AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை – பரபரப்பு தகவல்

கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. மேலும் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி, பாஸ்கரன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை – பரபரப்பு தகவல்
செந்தில் பாலாஜி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Jul 2026 09:45 AM IST

கரூர், ஜூலை 29 : கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. மேலும் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி, பாஸ்கரன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன இந்த நிலையில் தவெக எம்எல்ஏகளிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். அவர்களிடம் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான உயர்மட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : “முதல்வர் விஜய்க்கு ஒரு நியாயம்; சீமானுக்கு ஒரு நியாயமா?”.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை கடும் கண்டனம்!

இந்த நிலையில், கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் ஜூலை 29, 2026 இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்ரமணி வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரன் என்பவரது வீடு உட்பட மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையின் முடிவில் எதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : வெப்பத்தைத் தாங்கும் தமிழ்நாட்டை உருவாக்க நடவடிக்கை; சென்னையில் பயிலரங்கு தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா தன்னிடம் பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் 14 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னணியில், செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.  இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us