AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவண்ணாமலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை சென்ற அவர் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்
Amit Shah
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 08 Aug 2026 19:19 PM IST

திருவண்ணாமலை,ஆகஸ்ட் 8 : பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை சென்ற அவர் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு செய்யப்பட்ட சிறப்பு அபிஷே பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். அவருக்கு ஆசிரமத்தின் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க : ராமநாதபுரத்தில் அதிரடி.. ரூ50,000 லஞ்சம் வாங்கிய RDO கையும் களவுமாக கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை!

அண்ணாமலையார் கோவிலில் அமித் ஷா சாமி தரிசனம்

 

பின்னர், ஆகஸ்ட் 9, 2026 நாளை காலை புதுச்சேரி செல்லும் அமைச்சர் அமித் ஷா அங்கு காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. இந்த விழா புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கிறதுமேலும், புதுச்சேரியில் ஹர் கர் திரங்கா பேரணியையும் அவர் துவங்கிவைக்கிறார். இதற்காக ரிசர்வ் படையின் புதுச்சேரி வந்துள்ளனர். மேலும், புதுவை காவல்துறையை சேர்ந்த 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களுடன் ரிசர்வ் படையினர் என 1,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதையொட்டி புதுவையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படுகிறது.

புதுவை ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ள உத்தரவில், மத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது புதுவையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை பறக்க தடை மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

இதையும் படிக்க : தொகுதி மறுசீரமைப்பு.. முதல்வர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடக்கம்! திமுக- அதிமுக புறக்கணிப்பு!

இதனையடுத்து ஆகஸ்ட் 8 மற்றும் 9, 2026 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் உட்பட எந்தவொரு வான்வழி பறக்கும் சாதனங்களையும் இயக்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படடு தண்டனைக்குரிய நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையொட்டி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடக்கும் முன்னேற்பாடுகள் மற்றும் ஒத்திகை நிகழ்வை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார். அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத் சவுகான், காவல் துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

Follow Us