AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாய்ப்பில்லை ராஜா.. எதிர்ப்பு வாக்குகளை மட்டுமே பெறுவார் விஜய் – திருமாவளவன் சொன்ன கருத்து..

இந்த நிலையில், “தமிழக வெற்றி கழகம் யாருடைய வாக்குகளைப் பெறும்?” என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “திமுக மற்றும் அதிமுகக்கு எதிரான வாக்குகளை விஜய் பெறுவார். பொதுவாகவே திராவிடக் கட்சிகளுக்கு எதிரான மனநிலை அரசியல் களத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவ்வப்போது உருவாகும் மாற்று சக்திகள் அந்த வாக்குகளைப் பெறுகின்றன.

வாய்ப்பில்லை ராஜா.. எதிர்ப்பு வாக்குகளை மட்டுமே பெறுவார் விஜய் – திருமாவளவன் சொன்ன கருத்து..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 May 2026 11:30 AM IST

மே 2, 2026: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக அரசியல் களத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்:

முக்கியமாக திமுக மற்றும் அதிமுக இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில், யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்து கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில், தமிழக வெற்றி கழகத்தின் வருகையால் வாக்குகள் சிதறக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழக அரசியலின் மையப் புள்ளியாக மாறத் துடிக்கும் விஜய்.. புதிய வியூகம் வகுத்த தவெக..

இந்த தேர்தல் தமிழக வெற்றி கழகத்தின் முதல் தேர்தலாகும். கட்சி 233 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மேலும், எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. சில கருத்துக்கணிப்புகள் மட்டும் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கலாம் என குறிப்பிட்டுள்ளன.

விஜய் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை:

இந்த நிலையில், “தமிழக வெற்றி கழகம் யாருடைய வாக்குகளைப் பெறும்?” என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “திமுக மற்றும் அதிமுகக்கு எதிரான வாக்குகளை விஜய் பெறுவார். பொதுவாகவே திராவிடக் கட்சிகளுக்கு எதிரான மனநிலை அரசியல் களத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவ்வப்போது உருவாகும் மாற்று சக்திகள் அந்த வாக்குகளைப் பெறுகின்றன.

மேலும் படிக்க: வைரலாகும் “தவெக அமைச்சரவை பட்டியல்”.. செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்!!

இந்த முறை திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்களது வலிமைக்கு ஏற்ப பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், விஜய் தொடங்கியுள்ள கட்சி தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதாக கூற முடியாது” என தெரிவித்துள்ளார். திருமாவளவனின் இந்த கருத்து தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Follow Us