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் வீரமணி மற்றும் அவரது தொடர்புடைய நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அவருக்கு தொடர்புடைய 5 இடங்களில் சிசிபி அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்த சோதனையில் செல்போன்கள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை – தீவிரமாகும் விசாரணை:

போலீசாரின் தகவலின்படி, கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர் தனது அலுவலகத்தில் பென்டிரைவ் ஒன்றை வழங்கியதாகவும், அதில் வீரமணி சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் காட்சிகள் இருப்பதாகவும் கூறி, பாலியல் தடுப்பு பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதில் இடம்பெற்றிருந்த நபர் வீரமணி என்பதை அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: அக்டோபர் 10-ல் தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி.. ‘மாணவர்களின் குரல்’ நிகழ்வில் பங்கேற்க மாணிக்கம் தாகூர் எம்பி அழைப்பு!

இந்த வழக்கில் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி சிசிபி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், வீரமணி தொடர்பான ஆட்சேபனைக்குரிய வீடியோவை வைத்திருந்ததாகவும், அது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும் கூறப்படும் கணேசன், செப்டம்பர் 22-ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வீரமணிக்கு தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனை:

கணேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பெரம்பூரில் பிரகாஷின் வீடு, ராயப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகம், கோபாலபுரத்தில் வீரமணிக்கு தொடர்புடைய அலுவலகம், தியாகராய நகரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் 3 இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், கோபாலபுரம் மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் சோதனை தொடர்ந்து நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: “ரூ.10,000 வரை உயர்ந்த சம்பளம்!”.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்.. வெளியான அதிரடி அறிவிப்பு!

பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய டிஜிட்டல் ஆதாரங்கள்:

இதனிடையே, இந்த வழக்கில் வீரமணியிடம் கோடிக்கணக்கில் பணம் பெற முயன்றதாக கூறப்படும் நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களின் பங்கு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட செல்போன்கள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெறும் என சிசிபி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow Us