AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு…9000 பேர் வரை பாதிப்பு – அமைச்சர் எச்சரிக்கை

செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும் , 9000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்கி இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு…9000 பேர் வரை பாதிப்பு – அமைச்சர் எச்சரிக்கை
அமைச்சர் அருண்ராஜ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 Jul 2026 15:09 PM IST

சென்னை, ஜூலை 22 : செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும், 9000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்கி இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் ஜூலை 21, 226 வரை 9, 000 டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் தரப்பில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கொசு ஒழிப்பு பணியாளர்கள் நகர்புற மற்றும் கிராமபுறங்களில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : “மகளிருக்கு மாதம் ₹2,500!”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!

மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்கியிருந்தால் அவற்றை அகற்றி அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொசு உற்பத்தியை தடுத்தால் டெங்கு ஒழிப்பை முழுமையாக செயல்படுத்த முடியும் என்று பேசினார்.

டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கையுடன், இந்நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் சீராக உயர்ந்து வருகிறது. எனவே, இக்காலகட்டத்தில் டெங்குவிலிருந்து தற்காத்துக்கொள்வது மிக அவசியமாகும். பலர் டெங்குவிலிருந்து எளிதில் குணமடைந்தாலும், சில நோயாளிகளின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்படலாம். டெங்கு எப்போது உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதையும், அத்தகைய சூழலில் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதையும் புரிந்துகொள்வது முக்கியம்.

டெங்குவின் பொதுவான அறிகுறிகள்

டெங்கு வைரஸ் தாக்கப்பட்ட கொசு கடித்த பிறகு, சுமார் 3 முதல் 5 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தோன்றக்கூடும். இந்த நோய்க்கிருமி உடலில் பாதிப்புகளை ஏற்படுத்த 3 முதல் 10 நாட்கள் வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவருக்கு ஏறக்குறைய 3 முதல் 5 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்படலாம்.

இதையும் படிக்க : முடிவுக்கு வந்த தந்தை – மகன் மோதல் – வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

டெங்கு காய்ச்சலில் திடீர் காய்ச்சல், அதனுடன் நடுக்கம், தலைவலி, மூட்டு வலி, கண்களுக்குப் பின்னால் வலி, கடும் சோர்வு, பசியின்மை மற்றும் வாயில் கசப்பு அல்லது விரும்பத்தகாத சுவை போன்ற அறிகுறிகள் காணப்படும். இதுவே டெங்குவின் பொதுவான வடிவமாகக் கருதப்படுகிறது. பொதுவாக நோயாளி 5 முதல் 7 நாட்களில் குணமடைந்துவிடுவார்.

இருப்பினும் நோயாளிக்கு இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது மிக அவசியம். சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் மருத்துவ கவனிப்பைப் பெறுவது டெங்குவிற்கான பயனுள்ள சிகிச்சையைச் சாத்தியமாக்குகிறது.

 

Follow Us