5 தொகுதி இடைத்தேர்தல்.. தேர்தல் அலுவலர்கள் நியமனம்.. விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு!
CEO Archana Patnaik: தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயக் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து முழு விவரம் இந்தப் பதிவில்.
தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்த மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பது விதி ஆகும். அதன்படி, இந்த தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை தொடங்குமாறு அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான போர் வாங்க பணிகளை தொடங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் அலுவலர்கள் நியமனம் – தேர்தல் நடத்தை விதிகள்
மேலும், ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் 2 தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், மதுராந்தகம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் 3 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த இடைத் தேர்தலுக்காக தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை விரைந்து தொடங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: “மக்கள் ஏமாந்துட்டாங்க.. இன்னும் 6 மாசத்துல பாருங்க”.. முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொந்தளிப்பு!!




5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியே தக்கவைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியே விஜய் ராஜினாமா செய்தார். இத்துடன் அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால், இந்த 5 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பு
இது தொடர்பாக தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், 5 தொகுதிகள் காலியானதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டதுடன், தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பட்நாயக் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் படிக்க: நாளை நடக்கும் நிதி ஆயோக் கூட்டம்.. 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்ற முதல்வர் விஜய்..