AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவறான விஷயம்… தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 3வதாக பாடப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் நிர்மல் குமார், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு தான் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் செய்தது தவறான விஷயம் என்றும் தெரிவித்தார்.

தவறான விஷயம்… தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
அமைச்சர் நிர்மல்குமார்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Jul 2026 13:23 PM IST

சென்னை, ஜூலை 28 : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா ஜூலை 28, 2026 இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடலும், 2வதாக தேசிய கீதம் மற்றும் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது மாபெரும் சர்ச்சையானது. குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயருடைய பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு 3வது இடம் வழங்கப்பட்டிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய நிர்மல்குமார், தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு தான் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். இதற்கு மாறுதலான வழிகாட்டுதல்களை ஆளுநர் அளித்துள்ளதாக கேள்விப்படுகிறோம். இது தவறான விஷயம் என்றார்.

இதையும் படிக்க : மனுவோடு வாங்க.. பணத்தோடு வராதீங்க.. மானாமதுரையில் இப்படியொரு வட்டாட்சியரா? சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் நோட்டீஸ்!

மேலும் பேசிய அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்வதாக உயர்நநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில் அடுத்த கட்டமாக இதில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசித்து முடிவெடுப்போம்.

மேகேதாட்டு விவகாரம் குறித்து பல தரப்பினரிடமும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் பின்னர் எந்த நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்கும் என முதல்வர் முடிவெடுப்பார். தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதில் நிறைய மாறுதலான வழிகாட்டுதல்களை ஆளுநர் மாளிகை அளித்ததாக கேள்விப் படுகிறோம். பாஜக ஆளும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகளின் வாழ்த்தே முதலில் பாடப்படுகிறது. தமிழகத்தில் மாறாக செய்வது தவறான விஷயம். எனவே தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க : அரசுப் பேருந்துகளில் புதிய ரூல்ஸ்.. பயணிகளே உடனே தெரிஞ்சுக்கோங்க.. போக்குவரத்து துறை உத்தரவு!

இந்த பட்டமளிப்பு விழா குறித்து சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர், “ இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள இருப்பதால் விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என ஆளுநர் மாளிகை உறுதியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியிருந்தார்.

Follow Us