AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிவேக கண்டெய்னர் லாரி.. பிரேக் பிடிக்காத திக்.. திக்.. நிமிடம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்!

Chennai Accident 3 Killed : சென்னையில் இரு சக்கர வாகனம் மீது பிரேக் பிடிக்காத கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அதிவேக கண்டெய்னர் லாரி.. பிரேக் பிடிக்காத திக்.. திக்.. நிமிடம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்!
கோப்புப்படம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 02 May 2026 17:14 PM IST

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( 42 வயது). கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரேமலதா. இவர்களுக்கு இன்ப செல்வன் ( 8 வயது) என்ற மகன் இருந்தார். இவர், அம்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இவர்கள் மூவரும் நேற்று வெள்ளிக்கிழமை ( மே 1) இருசக்கர வாகனத்தில் மணலிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, சென்னை மாதவரம் ஆந்திர மாநில பேருந்துகள் நிலையம் அருகே வந்த போது, பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பேருந்து ஒன்று திடீரென வெளியே வந்தது. அப்போது, சாலையில் அவர்களுக்கு பின்னால் வந்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் பேருந்து வருவதைப் பார்த்து திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில், எதிர்பாராத விதமாக கண்டைனர் லாரியின் பிரேக் செயலிழந்த காரணத்தால், பேருந்தின் பின்பகுதியில் லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் நசுங்கி பலி

இதில், பேருந்தின் முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கார்த்திகேயன், அவரது மனைவி பிரேமலதா, மகன் இன்ப செல்வன் ஆகியோர் சாலையில் தவறி விழுந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து வந்த கண்டெய்னர் லாரியின் சக்கரங்கள் மூன்று பேரின் மீதும் ஏறி இறங்கியது. இதில், அவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே தலை உள்ளிட்ட உடல் பாகங்கள் நசுங்கி இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படிக்க: சென்னையில் பயங்கரம்.. காதல் ஜோடியை மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட காவலர்.. இளம்பெண்ணின் துணிச்சலால் கைது..

கண் இமைக்கும் நேரத்தில் நிகழந்த கொடூர விபத்து

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தால் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து புழல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் சடலங்களை மீட்டு உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கைது

இதைத் தொடர்ந்து, கார்த்திகேயன் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரான அன்பரசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: வாட்டி வதைக்கும் வெயில்.. வேலூரில் பதிவான 42 டிகிரி செல்சியஸ் வெயில்.. எங்கெல்லாம் மழை இருக்கும்?

Follow Us