தமிழகம் வரும் அமித் ஷா – திருவண்ணாமலையில் சாமி தரிசனம்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8, 2026 நாளை தமிழ்நாடு வரவிருக்கிறார். இந்தப் பயணத்தில், தமிழ்நாட்டின் சில முக்கிய கோயில்களில் அவர் வழிபாடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம் .
சென்னை, ஆகஸ்ட் 7 : பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8, 2026 நாளை தமிழ்நாடு வரவிருக்கிறார். இந்தப் பயணத்தில், தமிழ்நாட்டின் சில முக்கிய கோயில்களில் அவர் வழிபாடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 8, 2026 நாளை தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர் அங்கிருந்து, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷா திருவண்ணாமலையின் அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் வரும் அமித் ஷா
பின்னர், வரும் ஆகஸ்ட் 9, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரி செல்லும் அமைச்சர் அமித் ஷா அங்கு காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. இந்த விழா புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கிறதுமேலும், புதுச்சேரியில் ஹர் கர் திரங்கா பேரணியையும் அவர் துவங்கிவைக்கிறார்.
இதையும் படிக்க : பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கோரிக்கை!




இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி மத்திய ரிசர்வ் படையின் புதுச்சேரி வந்துள்ளனர். மேலும், புதுவை காவல்துறையை சேர்ந்த 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களுடன் ரிசர்வ் படையினர் என 1,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதையொட்டி புதுவையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படுகிறது.
ட்ரோன்கள் பறக்க தடை
புதுவை ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ள உத்தரவில், மத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது புதுவையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை பறக்க தடை மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து ஆகஸ்ட் 8 மற்றும் 9, 2026 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் உட்பட எந்தவொரு வான்வழி பறக்கும் சாதனங்களையும் இயக்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படடு தண்டனைக்குரிய நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : கைதிலிருந்து தப்பினார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.. சர்ச்சை பேச்சு வழக்கில் பிடிவாரண்ட் திடீர் ரத்து.. என்ன காரணம்!
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையொட்டி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடக்கும் முன்னேற்பாடுகள் மற்றும் ஒத்திகை நிகழ்வை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார். அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத் சவுகான், காவல் துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.