AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாட்டி வதைக்கும் வெயில்.. வேலூரில் பதிவான 42 டிகிரி செல்சியஸ் வெயில்.. எங்கெல்லாம் மழை இருக்கும்?

வரும் நாட்களிலும் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவே வெப்பநிலை பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அதிக வெப்பநிலையுடன் கூடிய ஈரப்பதம் காரணமாக சில இடங்களில் அசௌகரியம் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்டி வதைக்கும் வெயில்.. வேலூரில் பதிவான 42 டிகிரி செல்சியஸ் வெயில்.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 May 2026 06:25 AM IST

வானிலை நிலவரம், மே 2, 2026: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெப்பநிலையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் 42 டிகிரி செல்சியஸை கடந்த வெப்பநிலை பதிவாகி வருவதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 42.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 41.1, மதுரையில் 40.0, திருப்பத்தூரில் 39.6, பாளையங்கோட்டையில் 38.0, நாகையில் 38.5, கரூரில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

110 டிகிரியை நெருங்கும் வெப்பநிலை:

வரும் நாட்களிலும் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவே வெப்பநிலை பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அதிக வெப்பநிலையுடன் கூடிய ஈரப்பதம் காரணமாக சில இடங்களில் அசௌகரியம் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆக்கப்பொறுத்தவர்கள், ஆறப்பொறுங்கள்.. 10 இடங்களிலும் தேமுதிக வெற்றிப்பெறும் – பிரேமலதா விஜயகாந்த்..

தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை: 

இதற்கிடையில், தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழையும் பதிவாகி வருகிறது. அந்த வகையில், மே 2ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மே 4ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பதிவாகக்கூடும். மே 6ஆம் தேதி வரை இந்த நிலை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பரோட்டா ரூ.25 ஆக உயர்வு, பிரியாணி விலை? கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்கள் அறிவிப்பு

வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், தென் மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆனால், கடலோர மாவட்டங்களான சென்னை, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் தொடர்ந்தும் அதிகமாகவே இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us