AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவு?

New Secretariat Plan: தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பட்டினப்பாக்கத்திற்கு மாற்றாக வேறு இடத்தைத் தேர்வு செய்யவும் அரசு தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Sep 2026 09:57 AM IST

செப்டம்பர் 24, 2026: சென்னை பட்டினப்பாக்கத்தில் கடற்கரையை ஒட்டி ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக்கழக அரசு கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்:

அதன் ஒரு பகுதியாக, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி, வருவாய் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 25.5 ஏக்கர் நிலத்தில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க: வீரமணிக்கு தொடர்பான இடங்களில் விடிய விடிய சோதனை.. பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய டிஜிட்டல் ஆதாரங்கள்..

வலுக்கும் எதிர்ப்புகள்:

இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி எதிர்ப்புகள் எழுந்தன. மீனவர் அமைப்புகள் மட்டுமின்றி திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: “ஆர்ப்பாட்டத்துடன் கலைந்து செல்பவர்கள் அல்ல விசிக!”.. மக்கள் பிரச்சனைகளுக்காக முதல்வரை சந்தித்து மனு அளிப்போம்.. திருமாவளவன்

தொடர்ந்து மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக சென்னை மாவட்ட மீனவர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த விளக்கம்:

இதனிடையே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அளித்த விளக்கத்தில், பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாது என்றும், புதிய தலைமைச் செயலக திட்டம் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மதிப்பீட்டுப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

அரசாணை ரத்து செய்ய முடிவு?

இந்த நிலையில், தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பட்டினப்பாக்கத்திற்கு மாற்றாக வேறு இடத்தைத் தேர்வு செய்து, அங்கு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அதன்பின்னர் புதிய அரசாணை வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us