AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் முடிவுக்கு ரெடியா? எடப்பாடியுடன் மாஜிக்கள் திடீர் சந்திப்பு.. சேலத்தில் நடப்பது என்ன?

AIADMK General Secretary Edappadi: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் திடீரென சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணும் பணி நெருங்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுக்கு ரெடியா? எடப்பாடியுடன் மாஜிக்கள் திடீர் சந்திப்பு.. சேலத்தில் நடப்பது என்ன?
எடப்பாடியுடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 02 May 2026 18:33 PM IST

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றித் கழகம் என 4 முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் வெற்றியை மையமாக வைத்து அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை என அனைவரும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி இருந்தனர். தமிழகத்தில் கடந்த தேர்தல்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதன்படி, ந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் திங்கள்கிழமை ( மே 4) எண்ணப்பட உள்ளன. இதில், எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்

அதன்படி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில், பெரும்பாலான கணிப்புகளில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல, சில கணிப்புகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், தமிழக வெற்றிக் கழகம் தனித்து ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க: “தவெக ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பில்லை”.. மே 4-ல் உண்மை தெரியும்.. நயினார் நாகேந்திரன் விளாசல்!!

வாக்கு எண்ணிக்கைக்கு பிந்தைய நடவடிக்கைகள்

இதனால், தேர்தலில் வெற்றிக்கு பிறகு கட்சியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் திடீரென சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில், நேற்று வெள்ளிக்கிழமை ( மே 1- ஆம் தேதி) முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் தம்பிதுரை எம். பி. ஆகியோர் எடப்பாடி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருந்தனர்.

எடப்பாடியுடன் முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

இந்த நிலையில், சேலத்தில் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் எம். ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், ஓ. எஸ். மணியன், கே. பி. முனுசாமி, சேலம் புறநகர் மாவட்ட அ. தி. மு. க. செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சந்தித்து திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் மே 4- ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும், அதற்கு பிந்தைய அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் சலசலப்பு.. தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே வெடிக்கும் சலசலப்பு, அதிகாரப் போட்டி..

Follow Us